Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 25, 2015

Unknown

உலகக் கிண்ண குழாமில் தரங்க : ஐ.சி.சி. அனுமதி

கொழும்பு -
தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஜீவன் மென்டிஸ் க்கு பதிலாக உப்புல் தரங்கவை இலங்கை குழாமில் இணைப்பதற்கு  ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.
நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை அணி வீரர் ஜீவன் மென்டிஸ் க்கு பதிலாக உபுல் தரங்கவை குழாமில் இணைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தொழில்நுட்பக் குழு அனுமதியளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜீவன் மென்டிஸ் பயிற்சியில் ஈடுபட்டடிருந்த வேளை தசைப்பிடிப்பிற்குள்ளாயிருந்தார். இதனால் அவருக்கு ஏனைய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையேற்பட்டது. 
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையால் மென்டிஸின் வெற்றிடத்திற்கு உபுல் தரங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு உலகக் கிண்ண தொழில்நுட்பக் குழு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 வயதுடைய உபுல் தரங்க 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,339 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 13 சதம் 28 அரைச் சதம் உள்ளடங்கும். அவரது ஓட்டசராசரி 33.57 ஆகும்.
இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க கடந்த 2014 நவம்பர் மாதம் கட்டார்கில் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில்  இறுதியாக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம்திகதி பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் உபுல் தரங்க களமிறங்குவார் .

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :