Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 25, 2015

avathani Media Network

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முபீனின் பகிரங்க கடிதம் என்ற செய்திக்கு கொள்கை பரப்புச் செயலாளர் ULMN. முபீனின் மறுப்பறிக்கை

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

24-08-2015 ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முபீனின் பகிரங்க கடிதம் என்ற செய்திக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் காத்தான்குடி அமைப்பாளருமான ULMN. முபீனின் மறுப்பறிக்கை.

கடந்க 24-08-2015 அன்று திங்கள் கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களுக்கு முபீன் எழுதும் கடிதம் என ஒரு கட்டுறை சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரை வடிவிலான கடிதத்தை பார்வையிட்ட சில சகோதரர்கள் தொலைபேசியிலும் நேரடியாகவும் என்னிடம் இது தொடர்பில் வினவினர்.

இதன் பின்பே இத்தகய கடிதம் வெளிவந்துள்ளதை நான் அறிந்து கொண்டேன். அக்கடிதத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனிக்கு தேசியப்பட்டியல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. 

உண்மையில் இக்கடிதத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரான (முபீனுக்கும்) எனக்கும் எந்தத் தொடர்புமில்லையெனவும் இக்கடிதத்தை நான் எழுதவில்லை எனவும் ,த்தால் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன். 

இக்கடிதத்தை வாசிக்கும் வாசகர்கள் இதை நானே எழுதியதாக கருதிக் கொள்ளும் வகையில் இக்கடிதம் வரையப்பட்டுள்ளது. அத்துடன் வன்னி, திருகோணமலை மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர்களை கொச்சைப்படுத்தியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கண்டி மாவட்டத்தில் வெற்றி பெற்றது பணபலத்தின் மூலமே என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பக்கச்சார்பாக நடந்து கொண்டார் என்றும் தேசியப் பட்டியல் கோறுகின்ற வேறு சில ஊர்களின் நியாயங்களை கொச்சைப்படுத்தியும் இக்கடிதம் வரையப்பட்டுள்ளது. 

இக்கடிதத்தை எழுதியவர்கள் அல்லது எழுதியவரின் நோக்கம் எனக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க வேண்டும்மென்ற குறகிய அற்ப நோக்கமாகும் எனக் கருதுகின்றேன். தேசியப்பட்டியல் தொடர்பாக கட்சியின் உயர்பீட கூட்டத்திலும் இக்கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களிடம் காத்தான்குடிக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என இதுவரை வலியுறுத்தி வருகின்றேன். 

அத்துடன் தேசியப் பட்டியல் வழங்கும் போது நல்லாட்சிக்கான தேசிய முண்ணனிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் காலங்கள் பகிர்ந்து வழங்குமாறு கோரிவருகின்றேன். யாருக்கும் காத்தான்குடியில் தேசியப்பட்டியல் கிடைப்பதற்கு நான் தடையாக இருக்கவில்லை என்பதையும் தெரிவிப்பதோடு நல்லாட்சிக்கான தேசிய முண்ணனிக்கு தேசியப்பட்டியல் வழங்கினால் சந்தோசம் என்றே தலைமையிடம் தெரியப்படுத்தியுள்ளேன். 

இக்கடிதத்தை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட அவதானி என்ற இணையத்தள உரிமையாளர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட குறித்த ஒரு அரசியல் இயக்கத்தின் முக்கியஸ்தரிடம் சம்பளம் பெறுபவர் என்ற வகையில் இம் முகவரியற்ற கடிதத்தை வெளியிட்டதன் மூலம் தனது விசுவாசத்தை காட்ட முயன்றாரோ தெரியவில்லை.

அன்புடன்
குறித்த கடிதத்தை தலைவருக்கு எழுதாத
ULMN. முபீன்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர், அமைப்பாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Read More
avathani Media Network

பழிவாங்கும் அரசியல் கலாச்சாரம் முஸ்லிம் கட்சிகளுக்குள் ஆழமாய் வேறூன்றி உள்ளது அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி


(ஏ.எல்.டீன்பைரூஸ்)

முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் கலாச்சாரத்தின் பின்னரான பழிவாங்கும் அரசியல் கலாச்சாரம் என்பதற்கு மாற்றீடாக இழப்பீட்டுக்கலாச்சாரம் தற்போதய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. பெரும்பான்மை சமூக அரசியல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண அரசியலாகவே அமைந்திருக்கின்ற வேலை முஸ்லிம் அரசியல் பழிவாங்கும் அரசியல் கலாச்சாரத்தின் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை நடந்து முடிந்த தேர்தலும் அதற்குப்பின்னரான நிலமைகளும் சாட்சியங்களாக உள்ளன என்று அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைவிட மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கால, தேர்தலுக்கு பின்னான நிகழ்வுகள் முஸ்லிம் சமூக அரசியல் கலாச்சாரத்தை கேளிக்கைக்கு உள்ளாக்கியுள்ளது. தேசிய ரீதியிலும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமுக நலனைவிட கழுத்தறுப்பு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததனை அவதானிக்க முடிந்தது. இதனால் நாட்டின் சில மாவட்டங்களில் எந்த கட்சியும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற குரோத சித்தாந்தம் முஸ்லிம் கட்சிகளுக்குள் ஆழமாய் வேறூன்றி உள்ளது. 


