இந்திய நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் ஐவர் தமிழ்நாட்டு முகாமில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
மகேஷ்வரன் தங்கவேல், சிவனேஷ்வரன் பாலசுப்ரமனியம், மஹேஷ்வரன் கந்தவனம், கிருஷ்ணமூர்தி கந்தசாமி மற்றும் சுரேஷ் குமார் ஞானசுந்தரம் ஆகியோர் வெள்ளிகிழமை திருச்சிராபள்ளி விசேட முகாமில் தங்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தாம்பரம் நீதிமன்றினால் விடுதலை செய்றுமாறு கோரி இவ் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த பின்னர் ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி கருத்து வெளியிட்ட மஹேஷ்வரன் தங்கவேல் குறிப்பிட்டதாவது,
“எங்கள் குடும்பத்தினருடனும் பிள்ளைகளுடனும் வாழ்வதற்காக எங்களை நாட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு இந்திய அதிகாரிகளிடம் நாங்கள் கேட்டு கொள்கின்றோம்”.
நான் உட்பட மூவரும் நோய்வாய்பட்டுள்ளோம், எங்களில் ஒருவருக்கு இடுப்பின் கீழ் செயழிலக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் பல்லாவரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த ஐவர் யாழ்பாணத்தை சேர்ந்தவர்களாவர்.
ttnnews
ttnnews
