Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 16, 2015

avathani Media Network

அமீர் அலிக்கு எதிராக 500 மில்லியன் ரூபா மான நஸ்ட ஈடு வழக்கு !

(அஸ்ரப் ஏ சமத்)
ஓட்டமாவடியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு பிரதியமைச்சர்  அமீர் அலி அவர்கள் முஸ்லீம்காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் மற்றும்  ஓட்டமாவடியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ரியாழ் ஆகியோரைச் சம்பந்தப்படுத்தி விசமத்தணமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இவ் விடயம் பற்றி ஊடகங்களிலும்  அவர் கருத்து தெரிவித்துள்ளார்.இது இவரது வக்குரோத்து அரசியலைக் காட்டுகின்றது. 
இதன் முலம் அனுதாப வாக்குகளைப் பெற்று எப்படியோ எம்.பி யாகி விடலாம் என அவர் செய்யும் சூழ்ச்சியாகும். இது தேர்தல்  காலத்தில் இவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பது தேர்தல்  சட்டத்தினை மீறும் செயலாகும் இது பற்றி தேர்தல்  ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம்.
இதற்காக எமது கட்சியின் சட்டத்தரணிகள் 500 மில்லியன் ருபா நஸ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. அதற்கான கடிதமும் அமீர் அலிக்கு சட்டத்தரணிகளால் அனுப்பி வைக்கப்படும். என கண்டியில் ்இருந்து அமைச்சர் ஹக்கீம் ஊடகச் செயலாளர்  டொக்டர் ஹாபீஸ் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முஸ்லீம் கட்சியின் ்இருந்து அரசியல் முத்திரையை பெற்று அரசியல் வாதியாக வந்த அமீர் அலி மற்றும் அவர் கட்சித் தலைவர் தற்பொழுது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமைத்துவத்திற்கும் வீன் பழி சுமத்துகின்றார். 


இந்தக் கட்சிக்காகவோ எத்தனையோ உயிர்கள் இரத்தங்கள்  இந்த மண்னில் சிந்தப்பட்டுள்ளன. ஆனால் ஒருபோதும் இன்னொரு முஸ்லீம் சகோதரணைப் பழி கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை பாடு இந்தக் கட்சிக்கு கிடையாது.

ஓட்டாமாவடியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் பின்னால் யார்  உள்ளனர் என்பதை உரியா பொலிசார் சடடம் நீதி இருக்கும்போது  அமீர் அலி முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளருக்கும் கட்சியின் தலைவருக்கும் எதிராக விரலை நீட்டுகின்றார். தோர்தல் காலத்தில் அப்பிரதேச வாக்குகளை கவர்வதற்கு வீன் பழி சுமத்துகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காக  மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்   உயிர் நீத்தார்கள்.  அதேபோன்று மடவலையில் 8 இளைஞர்கள், அதேபோன்று சாய்ந்தமருதுரில் இளைஞர் பழி பேருவளையில் இளைஞர்  பலி இவ்வாறு இக் கட்சிக்காகவே கட்சித் தொண்டர்கள் இரத்தம் சிந்தி மடிந்த வரலாறு உள்ளது.

அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் போன்ற இதர ஆயுதக் குழக்கலாலும்  இக் கட்சியின் தொண்டர்கள் உறுப்பிணர்கள் மடிந்திருக்கின்றார்கள்.

முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் இன்னொரு கட்சியின் ஆதரவலாரை கொலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இல்லை. இந்தக் கொலைக்கு பின் உள்ள சதி அந்தரங்கம் சம்பந்தப்பட்டவர்களை உரிய வா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும். இதனை  வெளிக்கெனர எமது தலைவரும் சட்டத்தரணிகளும் மக்கள் முன் தெரியவரும். 

