Featured Home (TOP)

Recent Comments

Friday, September 18, 2015

avathani Media Network

காத்தான்குடி ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நாளை

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

காத்தான்குடி ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நாளை (19) காலை 8.30 மணிக்கு ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பள்ளிவாசல் மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

அரபுக் கல்லூரித் தலைவரும், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ்.எஸ்.எம்.பி.முகைதீன் தலைமையில் இடம் பெறவுள்ள இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபீஸ்.என்.எம்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ்.எஸ்.எம்.அலியார் மௌலவி, காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எம.அப்துல் காதர் மௌலவி உள்ளிட்ட, மற்றும் பல உலமாப் பெருமக்கள், கல்விமான்கள் எனப்பலரும் இதில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவில் 07 வருடங்கள் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுத் தேறிய 30 மௌலவியாக்களுக்கு 'மௌலவியா, ஹாபிளா' பட்டங்கள் வழங்கப் படவுள்ளன. 

Read More
avathani Media Network

அகதிகளாக வாழும் 50 ஆயிரம் மக்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்


யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்து அக­தி­க­ளாக வாழ்ந்­து­வரும் 50 ஆயிரம் மக்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­களும் செய்து கொடுக்­கப்­படும் என மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.


மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்வாழ்வு இரா­ஜாங்க அமைச்­ச­ராக நிய­மனம் பெற்­றுள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் நேற்­றுக் ­காலை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தனது கட­மை­களைப் பொறுப்­பேற்றுக் கொண்டார். அமைச்சுக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் உரை­யாற்­று­கை­யிலே மேற்­கண்­ட­வாறு கூறினார்.



அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,



நாட்டில் இடம்­பெற்ற யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்த மக்­களில் இலட்சக் கணக்­கானோர் மீள்­கு­டி­யேற்­றப்­பட்டு விட்­டனர். இவ்­வாறு மீள்­கு­டி­யேற்­றப்­பட்­ட­வர்­களில் அநேகர் அடிப்­படை வச­திகள் தொழில் வாய்ப்­புக்கள் இன்றி வாழ்ந்து வரு­கி­றார்கள். மட்­டக்­க­ளப்பில் பல கிரா­மங்­களில் இந்­நி­லை­மை­யினைக் காண­மு­டி­கின்­றது.



மேலும் 50 ஆயிரம் மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாது தொடர்ந்தும் அகதி முகாம்­க­ளிலும் நண்­பர்­களின் உற­வி­னர்­களின் வீடு­க­ளிலும் வாழ்ந்து வரு­கி­றார்கள். இவர்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக அவ­ச­ர­மாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இவர்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­க­ளையும் வழங்­க­வேண்­டி­யுள்­ளது.



இலட்­சக்­க­ணக்­கான தமி­ழர்கள் நாட்­டி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து இந்­தியா மற்றும் ஏனைய நாடு­களில் வாழ்ந்து வரு­கி­றார்கள். இவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்க வேண்­டி­யுள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்­தி­னதும் தொண்டர் நிறு­வ­னங்­க­ளி­னதும் உத­வி­களைப் பெற்­றுக்­கொண்டு வடக்கு கிழக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்­துள்ள மூவின மக்­க­ளி­னதும் மீள்­கு­டி­யேற்­றத்தைப் பூர்த்தி செய்­வ­தற்கு நாம் திட­சங்­கற்பம் பூண்­டுள்ளோம்.



ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் குறை­பா­டு­க­ளையும் தீர்த்து வைப்­பதில் மிகவும் அக்­க­றை­யுள்­ள­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். எம்­மீது நம்­பிக்­கையும் வைத்­துள்­ளார்கள். எமது ஐந்து வருட பத­விக்­கா­லத்தில் மீள்­கு­டி­யேற்­றங்கள் முழு­மை­யாக பூர்த்தி செய்­யப்­படும். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.



எனவே ஐந்து வருடங்களின் பின்பு எமது நாட்டுக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணம் எனும் ஓர் அமைச்சின் தேவைப்பாடே இருக்காது என்றார். நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் உரையாற்றினார்.
Read More
avathani Media Network

பெற்றோரைக் கொன்று விட்டு குழந்தையைக் கிணற்றில் வீசிய போது, மாமா என்றது; நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

கணவன் – மனைவியைக் கொலை செய்து, அவர்களின் ஒரேயொரு பெண் பிள்ளையை கிணற்றுக்குள் போட்டு, படுகொலை செய்த சம்பவம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாகும்.
இந்தச் சம்பவம், கம்பஹா, நய்வள, கல்பொத்த கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. வீடுபூராகவும் தனது பிஞ்சுக் கால்களால் உலாவித் திரிந்த அந்தச் சின்னஞ்சிறிய குழந்தையின் சடலம், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட போது, அங்கு குழுமியிருந்தவர்களையே கண்ணீர் மல்கச் செய்துவிட்டது. 
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள், கல்பொத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, விக்கிரமஆராச்சிகே தர்மசேன பெரேரா (52 வயது), கல்ஜிந்த கும்புறகெதர விமலாவதி (42 வயது), இவர்களுடைய ஒரேயொரு குழந்தையான ஜலத்தி கவிந்தியா (4 வயது) ஆவர். சமந்த என்ற பெயரிலேயே தர்மசேன, அக்கிராமத்தில் அறியப்பட்டிருந்தார்.
நான்கு ஏக்கர் விசாலமான தோட்டத்தின் நடுவிலேயே அவர்களது வீடு அமைக்கப்பட்டிருந்தது. விசாலமான கோழிப் பண்ணைக்குச் சொந்தக்காரரான தர்மசேன, அன்னாசித் தோட்டத்தையும் கொண்டிருந்தார். அதற்கு மேலதிகமாக அவர், வட்டிக்குப் பணம் கொடுத்தும் வந்துள்ளார். வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களிடம் இருக்கின்ற பெறுமதியான பொருட்கள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு, அவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார். சமந்தவிடம் தினந்தோறும் கோழிகளை விலைக்கு வாங்குகின்ற ஒருவர், கடந்த 10ஆம் திகதி காலை, லொறியுடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கருகில் சென்ற போது, மூக்கை அரிக்கும் துர்நாற்றம் கிளம்பியது.
இது தொடர்பில், அக்கம்பக்கத்தவர்களிடம் தெரிவித்துவிட்டு, கம்பஹா பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கும் அவர் கொண்டு வந்தார். பொலிஸ் குழுவினர், சமந்தவின் வீட்டை நோக்கிச் சென்ற போது, ஜீரணித்துக் கொள்ள முடியாத துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. அங்கு கிடந்த சடலங்கள், பழுதடைந்த நிலையில் இருந்தமையை உணர்ந்து கொள்ள முடிந்தது. வீட்டின் முன்பக்கமாகவுள்ள ஜன்னலிலொன்று திறந்திருந்ததுடன், முன்கதவு மூடப்பட்டிருந்தமையைப் பொலிஸார் கண்டனர்.
வீட்டிலிருந்த ஒவ்வொரு அறையிலும் கறுப்பு இறப்பர் சீற்றினால், ஏதோவொன்று மூடப்பட்டிருந்தமையை அவர்கள் ஒவ்வொரு அறையின் ஜன்னலூடாக எட்டிப் பார்த்தபோது உணர்ந்து கொண்டனர். இந்த வீட்டில், ஏதோவொரு விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்து கொள்வதற்கு, அங்கு சென்ற பொலிஸாருக்கு வெகுநேரம் எடுத்திருக்கவில்லை. றொட் வைலர் வகையைச் சேர்ந்த நாய், அந்த வீட்டின் சிறிது தூரத்திலிருந்து பொலிஸ் குழுவைப் பார்த்துத் தொடர்ந்தும் குரைத்தது. பொலிஸார், வீட்டின் முன் கதவைத் திறந்துகொண்டு உட்செல்லும் போது, பாய்ந்து வந்த அந்த நாய், பொலிஸ் அதிகாரிகளைக் கடிப்பதற்கு முயன்றுள்ளது. கடும் முயற்சியின் பின்னர், அந்த நாயை மடக்கிப் பிடித்து, மற்றொரு அறையில் போட்டுப் பூட்டிய பொலிஸார், கறுப்பு இறப்பர் சீற்றுகள் போடப்பட்டிருந்த அறைகளைத் திறந்தனர்.
அங்கு, கணவனையும் மனைவியையும் சடலமாகக் கண்டனர். பொலிஸாரினால் அறையில் போட்டுப் பூட்டப்பட்ட அந்த நாய், தர்மசேனவால் அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியென்று, அங்கிருந்தவர்கள் சொல்வதைக் கேட்க முடிந்தது. இந்த வீட்டில் சிறிய குழந்தையொன்று இருந்தது. அந்தக் குழந்தைக்கு என்ன நடந்ததோ என்று, அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர். இந்த வீட்டில் சிறிய ரக லொறியொன்று இருந்தது. அந்த லொறியையும் காணவில்லையென, அங்கிருந்தவர்கள் கூறினர். இதனையடுத்து, கணவன் – மனைவியைக் கொலை செய்ததன் பின்னர், கொலையாளி, அந்தக் குழந்தையைக் கடத்திக் கொண்டு லொறியில் தப்பிச் சென்றிருக்கலாமென பொலிஸார் ஊகித்தனர்.
கோழிப் பண்ணை மற்றும் அன்னாசித் தோட்டத்தில் ஒருவர் வேலை செய்ததை, நாம் கண்டோம். அவர்- நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் இவ்வீட்டுக்கு வேலைக்கு வந்தார். அவர், அக்கம் பக்கத்தவர்களோடு அவ்வளவாக ஒட்டி உறவாடுவதில்லை.
அதனால், அவர் யாரென்று, தங்களுக்குத் தெரியாதென, அங்கிருந்தவர்கள் கையை விரித்தனர். எனினும், அந்த மனிதன், சின்னக் குழந்தையுடன் விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம். அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொஞ்சுவதையும் நாம் கண்டிருக்கிறோம். அக்குழந்தையும், அந்த வேலைக்காரன் மீது, நிறைந்த அன்பு கொண்டிருந்தது என கிராமத்தவர்கள் தெரிவித்தனர். கிராமத்திலிருந்தவர்கள் கூறிய அந்தத் துருப்பைப் பயன்படுத்தி, இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தவர், இக்கொலைகளைப் புரிந்திருக்கலாம் என சந்தேகித்தனர். பொலிஸ் குழுவினர் அவ்வீட்டுத் தோட்டத்தைச் சோதனை செய்தபோது, வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்திலிருந்த கிணற்றின் மீது, அவர்களின் பார்வை பட்டது. அந்தக் கிணற்றுக்குள்ளே, சின்னக் குழந்தையின் உடல் குப்புற மிதந்து கொண்டிருந்தது. விரைந்து செயற்பட்ட பொலிஸார், கம்பஹா நகரசபையின் தீயணைப்புப் பிரிவின் கிறேனின் மூலம், குழந்தையின் சடலத்தை மேலெடுத்தனர். கணவன் – மனைவியின் சடலங்கள் மற்றும், அக்குழந்தையின் சடலத்தை, மேற்கண்டவாறே பொலிஸார் மீட்டனர்.
இக்கொலைகளைப் புரிந்த கொலையாளியெனச் சந்தேகிக்கப்படும் நபரின் அலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டையின் இலக்கம் ஆகியவற்றை, அந்த வீட்டிலிருந்து பொலிஸார் திரட்டிக் கொண்டனர். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, கம்பஹா வலய பாரிய குற்றங்கள் தொடர்பான பிரிவு, விசாரணையை முடுக்கி விட்டது. பஸ்யால பிரதேசத்திலுள்ள வீட்டிலிருந்த ஒருவர், பல நாட்களுக்கு முன்னர், வந்திருக்கிறார். அவரது நடவடிக்கையில் சந்தேகம், பகல் வேளைகளில் வெளியே நடமாடுவதில்லை, யாரொருவருடனும் முகங்கொடுத்தும் பேசுவதும் இல்லை, இந்த நபர் தொடர்பில் கொஞ்சம் தேடிப் பாருங்கள். ஏதாவதொரு குற்றத்தைச் செய்துவிட்டு, அவர் இவ்வாறு இருக்கிறாரோ தெரியவில்லை என, பொலிஸாருக்குத் தொடர்புகொண்ட ஒருவர், அந்த நபர் தொடர்பில் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
அதனையடுத்தே அங்கு விரைந்த பொலிஸார், இந்த முக்கொலை தொடர்பில், குருத்தலாவ இங்குருகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அம்புகேன வத்த மங்கள வசந்த குமார (வயது 35) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இவரிடம், கம்பஹா வலய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரி குமாரகே, வாக்குமூலம் பெற்றார். அவர் தனது வாக்குமூலத்தில், ‘பத்திரிகையிலிருந்த விளம்பரத்தைப் பார்த்தேன். அதனடிப்படையில், நிட்டம்புவ – பஸ்யால பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணைக்கு வேலைக்கு வந்தேன். அந்தக் கோழிப் பண்ணையில் கொஞ்ச நாட்கள் நான் வேலை செய்த போது, தர்மசேன என்பவருக்கு நான் அறிமுகமானேன். தர்மசேன, நான் வேலை செய்யும் அந்தப் பண்ணைக்கு கோழித் தீவனம் பெறுவதற்காகத் தினமும் வருவார். அவ்வாறு அறிமுகமான நான், ஒருநாள் அவருடன் உரையாடியபோது, ‘உனக்கு விருப்பமாகவிருந்தால், என்னுடைய கோழிப் பண்ணைக்கு நீ வேலைக்கு வரலாம்’ என்றார். நானும் அதற்கு இணங்கினேன். இன்றைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் நான், தர்மசேனவிடம் வேலைக்குச் சேர்ந்தேன்.
அவரின் கோழிப் பண்ணை மற்றும் அன்னாசித் தோட்டத்தில் வேலை செய்தேன். சில நாட்களுக்கு முன்னர், நான் தர்மசேன மனைவியுடன் கள்ளத் தொடர்பை வைத்துக் கொண்டேன். நான் திருமணமாகாதவன். தனியாக வாழ்க்கையை கொண்டுசென்றேன். ஒருநாள் இரவு, கோழிப் பண்ணைக்கு அருகில் வைத்து, விமலாவின் கையைப் பிடித்துக் கொண்டு உரையாடிக் கொண்டிருந்தேன். இதனை தர்மசேன, கையும் களவுமாகக் கண்டுகொண்டார். நன்றாக ஏசினார். ஒருநாள் அவர், வீட்டைவிட்டு வெளியேறி, பயணம் சென்றுவிட்டார்.
அவர் வெளியேறியதன் பின்பு நானும் விமலாவும் அறைக்குச் சென்றோம். நான் விமலாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு கதைத்துக் கொண்டிருந்த போது, தர்மசேன திடீரென வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். நாங்களிருவரும் அறையிலிருந்ததைக் கண்டுகொண்டார். எங்களிருவரையும் அவர் கண்டித்தார். கூடுதலாக, விமலாவையே ஏசினார். எனினும், வீட்டிலிருந்து போகுமாறு என்னை ஒருபோதும் சொல்லவேயில்லை. எனவே, நான் வீட்டிலிருந்தேன். எங்களிருவரின் தொடர்பும் நீடித்தது. எங்கள் தொடர்பு தர்மசேனவுக்குத் தெரிந்ததன் பின்பு, விமலா நோனாவுக்கு ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்தார். சில நாட்களில், கடுமையாகத் தாக்கினார். அந்த நாட்களில் நான் எதனையும் செய்ய நினைக்கவில்லை. இந்தச் சம்பவம் இடம்பெற்ற நாளன்று காலையில் தர்மசேன, குண்டாந்தடியை எடுத்து, நோனாவைக் கடுமையாகத் தாக்கினார். நோனா அழுதார். நோனாவைத் தாக்குவதை என்னால் தாங்க முடியவில்லை.
அப்போது, தர்மசேனவிடமிருந்த அந்தக் குண்டாந்தடியைப் பறித்து, அதனால் அவரைத் தாக்கினேன். ‘ஐயயோ ஐயயோ, மாத்தையாவை அடிக்காதீர்கள்’ எனக்கூறிக் கொண்டே நோனா, தர்மசேனவின் முன்னால் பாய்ந்தார். கடும் கோபத்துடன், தர்மசேனவின் மீது, நான் தாக்கிக் கொண்டிருந்த போது, அதிலொரு பலமான அடி எங்கள் இருவருக்கிடையில் சிக்கிய நோனாவின் மீது பட்டது. அந்த அடியின் காரணமாக வெளியேறிய இரத்தம், நிலத்தில் கொட்டியது.
அதன் பின்னரே, சாகும் வரை இருவரையும் தாக்கினேன். இந்தச் சம்பவத்தை நோனா, பொலிஸில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் தான், அவரை அடித்துக் கொன்றேன். இந்தச் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சின்னக் குழந்தை வீட்டிலிருக்கவில்லை. தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர், அவ்விருவரின் சடலங்களையும் போர்வையால் போர்த்தி, கறுப்பு இறப்பர் சீற்றினால் முடினேன்’. வாக்குமூலங்களை எடுத்துக் கொண்டிருந்த பொலிஸார் இடைமறித்து, ‘இவ்விருவரையும் கொலை செய்த பின்னர், அந்தச் சின்னக் குழந்தையை என்ன செய்தாய்?’ எனக் கேட்டனர். ‘அவ்விருவரின் சடலங்களையும் மூடிவிட்டு, பதற்றத்தில் வெளியே வந்து பார்த்தேன். அதன் போது தனியாகக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. உடம்பிலிருந்த இரத்தங்களைக் கழுவிக் கொண்டு, குழந்தைக்கருகில் ஓடினேன். அவளுக்கு என் மீது கடுமையான பாசம். என்னருகிலேயே இருப்பாள். நான், அக்குழந்தையருகில் சென்று, சிறிது நேரம் விளையாடினேன். அவளைத் தூக்கிக்கொண்டு, லொறி நிறுத்தப்பட்டிருந்த கராஜுக்கு வந்தேன்.
பின்னர், பக்கத்திலிருந்த கடைக்குச் சென்று, பால் பக்கற்றொன்றை வாங்கிவந்து, குழந்தைக்குப் பருகக் கொடுத்தேன். பின்னர், லொறிக்குள் வைத்து, குழந்தையை உறங்கச் செய்தேன். நானும் உறங்கிவிட்டேன். இரவு வேளையில் எழும்பி, வீட்டுக்குள் சென்று, தேநீர் தயாரித்துக் குடித்தேன். குழந்தைக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தேன். அதன் பின்னர் காலையில் எழுந்த குழந்தை, அம்மா – அப்பா எங்கேயெனக் கேட்டது. அடிக்கொருதடவை கேட்டது. மாமியின் வீட்டுக்குச் சென்றிருப்பதாக நான் கூறினேன். காலையில் எழும்பியவுடன், தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். ஆரம்பத்தில் நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்ல யோசித்தேன். எனினும், குழந்தையைக் கூட்டிக்கொண்டு சென்றால், பாரிய பிரச்சினை வருமென நான் நினைத்தேன்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொஞ்ச நேரம் கொஞ்சினேன். கிணற்றுக்கருகில் கொண்டுசென்றேன். அவளைத் தூக்கிக் கிணற்றுக்குள் வீசிய போது, ‘மாமா’ என்று கத்தினாள். நான் அவளை வீசிவிட்டேன். கிணற்றுக்குக் குறுக்காகப் போடப்பட்டிருந்த தடியில் பட்டு, அக்குழந்தை காயமடைந்ததைக் கண்டேன்.
அவள், கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டது. அதன் பின், அங்கிருந்து திரும்பிவிட்டேன். அதன் பின்னர், வீட்டிலிருந்த கைக்கடிகாரம், காசோலை, பிறேஸ்லெட், டி.வி.டி, ஹெட்‡போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, லொறியையும் எடுத்துக் கொண்டு, பஸ்யாலவுக்கு வந்துவிட்டேன். பஸ்யாலயிலுள்ள மற்றொரு பெண்ணுடன் நான் கள்ளத் தொடர்பைக் கொண்டிருந்தேன். அந்த வீட்டுக்கு நான் சென்றேன். அந்தப் பெண்ணிடம், இந்தச் சம்பவம் தொடர்பில் எதனையும் கூறவில்லை. அதன் பின்னர் ஒருநாள், லொறியை எடுத்துக் கொண்டு, தர்மசேனவின் வீட்டுக்குச் சென்றேன். அவரது வீட்டுக்கருகில் செல்லும் போது, பாரிய பயமேற்பட்டது.
ஆகையால், லொறியைத் திருப்பிக்கொண்டு, பஸ்யாலயிலுள்ள எனது கள்ள மனைவியின் வீட்டுக்கு வந்தேன்’ எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர் தூங்கவில்லையென்றும், நன்றாகச் சாப்பிடவில்லையென்றும், அடிக்கொரு தடவை பயந்த சுபாவத்துடன் இருப்பதாகவும் தெரியவருகிறது. இது, சந்தேகநபர் கூறிய கதையாகும். இதில், உண்மை, பொய் எதுவென்று, தர்மசேனவும் அவரது மனைவியான விமலாவதியும் உயிருடன் இருந்தால் மாத்திரமே கண்டறிய முடியும்.
Source - ttnnews
Read More
avathani Media Network

மாகாணசபை உறுப்பினர் கைது

வாகனமொன்றின் இயந்திரத்தின் இலக்கம், நிறம் மற்றும் அடிச்சட்டத்தின் இலக்கத்தை மாற்றி பாவனை செய்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஜி.ஜி. சந்திரசேன பொலிஸாரால் கைது நேற்று செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தை மாகாண சபை உறுப்பினருக்கு விற்பனை செய்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நபர் பாணந்துறை உடஹாமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாகாண சபை உறுப்பினர் ஜி.ஜி. சந்திரசேன ஹிங்குராங்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். 
Source - virakesary

Read More
avathani Media Network

ரெயிலில் சீட்பிடிப்பதில் மாணவர்களுக்குள் தகராறு: 16 வயது சிறுவன் குத்திக் கொலை

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களுக்குள் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி புராரி பகுதியில் பெற்றோருடன் வசித்துவரும் ஐஷு என்ற 16 வயது மாணவன் காஷ்மெரே கேட் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு தினந்தோறும் மெட்ரோ ரெயிலில் சென்று படித்து வந்தான்.

வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது சீட் பிடிப்பதில் ஐஷு மற்றும் அவனுடன் அதே பள்ளியில் படிக்கும் சில நண்பர்களுக்கும் டெல்லியின் வேறொரு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

பள்ளிக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் பிற்பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐஷுவும் அவனது நண்பர்கள் இருவரும் ஜி.டி.பி. நகர் நிலையத்தில் ரெயிலை விட்டிறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். கிங்ஸ்வே கேம்ப் அருகே வந்தபோது, முந்தைய தினம் சீட் பிடிப்பது தொடர்பாக தகராறு செய்தவர்களில் ஐந்து மாணவர்கள், ஐஷுவையும் அவனது நண்பர்களையும் சுற்றிவளைத்து தாக்கினர்.

இருதரப்பினரும் வெறித்தனமாக மோதிக் கொண்டிருந்தபோது எதிர்கோஷ்டியை சேர்ந்த ஒரு சிறுவன் ஐஷுவை சரமாரியாக கத்தியால் குத்தினான். ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சாய்ந்ததும், அந்த ஐந்து மாணவர்களும் தப்பியோடி விட்டனர்.

இதுதொடர்பாக கிடைத்த தகவலையடுத்து விரைந்துவந்த போலீசார், ஐஷுவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இச்சம்பவத்துக்கு காரணமான ஐந்து மாணவர்களையும் கைது செய்து, சிறார் குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஷு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மேற்கண்ட ஐந்து மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Read More
avathani Media Network

