Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 4, 2015

Unknown

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு பெற இயற்கை மருத்துவ டிப்ஸ்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு பெற இயற்கை மருத்துவ டிப்ஸ்:-

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால்,முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும்,முகம் பொலிவுடன் காணப்படும்.
* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால்,கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.
* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.
* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.
* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
Read More
Unknown

உம்ராவுக்கு அழைத்து சென்று பெண்களை நிர்கதியாக்கியமோசடி கும்பல்!


உம்ராவுக்கு அழைத்து சென்று பெண்களை நிர்கதியாக்கியமோசடி கும்பல்! பின்னணியில் ஞானசார தேரரிடம் பஞ்சாயத்துக்கு சென்ற ஹஜ் முகவர் ?????.....



அனைத்தும் வியாபார மயமாக ஆகிப்போன சமகாலத்தில் ஹஜ் மற்றும் உம்ரா சேவை நடாத்திவரும் ஒரு சில முகவர்களின் நிறுவனங்களின் செயற்பாடு ஒட்டுமொத்த உம்ரா மற்றும் ஹஜ் சேவையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உம்ரா கடமையை நிறைவேற்ற அழைத்து செல்லப்பட்ட அறுவர் கொண்ட குழு (அறுவரும் பெண்கள்) ஜித்தா விமான நிலையத்தில் பொறுப்பேற்க கூட முகவர் நிலையத்தின் ஆட்கள் இல்லாமல் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.




இலங்கையில் இருந்து குறித்த முகவர் நிலையத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு பின்னர் குறித்த முகவர் நிலையம் அந்த உம்ரா குழுவை நேற்று பொறுப்பேற்றுள்ளது .

குறித்த உம்ரா குழுவில் சென்ற பெண்களின் குடும்பத்தினர் இந்த விடயத்தை ஊடகங்களில் வெளியிட்டு இப்படியான மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருமாறு எம்மிடம் கேட்டுக்கொண்டனர்.

களத்தில் இறங்கிய மடவளை நியூஸ் செய்தி குழு திரட்டிய தகவல்களின் படி பொதுபல சேனா அமைப்புடன் ஹஜ் விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு சென்ற குழுவில் பிரதான அங்கம் வகித்த ஒருவர் இந்த பின்னணியில் இருப்பது தெரியவந்தது.அதனை ஊஜிதப்படுத்த அவரை பல தடவைகள் தொடர்ப்புகொண்டும் எமக்கு பதில் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக ஜித்தாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி நியாஸ் அவர்களை நாம் தொடர்ப்புகொண்டு கேட்டபோது குறித்த இந்த விடயத்தில் சம்பத்தப்பட்ட முகவர் நிலையம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் இவர்கள் வேறு பெயர்களில் விசாக்களை பெற்று முறைகேடுகளில் ஈடுபடுவதாக மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

இதனை கண்டறிய குறித்த விசாக்களை பரிசீலித்து எந்த முகவர் பெயரில் இந்த மோசடிகளை நடத்துகிறார்கள் என்பது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து இந்த மோசடிகும்பளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை தம்முடன் தொடர்ப்புபடுத்தி தருமாறும் அவர் கோரி இருந்ததை தொடர்ந்து குறித்த சம்பத்தில் பாதிக்கப்பட தரப்பையும் நாம் ஜித்தா உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் தொடர்புபடுத்தினோம்.

அதனுடன் நின்றுவிடாமல் இது தொடர்பாக முஸ்லிம் கலாசார அமைச்சர் ஹலீம் இவர்களை தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன் அவரின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் பணிப்பாளர் சமீல் அவர்களுக்கும் இது தொடர்பாக முறையிட்டுள்ளோம்.

இவ்விடயம் தொடர்பாக மடவளை நியுசுக்கு கருத்துவெளிட்ட அமைச்சின் பணிப்பாளர் சமீல் இது போன்ற எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இந்த மோசடி கும்பல்களுக்கு எதிராக எவரும் முறையிடுவதில்லை என சுட்டிக்காட்டிய அவர் இது மோசடியில் ஈடுபடும் சில முகவர்களுக்கு சாதகமாக அமைவதாக குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம் கலாசார அமைச்சும் ஹஜ் கமிட்டியும் செயற்படும்விதம் திருப்திகரமாக இல்லை எனவும் விமர்சனங்களும் எழுத்துள்ளன..

