Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 18, 2015

Unknown

நகரசபை உறுப்பினர் கைது

(க.கிஷாந்தன்)
தலவாக்கலை லிந்துலை நகரசபையின் பொது ஜன ஜக்கிய முன்னணியின் உறுப்பினர் பசான் ஹிம்மாலக்கவை  சந்தேகத்தின் பேரில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் தலவாக்கலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதாக கிடைத்த முறைப்பாடொன்றை அடுத்து இவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த ஜானக சந்திரட்ண என்பவர் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான ஜானக சந்திரட்ண கருத்து தெரிவிக்கையில்,
தலவாக்கலை நகரில் தான் முச்சக்கரவண்டி செலுத்துவதாகவும் முச்சக்கரவண்டியை தரிப்பிடத்தில் நிறுத்தும் போது குறித்த உறுப்பினர் தனது கடையை மறைப்பதாக கூறி என்னை தாக்கினார்.
இவ்விடத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தும் சாரதிகளிடம் குறித்த உறுப்பினர் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் மேற்படி உறுப்பினர் குறித்த வாகன தரிப்பிடத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு முயற்சித்து வருவதாக அப்பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள் சுட்டிக்காட்டிகின்றனர்.
சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Source Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :