Featured Home (TOP)

Recent Comments

Monday, August 3, 2015

avathani Media Network

தேர்தல் பிரசாரத்தில் குர்ஆன் அவமதிப்பு - பொது ஜன பெரமுனவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு

தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தின் போது அல்­குர்­ஆனை அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களைத் தெரி­வித்த அநு­ரா­பு­தர மாவட்ட பொது ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்­திலும் தேர்தல் திணைக்­க­ளத்­திலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
பொது பல சேனா அமைப்பின் அர­சியல் கட்­சி­யான பொது ஜன பெர­முன (பி.ஜே.பி) சார்பில் அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் 'நாக பாம்பு' சின்­னத்தில் போட்­டி­யிடும் சுசந்த ரண்­முத்து குமா­ர­ண­சிங்க எனும் வேட்­பா­ள­ருக்கு எதி­ரா­கவே இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இம் முறைப்­பாட்­டினை ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் அதன் உறுப்­பி­ன­ரான ஏ.ஆர்.எம்.சபீன் நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்­திலும் தேர்தல் ஆணை­யா­ள­ரி­டமும் நேரில் கைய­ளித்தார். இவ­ருடன் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப், ஸப்ராஸ் ஹம்ஸா ஆகி­யோரும் உடன் சென்­றி­ருந்­தனர்.

இதே­வேளை இவ் விடயம் தொடர்­பான மற்­று­மொரு முறைப்­பாட்டை ஆர்.ஆர்.டி. அமைப்பின் உறுப்­பி­ன­ரான காதர் முஹை­தீனும் நேற்று தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் கைய­ளித்­துள்ளார்.

மூன்­றா­வது முறைப்­பாடு இன்­றைய தினம் முன்­னணி பெண் செயற்­பாட்­டாளர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக ஆர்.ஆர்.டி அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.

குறித்த வேட்­பா­ளரால் கடந்த 29 ஆம் திகதி தேர்தல் பிர­சா­ரத்தை நோக்­காகக் கொண்டு சமூக ஊட­கங்கள் வாயி­லாக வெளி­யி­டப்­பட்ட வீடியோ பதிவு ஒன்­றி­லேயே அவர் அல்­குர்­ஆ­னையும் முஸ்­லிம்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார்.

அதில், முஸ்­லிம்­களை மரக்­க­லயா என்றும் தமி­ழர்­களை தெமலுன் என்றும் வர்­ணித்­துள்ள அவர், அல்­குர்ஆன் தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். '' ஒரு நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் சனத்­தொகை 50 வீதத்தை விட அதி­க­ரித்தால் அங்கு வாழும் முஸ்­லி­மல்­லா­த­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட வேண்டும்.

இதுவே அல்­லாஹ்வின் விருப்­ப­மாகும்'' என அல்­குர்­ஆனில் கூறப்­பட்­டுள்­ள­தாக அவர் குறித்த வீடியோ பதிவில் தெரி­வித்­துள்ளார்.


இவை உட்­பட மொத்­த­மாக 6 விட­யங்கள் சட்­டத்­துக்குப் புறம்­பான முறையில் குறித்த வீடி­யோவில் இடம்­பெற்­றுள்­ள­தாக இம் முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை நேற்­றைய தினம் நேர­டி­யாக முறைப்­பாட்டைப் பொறுப்­பேற்ற தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய, குறித்த வீடியோ பதிவை முழு­மை­யாக பார்­வை­யிட்­ட­துடன்  இது தொடர்பில் இன்று திங்கட் கிழமை இடம்பெறவுள்ள கட்சிச் செயலாளர்களின் கூட்டத்தில் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார். 

அத்துடன் குறித்த வேட்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் முறைப்பாட்டாளர்களிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

இனவாதத்துக்கும் பிரதேசவாதத்துக்கும் முற்றுப் புள்ளி வைப்பதே எமது இலக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்


மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் பிரதேசவாதமும் இனவாதமும் பெரும் சாபக்கேடாக உருவெடுப்பது வழக்கமாகும். ஒவ்வொருவரும் அடுத்தவர்களைக் குற்றம்சாட்டிக் கொண்டு இனவாதத்தால் இனவாதத்தை வளர்க்கிறார்கள். பிரதேசவாதத்தால் பிரதேசவாதத்தை வளர்க்கிறார்கள். நாம் சொல்வதெல்லாம் பிரதேசவாதத்தை சகோதரத்துவத்தால் வெற்றிகொள்ள வேண்டும், இனவாதத்தை மனித நேயத்தால் வெற்றிகொள்ள வேண்டும்.  இதுதான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் கொள்கையும் செயற்பாடுமாகும் . அந்த மனித நேயத்தை உருவாக்குகின்ற புதிய தொடக்கமாகவே நாம் இத் தேர்தலை நோக்குகிறோம் என  மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவருடனான நேர்காணலின் முழுவிபரம் வருமாறு: 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொதுத் தேர்தலில் என்ன அடிப்படையில் போட்டியிடுகிறது?

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இம்முறை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் மற்றுமொரு கூட்டணியாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு உடன்பாட்டின் அடிப்படையில் இணைந்து இரண்டு மாவட்டங்களில் போட்டியிடுகிறது. இந்த உடன்பாட்டின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தின் கீழ் நானும் கவிஞர் எஸ்.நளீமும் போட்டியிடுகிறோம். அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில்  டாக்டர் ஸாஹிர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் சார்பில் போட்டியிடுகிறார். 

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த நீங்கள் என்ன அடிப்படையில் இம் முறை இணைந்து போட்டியிடுகிறீர்கள்?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதில் 11 அம்சங்களில் இரு கட்சிகளுக்குமிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தமேயாகும். 

நாம் மு.கா.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பதற்காக எமது நல்லாட்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் எந்தவித விட்டுக் கொடுப்புகளையும் செய்யவில்லை. மாறாக  நல்லாட்சியை முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சியே இது என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

''அரசியல் என்பது செம்மையான நேர் கோட்டுப்பாதை கிடையாது. கூட்டணிகளும் ஒப்பந்தங்களும் அணிசேர்வுகளும் தவிர்க்க முடியாதவை. ஆனால் அந்த ஒவ்வொரு கூட்டணிகளும், ஒப்பந்தங்களும் அணி சேர்வுகளும்,  நமது இலட்சியத்தை நோக்கி நம்மை நகர்த்துவதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அது சரியான பாதையாகும். இலட்சியத்தை விட்டும் நம்மை பின்னகர்த்துவதாக இருந்தால் அது பிழையான பாதையாகும்'' என்ற யதார்த்தத்தை நாம் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறோம். இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் எமது அடிப்படைக் கொள்கையில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாது சமூக நலன் அடிப்படையிலான இந்தக் கூட்டணியை ஒரு பொது இலட்சியத்திற்காக நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம்.  

இங்கு முஸ்லிம் காங்கிரஸில் நாம் இணையவில்லை. எங்களுடைய கட்சியில் அவர்கள் இணையவுமில்லை.இரண்டு கட்சிகளும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்ட இரண்டு நிறுவனங்களாகும். இரண்டும் ஒரு பொது நோக்கத்தில் இணைந்துள்ளன. இது நாம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலும் மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்களது வெற்றி வாய்ப்பு குறித்து?

இன்ஷா அல்லாஹ் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் மக்கள் இன்று தேசிய அளவிலும் சரி மாவட்ட மட்டத்திலும் சரி மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை முன்னின்று நடத்திய ஒரு அமைப்பாக , முன்னணியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விளங்குகிறது. 

முதல் தடவையாக எமது பிரதிநிதிகள் இரு மாவட்டங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இன்ஷா அல்லாஹ் மக்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடைய பிரதிநிதிகள் நிச்சயமாக இருப்பார்கள். எனவேதான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நாம் நம்புகிறோம்.

ஐ.தே.முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதியாக நம்புகிறீர்களா?

நிச்சயமாக ஐ.தே.முன்னணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும். கடந்த ஜனவரி 8 இல் ஏற்பட்ட மாற்றம் கடந்த ஆறு மாதங்களுக்குள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு மீண்டும் ஓர் அராஜக ஆட்சி நிலைமை தோன்றுமோ என்ற அச்ச நிலைமை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 8 இல் தொடங்கிய மாற்றத்தை நிறைவு செய்ய வேண்டியது ஒரு தேசியக் கடமையாக மாறியிருக்கிறது.  அதனைச் செய்வதற்குரிய சிறந்த சந்தர்ப்பமாகவே நாட்டு மக்கள் இந்தத் தேர்தலை எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த மாற்றத்தை பாதுகாப்பதற்கு தலைமை வகிக்கின்ற அணியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது. அதில் சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்ட பொது முன்னணியும் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் இந்த முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கின்ற வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் களத்திலிறங்கியிருக்கிறாரே?

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். இந்த நாட்டின் வரலாற்றில் அவ்வாறு நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர நினைப்பதென்பது ஒரு துரதிஷ்டவசமான புதிய வரலாறாகும். 

அவர் வெறுமனே பாராளுமன்றத்திற்கு வருவதோடு மாத்திரமல்லாது மக்கள் ஏற்படுத்திய மாற்றத்தினை சிதைப்பதற்கு அவரது தலைமையிலான குழு முயல்கிறது என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு அவர் வருவது ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே அதனை நாம் முறியடிக்க வேண்டும். அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு முஸ்லிம்கள் உட்பட எவரும் வாக்களிக்கக் கூடாது.

மட்டக்களப்பில் போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ் தான் மஹிந்த தரப்பிலில்லை என்றும் மைத்திரி அணியிலேயே இருப்பதாகவும் சொல்கிறாரே? 

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காமல் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கு இறுதி நேரம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டவர்தான் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ். இப்போது அவர் தான் மைத்திரி அணியில்தான் போட்டியிடுவதாக சொல்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும். 

மகிந்த தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட ஹிஸ்புல்லா தொடர்ந்தும் மகிந்தவின் விசுவாசியாகவே செயற்பட்டார். மைத்திரியினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதித்திட்டத்திலும் கையெழுத்திட்டவர்தான் இவர். இப்போது மகிந்த ராஜபக்ஷவை அடுத்த நாடாளுமன்றத்தில் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காகத்தான் இந்தத் தேர்தலிலே அவரும் போட்டியிடுகின்றார். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

மஹிந்தவிற்கு எதிராக நாம் எவ்வளவு பொறுப்புடன், தேசப்பற்றுடன் வாக்களித்து அவரை தோற்கடிக்கச் செய்திருந்தோமோ அதே போன்று இந்த வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிடுகின்றவர்களையும் நாம் தோற்கடிக்காவிட்டால், நாம் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் தள்ளப்படுவோம் என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

(நன்றி வீரகேசாி வார வெளியீடு)
Read More
avathani Media Network

அம்பலமாகிறது.. ஞானசார தேரரின் உண்மை முகம் - பிரான்சில் இருந்து வந்ததாம்...! ஞானசார தேரரின் மகளும் மனைவியும்!!

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியஸ்தானமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன்.

அவரின் பெயர் 'மனோஜா' என்று எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவருடன் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளும் கூட இருந்தார்கள்.

கடந்த ஆட்சியின் போது 'பொது பல சேனா' பௌத்த தீவிரவாத அமைப்பின் மூலம் இந்நாட்டில் இனவாதத் தீயை மூட்டி நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞானசாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும்.

இவர் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடி கட்டளைப்படி இயங்கியவர் என்று பரவலாக பேசப்படுகின்றது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வமைப்பு பற்றியும், இவ்வமைப்பின் பின்னணி பற்றியும் அவ்வப்போது பல ரகசியங்கள் வெளிவரத் தொடங்கியது.

இவ்விரகசியங்களின் உச்சகட்டமாக 'பொதுபலசேனா' அமைப்பின் மிக முக்கிய தொண்டராக செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா என்பவரால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் ஞானசார தேரரின் மறுபக்கத்தைத் தோலுரித்து காட்டியுள்ளது. 

அவர் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் கீழ்வருமாறு:
ஞான சாரவுக்கு தேவைப்பட்ட பி எம் டப்ளியு (டீஆறு- ஊயச) கார்வண்டியும், டிபென்டர்ரக கெப் வண்டியும்.

இந்நாட்டில் எம்மை விட்டுப் பிரிந்த சோம தேரரைப் போன்ற ஆளுமைமிக்க பௌத்த தேரர் ஒருவர் இந்நாட்டிற்கு மிகவும் தேவை என நான் உணர்ந்திருந்தேன். அந்த இடைவெளியை நிரப்ப பிறப்பெடுத்தவர்தான் ஞானசார என்று எனதுள்ளம் சொல்லியது. அப்படி என் மனம் சொன்னபோதே நான் பொது பல சேனாவுடன் இணைந்து கொண்டேன்.

பொது பல சேனாவின் பதுளை மாநாட்டின் பின்பே நான் ஞானசாரவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். நெருங்கிப் பழக ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இருந்தே பொது பல சேனாவின் எல்லாவகையான வேலைத்திட்டங்களிலும் மிகவும் விருப்பத்துடன் பங்கேற்றேன்.

ஞானசாரவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த கட்டத்தில், அவருக்கு தூரப் பயணங்களுக்காக தனிப்பட்ட வாகனம் ஒன்றிருக்கவில்லை என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் அப்போதைக்கு அவருக்கான அத்தியாவசியத் தேவைகள் இரண்டினை மையப்படுத்தி எனக்கு உணர்த்தப்பட்டது. ஒன்று அவருக்கான பிரத்தியேக வாகனம், மற்றையது அவரது பாதுகாப்பு.

என்னிடத்தில் பி எம் டப்ளியு (டீஆறு- ஊயச) கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியுமாக இரண்டு வாகனங்கள் இருந்தன. ஞானசார தேரருக்காக அவ்வாகனங்களை வழங்குவதில் எனக்கு எந்த சிரமும் இருக்கவில்லை. ஆகவே அவற்றை நான் அவருக்காக வழங்க விருப்பத்துடன் முன்வந்தேன்.

மற்ற விடயம் நான் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியில் என்னுடன் எப்பொழுதுமே இளைஞர் கூட்டமொன்று கூடவே இருப்பார்கள். ஆகவே பாதுகாப்பிற்கு அவர்களைப் பயன்படுத்த நான் முன்வந்தேன். ஆகவே நாங்கள் பயணங்கள் போகும்போது ஞானசார தேரரை எனது கார் வண்டியின் முன் ஆசனத்தில் அமரச் செய்து, கெப் வண்டியில் இளைஞர் கூட்டத்தையும் ஏற்றிக்கொண்டு நாங்கள் பயணங்கள் சென்று வந்தோம்.

ஆக, பி எம் டப்ளியு கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியும் ஞானசாரவுக்கு கிடைத்தாயிற்று. அத்துடன் ஞானசார ஹாமுதுருவுடன் மேலும் அண்மித்து பழகக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

முறையானதொரு வேலைத்திட்டமோ, திட்டமிட்ட செயற்பாடோ இல்லாத பொது பல சேனா

நாங்கள் வாகனத்தில் பல பயணங்கள் சென்றோம். பயணம் நெடுகிலும் பல விடயங்களைப் பற்றிப் பேசினோம். பி.பி.எஸ்.சுக்கு வெளிநாட்டுப் பணம் வருகின்றது என்பதை ஆரம்பத்தில் நான் நம்ப வில்லை. ஆனால் இவர்களுக்கு பல வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளன. நான் ஞானசார ஹாமுதுருவுடன் ஒன்றாக இருந்தாலும் பி.பி.எஸ். பற்றி நான் அவதானித்த விடயம்தான், இவர்களுக்கென்று திட்டமிட்ட செயற்பாடொன்று கிடையாது என்பது.

மாநாடுகள் செய்கின்றார்கள், கூட்டங்கள் நடத்துவார்கள், ஊடக சந்திப்புகளை நடத்துவார்கள், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை செய்வார்கள். ஆனால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று தேசிய ரீதியிலானதொரு முறையான திட்டம் கிடையாது. நான் இதுபற்றி ஹாமுதுருவுடன் நேரடியாகவே பல முறைகள் கதைத்துள்ளேன். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை.

