முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அமைச்சரவையின் அனுமதியில்லாமல், 280 பில்லியன் ரூபாய்களை பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்காரணமாகவே மக்கள் மீது பாரிய நிதிச்சுமைகள் சுமத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்து தெரிவித்துள்ள அவர், முன்னைய அரசாங்கத்தின் இந்த செயலால், தற்போதைய வரவுசெலவுத்திட்டத்தில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்தநிலையில் கடன் சுமையில் இருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மதுவரி திணைக்களத்தின் மாதாந்த வருமானம், 2900 மில்லியன்களாக இருந்தது.
எனினும் அது தற்போது 9000 மில்லியன் ரூபாய்கள் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 10 வருடங்களாக மாதம் ஒன்றுக்கு 6100 மில்லியன் ரூபாய்களுக்கு என்ன நடந்தது எனவும் ரவி கருணாநாயக்க இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
