கொழும்பு -
நாட்டின் வரிவருமானத்தின் நூறு வீதத்தையும் அதேபோன்று மொத்த தேசிய வருமானத்தில் 19 வீதத்தைத் தவிர்ந்த ஏனைய நிதியினையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய ராஜபக்ஷ குடும்பத்தினரே நிர்வகித்து வந்ததாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னைய அரசாங்கத்தின் நான்கு வருட ஆட்சிக் காலத்தின் நாசகார பொருளாதார முறைமை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற வகையிலேயே நாம் இன்றைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இங்கு மேலும் கூறுகையில்,
அமைந்திருக்கும் புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டமானது அரசியல் ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே அமைந்திருக்கின்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்திலேயே அபிவிருத்தி உள்ளிட்டதான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இங்கு சமர்ப்பிப்பதற்கு முன்பதாகவே நாம் எரிபொருட்களின் விலைகளை குறைத்திருக்கின்றோம். அரசியல் சமூக
பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தையும் முன்வைத்திருக்கின்றோம். மஹிந்த அரசாங்கத்தில் எரிபொருளுக்கு பாரியளவில் வரிகளை அறவிட்டு நாசகார பொருளாதார முறைமையொன்று முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனை தடுத்து நிறுத்தும் பொருட்டே மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
மஹிந்த அரசாங்கத்தில் கடந்த நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரப் பயணமானது தீய வழியிலேயே சென்று கொண்டிருந்தது. நாட்டு மக்களின் குடும்ப வருமானம் வீழ்ச்சிகண்ட அதேவேளை தேசிய ரீதியில் நாட்டின் வருமானங்கள் பாரியளவில் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
நாடு பெற்றுக்கொண்ட வரிவருமானத் தின் நூறு வீதத்தினையும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய ராஜபக் ஷர்களின் குடும்பங்களும் அவர்களது உறவினர்களும் நண்பர்களுமே நிர்வகித்து அனுபவித்து வந்தனர். அதேபோன்று நாட்டின் மொத்த தேசிய வருமானத்தின் 19வீதம் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதியும் மேற்கூறப்பட்டவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. இத்தகைய நாசகார பொருளாதார முறைமையை தொடர்ந்தும் நீடிக்கவிட அனுமதிக்க முடியாது என்ற ரீதியிலேயே நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
அடுத்த மாதமளவில் மேலும் சில மாற்றங்களை ஏற்ப டுத்துவதற்கு எண் ணியிருக்கின்றோம். அதாவது எரிபொருள் விலை மற்றும் மின் சாரக் கட்டணம் ஆகி யவற்றில் நிலையான கொள்கை ஒன்றினை அறிமுகப்படுத்து வதற்கும் நடவ டிக்கைகளை மேற் கொண்டு வரு கின்றோம் என்றார்.
நன்றி வீரகேசரி