பிரான்சில் இருந்து வந்த ஞான சாரவின் மகளும், மகளின் தாயும்

ஞானசார ஹாமுதுருவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிழைகள், பிரச்சினைகள் இருப்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனாலும் இவர் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வருவதால் எமது இயக்கத்திற்கும், அதன் தேசிய வேலைத்திட்டத்திற்கும் பாதிப்புக்கள் ஏற்படும் என்ற காரணத்தால் இவரின் குறைகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடிவு செய்தேன்.

இவர் பற்றிய உண்மைத் தகவல்கள் எனக்கு எவ்வாறு தெரிய வந்ததென்றால், ஒருநாள் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் சொன்னார், 'தம்பி! பிரான்சிலிருந்து அக்கா ஒருவர் வருவார், அவர் எமக்கு மிக வேண்டியவர். எமது இயக்கத்திற்கும் நிறைய உதவி செய்பவர். அவர் வந்தால் நாங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்வீர்கள் தானே?' என்று என்னிடம் கேட்டார்.

நானும், 'நீங்கள் எந்த உதவியைக் கேட்டாலும் நான் செய்து தரக் காத்திருக்கின்றேன். வேண்டியதைக் கேளுங்கள்' என்று அவருக்குத் தெரிவித்தேன்.

பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியஸ்தானமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன்.

அவரின் பெயர் 'மனோஜா' என்று எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அவருடன் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளும் கூட இருந்தார்கள்.

பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற ஞானசார ஹாமுதுருவின் குடும்பம்

பொல்கஹவெல சமய நிகழ்வு முடிந்தவுடன் ஞானசார ஹாமுதுரு என்னிடம் சொன்னார்: 'தம்பி! அக்காமார்களை இன்னும் எங்கும் கூட்டி போகவும் இல்லையே. நாங்கள் இப்படியே கொஞ்சம் பொலன்னறுவைக்குச் சென்று வருவோம். காடு, மரமட்டைகளை அவர்களுக்கு காட்டிய மாதிரியும் இருக்குமல்லவா?' என்று. 

நானும், 'ஆம். சென்று வரலாம்' என்று கூறியதும் நாங்கள் பொலன்னறுவைக்குச் சென்றோம்.

எனது வாகனத்தின் முன் ஆசனத்தில் ஞானசார ஹாமுதுரு அமர்ந்திருந்தார். பின் ஆசனத்தில் மனோஜா அக்காவும், பெண் பிள்ளைகள் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களின் பெரிய பிள்ளைக்கு சுமார் பதினாறு வயது மதிக்கக்கூடியதாக இருந்தது. இளைய பிள்ளைக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்.
பயணத்தின் இடையில் வாகனத்தை கொஞ்சம் நிறுத்துமாறு ஞானசார என்னிடம் கூறினார். வாகனத்தை நிறுத்தியதும் ஞானசார ஹாமுதுரு பின் ஆசனத்திற்குச் சென்று, பெரிய பெண் பிள்ளையை முன் ஆசனத்திற்கு அனுப்பினார்.

இரண்டு பிள்ளைகள் இருக்கும்போது இளைய பெண் பிள்ளையிடம் அளவில்லா அன்பு காட்டுவதை அவதானிக்க முடிந்தது. நன்கு புஷ்டியாக வளர்ந்திருந்த அந்தப் பிள்ளைக்கு, ஞானசார ஹாமுதுருவின் முகச்சாயல் அப்படியே இருந்தது. அப்பிள்ளையின் முகத்தை தனது மடியில் சாத்திய ஞானசார, அவளின் தலையைக் கோதிவிட்டு ஆதரவுடன் தழுவிக் கொண்டு வந்தார். அப்போதுதான் இந்தப் பிள்ளை ஞானசாரருடையதாக இருக்குமோ? என்று எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

இளைய பெண்பிள்ளை தனது மகள் என ஒப்புதல் வாக்குமூலம் தந்த ஞானசார

பொலன்னறுவைக்குச் சென்ற நாங்கள் மாலை நேரம் ஓய்வு எடுப்பதற்கு தனியானதொரு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நந்த ஹாமுதுருவின் வண்டி ஓட்டுனர் மற்றும் அந்த வாகனத்தில் வந்த இன்னும் சில ஹாமுதுருமாரும் ஒரு பிரத்தியேக அறையில் தங்கினார்கள். நாங்கள் பிறிதொரு பக்கத்தில் வேறொரு அறையில் தங்கினோம். இவ்வேற்பாடுகளை ஞானசார ஹாமுதுரு தொலைபேசி மூலம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று நேரம் ஓய்வெடுத்த நாம் மீண்டும் எழுந்து மின்னேரிய யானைகள் பார்க்கச் சென்றோம். யானைகள் பார்த்துவிட்டு நாங்கள் கொழும்பை நோக்கிப் பயணமானோம். வரும் வழியில் இவர்களின் நடத்தைகளை வைத்து, குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவினுடையது தான் என்பதை நான் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

ஓரிடத்தில் வைத்து ஞானசார ஹாமுதுருவே என்னிடத்தில் சொன்னார், 'அந்தப் பிள்ளையின் தந்தை நான்தான்' என்று. எனது ஊகமும் சரியானது.

கொழும்பில் டெனிஸ் விளையாடிய ஞானசாரவின் மகள்

குறிப்பிட்ட பெண் பிள்ளை தன்னுடையது என்று கூறிய ஞானசார ஹாமுதுரு, அவள் ஒரு டெனிஸ் வீராங்கனை என்றும் அவள் பிரான்சிற்கு திரும்பி சென்றதும் டெனிஸ் போட்டித் தொடரொன்றில் (வநnnளை வழரசயெஅநவெ) விளையாட இருப்பதாகவும் என்னிடம் சொன்ன அவர், போகும் வரைக்கும் அவளுக்கு டெனிஸ் பயிற்சி பெற நல்லதொரு இடத்தை தெரிவு செய்து தருமாறும் வேண்டினார்.

ரத்னபிட்டி சிங்காரா டெனிஸ் கழகத்தின் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக நான் அந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்தேன். பின்பு நானே அவளை தினமும் மாலையில் டெனிஸ் விளையாட வாகனத்தில் கூட்டிச் செல்வதும், விளையாடி முடிந்ததும் மீண்டும் கூட்டிவருவதுமாக பல உதவிகளைச் செய்தேன்.

அந்த நாட்களில் ஹாமுதுரு சொல்லும் இடங்களுக்கெல்லாம் அவர்களை நான் கூட்டிச் செல்வேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே பல உதவிகளை செய்து கொடுத்தேன்.

தனது குடும்பத்துடன் தனியாக வாடகை வீடொன்றில் தங்கிய ஞானசார

நாங்கள் மஹியங்கனையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டிற்குச் சென்று திரும்பி வருகையில் ஞானசார தேரரின் ஆலோசனைப்படி கண்டி ஊடாகச் சென்று மடவளை பன்சலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் நுவரெலியா சென்று சில நாட்கள் தங்குவதற்குத் திட்டமிட்டிருதோம்.

நாங்கள் நுவரலியா செல்லும் வழியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வாடகை வீட்டில் ஞானசார தேரர், மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகளுடன் தனியாகத் தங்குவதாகச் சொன்னார். என்னுடன் இருந்த எனது நண்பர்களைத் திருப்பி அனுப்பிவிடும்படியும் என்னிடம் வேண்டினார்.

அவர்கள் சென்று விட்டால் என்னால் தனியாக இருக்க முடியாது என்று கூறி நான் அதை மறுத்து விட்டேன். பிறகு நாங்கள் எனது சொந்தச் செலவில் தனியாக வேறொரு இடத்தில் தங்கினோம்.

ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபா வீதம் செலவழித்து நான்கு நாட்கள் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கிய ஞானசார தேரர், அடுத்த நாள் காலையில் என்னைச் சந்தித்து 'தம்பி, இந்த வீடு எங்களுக்கு செட்டாக வில்லை. நாங்கள் வேறொரு வீட்டை வாடகைக்கு ட்ரை பண்ணுவோம்' என்று கூறினார். 

பிறகு நாங்கள் பண்டாரவெல வீதியில் இருந்த ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்தோம் அதற்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் வாடகை செலுத்த தீர்மானிக்கப்பட்டது. அதில் அவர்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். நாங்கள் வேறாகத் தங்கினோம். அதன் பிறகு அந்த வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வதைத் தவிர்த்து வந்தேன். ஏனென்றால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்குத் தெரிந்திருந்தது. அடிக்கடி சென்று அவரை அசௌகரியப்படுத்த நான் விரும்பவில்லை.

சுற்றுலா பயணி போல் பெண்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த ஞானசார

பிறகு நாங்கள் நுவரெலியா வழியாக ரம்பொட பாஸ் நீர்வீழ்ச்சியின் அருகினால் திரும்பி வருகையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் எண்ணம் ஏற்படவே ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து குளிக்க ஆரம்பித்தோம். 

எங்களுடன் சேர்ந்து ஞானசாரவும் குளிக்க ஆரம்பித்தார். இவரின் செயற்பாடுகள் எனக்கு அருவருப்பாக இருந்தது.

நாடறிந்த ஒரு பௌத்த தேரர், பௌத்த அமைப்பொன்றின் பிரதான தலைவர், எவரும் கண்டவுடன் அடையாளம் காணக்கூடிய ஒரு முன்னணித் துறவி, இவ்வாறு எந்தவித அச்சமும் இன்றி பெண்களுடன் சேர்ந்து பகிரங்கமாகக் குளிப்பதை எந்தவகையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. 

வாகனம் ஓட்ட ஆசைப்பட்ட ஞானசார தேரர்

குளித்து முடிந்து நாங்கள் மீண்டும் புறப்பட்டோம். மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகள் பின்னால் வந்த வாகனத்தில் ஏறி இருந்தார்கள். முன்னால் ஞானசார ஹாமுதுருவும், நானும் எனது வாகனத்தில் புறப்பட்டோம்.

சற்று தூரம் முன்னால் நாங்கள் சென்று கொண்டிருக்கையில் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் கேட்டார், 'தம்பி நான் வாகனம் ஒட்டி ரொம்ப நாள் ஆகுது. எனக்குக் கொஞ்சம் ஓட்டத் தாருங்கள்' என்று. நானும் வேறு வழியின்றி வாகனத்தை பக்கத்தில் நிறுத்திவிட்டு அவருக்கு வண்டியை ஓட்ட இடமளித்தேன்.

அவர் வாகனம் ஓட்ட ஆரம்பித்து சற்று நேரத்தில் எனது கைப்பேசிக்கு மனோஜா அக்கவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் கேட்டார், 'தம்பி யார் வாகனம் ஒட்டுவது?' என்று.