மட்டக்களப்பு மாவட்ட அரசியலில்கூட இது விதி விளக்காக இருக்கவில்லை. இதன் வெளிப்பாடே இன்று மாவட்டத்தில் தோன்றியுள்ள அரசியல் வன்முறைகளுக்கு மூல காரணியாக காணப்படுகின்றது. அடுத்தவரை தோழ்வியடையச்செய்ய வேண்டும் என்ற சித்தாந்தமும், ஊடக் விபச்சாரத்தின் மூலம் சமூகத்தினுள் இரத்தங்களை ஓட்டி பொருட்சேதங்களை ஏற்படுத்த முனைந்த நிகழ்வுகள் ஏராளம். இலங்கை தளத்தில் நூரு வீத இஸ்லாமிய அரசியல் என்ற கோஷம் தற்போதய நடைமுறை அரசியலில் சாத்தியப்பாடான ஒன்றாக அமையாது என்பதனை விளங்கிக்கொள்ள வேண்டும். 

இஸ்லாமிய அரசியலா அல்லது அரசியல் இஸ்லாமா என்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற வேலை இஸ்லாமிய அரசியல் என்ற மாயைக்குள் புதிய தலைமுறையினை சிக்க வைத்து களநிலையில் கொள்கை முரண்பாட்டு அரசியலுக்குள் சிக்குண்டு தவிக்கும் கொள்கைவாத அரசியலும் இல்லாமலும் இல்லை. இலங்கை அரசியலில் முஸ்லிம் அரசியல் அவ்வப்போது ஆசனத்துக்காக அள்ளுண்டு போன வரலாறாக உள்ளதனையே காணமுடிகின்றது. 

திவிநெகும சட்டமூலம், ஜேம்ஸ் போக்கரின் கசினோ மீதான ஆதரவு வாக்களிப்பு, ஜனாதிபதி முறைமையினை நீடித்தல் எனும் 18வது சரத்துக்கான ஒத்துழைப்பு என பல்வேறு சிறுபான்மை அரசியல், கலாச்சார உரிமைமீரல்களுக்கு முட்டுக்கொடுத்த துரோகத்தனங்கள் ஏராளம். இறுதியாக நல்லாட்சி என்ற மாயைக்குள் சிறுபான்மை சமூகம் ஆகர்ஷிக்கப்பட்ட போது “வண்டிலுக்கு கிளால போன நாய்” என்ற பலமொழிக்கமைவாக முஸ்லிம் சமூகம் மைத்திரியை ஆதரிக்க முடிவு கட்டியபின்னர் இறுதியில் சமூகத்தினுள் நுழைந்து கொண்டு தாம்தான் ஆட்சி மாற்றத்தின் அடிநாதம் என கூப்பாடு போட்டு திரிந்ததையும் எவரும் மறந்த பாடில்லை. 

இத்தகைய கையருவற்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளும் மலக்குகளாகவோ அல்லது நபிமார்களாகவோ இருப்பார்களென கருதி சமூகத்தளத்தினுல் அரசியல் பிளவுகளை உண்டுபண்ணுவது இஸ்லாமிய அடிப்படையில் ஏற்புடையதாக அமையாது. இன்று ஒரு அரசியல் வாதி ஒருவரை எதிர்க்கின்ற போது அவரைவிடவும் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் பின்னிளைவாதம் கொண்டவர்களுடன் கைகோர்த்து செயற்படுவது நியாயமாக கொள்ளமுடியாது. 

இஸ்லாமிய கோட்பாட்டில் “நிர்ப்பந்த ரீதியில் தெரிவு இடம்பெறும்போது இரண்டு தீமைகளில் குறைந்தளவு தீமையினை தெரிவு கொள்ளல் என்ற” விடயம் எல்லாவற்றிட்கும் பொருத்தமானது. இந்த வகையில் அரசியல் வாதிகள் ஒவ்வொருவரும் கைகோர்த்துள்ள கொள்கைகளும் சித்தார்ந்தங்களும் ஒன்றை மற்றொன்று விஞ்சியதாகவே காணப்படுகின்றது. தீமைகளை எதிர்க்கின்றோம் என்ற எண்ணத்தில் “லேபல் மாறியதே தவிர பாணி ஒன்றே” என்ற இலங்கை அரசியல் தலைமைகளிடத்தில் நியாயம் கோரிச்செல்வதும் அதற்காக வேண்டி மிகக்கோரமான தீவினையை துணைக்கிழுத்துக்கொள்வதும் இஸ்லாமிய பண்பாட்டு முறையாக அமைய வாய்ப்பில்லை. 


