Featured Home (TOP)

Recent Comments

Friday, July 24, 2015

Unknown

இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை அஞ்சல் சேவையாளர்களுக்கு விடுமுறை கிடையாது!

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்தலை முன்­னிட்டு அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்­களின் விடு­முறை இன்று 24ஆம் திகதி வெள்ளிக்­கிழமை தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இரத்துச் செய்­யப்­ப­ட்­டுள்­ள­தாக அஞ்சல் மா அதி­பதி டீ.எல்.பி.ஆர். அப­ய­ரத்ன தெரிவித்தார்.
2015 பாரா­ளு­மன்ற தேர்தலுக்­காக அஞ்சல் திணைக்­க­ளத்­துக்கு பாரிய பொறுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தேர்தலை உரிய முறையில் சட்ட ரீதி­யாக நடத்­து­வ­தற்­காக அஞ்சல் திணைக்­களம் பாரிய கட­மையை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.
அதன்­படி தேர்தல் நடத்­துதல், வாக்­கு­களை எண்­ணுதல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சேவை­யா­ளர்­களை நிய­மிக்கும் கடி­தங்­களை தாம­த­மின்றி ஒப்­ப­டைத்தல், தேர்தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களால் தேர்தலுக்­காக அஞ்­ச­லிடும் விஞ்­ஞா­ப­னங்களை ஒப்­ப­டைத்தல் மற்றும் வாக்­காளர் அட்­டை­களை வீடு வீடாகச் சென்று ஒப்­ப­டைத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் பொழுது சேவை­யாளர் தட்­டுப்­பாடு ஏற்­படும்.
மேற்­படி விட­யங்­களைக் கவ­னத்தில் கொண்டு அஞ்சல் திணைக்­கள சேவை­யா­ளர்கள் விடுமுறை பெறாமல் இருக்குமாறு அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன அறிவித்துள்ளார்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :