அங்கம் 05
சங்கைமிகு உலமாக்களே…!
நீங்களும் மீனுக்குத் தலையையும்,
பாம்புக்கு வாலையும் காட்டி விலாங்குகளாகவும், விலங்குகளாகவும் வாழும் வாழ்க்கையிலிருந்து முற்றாக விடுபட வேண்டும்.
உங்களின் வாழ்வாதார வசதி வாய்ப்புக்களுக்காக, பட்டம் பதவிகளுக்காக, பொன்னாடைகளுக்காக, பண முடிப்புக்களுக்காக நீங்கள் கற்றறிந்த மார்க்கத்தைக் கொச்சைப்படுத்துகின்ற, சுயநல அரசியல்வாதிகளிடம் காட்டிக் கொடுக்கின்ற
கேவலமான செயற்பாடுகளில்
ஈடுபடக்கூடாது.
கடந்த காலத்தில் நமது மண்ணில் நிகழ்ந்த ஈமானியப் போராட்டம் குறித்து அப்துர் றவூப் மௌலவி கருத்து வெளியிடும்போது, சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் வீசியெறியும் பிஸ்கட்டுக்களுக்காகவே இங்கே மதனிகளும்,
நளீமிகளும் செயற்பட்டு
நமது இளைஞர் சமூகத்தை வழிகெடுக்கிறார்கள் என்று கூறியதை இவ்விடத்தில் நினைவுபடுத்த
விரும்புகிறோம்.
அன்றைய கால கட்டத்தில்
ஈமானிய எழுச்சியில்
இந்த மண்ணின் முஸ்லிம் இளையோரும், முதியோரும்
தமது கடைகளை ஒன்பது தினங்களாகத் தொடராக இழுத்து மூடிவிட்டு இஸ்லாத்திற்கு
விரோதமான வழிகேடான விடயங்களை அழித்தொழிப்பதற்காக ஒன்றிணைந்து
முன் நின்றபோது,
அவர்களை வழிநடாத்தியது
எமது மதனீக்களும்,
நளீமிகளும்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அப்போது அப்துர் றவூப் மௌலவி தெரிவித்த அந்தக்கருத்தை ஏற்க மறுத்த நாம், இப்போது ஒரு வேளை அப்படித்தான் இருந்திருக்குமோ? என்றும் சந்தேகப்படுகின்றோம்.
அப்போது அப்துர் றவூப் மௌலவி தெரிவித்த அந்தக்கருத்தை ஏற்க மறுத்த நாம், இப்போது ஒரு வேளை அப்படித்தான் இருந்திருக்குமோ? என்றும் சந்தேகப்படுகின்றோம்.
ஏனெனில் ஈமானிய எழுச்சியின்
பின் இந்த மண்ணில் காலத்திற்குக் காலம் இடம்பெற்று வருகின்ற மார்க்க ரீதியான செயற்பாடுகளை அவதானிக்கும்போதும், எமது அரசியல் தலைமைகளின் கொள்கை மாறுபட்ட நகர்வுகளை நோக்குகின்ற போதும் அவ்வாறானதொரு சந்தேகம் எழுவதை எம்மால் தவிர்க்க முடியாமலிருக்கின்றது.
இந்நிலையில், ‘நான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் தொழில் ரீதியாகத்தான் சேர்ந்து செயற்பட்டு
வருகின்றேன். மார்க்கம்
சம்பந்தமான அவரது செயற்பாடுகளில் எனக்கு உடன்பாடு கிடையாது’ என்று தனது நெருங்கிய நண்பர்களிடம்
இரகசியமாகத் தெரிவித்து
வரும் அல்மனார் அதிபர் மௌலவி ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி அவர்கள், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் நிறுவப்பட்டுள்ள இந்த நூதனசாலையில்
உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமை குறித்து அவரது சொந்தக் கருத்தையும்,
அவர் கற்றறிந்த
மார்க்க அறிவின்படியான
‘பத்வா’ மார்க்கத்
தீர்;ப்பையும் மேலும் தாமதமின்றி இக்காத்தான்குடிச் சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
அவ்வாறு நீங்கள் முன்வைக்கத்
தவறும் பட்சத்தில்,
அப்துர் றவூப் மௌலவி அன்று கூறிய ‘அறபு நாடுகள் வீசியெறியும்
பிஸ்கட்டுக்களுக்காகவே’ நீங்கள் எல்லாம் இவ்வூர் மக்களை தவறான வழிகளில் அன்று வழி நடாத்தியுள்ளீர்கள் என்று நாம் தீர்;ப்பு எழுத நேரிடும்.
அதுபோல, முன்னாள் பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லா அவர்களும்
இஸ்லாமிய மார்க்க உணர்வலைகளுக்கு பெரும் மதிப்பளித்து, ஆதரவளித்து அன்றைய ஈமானிய எழுச்சியின்போது தன்னால் முடியுமான பங்களிப்புக்களையும் மறைமுகமாகச்
செய்திருந்தார்.
அவ்வாறில்லையென்றால் அன்றும் அவரிடமிருந்த அரசியல் அதிகாரங்களைப்
பயன்படுத்தி ஈமானிய எழுச்சியில் ஈடுபட்ட எமது மண்ணின் இளைஞர்களை இராணுவத்தினரையும், பொலீசாரையும் கொண்டு ஓரிரவிலேயே அவரால் நசுக்கி அடக்கி ஒடுக்கி இருக்க முடியும். அவர் அவ்வாறு செய்யவில்லை. ஈமானிய எழுச்சிக்கு
அவரது ஆதரவுக்கரம்
மிகப் பலமாக மறைமுகமாக இருந்ததை மறுக்க முடியாது.