-lankafrontnews

Read More
avathani Media Network

காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் மீது ஹிஸ்புல்லாஹ்வின் பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)


நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் காத்தான்குடி பிரதேச பல கட்சி வேட்பாளர்களுடனும் தேர்தல் கால நடைமுறை ஒழுங்கு தொடர்பில் எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்திருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத்தினர்மீது, குறித்த ஒப்பந்தத்தில் இருந்து மீறிய முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.கூட்டமைப்பில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பழிவாங்கும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒப்பந்தத்தில் இருந்து மீறியமைக்காக, முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தமது ஜமாஅத் வழங்கிய ஆதரவை முற்றாக விலக்கிக் கொள்வதாகவும், ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்ட அவருக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் கடந்த 14ம் திகதி வெள்ளிக்கிழமை விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததை இணையதள வாசகர்களும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களும் அறிவார்கள்.

இந்த அறிக்கையினால் வெகுவாக ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய தௌஹீத் ஜமாஅத் என்பது ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், தேர்தல் பிரச்சாரக் காலம் முடிவடைந்த பின்னர் 15ம் திகதி சனிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடாத்தி தமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துள்ளனர் என்றும், இவர்களின் பள்ளிவாசலில் சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகள் பாவிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையீடு செய்திருந்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணையொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சமூகமளித்த தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களும், நிர்வாகத்தினரும் பின்வருமாறு தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளனர்.

1. எமது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு சட்டவிரோதமான அமைப்பு என்றால், இச்சட்டவிரோத அமைப்புடன் முறைப்பாட்டாளரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்வந்தார்? 


எமது அமைப்பை அங்கீகரித்து காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் உள்ளிட்ட பல பிரமுகர்களும், அரச நிறுவனங்களும் கடந்த காலங்களில் எம்மோடு தொடர்பாடல்களை வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கின்றன. நாம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை முறைப்பாட்டாளருக்கு பாதகமாக இருந்ததன் காரணமாகவே அவர் இப்போது எமது அமைப்பைச் சட்டவிரோத அமைப்பு எனக் குற்றஞ்சாட்டிப் பழிதீர்க்க முற்பட்டிருக்கின்றார்.



2. குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளவாறு நாம் 15ம் திகதி சனிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு எதனையும் நடாத்தவில்லை. 14ம் திகதி வெள்ளிக்கிழமைதான் ஒப்பந்தம் செய்து கொண்ட ஏனைய வேட்பாளர்களுடன், அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், அக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க ஹிஸ்புல்லாஹ் சமூகமளிக்கத் தவறியது பற்றியும் நாங்கள் விளக்கமளித்தோம். அதனை அன்று மாலை கபுறடி வீதியில் நடைபெற்ற இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போதும் அவர்கள் பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியில் ஒளிபரப்புச் செய்து காண்பித்தனர். எனவே அவரது குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.


3. எமது பள்ளிவாயலில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் முறைப்பாட்டாளரால் ஏற்கனவே வழங்கப்பட்டவையே ஆகும். எனவே சட்டவிரோதமாக நாங்கள் ஒலிபெருக்கிகள் பாவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுவாராயின், அச்சட்டவிரோதச் செயற்பாட்டிற்கு ஒலிபெருக்கிகளை வழங்கி ஊக்குவித்த அவரையே நீங்கள் விசாரித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு தைரியமாக தேசிய தௌஹீத் ஜமாஅத் நிர்வாகத்தினர் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ளதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.







Read More
avathani Media Network

பாராளுமன்றத் தேர்தல் 2015 சில எதிர்வு கூறல்கள் - முஸ்லிம் பிரதி நிதித்துவம் பாரிய அளவு வீழ்ச்­சி­ய­டை­யலாம்:

