குணமடைவதற்கு நாட்கள் செல்லும் லீஸ்மனைசீஸ் எனப்படும்
நோய் மத்திய மாகாணத்தில் பரவி வருவதாக சுகாதார தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நோய், இலங்கையின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில்
காணப்பட்டபோதிலும், நாட்டின் மத்திய பகுதிகளில் பரவியிருக்கவில்லை என பேராதனை பல்கலைக்கழக
மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இந்தநோய் பரவுவதை அவதானிக்க்க்
கூடியதாய் உள்ளதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
ஒருவகை கிருமியினால் பரவும் இந்த நோய், சருமத்தின்
வெளிப்புறத்தில் தழும்பாகத் தோன்றுவதுடன், அதனைக் குணப்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும்
என்றும் பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