மார்க்கப் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தி, இவ்வூர்ப் பிறந்த மக்களை ஒற்றுமைப்படுத்தியது என்பது புறப்பார்வைக்கு நல்ல விடயம்தான். ஆனால் மார்க்கப் பிரச்சினை தீர்;ந்ததா? அவரால் தீர்க்கப்பட்டதா? இல்லையே..!
மார்க்கப் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தி, இவ்வூர்ப் பிறந்த மக்களை ஒற்றுமைப்படுத்தியது என்பது புறப்பார்வைக்கு நல்ல விடயம்தான். ஆனால் மார்க்கப் பிரச்சினை தீர்;ந்ததா? அவரால் தீர்க்கப்பட்டதா? இல்லையே..!
கேவலம், இந்த ஊரில் நாட்டிய ஈச்சை மரங்களிலும்,
அலங்காரச் சுற்றுவட்டத்திலும், பிரதான வீதி விஸ்தரிப்பு நடவடிக்கையிலும் இவர் காட்டிய அரசியல் அதிகார அக்கறையை, ‘நீதிபதியை மாற்றியேனும்
நான் விரும்புகின்றவாறு எனது நடவடிக்கைகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு எழுதக்கூடிய நீதிபதியைக் கொண்டு வந்து நான் நினைத்ததைச்
சாதிப்பேன்’ என்று மேடைகளில் ஓங்காரித்துப் பேசிய அளவுக்கு, இந்த இஸ்லாமிய மண்ணில் மீண்டும் வேர்விட்டு
விருட்சமாக வளர்ந்திருக்கும் வழிகேடுகள் நிறைந்த ‘பித்அத்’துக்களை வேரறுப்பதில்
இவர் அக்கறை காட்டத் தவறியது ஏன்?
காலத்திற்குக் காலம் தனது அரசியல் வெற்றிக்காக நம் சமூகத்தையும், மார்க்கத்தையும் விற்றுப்பிழைத்து, எமது மக்களைப் பிழையாக வழிநடாத்துவது ஏன்?
கெலிஓயா பட்டுப்பிட்டியிலுள்ள தரீக்காவாதிகளின் பள்ளிவாசலும், அரபுக்கல்லூரியுமான ‘ஜாமிஅதுல் மின்ஹாஜிய்யா’வின் வெள்ளி விழா மலரில் இவரது ஆசிச் செய்தி இடம்பெற்றிருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
காத்தான்குடி 1ம், 2ம், 3ம், 4ம் குறிச்சிகளில்
ஒரு முகம், 5ம், 6ம் குறிச்சிகளில்
இன்னொரு முகம், புதிய காத்தான்குடி எச்.ஐ. புரத்தில் ஒரு முகம், பட்டுப்பிட்டியில் வேறோர் முகம்..
இப்படி எத்தனை முகங்களுடன்
இந்த மண்ணின் மைந்தன் தனது சுயநல, தனிநபர் அரசியல் இலாபத்திற்காக
நம்மையும், நமது மார்க்கத்தையும் விற்றுக் கொண்டிருக்கின்றார் என்பதை இனியாவது நமது சமூகம் உணர முனைய வேண்டும்.
எமது பார்வையில் இவ்வூரின்
இரு கண்களான ஜம்இய்யாவும், சம்மேளனமும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா என்கிற தனி மனிதரைப் புகழ்பாடும்
நிறுவனங்களாகவே இன்று காட்சியளிக்கின்றன.
இவரது புகழ்பாடுவதற்காகவும், இவரிடமிருந்து
பொன்னாடைகளும், பணமுடிப்புக்களும் பெறுவதற்காகவும் இவ்விரு சமய, சமூக நிறுவனங்களும்
இந்த இஸ்லாமிய மண்ணில் உருவாக்கப்படவில்லை. எனவே, இந்நிறுவனங்களின் நிர்வாகிகளின்
நோக்கும், போக்கும் உடனடியாக மாற்றம் பெற்று அழ்ழாஹ்வுக்காகவும், அவனது சத்திய மார்க்கத்திற்காகவும், இச்சமூகத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.
அவ்வாறானதொரு மாற்றம் இம்மண்ணில்
நிகழுமாயின் நாமும் எமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ‘ஃபீஸபீலில்லாஹ்’
அழ்ழாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்து உலமாக்கள்,
ஊர்ப்பெரியவர்களான உங்களினதும்,
இந்த மண்ணினதும்
கண்ணியத்தையும், நாம் விசுவாசித்துள்ள சங்கைமிகு
ஈமான், இஸ்லாம் என்பவற்றையும் எதிர்காலத்தில் முழு நாட்டிற்குமே முன்னுதாரணமாக இம்மண்ணில்
நிலைநிறுத்திட அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதனை வல்ல அழ்ழாஹ்வின் மீதாணையாகத் தெரிவிக்கின்றோம். அழ்ழாஹு அக்பர்! வலில்லாஹில்ஹம்து!!
சங்கைமிகு ஈமான், இஸ்லாம் என்பவற்றையும் எதிர்காலத்தில் முழு நாட்டிற்குமே முன்னுதாரணமாக இம்மண்ணில்
நிலைநிறுத்திட அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதனை வல்ல அழ்ழாஹ்வின் மீதாணையாகத் தெரிவிக்கின்றோம். அழ்ழாஹு அக்பர்! வலில்லாஹில்ஹம்து!!