விகி­தா­சார பிரதி நிதித்­துவ முறையில் நடை பெற்ற பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தல்­களில் சிறு­பா­ன்மை கட்­சிகள் நன்­மை­ய­டைந்­தாலும் இந்த தேர்­தலில் முஸ்லிம் பிரதி நிதித் துவம் பாரிய அளவு வீழ்ச்­சி­ய­டை­யலாம்.
- கடந்­த­கால தேர்தல் பெறு­பே­று­களை அடிப்­ப­டை­யாகக் கொன்டு நோக்கும் போது அனே­க­மாக இந்தத் தேர்தல் முடி­வுகள் 2001 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தேர்தல் முடி­வு­களை ஒத்­த­தாக அமை­யலாம்.
- 2001 ஆம் ஆண்டு தேர்தல் முடி­வு­களின் படி ஐக்­கிய தேசிய கட்சி 109 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 80 ஆச­னங்­க­ளையும்  மக்கள் விடு­தலை முன்­னணி 16 ஆச­னங்­க­ளையும் முஸ்லிம் காங்­கிரஸ் தனி­யாக போட்­டி­யிட்டு 5 ஆச­னங்­க­ளையும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு 16 ஆச­ன­ங்­க­ளையும் பெற்­றனர். அதன்­படி ஐக்­கிய தேசிய கட்­சியும் முஸ்லிம் காங்­கி­ரஸும் இணைந்து 114 ஆசங்­க­ளுடன் ஆட்­சி­ய­மைத்­தது.
2015 ஆம் ஆண்­டுக்­கான பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் பின்­வரும் பண்­பு­களை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.
1. தேர்தல் களம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு சார்­பாக உள்­ளது.
2. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு பெற்ற 58 இலட்சம் வாக்­கு­களில் மாவட்ட ரீதி­யாக 20 தொடக்கம் 30 வீதம் வீழ்ச்­சி­ய­டை­யலாம்.
3.கடந்த தேர்­தலில் மைத்தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கிடைத்த 62 இலட்சம் வாக்­கு­களில் சுமார் 48 இலட்சம் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் 7 இலட்­சத்து 60 ஆயிரம் வாக்­குகள் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் 6 இலட்சம் வாக்­குகள் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் எஞ்­சிய வாக்­குகள் ஏனைய சிறு கட்­சி­க­ளுக்கும் கிடைக்கப் பெறும்.
4. தேர்தல் களத்தில் வீழ்ச்சி கண்­டி­ருந்த ஜே.வி.பி.யின் வாக்குப் பலம் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அதி­க­ரிக்­கலாம்.
5. முஸ்லிம் கட்­சி­களின் வாக்­குகள் குறை­வ­டைந்து அல்­லது சிதைவ­டைந்து முஸ்லிம் பிரதி நிதித் துவம் குறை­வ­டை­யலாம்.
6. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் 83 வீத­மாக இருந்த வாக்­க­ளிப்பு வீதம் 75 வீதம் குறை­வ­டை­யலாம். வாக்­க­ளிப்­பி­லி­ருந்து தவிர்­த்துக்­கொள்ளும் வாக்­கா­ளர்கள் 95 வீத­மானோர் கடந்த தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளாவர்
உத்­தேச தேர்தல் முடிவு
 நாடு­பூ­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் கணிப்­பீடு செய்­யப்­பட்ட தேர்தல்  முடிவு அட்­ட­வ­ணையில் தரப்­பட்­டுள்­ளது.
இதன்­படி ஐக்­கிய தேசிய கட்சி 110 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு 80 ஆச­னங்­க­ளையும் மக்கள் வி­டு­தலை முன்­னணி 16 ஆசங்­க­ளையும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி 16 ஆச­னங்­க­ளையும் முஸ்லிம் காங்­கிரஸ் 1 ஆசனத்தையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆச­னத்­தையும் ஜன­நா­யக கட்­சிக்கு தேசிய பட்­டி­யலில் ஒரு ஆச­னமும் கிடைக்கப் பெறும்.
இதன்­படி ஐக்­கிய தேசிய கட்­சியை முதன்­மை­யாகக் கொண்ட மக்கள் விடு­தலை முன்­னணி, இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் ஆத­ர­வு­ட­னான பல­மிக்க ஒரு அரசை அமைக்க முடியும். இந்த கூட்ட­ணி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர அணியில் வெற்­றி­பெற்ற ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ர­வா­ளர்­களும் சுமார் 20 பேர் அளவில் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதன்­படி அடுத்த பாரா­ளு­மன்றம் முக்­கி­ய­மான விட­யங்­களில் 3 இல் 2 பெரும்­பான்மை ஆத­ரவைப் பெறக் கூடிய சக்தி மிக்­க­தாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம்
