(எஸ்.எம்.எம். முஸ்தபா)
புதிய தேசிய அரசாங்கத்தில் நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினை பல சவால்களுக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளன. மழைவிட்டும் தூவாணம் விடவில்லை போன்ற ஒருமாயை இன்று எமது சமூகத்திற்கு மத்தியில் நிலைகொண்டுள்ளது.
சர்வதேச வை.எம்.எம்.ஏ பேரவை இந்நாட்டு முஸ்லிம்களின் இன்றைய நிலைப்பாட்டை சமுகமயப்படுத்தி ஆராய்வதற்கான ஒரு மாநாட்டை கூடிய விரைவில் நடாத்தவிருக்கிறது. நாட்டின் புத்தி ஜீவிகள் துறை சார்ந்தோர்களை கொண்ட இம்மாநாட்டில் கீழ் வரும் விடயங்கள் பற்றி ஆராயப்படவிருக்கின்றன.
முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக கல்வி விவாகச் சட்டம் அகதிகள் காணி சுகாதாரம் வீட்டுத்திட்டம் பாதுகாப்பு தொழில் உயர் கல்வி நிதிப் பிரச்சினை அரச நிறுவனங்களின் பதவிகள் மற்றும் அடிப்படை உரிமைகள் போன்ற விடயங்கள் அடையாளங்காணப்பட்டுக்கமையால் இவ்விடயங்கள் பற்றிய கருத்துக்களை எழுத்து மூலம் கீழ் வரும் விலாசத்திற்கு 2015 ஒக்டோபர் 1ம் திகதிக்கு முன் அனுப்பி வைக்கவும்.
1946 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை இலங்கை முஸ்லிம் சமுகத்துக்காக ஆங்கிலேயருடன் கலந்துரையாடியே பல உரிமைகளை பெற்று தந்தனர். அதன் விளைவாகவே 29ஆம் ஷரத்து மூலம் அது காப்பீடு செய்யப்பட்டன. இந்த உத்தரவாதம் 1972ஆம் ஆண்டு வரை பேணப்பட்டு வந்தது.
1972ஆம் ஆண்டில் பெரும்பான்மை சமுகத்தின் மீது முஸ்லிம் தலைவர்கள் நம்பிக்கை கொண்டதாலேயே இதை நீக்கும் போது பேசாது இருந்தார்கள். 1978ஆம் ஆண்டிலும் 29ஆம் ஷரத்து இடம்பெறவில்லை.
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு பின்பே 29ஆம் ஷரத்து இல்லாததன் குறைபாடு விளங்கியது.அவ்வாட்சி மேலும் எட்டு ஆண்டுகள் இருந்திருந்தால் முஸ்லிம்கள் பாரிய அழிவைச் சந்தித்து இருப்பார்கள்.
அல்ஹாஜ் அஷரப் ஹூஸைன் தலைவர் சர்வதேச வை.எம்.எம்.ஏ பேரவை இல.22 ரொஸ்மிட் பிளேஸ் கொழும்பு 7 என்ற முகவரிக்கு மேற்படி விடயங்கள் தொடர்பான கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும்.
0773215635 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும்.