Featured Home (TOP)

Recent Comments

Friday, July 17, 2015

Unknown

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த முப்பது நாட்களாக நோன்பு இருந்து இரவு பகலாக வணக்க வழிபாடுகளிலும் ,கடைசிப் பத்து நாட்களில் இரவு பகலாக அல்லாஹ்வுக்கும் அவனது றசூலுக்கும் கட்டுப்பட்டு பல்வேறுபட்ட அமல்களிலே முழு நாளையும் கழித்து இன்று புனிதமான ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்ற அன்புக்குரிய சகோதரர்கள்,சர்வதேச ரீதியிலும்,தேசிய ரீதியிலும் உள்ள அத்தனை சகோதர்களுக்கும்,எனது உடன் பிறப்புக்களுக்கும் எனது  ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த நோன்பு காலங்களில் நாங்கள் மார்க்க விடயங்களை அறிந்து கொண்டோம்,குறிப்பாக பல்வேறுபட்ட தியாகங்களை எங்களுடைய வாழ்க்கையில் அனுபவித்தோம்,அல்லாஹ் ,றசூலுக்காக வேண்டி ,அல்லாஹ்வுடைய கட்டளைக்காக வேண்டி அல்லாஹ் ஹலால் ஆக்கிய  உணவை பகல் நேரங்களில் சாப்பிடாமல் தவிர்த்திருந்தோம்.

அல்லாஹ் அனுமதித்தவற்றை அல்லாஹ்வுடைய கட்டளைக்காக வேண்டி நோன்பு காலங்களில் தவிர்த்து எங்களுடைய வாழ்க்கையில் பல தியாகங்களை நாங்கள் மேற்கொண்டோம்.
நோன்பு என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையை நோன்பு மாதத்தில் மாத்திரமல்ல முழு வருடமும் அவன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கூறுவதோடு அவனுக்கு தியாகத்தையும்,மார்க்கத்தையும் கொண்டு அவனை பக்குவப்படுத்துகின்ற மாதம்.

இந்த நோன்பு மாதத்தில் நாங்கள் பெற்ற தியாகங்களை,பெற்ற உணர்வுகளை ,பெற்ற அறிவுகளை இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் கடைபிடிப்போமாக .

குறிப்பாக முஸ்லிம் சமூகம் தேசிய ரீதியிலும்,சர்வதேச ரீதியிலும் பல்வேறுபட்ட துன்பங்களை ,துயரங்களை சந்தி சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கின்ற இந்த சூழ் நிலையிலே சர்வதேச சக்திகளும் தேசிய ரீதியிலான சக்திகளும் முஸ்லிம்களை இல்லாமல் செய்து ,முஸ்லிம்களை மோதவிட்டு ,முஸ்லிம்களை அழித்து ,முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை அழித்து முஸ்லிம்களை அநாதையாக்குவதற்காகத் திட்டமிட்டு செயற்படுத்துகின்ற இந்த சூழ் நிலையிலே முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து ,முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு சூழ் நிலைகளை உருவாக்கப்பட வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக.

அல்லாஹ்விடத்திலே நம் எல்லோருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தையும்,முஸ்லிம் சமூகம் குறிப்பாக இலங்கையிலே இலங்கை முஸ்லிம்கள் மிக நிம்மதியான ,மிகச் சிறப்பான எதிர் காலத்திலே வாழ்வதற்கான சூழ் நிலைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் உருவாக்க வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக என கூறி உங்கள் எல்வோருக்கும் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் .ஈத் முபாறக்...

Read More
Unknown

"நல்லாட்சியை வலுப்படுத்தும் சுயபிரகடனத்தை இப்பெருநாள் தினத்தில் மேற்கொள்வோம்" பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

(ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

இஸ்லாம் வலியுறுத்தும் நல்லாட்சியை இந்த நாட்டில் வலுப்படுத்தும் தீர்மானமெடுக்கின்ற நன்னாளாக, இன்றைய பெருநாள் தினத்தை முஸ்லிம்களான நாம் ஒவ்வொருவரும் சுயபிரகடனம் செய்து கொள்வோம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா.வுடன் இணைந்து 2ம் இலக்கத்தில் போட்டியிடுபவருமான பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
'ஈதுல் பித்ர்' புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பொறியியலாளர் அப்துர் றஹ்மான், மேலும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
"இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில், பதினொரு மாதங்களுக்கு ஒரு முறை சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரைக்கும் தமது மனவெழுச்சிகளை ஒரு மாத காலத்திற்கு இறைவனுக்காக முற்றாகத் தவிர்த்திருப்பதும் ஒன்றாகும். இதனையே நாம் நோன்பு எனும் இறைவணக்கமாக நம்பி, கடந்த ஒரு மாதகாலமாக அதனை மிகவும் பயபக்தியுடன் நிறைவேற்றியும் வந்தோம்.
இந்நோன்பிற்கான வெகுமதியான நற்கூலியை தானே நோன்பாளிகளுக்கு வழங்குவதாக இறைவன் வாக்களித்துள்ளான். இதற்கமைய பகல் வேளைகளில் பசித்தும், தாகித்தும், மனவெழுச்சிகளை அடக்கியும் நாம் நோன்பிருந்ததற்காக இறைவனின் நற்கூலிலைப் பெற்றுக் கொண்டிருப்பதுடன், இரவு வேளைகளிலும் இறையில்லங்களில் தரித்திருந்து பலதரப்பட்ட மேலதிக வணக்கங்களையும் நிறைவேற்றியதற்காக மேலதிகமான பலவாறான நன்மைகளையும் நம்மை விட்டும் கடந்து சென்றுள்ள புனிதமான றமழான் மாதத்தில் நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இத்தகைய பெரும்பாக்கியமுடைய ஒரு சந்தர்ப்பம் நம்மிடம் மீண்டும் வருவதற்கு இன்னும் பதினொரு மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டியது ஒருபுறமிருக்க, நமது வாழ்நாளும் அப்பதினொரு மாதங்களுக்கு நீடித்திருக்க வேண்டியதும் அவசியமாகும். ஆனால் அந்த ஆயுள்நீடிப்புக்கு நம்மில் யாரிடமும் எந்த உத்தரவாதமும் கிடையாது.
இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் எல்லாமே மனிதகுலத்திற்குப் பொதுவான நல்லாட்சியையும், நல்வாழ்வையும் வலியுறுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிற அடிப்படை உண்மையை இன்று புனிதப் பெருநாள் தினத்தைக் கொண்டாடி மகிழும் முஸ்லிம்களான நாம் உற்றுணர வேண்டும்.
முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் தான் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு வழிப்பட்டு வாழ்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை முஸ்லிம்களான நாம் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதுடன், ஜனநாயகத்திற்கு அமைவாக நல்லாட்சியொன்று நடைபெறுவதற்கும் எமது
பங்களிப்புக்களைச் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட நல்லாட்சி நிர்வாகம், எதிர்வரும் நாடாளுமன்றத்திலும் வலுவடைய எமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தை மாத்திரம் நாம் உதட்டளவில் ஏற்றுக்கொண்டு, சட்டம் ஒழுங்கை நமது வாழ்க்கையில் பேணி நல்லாட்சி நிர்வாகமொன்று நாட்டில் செழிப்படைய வழிவகுக்க மறுப்பதானது, நமது மனவெழுச்சிகளை இறைவனுக்காகத் தவிர்த்துத் தியாகம் செய்யாமல் வெறுமனே பசித்தும், தாகித்தும் இருந்ததற்கான
கூலிக்கொப்பான விளைவையே நமக்குத் தரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இன்று இப்புனித பெருநாளைக் கொண்டாடும் நாம், இதைத் தொடர்ந்து இந்த நாட்டில் அதிகாரபலமுடைய அதியுயர்ந்த சட்டவாக்க சபையொன்றுக்கு நமது பிரதிநிதிகளையும் தெரிவு செய்ய வேண்டிய தேசியக் கடமைப்பாட்டை தோள்களில் சுமந்து கொண்டிருக்கின்றோம்.
எமது மாவட்டத்திலும், எமது தேசத்திலும் மக்கள் யாவரினதும் சுபீட்சமான நல்லாட்சி நிர்வாகமொன்றை ஸ்திரமாக அமைப்பதற்கு தமது கரங்களில் தரப்பட்டுள்ள வாக்குப்பலம் எனும் சாட்சியத்தை தரமும், தகுதியுமுடையவர்களுக்கு மனச்சாட்சிக்கு இடமளித்து நமது சமூகத்தின் அமானிதமாகக் கையளிப்பதற்கு முன்வர வேண்டும்.
அவ்வாறு ஒரு சுயதீர்மானத்தை நமக்குள் நாமே எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு நாளாக இன்றைய நன்னாளை நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம்.
இன்று எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் துதித்து, வணங்கி, இஸ்லாமிய நற்சிந்தனைகளை உள்ளங்களில் பதித்து, புத்தாடைகளால் தம் உடல்களை அழகுபடுத்தி, உறவுகளுடன் ஒன்றமர்ந்து உணவருந்தி பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனதும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினதும் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
.


Read More
Unknown

நிந்தவூரில் கூட்டு சகாதுல் பித்ர் விநியோகம்

(நிந்தவூர் முஹம்மட் ஜெலீல்) 

நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலும் இணைந்து இம்முறை முதன் முதலாக நிந்தவூரில் உள்ள 28 பள்ளிவாசல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட சகாதுல் பித்ர் பொருட்களை ஒவ்வொரு பள்ளிவாசல்களின் ஊடாக சக்கதுல் பித்ர் பெறத் தகுதியானவர்களுக்கு இன்று 17-07-2015ல் கூட்டாக சகாதுல் பித்ர் விநியோகம் செய்யப்பட்டது.

இச் சகாதுல் பித்ர்” பொதியானது 2500 ரூபாய், பொறுமதியான 300 பொதிகள் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் இச் சகாதுல் பித்ர் விநியோகம் நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அல்- ஹாஜ்.எம்.ஜ.ஜௌபர் (பலாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.









Read More
Unknown

குருநாகல் மாவட்ட சிறுபான்மை முஸ்லிம் பிரதிநிதி ரிஸ்வி ஜவஹர்சா ?

(மரியமின் புத்திரன்)

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம்  திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டிருப்பது அம்மாவட்டத்தில் வாழும்  சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்களை தலையைத்தடவி கண்ணைப் பிடுங்கிய செயலாகவே இருக்கின்றது.  

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின்  மாகாணசபை உறுப்பிணர் கௌரவ- ரிஸ்வி ஜவஹர்சா அவர்களை குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின்  பிரதிநிதியாக  யானைச் சிண்ணத்தில்  களமிறக்குவதாக வேட்பாளர் நியமனப்பட்டியலில் கடந்த பதினோராம் திகதியிரவு கடைசி ஆளாக  கையொப்பமிடப்பட்டும் இறுதி நேரத்தில் முக்கிய அமைச்சரொருவரினால் ரிஸ்வி ஜவஹர்சாவின் பெயர்மாற்றம் செய்யப்பட்டு வேறொருவரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதானது குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவரின் நாடாளுமன்ற நுழைவைத் தடுக்கும் செயலாகவே அமைகிறது. இது ஒருபோதும் மண்ணிக்கமுடியாத துரோகத்தனமான செயலாக அம்மக்களினால் பார்க்கப்படுகிறது. 

காலா காலமாக இம்மாவட்ட  முஸ்லீம்கள் இரு பிரதான கட்சிகளுக்குமே வாக்களித்துவரும் நிலையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் வளர்ச்சியை சகித்துக் கொள்ளமுடியாத சக்திகளின் கூட்டுமுயற்சியில் வடமாகாண முஸ்லிம் அமைச்சர் சேர்ந்துகொண்டதன் மூலம்  இம்மாவட்ட சிறுபான்மை முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்துவிட்டார்  என்றே கூறப்படுகிறது.
    
வடமேல் மாகாணசபை உறுப்பினராகவிருந்து தன்னாலியன்றளவு பின்தங்கிய கிராமங்களுக்கு சேவை செய்ததன்மூலம் அம்மக்கள் மத்தியில் பேரபிமானம் பெற்ற  இளம் அரசியல்வாதியாகவும் சமூகசேவகராகவும் ரிஸ்வி ஜவஹர்சா அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார். இவ்வாறிருக்க குருநாகல் மாவட்டத்திற்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் நியமனப் பட்டியலிலிருந்து  அதன் தலைவர், செயலாளருக்கும் தெரியாமல் தன்னிச்சையாக  அம்மாவட்டத்தின் அமைச்சர் பெயரை நீக்கியமையானதும் வேரொருவரின் பெயரை இடம்பெறச் செய்துள்ளதும் பலத்த சந்தேகத்தையளிக்கும் அதேவேளை இச்செயல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினதும் அதன் தலைமையினதும் தரத்தை மீண்டுமொருதரம் உரசிப்பார்க்கும் செயலாகும். இதுவிடயத்தில் முஸ்லீம்களின் அதிபலமுடை கட்சியென்றவகையில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மெத்தனப்போக்கை கைவிட்டு காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கையாலாகாத்தனத்திற்கு  நாட்டின் மக்களபிமானம்பெற்ற கட்சியென்ற வகையில் ஐ.தே.க.வெட்கித்தலைகுனிவதோடு நட்டாற்றில் விடப்பட்டிருக்கும் இம்மாவட்ட மக்களுக்கான முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை மாற்றுவழியிலேனும் வழங்கி நாட்டில் ஐக்கியத்தையும், நிலையான சமாதானத்தையும் நிலைநாட்டும் அரசின் நல்லாட்சிக்கான பயணத்தில் மக்களை யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருவது ஐதே.க.யின் தலைவரும் நல்லாட்சி நிலவும் நாட்டின் பிரதமருமான கௌரவ- ரனில் விக்கிரமசிங்க அவர்களின் தலையாய கடைமையுமாகும்.

இந்தவிடயத்தில் உரியவிசாரனை செய்து நீதியை பெற்றுத்தராதவிடத்து பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பை புறக்கனித்து ஒதுங்கிக்கொள்வதா ? அல்லது இருபெரும்பான்மை கட்சிகளையும் நிராகரித்து மூன்றாவது கட்சியொன்றின் கரங்களைப் பலப்படுத்துவதா?


Read More
Unknown

பெருநாள் சட்டங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றை பெருநாட்களாகக் கொண்டாடி வருகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டு நாட்கள் மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாட்களாக உள்ளன. ஒன்று ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள், மற்றொன்று ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள்.

பொதுவாக பெருநாட்கள் என்றாலே அதில் கேளிக்கைகளும் இடம் பெற்றிருக்கும். இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு மக்கள் வரம்பு மீறிச் சென்றுவிடக் கூடாது என்பதால் பெருநாட்களின் போது படைத்த இறைவனை அதிகம் நினைவு கூர்ந்து பெருமைப்படுத்துமாறு இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இதற்கென பெருநாள் தொழுகை எனும் சிறப்புத் தொழுகையையும் மார்க்கம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாம் வலியுறுத்தியுள்ள பெருநாள் தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் எமக்கு எவ்வாறு கற்றுத்தந்தார்கள்  என்பது மங்கிப்போய், பல்வேறு பித்அத்துகள் அதில் நுழைவிக்கப்பட்டு எம் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் வழிகாட்டலில் பெருநாள் தொழுகை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துமுகமாக இப்பிரசுரம் வெளியிடப்படுகின்றது.

இதனைப் படிக்கின்ற சகோதரர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் அடிப்படையிலும், நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வழிமுறையிலும் தங்களது அமல்களை அமைத்து ஈருலகிலும் ஈடேற்றம் பெறுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

1. பெருநாள் தொழுகையின் அவசியம்:

பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். பள்ளிவாயல்களில் நடைபெறும் ஐவேளைத் தொழுகை  மற்றும் ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகளில் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகளிலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. அப்படி சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

2. தொழுகை நேரம்:

இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : பராஃ பின் ஆஸிப்(றழி), நூல் : புஹாரி

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடிந்த மறு நிமிடமே தொழுது விட வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில், பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெளிப்படும் வரை தொழுவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்.