குறித்த அரசியல் பழிவாங்கல் மனநிலையில் இன்னுமொரு விடயத்தை தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும். தற்போதய சந்தர்ப்பவாத அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிப்புச்செய்வதற்கான செயற்திட்டங்களையும் வழிமுறைகளையும் சமூகத்திற்கு முன்வைக்க வேண்டுமே தவிர கிடைக்கின்ற பிரநித்தித்துவத்தையும் இலக்கச்செய்கின்ற நடவடிக்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தீர்மானத்தில் பாரிய தாக்கத்தினையும் ஏற்படுத்தும். எனவே மாற்றுக்கருத்துக்களை, கருத்துக்களாலும், பண்பாட்டினாலும், விட்டுக்கொடுப்பினாலும், ஏற்றுக்கொள்தலினாலும் வாழவைக்கமுடியும் என்பதனை பழிவாங்கும் அரசியல் புரியும் எவரும் விளங்கி கொள்ள வேண்டும்.
Read More
avathani Media Network

புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்கு புனித மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கு பொதுப் பிரியாவிடை நிகழ்வும் (முஸாபஹா) செய்யும் வைபவமும் -படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு - காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக புனித மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கு பொதுப் பிரியாவிடை நிகழ்வும் (முஸாபஹா) செய்யும் வைபவமும் கடந்த 21 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதன் போது புனித மக்கா செல்லவுள்ள ஹாஜிகளை உலமாக்கள்,பொது மக்கள் முஸாபஹா செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) ,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) உட்பட சம்மேளன உறுப்பினர்கள், உலமாக்கள், உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக காத்தான்குடியில் இருந்து 52ஆண்களும் 54பெண்களும் புனித மக்காவுக்கு  செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











Read More
avathani Media Network

அமைச்சர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று அமைச்சர்கள் நேற்றைய தினம் பதவியேற்ற நிலையிலேயே ஏனையவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அமைச்சர்களின் நியமனம் தொடர்பிலும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்குமிடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும்,
இதன்போது இறுதி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய 30 அமைச்சர்களும் 40 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் ஜக்கிய தேசியக் கட்சியிலிருந்து 15 அமைச்சர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து 15 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ள நிலையில் நேற்று ஜக்கிய தேசியக் கட்சியின் 3 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களாக 50 பேர் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும்.
எனினும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.


Read More
avathani Media Network

சமூக நீதியினை நிலைநாட்டுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்ப முடியும்- மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மனித உறவுகளில் மோதல் என்பது பொதுவாக முரண்பாடுகள் உள்ள திறத்தவர்களுக்கிடையே காணப்பட்டாலும், இது ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் வன்முறைகள் தலைதூக்குகின்றது.

மனித சமுதாயத்திற்கு ஒருமைப்பாடும், இணக்கப்பாடும் சமூக நல்லிணக்திற்கு வழிவகுக்கின்றது என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “சமூக நல்லிணக்கம்” தொடர்பான சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஏறாவூர் மிச்நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் 23.08.2015 நேற்று சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. எம்.எச்.சபூஸ் பேகத்தின் தலைமையில் நடைபெற்ற போது, வளவாளர் அப்துல் அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

அண்மைக்காலமாக மோதல்களை தீர்த்து வைப்பதற்கு வன்முறைகளை வழிமுறைகளாகக் கையாளுகின்றனர்.

மோதல் தடுப்பு என்பது உடனடியாகச் செய்யப்பட வேண்டியதொன்றாக இருந்தாலும் இது இரண்டு நிலைகளில் மேற்கொள்ளப்படணே;டும்.

ஒன்று மோதல் தோற்றம் பெறுவதற்கு முன்னரே  அதன் அறிகுறிகளை அறிந்து அவற்றை தடைசெய்வது மற்றயது மோதல் தோற்றம் பெற்று விட்ட நிலையில் பக்கச்சார்பின்றி உடனடியாக சாதாரண நிலைமைக்குத்  திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பது. இம்முறைமை எவ்வாறாயினும் சமூக நீதி என்பதுடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்புடையதல்ல. முரண்பாடு என்பது முரண்படு அக்கறைகளைக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களிடையேயான உறவுமுறையாகும்.

ஆனால் வன்முறை என்பது உடல்சார், உளசார், சமூக அல்லது சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி தமது முழுமையான ஆற்றலை அடைவதனைத் தடுக்கின்ற செயல்கள், சொற்கள், மனப்பான்மைகள், கட்டமைப்புகள், முறைமைகள் என்பவைகளை உள்ளடக்குகின்றது.

இணக்கப்பாட்டினை நிரந்தரமாகப் பேண வேண்டுமாகவிருந்தால் இருபக்க பேச்சுவார்த்தை அவசியம.; அதாவது இரு தரப்பினரும்; சாத்தியமான விருப்பத் தேர்வுகள் பற்றி நேரடியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டு தீர்வொன்றை அடைவதனை இயலச்செய்கின்ற செயற்பாடாகும்;.

இது சமாதானத்திற்கு வழிவகுக்கும். சமாதானம் என்பதை ஒரு வன்முறையில்லாத நிலை எனக் கூறினாலும் நிரந்தர சமாதானம் அடையப்பட வேண்டுமாகவிருந்தால் அது சமுகத்தின் அடிமட்டத்திலேயே கட்டியெழுப்பப்பட வேண்டும்  என மேற்கண்டவாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் தெரிவித்தார்.





Read More