காத்தான்குடி பதுரியா பள்ளிவாயலில் நடை பெற்ற நிகழ்வொன்றுக்கு பாதுகாப்புக் கடமைக்காக வந்திருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி வெடித்தததில் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய கருனாரத்ன என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது துப்பாக்கி தவறுதலாக வெடித்தததில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