3. பெருநாள் தொழுகையில் பெண்கள்:

நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டும் சற்று விலகியிருக்கவேண்டும். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (றழி), நூல் : புஹாரி

பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (றழி), நூல் : புஹாரி

4. திடலில் தொழுகை:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (றழி), நூல் : புஹாரி.
கஸீர் பின் ஸல்த் (றழி) என்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது.

5. தொழுகையும், குத்பாவும்:

நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (றழி), உமர் (றழி), உஸ்மான் (றழி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி), நூல் : புஹாரி.

இன்றைய தினத்தில் நாம் முதன் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர் : பர்ராஃ பின் ஆஸிப் (றழி), நூல் : புஹாரி.

6. மிம்பர் (மேடை):

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (றழி), நூல் : இப்னு குஸைமா.

7. உரையில் இறையச்சத்தைப் போதித்தல்:

பெருநாளன்று நான் நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்தேன். பாங்கு, இகாமத் இல்லாமல் உரைக்கு முன்பே தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு பிலால் (றழி) மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வை அஞ்சும்படி கட்டளையிட்டு, கட்டுப்படும்படி தூண்டி மக்களுக்கு அறிவுரை வழங்கி போதனை செய்தார்கள். (அங்கிருந்து) சென்று பெண்களிடம் வந்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கி போதனை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (றழி), நூல் : முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்து ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்த ஆரம்பித்து) விடுவார்கள். படையனுப்ப வேண்டிய தேவையிருப்பின் அதை மக்களுக்கு நினைவூட்டுவார்கள். இதல்லாத பணியிருப்பின் அதை மக்களுக்கு உத்தரவிடுவார்கள். தர்மம் செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். எங்களில் அதிகம் தர்மம் செய்தவர்கள் பெண்கள்தான். அறிவிப்பவர் : அபூ ஸஈத் அல் குத்ரி (றழி), நூல் : முஸ்லிம்.

8. பெண்களுக்கு தனியாகப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்களிடம் வந்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (றழி), நூல் : புஹாரி.

9. பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்:

ஜும்ஆ உரையை காது தாழ்த்திக் கேட்பதற்கு என்ன என்ன காரணங்கள் பொருந்துமோ அதே காரணங்கள் பெருநாள் உரைக்கும் பொருந்துகின்றன. எனவே, நபித்தோழர்கள் எப்படி நபி (ஸல்) அவர்களின் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்பார்களோ அதுபோல் நாமும் அமைதியாக இமாமின் உரையைக் கேட்க வேண்டும்.

10. உயிரோட்டமாக உரை அமைதல் வேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும்போது அவர்களின் இரு கண்களும் சிவந்து, குரல் உயர்ந்து, ஆக்ரோசம் அதிகமாகி, ஒரு போர்ப்படையை எச்சரிக்கை செய்பவர் போல் ஆகிவிடுவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (றழி), நூல் : முஸ்லிம்.

11. ஓர் உரையா? இரண்டு உரையா?

இரு பெருநாட்களிலும் நிகழ்த்தப்படக் கூடிய உரையின்போது இடையில் உட்கார்வதற்கு நபிவழியில் எதுவித ஆதாரமும் இல்லை. தரையில் நின்று அவர்கள் உரையாற்றியதால், இதில் உட்காருவதற்குரிய சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

12. ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்:

பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (றழி), நூல் : புஹாரி.
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாதையில் வருவார்கள், இன்னொரு பாதையில் திரும்புவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (றழி), நூற்கள் : இப்னு மாஜா, அபூ தாவூத்.

13. பெருநாள் தொழுகைக்குப் பின் ஸுன்னத் உண்டா?

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்தத் தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (றழி) அவர்களும் இருந்தார்கள்.

14. சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் சில பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு விட்டு புறப்படுவார்கள். நூல் : புஹாரி.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்பு சில ஸஹாபாக்கள் சாப்பிட்டதை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். நூல் : புஹாரி.
நபியவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சாப்பிடாமல் தொழுகைக்குச் செல்வார்கள் என்பது பலவீனமான அறிவிப்பாகும்.