நான்தான் என்று நான் அவருக்கு பொய் சொன்னேன். பின் அவர் மீண்டும் என்னிடம் சொன்னார், 'தம்பி பொய் சொல்ல வேண்டாம். உடனே நீங்கள் வாகனத்தை எடுக்க வேண்டும். நீங்கள் வாகனத்தை எடுக்காவிட்டால் நான் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று அவருக்குச் சொல்லுங்கள்' என்று திட்டவட்டமாக மனோஜா அக்கா என்னிடம் தெரிவித்து விட்டார்.  நான் ஞானசார ஹாமுதுருவிடம் நிலைமையை விளக்கிச் சொன்னேன்.

மனோஜாவுக்கு தூஷணத்தால் திட்டிய ஞானசார

பிடிவாதமாக வாகனத்தை எனக்கு எடுக்கச் சொன்ன மனோஜா, வாகனத்தை நான் எடுக்காவிட்டால் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி வாகனத்தை நிறுத்திவிட்டு, 'இந்த பெண் பிராணன்களால் ஒன்றுமே செய்ய முடியாது' என்று கூறிவிட்டு தூஷனவார்த்தை ஒன்றையும் கூறி மறுபக்கத்தால் வந்து அமர்ந்து கொண்டார்.

ஒருவாறு இப்படி நடந்ததும் நல்லது என்றே என் மனது சொன்னது. ஏன் என்றால் ஞானசார தேரருக்கு முறையாக வாகனம் ஓட்டத் தெரியாது. எங்காவது சென்று மோதிவிடுவாரோ என்று உள்ளத்தால் பயந்து கொண்டே அப்போது நானிருந்தேன்.

குறிப்பிட்ட அந்தப் பயணத்தின்போது எனக்கு மாற்றி அணிவதற்கு ஆடைகளைக் கூட எடுக்காமல்தான் நான் இவர்களுடன் இணைந்திருந்தேன். அதேபோல் அந்தப் பயணத்தின்போது எனது இளைய மகன் சுகவீனமுற்றிந்தான். அதனையும் பொருட்படுத்தாது மிகவும் சிரமத்திற்கும், தியாகத்திற்கும் மத்தியில்தான் இவர்களோடு சேர்ந்து பயணப்பட்டிருந்தேன்.

நான் ஞானசாரவை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வெகுவாக உணர்ந்திருந்தேன். ஏனென்றால் தேசிய மட்டத்திலான பௌத்த வேலைத்திட்டமொன்று எமது நாட்டிற்கு மிகவும் தேவை என்று உணர்ந்திருந்ததால்.

பௌத்த மக்கள் பல வேலைத்திட்டங்களிலும் இணைந்திருது ஏமாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டுத்தான் இப்போது பி.பி.எஸ்.சுடன் இணைந்துள்ளார்கள். இவர்களின் உண்மை முகம் தெரிய வந்தால் மக்கள் மீண்டும் விலகிச் சென்று விடுவார்கள். அதனால்தான் மனசாட்சிக்கு எதிராக இருந்தாலும் இவரை பாதுகாத்துக்கொண்டு நான் இவர்களுடன் சேர்ந்திருந்தேன்.

ஆனால் இவர்களின் உண்மையான தேவைப்பாடு ஒரு பௌத்த ராஜ்ஜியம் இல்லை. தமது சொந்த நலனிற்காக சௌகரிய வாழ்க்கையை அனுபவிக்க இவர்கள் இந்த பி.பி.எஸ்.சை நடத்துகின்றார்கள். இது நிறுத்தப்படவேண்டும். இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்குக் காட்ட வேண்டும்.

நான் மேற்சொன்னவை பொய் என்று நிரூபித்து காட்டுமாறு ஞானசார தேரருக்கும், பி.பி.எஸ் தலைவர்களுக்கும் பகிரங்கமாக சவால் விடுகின்றேன். மனோஜாவைப்பற்றி அவ்வப்போது சில தகவல்கள் பேஸ்புக்கிலும், சில ஊடகங்களிலும் வெளிவந்தன.

அவை, இந்த மனோஜா பிரான்சிலிருந்து பி.பி.எஸ்.ஸுக்கு உதவி செய்பவர் என்றுதான் இவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ஆனால் ஞாசாரவுக்கும், மனோஜாவுக்கும் உள்ள தொடர்பைப்பற்றி பி.பி.எஸ். தலைவர்களுக்குத் தெரியுமா? என்பது பற்றி நான் அறியவில்லை. முடியும் என்றால் நான் குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவின் மகள் இல்லை என்பதை ஒரு 'டி.என்.ஏ' பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியுமா? என்று நான் இவர்களுக்கு சவால் விடுகின்றேன். இதற்காக இந்நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்தையும் நான் சந்திக்கத் தயார்' என்றும், 'பொதுபலசேனா' அமைப்பின் மிக முக்கிய தொண்டராகச் செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா சவால் விட்டு ஞானசாரவின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார்.

(நன்றி: ஜே.வி.பி.நியூஸ் இணையம்)

Read More
avathani Media Network

SLMC + NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் - 05

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)


எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பில் காத்தான்குடிப் பிரதேசத்தில் போட்டியிடும் பொறியியாளர்களான ஷிப்லி பாறூக் மற்றும் எம்.எம். அப்துர் றஹ்மான் ஆகிய இருவரில், பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தோல்வியடைந்தால் அவரது தோல்வி காத்தான்குடி மண்ணுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பாரிய இழப்பாக அமையாது, அவர் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபையில் ஆளுந்தரப்பிலுள்ள ஒரு ஒரு உறுப்பினராக இருந்து அவரால் முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட ஜெ. நஸீர் அகமட்டின் ஆதரவுடன் எமது காத்தான்குடிக்கும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் பல்வேறு அளப்பரிய பணிகளைச் செய்ய முடியும் என்ற கருத்தினை கடந்த 04வது தொடரில் நான் முன்வைத்திருந்தேன்.

