Featured Home (TOP)

Recent Comments

Tuesday, November 3, 2015

avathani Media Network

காத்தான்குடி கல்விக் கோட்டத்தினைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு “குரு பிரதிபா பிரபா விருது – 2015”

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

இலங்கைத் திருநாட்டின் மாணவச் செல்வங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதய பூர்வமாகப் பங்களிப்புச் செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு அன்மையில்  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது பிரதம அதிதியாக  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன கலந்து கொண்டார்.

நிகழ்வில்  கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர்  வே. இராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர், கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தங்களது கடமை காலங்களின் போது  அதிக விடுமுறைகள் இன்றி  பாடசாலைகளில் கடமையாற்றிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி,கௌரவித்து கல்வி அமைச்சினால்மேற்படி  விருது வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தினைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஐவர் மேற்படி குரு பிரதிபா பிரபா 2015 ஆண்டுக்கான  விருதினை பெற்றுக் கொண்டனர்.
 
01. ஜனாப். ஏ.பீ.ஏ றஸூல் (அதிபர்/ மட்/மம  பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம்)  
02. ஜனாப். எம்.ஏ.எம்.  இஸ்ஹாக் (ஆசிரியர்/ மட்/ மம/ பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம்)
03. திருமதி. சபீனா ஆயிஷா) (ஆசிரியை/ மட்/ மம/ ஹிழுரியா வித்தியாலயம்)
04. திரு. தருமரெத்தினம் ஜெய்தனன் (ஆசிரியர்/ மட்/மம/ பாலமுனை அஷ்ரப்  வித்தியாலயம்)
05. ஜனாப். எம். எம். யஹ்யா நஜிமுதீன் (ஆசிரியர்/மட்/ மம/ காத்தான்குடி மத்திய கல்லூரி வித்தியாலயம்)

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :