Featured Home (TOP)

Recent Comments

Monday, February 23, 2015

Unknown

தலை நகரில் உணவகங்கள் பரிசோதனை


கொழும்பு -

 நகரத்திற்கு வருகை தரும்இலட்சக்கணக்கான மக்களின்நலனை கருத்திற்கொண்டு மாநகர சபை­ யினால் இன்று முதல் உணவகங்கள் பரி­சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக
கொழும்பு மாநகர வைத்திய அதி­காரி ருவன்விஜேமுனி தெரிவித்தார்.

குறித்த பரிசோதனையின் பிற்­பாடு கொழும்பு மாநகர சபையினால் தர­ மான உணவகங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கமைய தலை நகருக்கு வருகை தருவோர் குறித்த சான்றிதழ் உள்ள உணவகங்களில்எந்த­ வொரு அச்சமுமின்றி உண்ண முடியும்.

இதற்கமைய இன்று முதல் 50 நாட்கள்உணவகங்களுக்கு சான்றிதழ் வழங்கதிட்டமிட்டுள்ளதாக அவர் தெறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெறிவிக்கையில், கொழும்பு மாநகரம் என்­ பதுஇலங்கை தலைநகராகும். இதற்க­மைய வெளிநாடுகளிலிருந்தும்நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும்ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.இதற்க­மைய கொழும்பு நகரிற்கு வருகை தரு­ வோரை ஒழுங்கு முறைப்படிஅனுச­ரிப்பது மாத்திரமின்றி அவர்க­ளது சுகாதார நலன் குறித்தும் அவ­தானம்செலுத்த வேண்டியுள்ளது.

கொழும்பு நகரிற்கு வருகை தரு­வோரின் நலனை அடிப்படையாககொண்டு மாத்திரமின்றிகொழும்பில்வசிக்கும் 1.2 மில்லியன் மக்களின் நல­னையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்­ளது. ஒரு மனிதனின் உடல் ஆரோக்கி­யத்திற்கு சுத்தமான உணவு அவசியப்­படுகின்றது.

உணவு தரக்குறைவின் காரணமாக பல்­வேறு நோய்கள் பரவுகின்றன. இத்த­
கைய நோய் காரணமாக பல உயிரிழப்­புக்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் ஏற்ப­டுகின்றன. இதற்கமைய கொழும்பு நகரின் உணவகங்கள் பெரும்­பாலானவை அசுத்தமானதாகவே காணப்ப­டுகின்றன என்றும் ஆரம்பத்தில் நட்சத்­திரஉணவகங்களை சோதனைக்குட்ப­டுத்த திட்டமிட்டிருந்தாலும் அதனைப்பார்க்கிலும் மக்கள் அதிகளவில் சாதா­ரண உணவகங்களிலேயே உணவு உட்­கொள்கின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு குறித்த வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய உணவகங்கள் சோத­னைக்கு உட்படுத்தப்படவுள்ளன.குறித்த உணவகங்களில் தரமானவற்­றிற்கு தர சான்றிதழ் கொழும்பு மாநகரசபையினால் வழங்கப்படும்.இதற்கமைய குறித்த சான்றிதழ் கொண்ட உணவகங்­களில் மக்கள் அச்சமின்றிசாப்பிட முடியும்.

மேற்படி செயற்திட்டத்திற்கு அமைவாக இன்று முதல் 50 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

கொழும்பு மாநகர சபையின் மேயர்ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில்இத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவைத்திய அதிகாரி ருவன்விஜேயமுனி தெரிவித்தார்.

பஹத் எம் ஜூனைத்

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :