Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 26, 2015

avathani Media Network

காலி முகத்திடல் முதலைத் தொல்லை!

கொழும்பை அண்மித்த கடற்பகுதிகளில் முதலைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முதலைகளின் தொல்லை காரணமாக தெகிவளை, கல்கிசை, கொள்ளுப்பிட்டிய மற்றும் காலி முகத்திடலை அண்டிய பகுதிகளில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முதலைகளின் அச்சம் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் கடற்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த முதலையை பிடித்து அகற்றுவதற்கு கடற்படையினர் பாரிய முயற்சி எடுத்திருந்தனர். அந்த வகையில் காலி முகத்திடல் பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :