
Tuesday, November 3, 2015
மட்டக்களப்பில் அடை மழை – தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின-படங்கள்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி கோயில்குளம் பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் ,வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு,கல்லடி , காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால்,கர்பலா,பாலமுனை,கி ரான், கல்லாறு, பெரிய கல்லாறு,துறைநீலாவணை ,களுவாஞ்சிக்குடி ,பட்டிப்பளை,வவுனதீவு ஓள்ளிக்குளம் ,மண்முனை,சிகரம், புல்லுமலை, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை,நாவலடி, வாகரை உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்யும் தொழிலாளிகளும் ,பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் பெரிதும் அவஸ்தைப் படுகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் ஆறு,கடல்,குளம் மற்றும் கிணறு ,நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பம்-படங்கள்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான முத்திரையிடும் பணிகள் நேற்று 02 திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது தற்போது பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் முத்திரையிடப்பட்டது.
வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோரினை பாதுகாக்கும் வகையில் இடம்பெறும் இச் செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் நேற்று 02 திகதி தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை இடம்பெறும் எனவும் இந்த காலப்பகுதியில் நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வர்த்தக நிலையங்களில் முத்திரையிடப்படாத தராசுகள் பாவனைக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் வருடாந்தம் இந்த முத்திரையிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சண்டை பிடிப்பது அவர்களாயினும் தலைகுனிவது சமூகம்தான்
(ஐ. எல். எம். றிபாஸ்)
கடந்த வார அரசியல் களநிலவரங்களில் களைகட்டியது கிழக்கு பிரதேச அரசியல் தலைவர்களின் ரிப்பன் வெட்டும் போட்டியும் அதன் பின்னர் அவர்கள் வழங்கிய பேட்டிகளும்தான். உலகெங்கும் முஸ்லிம் சமுகம் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் பெரும் துயரங்களுக்கும் தொடர்ச்சியாக ஆட்பட்டு நொந்து நிற்கிறது. அந்த சமூகத்திற்கெதிரான சதி நடவடிக்கைகள், அந்த சமுகத்தை கருவறுப்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரந்துகிடக்கிறது.
இந்த சதிகளின் முஸ்தீபுகளை எமது தேசத்திலும் நாம் கண்டோம், அது இன்னும் ஓய்ந்து விடாத ஒரு சூலில், இலங்கயின் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களிக் கண்டு ஒரு புதிய இயங்கியலுக்கூடாக தனது பயணத்தை தொடரத் தொடங்கியுள்ளது.
நல்லாட்சி அரசு பல அரசியல் நகர்வுகளையும் தீர்க்கமான அரசியல் பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கான முயற்சியில் படிப்படியாக முனைப்புடன் செயற்படுகிறது. பல்வேறுபட்ட ஆணைக் குழுக்கள் உருவாக்கமும் ,சட்டவாக்கங்களும் சந்தடியில்லாமல் முன்னகர்கின்றன, நாட்டின் அரசியல் மற்றும் பொது விடயங்கள் தொடர்பான கொள்கை உருவாக்கங்களும், நில வாரைபுகள் வரையறைகள் தொடர்பிலான தீர்மானகளும் கொண்டுவரப் படுகின்றன,
இவ்வாறு பல அரசியல் நிகழ்வுகள் நடந்தேறும் இந்த காத்திரமான தருணத்தில் பல்வேறுபட்ட அறிஞர்களையும் அனுபவமிக்கவர்களையும் உள்வாங்கி எமது தேசத்தின் அரசியல் மாற்றத்தில் மற்றும் கொள்கைவகுப்பு நடவடிக்கைகளில் எதிர்கால முஸ்லிம் சமுக இருப்பையும் உரிமைகளையும் கருத்திற்கொண்டு பல அரசியல் முன்னகர்வுகளைச் செய்ய வேண்டியது நமது அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும். இந்த சமுக பொறுப்பை தலையில் சுமப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இவர்களை மக்கள் அரியாசனத்தில் அமர்த்தினார்கள். ஆயினும் இந்த அரசியல் தலைவர்கள் இந்த பெரும் பொறுப்புகளை மறந்துவிட்டு; தெரு முனைகளில் குடுமிச் சண்டை பிடித்துக் கொண்டு சமுகத்தின் தராதரம் பற்றிய கேவலமான எண்ணக் கருவினை ஏனைய சமுகங்களின் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் சமுகம் பல பழிப்புகளையும் அவமானங்களையும் தாங்கி நிற்கிறதுஇ எமது தேசிய உணர்வும் தேசியத்திற்கான பங்களிப்பும் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றனஇ இந்த தேசத்தின் வளங்களை சுரண்டுபவர்களாகஇ அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு தேச நலனில் தியாகத்துடன் பங்களிப்புச் செய்யாதவர்களாக எம்மை சித்திரிப்பதில் ஏனைய சமூகமும் அவர்களது ஊடகங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில்தான் முஸ்லிம் நபரொருவர் விடுகின்ற சிறிய தவறும் முஸ்லிம் சமுகத்தின் தவறாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இந்த விடயங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு முஸ்லிமும் செயற்படவேண்டிய கூட்டு பொறுப்பு எம்மீது சுமத்தப் பட்டிருக்கிறது. குறிப்பாக சமுகத்தின் முக்கிய புள்ளிகளும் அரசியல் தலைவர்களும் இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய கடப்பாடுடையவர்களாகின்றனர்.
