அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதி சொலிசுட்டர் ஜெனரல் வசந்த நவரட்ன பண்டார, இந்த விடயத்தை சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஸ மற்றும் நான்கு பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஸ, அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதி, நிறுவனத்தின் பணிப்பாளர் மஞ்சுள குமார யாபா, பாதுகாப்பு அமைச்சின் முனான்ள மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன, ரக்னா லங்கா நிறுவனத்தின் பாலித பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை இறக்குமதி செய்து வைத்திருந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகியன தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவன்ட்கார்ட் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் பிரதி சொலிசுட்டர் ஜெனரல் இந்தப் பரிந்துரைகளை செய்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம், ஆயுதச் சட்டங்கள், வெடிபொருள் சட்டங்கள் ஆகியனவற்றின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.