கொழும்பு, களுத்­துறை , கண்டி, வன்னி, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, அம்­பாறை, கேகாலை ஆகிய மாவட்­டங்­களில் சுமார் 10 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அதே நேரம் தொடர்ந்தும் புத்­தளம், குரு­ணாகல் மாவட்ட பிரதி நிதித்­துவம் கேள்விக் குறி­யா­கவே உள்­ளது.
2 இலட்சம் வாக்­கா­ளர்­களைக் கொண்ட அம்­பாறை மாவட்­டத்தில் நிலவும் மும்­முனைப் போட்டி கார­ண­மாக அங்கு இரண்டு முஸ்லிம் பிரதி நிதித்­து­வத்தைப் பெறு­வதும் சந்­தே­க­மாக உள்­ளது. அதா­வது, உத்­தேச தேர்தல் முடி­வு­களின் படி திகா­ம­டுள்ள மாவட்­டத்தில் ஐக்­கிய தேசிய கட்சி 4 ஆச­னங்­க­ளையும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 2 ஆச­ன­ங்­க­ளையும், தமி­ழ­ர­சுக்­கட்சி 1 ஆச­னத்தி­னையும் பெறும் வாய்ப்பு உள்­ளது.
இங்கு தனித்து போட்­டி­யிடும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சுமார் 25 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றாலும் மாவட்­டத்தின் கூடிய மீதிக்­கான ஆசனம் சுமார் 55 ஆயிரம் வாக்­கு­களைப் பெறும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சிக்கு கிடைக்கப் பெறு­கின்­ற­மை­யினால் அந்த வாக்­குகள் பய­னற்றுப் போகும்.
அதே போல ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அம்­பாறை பகு­தியில் சுமார் 70 ஆயிரம் சிங்­கள வாக்­கு­களைப் பெறு­கின்ற நிலையில் 25 ஆயிரம் விருப்பு வாக்­கு­களை பெறும் முஸ்லிம் வேட்­பா­ளர்­களால் எதிர்­கொள்ள முடி­யாமல் போகும்.
இந்த நிலையில் மாவட்­டத்தின் பெரும்­பா­ன்­மை­யான முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைந்து ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைக்கும் நான்கு ஆச­னங்­களில் அதி­கூ­டிய ஆச­னங்­களைப் பெற முயற்­சிக்­கு­மி­டத்து முஸ்லிம் பிரதி நிதித்­து­வத்தை அதி­க­ரிக்க முடியும்.
அடுத்த பிர­தான மாவட்­ட­மான மட்­டக்­க­ளப்­பில்­முஸ்­லிம்கள் 3 பிர­தான கட்­சி­களில் பிரிந்து போட்­டி­யி­டு­கின்ற நிலையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­டணி  மற்றும் முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய இரு கட்­சி­களில் இருந்தும் தலா ஒருவர் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான சூழல் நில­வு­கின்­றது.
வன்­னியைப் பொறுத்­த­வரை இம்­முறை சுமார் 10 ஆயிரம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்கும் தகு­தியைப் பெறாமை கார­ண­மாக அங்கு முஸ்­லிம்­களின் வாக்குப் பலம் குறைந்­துள்­ளது. இந் நிலையில் ஒரு உறுப்­பி­னரே தெரிவு செய்­யப்­ப­டலாம்.
அதே­நேரம் சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஐ.ம.சு.முன்­ன­ணி­யுடன் இணைந்து போட்டியிடுகின்ற காரணத்தினால் அந்தக் கட்சியில் முதன்மை வகிக்கும் சிங்கள வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளது.
கொழும்பு
கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஐ.தே.கட்சியில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் கட்சிக்குள் நிலவும் போட்டித் தன்மைகள் காரணமாக சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களே தெரிவு செய்யப்படலாம். இந்தப் பின்னணியில் ஒருவர் அல்லது இரு முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது.
-vidivelli.lk
Read More
avathani Media Network