முஸ்லிம்களின் ஐந்து கடமைமைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் புனிதமான உம்ரா சேவை முகவர்கள் மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்க பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகவும்.
Read More
Unknown

2 நாள் லீவு! சாகச முயற்சியில் டோனி அன்ட் கோ

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் சாகச செயல்களில் களமிறங்கியுள்ளார் அணித்தலைவர் டோனி.
அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை (0–2) இழந்தது, முத்தரப்பு தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியது.
இதனால் மனதளவில் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்தது.
இரண்டு நாட்கள் எங்காவது சென்று பொழுதை கழித்துவிட்டு வருமாறு இந்திய வீரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதைப் பயன்படுத்தி பல வீரர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள தங்கள் உறவினர்கள், நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர்.
ஸ்டூவர்ட் பின்னி சிட்னியில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றார். ஷிகர் தவான் தனது மனைவி, குழந்தைகளுடன் மெல்போர்ன் சென்றுள்ளார்.
ஆனால் எதிலும் வித்தியாசம் காட்டும் டோனி கிடைத்த ஓய்வு நேரத்தில் சாகச செயல்கள் செய்ய களமிறங்கியுள்ளார்.
இதற்காக இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா என மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு, அடிலெய்டு புறநகர் பகுதியில் உள்ள சாகச பார்க்கிற்கு சென்றுள்ளார்.
இங்கு மலையேறுவது, மீன் பிடிப்பது, படகு சவாரி என பொழுது போக்குகின்றனர்.
Read More
Unknown

NFGG ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 67வது சுதந்திரதின நிகழ்வுகள்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடகப் பிரிவு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த இலங்கைத் திருநாட்டின் 67வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை காத்தான்குடியிலுள்ள அதன் மக்கள் அரங்கில் இனிதே நிறைவுற்றது.
NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ALM.சபீல் நளீமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்.
Read More
Unknown

போர் முடிந்ததால் மட்டும் தேச ஒற்றுமை ஏற்படவில்லை-மைத்திரிபால

Colombo (BBC) 
இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும் அதன் முலம் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழும் மக்களின் இதயங்களை ஒன்று சேர்க்க முடியவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை ஸ்ரீ ஜெயவர்த்தனபுற கோட்டே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றன.
Read More
Unknown

முகநூல் நண்பர்களுக்கு

நல்ல ஆரோக்கியமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முகநூலில் தினந்தோறும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

அப்படி எழுதுகின்றவர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் மிக விரைவாகவே பின்னோக்கிச் சென்று விடுவதால் அவற்றை முகநூல் நண்பாகளாலேயே பார்த்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.  


அது மட்டுமல்லாது முகநூல் தொடர்பில்லாதவர்களால் அந்த நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கிறது.


ஆகவே, முகநூலில் கருத்துக்களை எழுதும் உறவுகள் எங்கள் இணையதளத்திற்கும் எழுதினால் அவற்றை எம்மால் பிரசுரித்து ஏனையவர்களுக்கும் சேர்ப்பிக்க முடியும்

ஆக்கங்களையும் கருத்துக்களையும் எழுதுகின்றவர்கள் தங்களது உண்மையான பெயர் முகவரி தொடர்பிலக்கத்தோடு  எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(பல முகநூல் உறவுகளின் வேண்டுகோளின் பேரிலேயே இந்தத் தகவல்)


எமது இணயதள முகவரி    www.avathani.com

எமது மின்னஞ்சல் முகவரி avathaninews@gmail.com


அவதானி நிா்வாகம்
Read More
Unknown

கர்பலா, அல்-மனார் முன்பள்ளி மாணவர்களுக்கு NFGG இலவச சீருடை வழங்கியது

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இலவச பாலர் பாடசாலை சீருடை வழங்கும் நிகழ்வு ஒன்று இன்று (01.02.2015) மாலை கர்பலாவில் இடம்பெற்றது.
கர்பலா, அல்-மனார் முன்பள்ளி மாணவர்களுக்கே இவ்வாறு இலவச சீருடை வழங்கி வைக்கப்பட்டது.


ஓய்வு பெற்ற கணித ஆசிரியரும் கர்பலா, அல்-மனார் முன்பள்ளியின் தலைவருமான MCM.முஸ்தபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் மற்றும் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் தலைவர், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பாலகர்களின் தாய்மார்களும் கலந்துகொண்டனர்.



இதன்போது மேற்படி முன்பள்ளி பாலர்கள் 25 பேருக்கு தலா இரண்டு சீருடை வீதம் 50 சீருடைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.


மேற்படி கர்பலா, அல்-மனார் முன்பள்ளியானது மிகவும் பின்தங்கிய நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More