(எம்.எஸ்.எம்.மிஸ்பாஹ்)
தற்போது நாளுக்கு நாள் கடலரிப்பால் கரைந்து போகும் காத்தான்குடி கடற்கரைப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் வாதிகளும், அரச உயர்மட்ட அதிகாரிகளும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (02.10.2015) குறிப்பிட்ட கடற்கரைப் பகுதிக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் வருகை தந்து பார்வையிட்டதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.
இதனடிப்படையில் பெகோ இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மண்நிரப்பப்பட்ட மூடைகள் குறித்த இடங்களில் தற்காலிகமாக நிரப்ப்பட்டு வருகிறன.








