Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 21, 2015

Unknown

கல்வி கற்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஆசிரியர் குற்றவாளியென நீதிமன்றம் அறிவிப்பு! தண்டனை மே 26ல்!!

காத்தான்குடி நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆளுந்தரப்பு உறுப்பினராகவுள்ள எச்.எம்.எம். பாக்கீர் என்பவரால் நடாத்தப்பட்டு வரும் தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்பதற்காகச் சென்றிருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவியை கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதியன்று குறித்த நகர சபை உறுப்பினர் அவரது காரில் கல்முனைக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு நடைபெற்று வந்த வழக்கில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (21.04.2015) குறித்த நகர சபை உறுப்பினரைக் குற்றவாளி எனத் தெரிவித்துள்ளது.
Read More
Unknown

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே

(ஸியாத் பஹ்மி M.A.)

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே, சில அண்டங் காக்கைகளுக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே. பேதம் புரியல்லே,

1962களில் பலே பாண்டியா படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்.

ஏன் இதை எழுதுகின்றேன் என்றால் தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வைப் பாற்கும் போது வேதனை தருகின்றது.

நாடாளுமன்ற முடக்கமானது நிறைவேற்று துறைக்கும், சட்டவாக்க துறைக்குமான அதிகார இழுபறியினதும், பலங்குன்றிய ஆளும் கட்சியினதும் வெளிப்பாடாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், வாக்களிப்பிற்கு மக்களிடம் வைத்த கோரிக்கை நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் ஆக்குவதுதான்.அதற்கான வரைபுகள் வந்த நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அழைத்திருப்பதை காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முழு நாளும் தங்கியிருந்து,இன்றும் அமர்வை குழப்பியிருந்தனர்.
Read More
Unknown

காத்தான்குடி சம்மேளன கல்விக்குழு மறு சீரமைப்பு

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதான குழுக்களில் ஒன்றான கல்வி அபிவிருத்தி குழு மறு சீரமைக்கப்பட்டுள்ளதாக கல்வி குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமைச்சர் றவுப் ஹக்கீமின் இனணப்பு செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

காத்தான்குடி சம்மேளனத்தின் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வினை அடுத்து நடைபெற்ற வாராந்த கூட்டத்தில் கல்வி குழுவின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளையும் எதிர்காலத்தில் கல்விக்குழு சிறப்பாக செயல்படுவதன் அவசியத்தையும் யூ.எல்.எம்.என்.முபீன்  பின்வருமாறு வலியுறுத்தினார்.
Read More
Unknown

பெரியமடு கிராமம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது: வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின்

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

பெரியமடு மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேச செயலக எல்லைப் பிரிவிற்குள் அமைந்திருக்கின்ற ஒரு முஸ்லிம் கிராமம், 1956களில் விவசாயக் குடியிருப்புகளை நிறுவுகின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் சுமார் 280 குடும்பங்கள் மன்னார் விடத்தல்தீவு பகுதியிலிருந்து குறித்த பிரதேசத்தில் குடியேற்றப்பட்டார்கள், 1990களில் ஏற்பட்ட பலவந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து குறித்த கிராமம் பெரியளவில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது, என்பதை குறித்த கிராமங்களைச் சேர்ந்த கிராமிய அபிவிருத்தி சங்கங்களைச் சந்தித்தபோது தெரிந்துகொண்டேன் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தன்னுடைய ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Read More
Unknown

நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த பணிப்புரையை அடுத்து நேற்றுக்காலை முதல் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையின் எதிரொலியாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More
Unknown

நாட்டிற்கு திரும்பினார் பசில்

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் EK -348  என்ற விமானத்தின் மூலம் அவர் 1.36 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, அவரை வரவேற்குமுகமாக அவரது ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் கட்டுநாயக்க விமானநிலைய வாயிலில் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Virakesary

Read More
Unknown

தோணாவில் மீன் பிடித்தல்

(மதியன்பன்)

இப்போது
தோணா என்ற பெயரையே
தோண்டிப் புதைத்து விட்டார்கள்
அப்போதெல்லாம்
அதில்தான் நாங்கள் மீன் பிடிப்போம்.



மாலையானால்
தூண்டில் இரை சகிதம்
இடுப்புத் தண்ணிக்குள்
இறங்கி நிற்பதில் அலாதிப் பிரியம்.

தங்கூசில் துண்டில் கட்டி இரையும் குத்தி
இடையிலே மப்பளர் கட்டி
இடம் பார்த்து வீசுவோம் தூண்டிலை

கண்ணிமைக்கும் நேரம்
மப்ளர் ஓடும் அங்கும், இங்கும்
மாட்டிக்கிட்டாங்க..
ஆவலோடு இழுத்தெடுப்போம்.

Read More
Unknown

பாராளுமன்றில் பகலிரவாக தொடரும் எதிர்ப்பு நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கின்றது.
பாராளுமன்றம் நேற்று முற்பகல் கூடியபோது முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் ஐ.ம.சு.மு. வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார் என எழுத்து மூலம் வாக்குறுதி வழங்குமாறு கோரி 50 க்கும் மேற்பட்ட ஐ.ம.சு.மு. வின் பாராளுமன்ற உறுப்பினரகள் நேற்று முற்பகல் வேளையில் பாராளுமன்றத்திற்குள் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
தற்போதும் 40 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் பாராளுமன்றத்திற்குள் இருந்து எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
Virakesary

Read More