Featured Home (TOP)

Recent Comments

Wednesday, October 7, 2015

avathani Media Network

மரணதண்டனை அமுல்படுத்தப்படாது என ஐ.நா.வில் அரசாங்கம் உறுதியளித்துள்ளது

இலங்­கையில் மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தில்­லை­யென அர­சாங்கம் ஐ.நா.வில் உறு­தி­யா­ளித்­துள்­ளது எனத் தெரி­வித்த அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ, குற்­ற­வா­ளி­க­ளுக்கு
தண்­ட­னைகள் புனர்­வாழ்­வ­ளிக்கும் வித­மாக அமைய வேண்­டுமே தவிர பழி­வாங்­கு­வ­தாக அமை­யக்­கூ­டாது என்றும் தெரி­வித்தார்.


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மரண தண்­டனை தொடர்­பான ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ இதனைத் தெரி­வித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இன்று மரண தண்­டனை வழங்­கப்­பட வேண்­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பான விவாதம் எழுந்­துள்­ளது. உலகில் 100 நாடு­க­ளுக்கு மேல் மரண தண்­டனை நீக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்கு எதி­ராக இன்று குரல் கொடுக்­கப்படுகின்­றது. மனித உரிமை அமைப்­புகள் போரா­டு­கின்­றன. கண்­ணுக்கு கண் பல்­லுக்கு பல் என்ற சட்­டங்கள் பிரித்­தா­னியர் காலத்தில் காணப்­பட்­டன.
இன்று உலகம் பழை­மை­யான பழி­வாங்­கல்கள் தண்­டனை முறை­மை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு ஒழுக்க விழு­மி­யங்­களை கொண்ட தண்­ட­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கி­யுள்­ளது.
குற்றம் செய்­த­வர்­களை பழி­வாங்­கு­வ­தற்­கான தண்­ட­னைகள் அல்ல. குற்றம் செய்­த­வர்கள் திருந்தி வாழ்­வ­தற்­கான புனர்­வாழ்வு வழங்­கப்­பட வேண்டும். அதுவே நவீன உலகின் முற்­போக்கு சிந்­த­னை­யாகும்.
சட்­டங்கள் பழி­வாங்கும் நோக்கில் அமையக் கூடாது. உலகில் பல்­வேறு நாடு­களில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்படுவ­தில்லை. ஐ.நா சபையில் மரண தண்­டனை உலகில் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட வேண்டும் என்ற பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது.இதற்கு இலங்கை ஆத­ரவு வழங்­கி­யது.
இலங்கை மீது இன்று மனித உரிமை குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு உலகம் எம்மை திரும்பி பார்த்தும் கொண்­டி­ருக்­கின்­றது.எனவே,வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் அண்­மையில் ஐ.நா சபையில் உரை­யாற்றும் போது இலங்­கையில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­த­ப­ட­மாட்­டாது எனத் தெரி­வித்தார். இம் முறை ஐ.நா. கூட்­டத்தில் உரை­யாற்­றிய புனித பாப்­ப­ர­சரும் உலகில் மரண தண்­டனை நிறுத்­தப்­பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்­தியா, சீனா போன்ற நாடு­க­ளிலும் இன்று மரண தண்­டனை வழங்­கு­வது தொடர்­பாக மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது.இது தொடர்பில் குற்றச்செயல்களை வகைப்படுத்தி தண்டனை வழங்குவது தொடர்பிலும் பரிந்துரைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன என்றார்.

virakesary.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :