Featured Home (TOP)

Recent Comments

Thursday, February 5, 2015

Unknown

சிறிய தாயாரை கொலை செய்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞன்

குடும்பப் பிரச்சினையால் சிறிய தாயாரை தாக்கி கொலை செய்த இளைஞன் ஒருவர் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெலிமடை ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த ஆர்.எம். கருணாவதி (வயது 49) என்ற குடும்பப்பெண்ணொருவரே இன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பாக மஜிஸ்ரேட் நீதிமன்ற விசாரணையை நீதிபதி ஸ்ரீநாத் சிந்தக்க குணசேகர  ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இம் மரணம் கொலையென்பதை ஊர்ஜிதம் செய்துள்ளார். இதன்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பொல்லொன்றையும் வெலிமடை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
வெலிமடை ஆடைத்தொழிற்சாலையில் கடமையை நிறைவு செய்து கொண்டு இப்பெண் வீடு சென்று கொண்டிருந்த போதே பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இப்பெண்ணை கொலை செய்த இளைஞன் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நன்றி - வீரகேசரி

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :