Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 18, 2015

Unknown

புதிதாக அமைக்கப்பட்ட கிறவல் வீதியை அகற்றக் கோரி NFGGயிடம் மக்கள் மகஜர்

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


முறையற்ற மற்றும் திட்டமிடப்படாத முறையில் அமைக்கப்பட்ட கிறவல் வீதியினால் தாம் பெரிதும் அசௌகரிகங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்து மேற்படி வீதியினை உடனடியாக அகற்றித் தருமாறு கோரி NFGGயிடம் பிரதேச மக்கள் மகஜர் ஒன்றினைக் கையளித்தனர்.
Read More
Unknown

மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு

மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர்கள் சிலருக்கு  ஊடக உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில்  மூத்த தமிழ் ஊடகவியலாளர்களான சின்னத்துரை சண்முகராஜ், பாலசிங்கம், இளையதம்பி பாக்கியராசா, கந்தசாமி அரசரட்னம், கருப்பையாப்பிள்ளை லோரண்ஸ் கூஞ்ஞே ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
Read More
Unknown

நகரசபை உறுப்பினர் கைது

(க.கிஷாந்தன்)
தலவாக்கலை லிந்துலை நகரசபையின் பொது ஜன ஜக்கிய முன்னணியின் உறுப்பினர் பசான் ஹிம்மாலக்கவை  சந்தேகத்தின் பேரில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் தலவாக்கலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதாக கிடைத்த முறைப்பாடொன்றை அடுத்து இவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த ஜானக சந்திரட்ண என்பவர் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Read More
Unknown

மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்த தானமுகாம்

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக பல்வேறு சமூகப்பணிகளைச் செய்து வரும் மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்த தானமுகாம் எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை இடம் பெறவுள்ளது
Read More
Unknown

ஒரு கர்ப்பிணியை ஈவிரக்கமின்றி வைத்தியசாலையை விட்டு வெளியேற்றிய சோக சம்பவம் வாழச்சேனையில்


உலகத்தில் உள்ள தொழில்களில் மனித உயிரைக் காப்பாற்றக் கூடிய சேவையை செய்யும் தொழிலாக அனைவராலும் சொல்லப்படும் தொழில் என்றால் அது வைத்தியத்துறை என்றால் அதற்கு மாற்றுக்கருத்திற்கிடமில்லை.

தங்களது சுக துக்கம்களுக்கு அப்பால் மனிதனின் உயிரை காப்பாற்றுவதற்காக சேவை மனப்பாங்கோடு சேவை செய்வதுதான் சுகாதாரத்துறையினர்.  அத்துறையில் உள்ளவர்களே ஒரு கர்ப்பிணித்தாயை ஈவிரக்கமின்றி வைத்தியசாலையில் இருந்து வெளியே தள்ளிவிட்ட சோக சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. 
Read More
Unknown

எனது பெயரில் இயக்கப்படுவதாக சொல்லப்படும் முகநூல் பக்கங்கள் போலியானவை -முஹம்மட் முஸ்தபா - ஐ.தே.கட்சி , அமைப்பாளர்,


எனது பெயரைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முகநூல் பக்கங்கள் தொடர்பாக நான் அறிகிறேன்.

முகநூல் பக்கங்கள் எதனையும் நான் எனது சொந்தப் பெயரிலோ அல்லது வேறு புனைப் பெயர்களிலோ இற்றைவரைபாவிக்காத நிலையில் எனது பெயருக்கு களங்கம் உருவாக்குவதற்காகவே சில விசமிகள் இந்த கீழ்த்தரமான செயலைசெய்திருப்பதாகவும் நான் நம்புகின்றேன்.

மேலும்இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்திபல கீழ்த்தரமான கருத்துக்களை சில ஊடகவியலாளர்களுக்கு எதிராகஎழுதி என்னை வேண்டுமென்றே பிரச்சினைகளில் மாட்டிவிடுவதற்காக இந்த விசமிகள் முயற்சித்திருப்பதாகவும்அறிகிறேன்.

இதற்கு முன்னரும் போலியான முகநூல் பங்கங்களைத் திறந்து எனக்கெதிரான கருத்துக்களை இந்த விசமிகள் எழுதிவந்தார்கள் என்பதனையும் நான் அறிவேன்.

.தே.கட்சியின் நடவடிக்கைகளை காத்தான்குடிப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக முன்னின்று மேற்கொண்டு வரும்நான் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நமது மக்களுக்குத் தேவையான பல விடயங்களை நிறைவுசெய்வதற்காக முன்னின்று பாடுபட்டு வருகிறேன்எனது முயற்சிகள் பல இதுவரை வெற்றியும் அளித்திருக்கின்றன.

இதனை சகித்துக் கொள்ள முடியாதஎனது அரசியல் முன்னேற்றத்தில் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில விசமிகளே இந்தகீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.

இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நான் உடனடியாக மேற்கொள்ளவுள்ளேன்.

எனவேஎனது பெயரில் இயக்கப்படும் எந்த முகநூல் பக்கங்கள் எதையும்  எனக்கு உரியவை அல்ல என்பதனைபொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த விசமிகளின் கீழ்த்தரமான நடவடிக்கைகள்காரணமாக பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவேஎன்னோடு தொடர்புபட்ட எந்த விடயங்கள் தொடர்பாகவும் நேரடியாக என்னோடு தொடர்பு கொண்டுவிளக்கங்களை  பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களையும் ஊடகவியலாளர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வண்ணம்
முஹம்மட் முஸ்தபா
அமைப்பாளர்.தே.கட்சி , காத்தான்குடி 

Read More