பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ இன்று (21) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு
வருகை தரவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் சிவில் சமூக அமைப்பின் தலைவருமான எஸ். மாமாங்கராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும், ஆதரித்து இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம பிரச்சாரகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ கலந்து கொள்கிறார்.
இப்பிரச்சார நிகழ்வு இன்று மாலை 3.00 மணிக்கு மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

