காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள் கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பசுமாடுகளை அறுப்பதற்கு நகரசபை தடை விதித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கடையைட போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அந்த பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கு மாட்டிறைச்சியை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களின், இந்த ஹர்த்தால் நடவடிக்கையால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொதுச் சந்தை மற்றும் புதிய காத்தான்குடி சந்தை, புதிய காத்தான்குடி சந்தை உள்ளிட்ட 28 மாட்டு இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரணிடம் கூறிய போது, இவர்களின் பகிஸ்கரிப்பு தொடர்பாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