இந்தக் கருத்தினால் விசனமடைந்த அவரது தீவிர ஆதரவாளரான ஹாஜியார் ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த என்னை வழி மறித்து மிக மோசமான வார்த்தைகளால் ஏசி, எச்சரிக்கையும் செய்தார். இதனை பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஸ்ரீ.ல.மு.கா.வின் கொள்கைபரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என் முபீன், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தர் எம்.ஐ.எம். லத்தீப் ஹாஜியார் உள்ளிட்ட பல சகோதரர்கள் மிகவும் சமீபத்தில் இருந்தே நேரில் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

என்னை வழிமறித்து மிக மோசமான வார்த்தைகளால் பகிரங்கமாக எச்சரித்த அந்த ஹாஜியாரும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களைப் போலவே முகம் நிறைந்த அடர்ந்த வெண்தாடியைக் கொண்டிருந்தது மட்டுமன்றி, நீண்ட ஜுப்பாவும் அணிந்து பூரணமான இஸ்லாமிய ஆடை மற்றும் இஸ்லாமிய உருவத் தோற்ற ஒழுங்கிலும் காணப்பட்டார். 

அவரது நாகரீகமற்ற அந்த எச்சரிப்புக்கு பதிலளித்த நான், உமது வயதையும் நீர் அணிந்திருக்கின்ற இஸ்லாமிய உடையையும், முகத்தில் வைத்திருக்கின்ற தாடியையும் பேணி வார்த்தைகளை வெளியிடுமாறும், உமது பாணியிலேயே நானும் தரமிறங்கி இவ்விடத்தில் பேசினால் நீர் அனைத்தையும் அவிழ்த்துவிட்டுச் செல்ல நேரிடும் என்றும் சுருக்கமாகக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றேன். அவரை அருகில் நின்ற லத்தீப் ஹாஜியார் சமாதானப்படுத்தி அப்பால் அழைத்துச் சென்றார்.

இச்சம்பவத்திலிருந்து மேற்குறிப்பிட்ட எனது கருத்து பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களையும், அவரின் ஆதரவாளர்களையும் வெகுவாகத் தாக்கமடையச் செய்திருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
உண்மையில் நமது முஸ்லிம் சமூகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் அரசியலில் பதவி உயர்வுகளைப் பெறும் நோக்குடன் தேர்தல்களைப் பயன்படுத்தி வருவதை கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும்போது, 'மக்களே..! என்னைத் தெரிவு செய்யுங்கள். நான் நான்கு வருடங்களுக்கு இந்தச் சபையிலிருந்து உங்களுக்குச் சேவையாற்றுவேன்' என்று கூறி வாக்குக் கேட்பார்கள். மக்களும் அவரை ஆதரித்து தெரிவு செய்வார்கள்.

ஆனால் அவர் அந்தச் சபையின் பதவிக்காலம் முடிவதற்கிடையில் ஒரு மாகாண சபைத் தேர்தல் வந்தால் அதிலும் போட்டியிடுவார். அவ்வாறு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் அச்சபையின் பதவிக் காலம் முடிவதற்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று வந்தால் அதிலும் போட்டியிடுவார்.

இப்படி மக்கள் வழங்கிய பெறுமதிமிக்க வாக்கு ஆணையை எந்தவிதமான பெறுமானமும் இல்லாமல் இடைநடுவில் தூக்கியெறிந்துவிட்டு, தானும் எம்.பி.யாக வேண்டும்; தானும் மாகாண சபை உறுப்பினராக வேண்டும் என பதவி ஆசை கொண்டு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை, அவர்களுக்கு ஆணைகள் வழங்கித் தெரிவு செய்த வாக்காளப் பெருமக்களே துணிந்து நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். இன்றேல், நமது சமூகத்தில் இதுவும் ஒரு தொற்று நோயாகத் தொடரும் என்பதிலும், மக்கள் வழங்குகின்ற ஆணைகளுக்கு எவ்விதப் பெறுமதியும் இல்லாமல் போகும் என்பதிலும் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் சகோதரர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை 2008ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவரை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் அமோகமாக வாக்களித்து தெரிவு செய்திருந்தனர். எனினும் அவர் முதலமைச்சராகப் பதவியில் அமராவிட்டாலும் 10 மாகாண அமைச்சுக்களைப் பெற்று பதவியில் அமர்ந்தார்.

இரண்டு வருடங்களில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் அவருக்கு அளித்த அந்த நம்பிக்கைக்குரிய ஆணையைப் புறந்தள்ளிவிட்டு, 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றத்திற்குச் சென்றார். இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நம்பிக்கையுடன் அளித்த அந்த வாக்குகளுக்கும், அவருக்கும் பிரதியீடாக காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு ஒரு சகோதரரே கிழக்கு மாகாண சபைக்கு மக்களின் பிரதிநிதியாகச் சென்றார்.