கடும் காற்று : 40 வீடுகள் சேதம்

நாட்டின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் 40 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் 6 வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

பொலன்னறுவை லங்காபுர மற்றும் அனுராதபுரத்தில்  வீசிய கடும் காற்றினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 150 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், குருநாகல் பொலிபித்திகம பகுதியில் வீசிய கடும் காற்றினால் 20 இற்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் சில மணித்தியாலங்களில், மத்திய மலைநாடு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கடுமையான காற்று வீசக்கூடும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Read More
avathani Media Network

மட்டு மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்புடன்- 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு.படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று 16 ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.
அத்தோடு வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன் வாக்களிப்பு நிலைய தேர்தல் அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் உரிய நிலையங்களை சென்றடைந்துள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் செயலகத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் உட்பட தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வருகைதந்திருந்தனர். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் நாளை 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற இருக்கின்றது.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி 199 , கல்குடா தேர்தல் தொகுதி 115 ,பட்டிருப்பு தேர்தல் தொகுதி 100 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
மேற்படி பொதுத் தேர்தலில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதோடு 
மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்  3 இலட்சத்து 65 ஆயிரத்து 167 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















Read More
avathani Media Network

SLMCயின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒழுக்க விதிமுறைகளுக்கமைய தமது சத்தியப் பிரமாணத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மேற்கொண்டார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில் இடம்பெற்ற இந்த சத்தியப் பிரமாணத்தினை அதன் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் முன்னிலையில் அவர் மேற்கொண்டார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏறாவூரில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின்போதும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இதேபோல் ஒரு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் மேற்கொண்ட சத்திபிரமாணம் PDF வடிவத்தினை கீழே படத்தினை க்ளிக் பண்ணுவதன்மூலம் காணலாம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒழுக்க விதிமுறைகளுக்கமைய தமது சத்தியப் பிரமாணத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மேற்கொண்டார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில் இடம்பெற்ற இந்த சத்தியப் பிரமாணத்தினை அதன் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் முன்னிலையில் அவர் மேற்கொண்டார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏறாவூரில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின்போதும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இதேபோல் ஒரு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் மேற்கொண்ட சத்திபிரமாணம் PDF வடிவத்தினை கீழே படத்தினை க்ளிக் பண்ணுவதன்மூலம் காணலாம்.




Read More
avathani Media Network

தேர்தலை குழப்புவோரை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு பொலிஸாருக்கு அதிகாரம்!- தேர்தல் ஆணையாளர்

அமைதியானதும் நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதனை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் நாச வேலைகளில் ஈடுபட எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது.

சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்குச் சாவடியின் வாக்களிப்பினை சூன்யமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் திட்டவட்டமாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

வேட்பாளர்கள் செய்த செலவுகள் குறித்த தகவல் அறிக்கை!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செய்த செலவுகள் குறித்த தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட உளள்தாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சில வேட்பாளர்கள் எவ்வளவு பணத்தை செலவிட்டுள்ளார்கள் என்பது குறித்து தேர்தலின் பின்னர் வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவொன்று இவ்வாறு அறிக்கை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் தற்போது செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரச்சாரத்திற்கு செலவாகும் தொகை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகம் என கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.
சில வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக 200 முதல் 400க்கும் மேற்பட்ட லட்ச ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

Read More
avathani Media Network

தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி

2015 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார்; கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாக்காளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அச்சமின்றி தங்களின் வாக்குகளை நேரத்துடன் வழங்குமாறும் தெரிவித்ததார்.
மேலும் இன்று வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் என்பன கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
Read More
avathani Media Network

அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்

கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட நாட்டிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி இலவசமாக பயணிக்கலாம் என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
 எனவே 17 ஆம் திகதி காலை 6 மணித்தொடக்கம் மாலை 6 மணிவரை அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க முடியும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More