15. திடலில் தடுப்பு ஏற்படுத்தல்:

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (றழி), நூல் : புஹாரி.

16. பாங்கு இகாமத் உண்டா?

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பொருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (றழி), ஜாபிர் (றழி), நூல் : புஹாரி.

17. பெருநாள் தொழுகை:

சில ஸஹாபாக்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்று வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

18. தக்பீர்களுக்கு இடையில்:

ஒவ்வொரு தக்பீருக்குமிடையில் கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீதும் இல்லை. இன்று நடைமுறையில் ஒவ்வொரு தக்பீர் சொல்லும்போது கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் தக்பீர் என்ற சொல்லை தக்பீர் கட்டுதல் என்ற அர்த்தத்தில் விளங்கியிருப்பதாகும். இந்த கூடுதல் தக்பிர்களுக்கிடையில் சில திக்ருகள் ஓதப்படுகின்றன. இதற்கு நபிவழியில் எதுவித ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த தக்பீர்களுக்கிடையில் ஓதுமாறு எந்தவொரு திக்ரையும் கற்றுத்தரவுமில்லை. எனவே. முதல் தக்பீரின்போது மட்டும் கைகளை உயர்த்தி கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளை கட்டிய நிலையிலேயே அல்லாஹு அக்பர் என ஏழு தடவைகள் கூறிக் கொள்ள வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறிக் கொள்ள வேண்டும். கைகளை உயர்த்தவோ அவிழ்க்கவோ ஆதாரம் எதுவுமில்லை.

19. பெருநாள் தொழுகையில் ஓதவேண்டிய அத்தியாயங்கள்:

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் 'ஸப்பிஹிஸ்ம றப்பிகல் அஃலா' (அத்தியாயம் : 87) 'ஹல் அதாக ஹதீதுல் ஹாஷியா' (அத்தியாயம் :88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (றழி), நூல் : முஸ்லிம்.
அபூ வாகித் அல் லைஸி (றழி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் பின் கத்தாப் (றழி) அவர்கள் கேட்டபோது, அவ்விரு தொழுகைகளிலும் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' (அத்தியாயம் : 50) 'இக்தறபதிஸ் ஸாஅ' (அத்தியாயம் : 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள்.' என்று பதிலளித்தார்கள். (நூல் : முஸ்லிம்)

ஆகவே, மேற்கூறப்பட்ட அடிப்படையில் எமது பெருநாள் தொழுகைகளை அமைத்துக் கொள்வோமாக!
'எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது சத்திய தீனுல் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் விளங்கி அதன்படி செயற்பட்டு ஈருலகிலும் ஈடேற்றம் பெறும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் வழங்குவானாக!'

வெளியீடு
இஸ்லாமிக் சென்றர்
த.பெ.இல-10, காத்தான்குடி-30100

Read More
Unknown

நோன்புப் பெருநாள் தொழுகை தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)


அன்புப் பொதுமக்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி வழமைபோன்று எதிர்வருகின்ற நோன்புப் பெருநாள் தொழுகையினை இன்ஷா அல்லாஹ் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக்குழு பெருநாள் தினமாக அறிவிக்கும் தினத்தில் காலை சரியாக 6.15க்கு கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

தொழுகைக்காக நேரகாலத்தோடு வருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் தொடராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இப்பணியினை பல ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக மேற்கொள்வதற்கு பொதுமக்களாகிய நீங்கள் வழங்கிவருகின்ற ஒத்துழைப்பு மகத்தானது. இருந்தபோதிலும் தொழுகைக்காக உரிய நேரத்திற்கு வருகை தருவதில் ஒரு சிலர் தவறிவிடுகின்றனர் இதனால் தொழுகின்ற விடயத்தில் இறுதி நேரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய சங்கடமானதொரு நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகின்றேம். இதனால் நேர காலத்தோடு வருகை தந்து தொழுகைக்காக காத்திருக்கின்ற சகோதர, சகோதரிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதை உணர முடிகின்றது.