இதுபோலவே, 2008ம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத் அவர்களும் இம்மாவட்ட மக்கள் நம்பிக்கையுடன் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்து விட்டு 2010ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

இவ்வாறு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் ஆணைகளை மதிக்காமல் தமது பதவி ஆசையின் நிமித்தம் கீழவைகளை விட்டும் நாடாளுமன்றத்திற்கே சென்று அரை மந்திரிகளாகவும், முழு மந்திரிகளாகவும் தம்மையும், தமது வாழ்க்கைத் தரங்களையும் உயர்த்திக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

இந்த வழித் தொடரிலேயே இப்போது பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் 2012ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20407 முஸ்லிம் வாக்காளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அவருக்கு வழங்கியிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான ஆணையை தூக்கிக் கடாசிவிட்டு, நாடாளுமன்றம் செல்வதற்காக இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

உண்மைகளை பொறியியல் பட்டம் பெற்ற இவர்கள் மட்டும் மேடைகளில் நின்று மக்கள் மத்தியில் சொன்னால்தான் அது உண்மையாகும் என்பதல்ல. என்னைப் போன்ற ஏழாம் வகுப்புப் படித்தவர்களும் உண்மையை உரத்துச் சொல்லலாம். ஏழையோ அல்லது படிக்காதவனோ சொல்வதால் ஒரு போதும் உண்மை பொய்யாகிவிடாது.

உண்மையில் பொறியியலாளர் ஷிப்லி அவர்கள் இந்த மாவட்ட முஸ்லிம் மக்களை மதிப்பவராகவும், அவர்களின் ஆணைக்கமைய கிழக்கு மாகாண சபையில் இருந்து சேவை செய்யவும் எண்ணமுடையவராக இருந்திருந்தால் அவர் இச்சபையின் பதவிக்காலம் முடியும் வரைக்கும் அங்கிருந்து சேவைகள் செய்யலாம். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பலாம். ஏன் நாடாளுமன்றத்திலிருந்து குரல் எழுப்பினால்தான் அது மக்கள் பிரதிநிதியின் குரல் எனும் அந்தஸ்தைப் பெறுமா? மாகாண சபையிலிருந்து குரல் கொடுத்தால் அது மக்கள் பிரதிநிதியின் குரலாகாதா?
மக்கள் பிரதிநிதிகள் மக்களை மிக இலகுவாக ஏமாற்றுகின்றார்கள் என்பதற்கு இவ்விதமாக மக்களின் ஆணைகளை இடைக்காலத்தில் புறந்தள்ளிவிட்டு மேலவைகளை நோக்கிப் புறப்படுவோரின் செயற்பாடுகள் நல்தொரு உதாரணமாகும். என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறு மக்களின் ஆணைகளை மதியாது இடைக்காலத்தில் மக்களைக் கைவிட்டு விட்டு, மீண்டும் மேலவைகளுக்காகத் தேர்தலில் நின்று மக்களின் ஆணைகளைக் கோரும் ஏமாற்று வேட்பாளர்களை மக்களே புறந்தள்ளி நிராகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இத்தகையோர் திருந்தவும், மக்களின் ஆணைக்கமைவாக தொடர்ந்து அவர்தம் சேவைகளை முன்னெடுக்கவும் வழி பிறக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தில்தான், இந்தத் தேர்தலில் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தோல்வியடைந்தால் அது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய இழப்பாக அமையாது என்ற எனது கருத்தை முன்வைத்திருந்தேன். 

இந்நிலையில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் இத்தேர்தலில் தோல்வியுற்றால் அவருக்கு எந்தவகையில் இழப்புக்கள் ஏற்படும்? அவர் பிறந்த காத்தான்குடி மண்ணுக்கு எந்தவிதமான இழப்புக்கள் ஏற்படும்? அவர் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எத்தகைய இழப்புக்கள் ஏற்படும்? அவரது தோல்வியால் ஒட்டுமொத்த தேசியத்திற்கும் எவ்வாறான இழப்புக்களை அது கொண்டு வரும்? என்பது பற்றியெல்லாம் அடுத்துள்ள இரு வாரங்களுக்குள் நாம் பொறுப்புடன் அலசிப்பார்க்கலாம். (தொடரும்)

Read More
avathani Media Network

காத்தான்குடியில் இடம்பெற்ற பாலர் கலைவிழாவும், கௌரவிப்பு விழாவும்

(எம் எச் எம் அன்வர்)
  
பெண்களுக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் பணிப்பாளர் சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 பாலர்பாடசாலையில் கற்கும்  580 மாணவர்கள் மற்றும் கற்பித்த 110 ஆசிரியர்களுக்கும் சமூக சேவை செய்த முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வின்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

பிரதம அதிதியாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம் எஸ் சுபைர் முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர் அமேரிக்க நிலைய கலாச்சார விவகார உத்தியோகத்தர் டொன் கோடெல் முன்னாள் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத் முன்னாள் பிரதேச கல்விப்பணிப்பாளர் ஏ எம் சுபைர் சமூக சேவையாளர் எம் ஹாரிஸ் ஆகியோர்  கலந்துகொண்டனர்

மேற்படி பாலர்களின்; திறமையை வெளிக்கொணரும் வகையில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர் 










Read More
avathani Media Network

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெறும் போது ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் பாராளுமன்றம் செல்வர்



(ஏ.எல்.டீன்.பைரூஸ்)
மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும் பீல் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியின் முன்னால் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீர்த்தா பிரபாகரன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் சிவகீர்த்தா பிரபாகரன்  உட்பட முன்னால் மாநகரசபை உறுப்பினர்கள் 06 போ் இணைந்து கொண்டனர். 

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம் பெற்ற விசேட ஊடகவயலாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும் சிவகீர்த்தா பிரபாகரன் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக பல்வேறு பட்ட பணிகளை செய்த ஒருவா்தான் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 
எனவே  ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  வெற்றி பெறும் போது ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் பாராளுமன்றம் செல்வர் எனவே நாம்  எதிர்வரும் நாட்களில் வீடு வீடாக சென்று தெர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க போவதாகவும் தெரிவித்தார். 





Read More