மஹிந்­தவை நாமே காப்­பாற்­றி­யுள்ளோம் - மங்­கள சம­ர­வீர

எமது அர­சாங்­கத்­தி­னால்தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தற்­போது பாது­காக்­கப்­பட்­டுள்ளார். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­றி­ருக்­கா­விடின் மஹிந்­தவை பாது­காக்க முடி­யாமல் போயி­ருக்கும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.
வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­றி­ருக்­கா­விடின் மஹிந்­தவை பாது­காக்க முடி­யாமல் போயி­ருக்கும். மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­ற­மையின் கார­ண­மா­கவே மஹிந்த ராஜ­ப­க்ஷவை காப்­பாற்ற முடிந்­தது.
கடந்த காலங்­களில் அவர் மின்­சார கதிரை குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். ஆனால் உண்­மையில் இலங்கை ரோம பிர­க­ட­னத்தில் கையெ­ழுத்து இடா­ததன் கார­ண­மாக இலங்­கை­யி­லி­ருந்து யாரையும் மின்­சார கதி­ரைக்கு கொண்டு செல்ல முடி­யாது.
அது கூட தெரி­யாமல் மஹிந்த ராஜ­பக்ஷ பேசி­யி­ருக்­கிறார். ஆனால் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றதன் மூலம் பாரிய ஆபத்திலிருந்து நாடு தப்பியுள்ளது என்றார்.
Read More
avathani Media Network

முன்பிள்ளைப் பருவ சிரார்களின் சித்திரப் போட்டியில் காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலேஜ் பாலர்கள் பரிசு பெற்றனர்

(எஸ்.எம்.எம். முஸ்தபா)

சிறுவர் விவகார அமைச்சும், சிறுவர் செயலகமும் இணைந்து அகில இலங்கை ரீதியில் நடாத்திய அருண தகின ரடா 2015 முன்பிள்ளைப் பருவ சிறார்களின் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் சித்திரப் போட்டியில் காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலேஜ் பாலர் பாடசாலை பாலர்களும் பரிசில்கள் பெற்றனர்

பரிசு பெற்ற பாலர் பாடசாலை பாலர்களான  ஆர். ரொஷhன் றபா மற்றும் எம்.ஐ.எம். ஜப்ரின் ஆகியோர்; வரைந்த படங்களை காணலாம். 





(படங்கள் எஸ்.எம்.எம். முஸ்தபா)

Read More
avathani Media Network

பிரதியமைச்சர் பைசால் காசீமின் ஏற்பாட்டில் மர்ஹும் அஷ்றப் நினைவுதின கத்தமுல் குர்ஆன் வைபவமும், விசேட துஆப் பிராத்தனை நிகழ்வும்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்எம்.அஷ்றப் அவர்களின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆன் வைபவமும்,  விசேட துஆப் பிராத்தனை நிகழ்வும் இன்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சருமான எம்.சீ.பைசால் காசீம் அவர்களின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வுகளில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபச் செயலாளரும், உயர்பீட உறுப்பினருமாகிய சட்டத்தரணி.எஸ்.எம்.ஏ.கபூர் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வுகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.ஹமாம், பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் சங்கைக்குரிய உலமா அல்ஹாபீஸ்.றிபாய் மௌலவி தலைமையிலான காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களினால் அல்குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு, மர்ஹும் அஷ்றப் அவர்களின் ஆத்மசாந்திக்கான விசேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.








Read More
avathani Media Network

நிந்தவூரில் மர்ஹும் அஷ்றப் அவர்களின் 15வது நினைவுதின நிகழ்வும், விசேட துஆப் பிராத்தனையும். - பிரதம பேச்சாளராக பிரதியமைச்சர் பைசால் காசீம் -

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்எம்.அஷ்றப் அவர்களின் 15வது நினைவு தினமும், விசேட துஆப் பிராத்தனை நிகழ்வும் இன்று நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.எம்.ஜாபீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சருமான எம்.சீ.பைசால் காசீம் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வுகளில் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், முன்னாள் அதிபர் எம்.எம்.றகீம், சங்கைக்குரிய உலமா கமறுத்தீன் மௌலவி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு மர்ஹும் அஷ்றப் அவர்களின் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர்.

இறுதியில் சங்கைக்குரிய உலமா கமறுத்தீன் மௌலவி அவர்களினால் மர்ஹும் அஷ்றப் அவர்களின் ஆத்மசாந்திக்கான விசேட துஆப் பிரார்த்தனையொன்றும் இடம் பெற்றது.







Read More