அல்லாஹ்வின் தூதரை நம் உயிரை விடவும் மேலாக நேசிக்கும் நாம் அவர்களது ஸுன்னாஹ்வை எமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டவேண்டும். தொழுகை ஏற்பாட்டுப் பணிகளை பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் உங்களுக்காக செய்திருந்தும் உரிய நேத்திற்கு சமுகம் தராது தாமதிப்பது நேரத்தோடு வருகைதரும் சகோதரர்களை பல்வேறு சிரமங்களுக்கு உட்படுத்துவதாகும் அத்துடன் ஸுன்னாவை நடைமுறைப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மார்க்கத்தில் தெளிவில்லாத சிலர் இரண்டாம் மூன்றாம் ஜமாஅத்துக்கள் என நடாத்துவதற்கு தாமதமாகிவருகின்ற உங்கள் செயற்பாடு ஆதரவு வழங்குவதாக அமைந்துவிடும் அல்லவா?

தொழுகைக்காக வரக்கூடிய சகோதரர்களில் பலர் தங்களுக்கான விரிப்புக்களைக் கொண்டு வராமல் வெறுங்கையுடன் வருவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இறுதி நேரத்தில் வருகைதரும் உங்களைப் போன்றவர்களுக்கு பாய் விரிப்புக்களை ஏற்பாடு செய்வது எமக்கு சிரமமானதொன்றாகும் என்பதை கவனத்திற் கொள்ளவும். அத்துடன் கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்களையும் அவசியம் கவனத்திற் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


தொழுகைக்காக வருகைதரக்கூடிய சகோதர சகோதரிகள் கீழ்க்காணும் விடயங்களை கவனத்திற் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

வீதிப்பாதுகாப்பு ஒழுங்கு நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

பெண்கள் அபாயா போன்ற இஸ்லாமிய அமைப்பிலான ஆடைகளை மாத்திரமே அணிந்து வரவேண்டும்.

வரும்போது வுழு செய்து கொண்டு தங்களுக்கான (முஸல்லா) பாய், விரிப்புக்களை கொண்டு வரவேண்டும்.

தொழுகை சரியாக காலை 6.15க்கு நடைபெறும்.

ஒரு தடவை மாத்திரமே ஜமாஅத் நடைபெறும்.

முதல் ஜமாஅத் முடிவுற்றதும் பல ஜமாஅத்துகள் நடாத்துவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

தொழுகை முடிவடைந்ததும் நடைபெறும் குத்பாப் பிரசங்கத்தில் அனைவரும் கலந்து கொள்ளவும்.

தொழுகை முடிவடைந்து கலைந்து செல்லும்போது ஆண் பெண் கலப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவும்.

பிரசுரங்கள் வினியோகிப்பதற்கோ, வசூல்கள் மேற்கொள்வதற்கோ எவருக்கும் அனுமதிக்கப்படமாட்டாது.

எனவே தொழுகைக்காக வருகை தருபவர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு நடந்து கொள்ளுமாறும், தொழுகை ஏற்பாடுகளை சீராக மேற்கொள்ள எமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு
இஸ்லாமிக் சென்றர் - காத்தான்குடி



Read More
Unknown

தனது உண்மையான பெயரை உறுதிப்படுத்தினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனது உண்மையான பெயர் முகம்மது பாறூக் முகம்மது ஷிப்லி என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, இவர் தனது பெயரை 'அப்துல் பாறூக் மொஹமட் ஷிப்லி' என வேட்புமனுவில் உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் அந்தப் பெயரின் அகர வரிசை அடிப்படையில் தேர்தல் திணைக்களம் அவருக்கான விருப்பு இலக்கத்தை அப்போது வழங்கியிருந்தது.

அந்த விருப்பு இலக்கத்தைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் அவரும், அவரது கட்சியான அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அ.இ.ம.கா. கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்ததனால் அவர் கிழக்கு மாகாண சபைக்கு ஒரு உறுப்பினராகத் தெரிவானார்.

அவரது பெயர் மோசடிச் செயற்பாடு குறித்து ஊடகங்களிலும், அரசியல் மேடைகளிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டு வந்த போதிலும், அவர் அது குறித்து எத்தகைய பதிலும் அளிக்காமல் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக மௌனமே காத்து வந்தார். இந்நிலையிலேயே கடந்த 13ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட ஸ்ரீ.ல.மு.கா. வேட்புமனுவில் அவர் தனது பெயரை 'முகம்மது பாறூக் முகம்மது ஷிப்லி' எனக் குறிப்பிட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அவரது உண்மையான பெயர் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தனக்கு விருப்பமான முன்னணி விருப்பு இலக்கமொன்றைப் பொற்றுக் கொள்ளும் உள்நோக்குடன் மோசடியான வகையில் தேர்தல் திணைக்களத்திற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த பெயரில் இவர் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எனும் பதவியானது சட்டரீதியாகச் செல்லுபடியாகுமா? என்பது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை பெற்று வருவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More
Unknown

டெங்கு காய்ச்சலினால் 17000 பேர் பாதிப்பு

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை 16 வரை டெங்கு காய்ச்சலினால் 17 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் (5017) இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் 2307 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1271 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோரில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கட்டுமானத் தளங்கள், பூர்த்தியாகாத கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புறம் ஆகியன நுளம்பு பெருகும் முக்கிய இடங்களாக உள்ளன.
டெங்கு நுளம்புகள் நீர் இன்றி ஒரு வருடத்திற்கு மேலாக உயிர்வாழத்தக்கவையாகும். சுத்தமான அல்லது அசுத்தமான நீர் தேங்கி நிற்கும் சிறிய போத்தல் அல்லது காய்ந்த இலைகளில் தேங்கி நிற்கும் நீர் என்பன இந்நுளம்பு இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணிகளாகும்.
virakesary.lk
Read More
Unknown

எமது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

உலகளாவிய ரீதியில் இன்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எமது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

Avathani Media Network





Read More
Unknown

சர்வதேச பிறை அடிப்படையில்- நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை-காத்தான்குடியில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.
 
இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 17-07-2015 இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு,புத்தளம்,அக்கறைப்பற்று ,காத்தான்குடி, நீர் கொழும்பு ,ஹபுகஸ்தலாவ உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.
 
இதற்கமைவாக காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு ஏற்பாடு செய்த நபி வழியிலான புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெற்றது. 
 
இங்கு பெருநாள் தொழுகையை மௌலவி அஷ்ஷெ;ய்க் அஸ்பர்(பலாஹி) நடாத்தியதோடு பெருநாள் குத்பாப் பிரசங்கத்தை பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தினார்.
 
இதில் ஆண் பெண் அடங்கலாக சுமார் 1500க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.
 
சர்வதேசப் பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
குறிப்பு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதன் பின்னர் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.























Read More
Unknown

தெஹிவளையில் இடம் பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்.

(இப்திகார் அமீரலி)

சர்வதேச பிறையின் அடிப்படையில் புனித நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இன்று காலை தெஹிவளையில் இடம் பெற்றது.

தெஹிவளை  Frazer Avenue, Frazer Play Ground இல் இடம் பெற்ற தொழுகையிலும், குத்பா பிரசங்கத்திலும் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். 









Read More
Unknown

காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் தாருள் அதர் அத்அவிய்யா ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்

(பைஸர் அமான்)
உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை தென்பட்டதன் காரமாக புனித நோன்புப் பெருநாள் அறிவிக்கப்பட்டது
இதனடிப்படையில் இலங்கையிலும் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது.

காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஏத்துக்;கால் பகுதியில் தாருள் அதர் அத்அவிய்யா  அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகையினை மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி அஸ்பர் அவர்கள் நடாத்த குத்பா பிரசங்கத்தினை தென்னிந்திய மார்க்கப் பிரச்சாரகர் சகோ, கோவை ஐயூப் அவர்கள் நிகழ்த்தினார்கள்

அதனைப் போன்று தேசிய தௌவ்ஹீத் ஜமாஅத் நாடாத்திய பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் காத்தான்குடி கடற்கரை கடாபி ரெஸ்டுடன் முன்பாக இடம் பெற்றது. பெருநாள் தொழுகையினையும், குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஸைனி அவர்கள் நடாத்தி வைத்தார்கள்.

இவ்விரு நிகழ்வுகளிலும் ஆண்களும் பெண்களுமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 









Read More