இந்த யதார்த்த சூழலுக்கு மாறாகஇ சமுகத்தின் மானம் மரியாதை என்பதை தலைமீது வைத்து சுமக்க வேண்டியஇ அதன் மதிப்பை காட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசியல் பதவிகளில் இருக்கின்ற எமது அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கைகள் மிக மோசமான முறையில் சமுகத்தை தலைகுனிய செய்துள்ளதுஇ ஒரு கட்டடத்தை பல முறை திறப்பதும்இ கட்டடங்களை திறக்கவிடாமல் என்னை வீசி அழகழிப்பு செய்வதும்இ கேவலமான துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடுவதும். தகதி வாய்ந்த தன்மானமுள்ள அரசியல் தலைமைகளுக்கு உகந்ததல்ல. இன்னும் இந்த கீழ்த்தரமான கைங்கரியங்களை தமது அபிமானிகளை வைத்து தூண்டிவிடுவதும் மிக அநாகரிமாக செயற்பட வைப்பதும் இந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்த மக்களுக்கு பலத்த அவமானமும் ஏமாற்றமுமாகும். முஸ்லிம் உரிமை முஸ்லிம் விடுதலை சமுக இருப்பு என பிரமாண்டமான கோசங்களோடு பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம் சமுக ஒற்றுமைஇ சமுக நாகரிகம்இ முன்மாதிரியான அரசியல் கலாச்சாரம் பற்றியும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக முஸ்லிம் சமுகத்தின் முதுகெலும்பாக மிளிர வேண்டிய கல்விக் கூடங்களில்இ இவ்வாறான அநாகரிக செயற்பாடுகள் நிகழ்த்தப்படுவதும்இ மாணவர்களை அடைத்து வைத்து தமது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிகவும் அநாகரிகமான செயற்பாடுகளாகும்இ மேலும் மாணவர் சமுகத்திற்கு அடிமைத் துவத்தைக் கற்றுக் கொடுத்துஇ அரசியல் ஜால்றாகளையும் அடிவருடிகளையும் கதாநாயகர்களாக கட்டமைப்புச் செய்துகொள்ள வைக்கும் கைங்கரியமுமாகும்இ இதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் எதனைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும்இ அரசியல் பிரமுகர்களின் கைப்பிள்ளைகளாக ஆசிரியர்களை மாற்றிவிடுவதுஇ அந்த ஆசிரியர்களுக்கான மரியாதையை மானவர்ககளின் மத்தியில் மிகமோசமாக சிதைத்துவிடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இவ்வாறான அரசியல் தலைமைகளை களமிறக்கும் கட்சித் தலைமைகளும்இ இவர்களை தொடர்ச்சியாக வாக்களித்து வெல்லவைக்கும் மகாஜனங்களும் இந்த அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கைகள் பற்றி தமது தெளிவான அதிருப்தியை பதிவு செய்யவேண்டும்இ எமது சமுகத்தின் கெளரவம் பற்றியும் மாணவ சமூகத்தினதும் எமது பாடசாலைகளினதும் சுயாதீனம் பற்றியும் கருத்தில் கொண்டு இந்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுகளுக்கு எமது சமுகத்தின் கல்விக் கூடங்கள் பலியாவதைத் தடுக்க சிந்தித்து செயல்படவேண்டியது நம் அனைவரதும் கடமையும் கூட்டுப் பொறுப்புமாகும்.

வவுனியாவில் நூல் அறிமுக விழா
வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் மா.சாருஹாசன் எழுதிய “சுகாதாரமும் உடற்கல்வியும்” என்னும் நூலின் அறிமுக விழா, வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றத்தால் 04 ஆம் திகதி, வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் பன்நோக்கு மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடாத்தப்படுகிறது.
வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதமவிருந்தினராக வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகர், தமிழருவி த. சிவகுமாரனும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் முன்னாள் உப தலைவருமான த.ம.தெய்வேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் உடற்கல்வி விரிவுரையாளர் ஆர்.சிவசேகரன், வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதிகள் ஆகியோரும் கலந்துகொள்வார்கள். நூலின் ஆய்வுரையினை வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் தமிழ்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பார்த்திபன் நிகழ்த்துவார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு அழைப்பு..
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள்
ஐ.நா விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும்.
ஐ.நா விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும்.
வடபுலத்திருந்து 1990ஆம் ஆண்டுகளில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் தற்போது ஐ.நா வின் அனுசரணையோடு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை பொறிமுறையில் உட்படுத்தப்படாமை எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.
2002 மற்றும் 2009 காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக இவ் விசாரணைக்குழு கவனம் செலுத்துகின்றது. ஆனால் 1990 களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பாக எவ்வித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ள இலங்கை அரசையும் ஐ.நா அமைப்பையும் ஆவண செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 04.11.2015 புதன்கிழமை அன்று காலை 9.00 இலிருந்து பி ப 12.30 வரையில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஓர் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்த இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் திட்டமிட்டுள்ளது.
இன் நிகழ்வை திறம்பட செய்வதற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
எனவே, எமது இரத்த உறவுகளுக்காக குரல் கொடுக்கவும் அவர்களுக்கான தக்க நியாயங்களை பெற்றுக் கொடுக்க மேல் மட்டம் வரை அழுத்தம் கொடுக்கவு ம் உங்களையும் தாழ்மை மனதுடன் அன்பாய் அழைக்கின்றோம்.
ஏற்பாடு:-
முஸ்லிம் மஜ்லிஸ்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்..
முஸ்லிம் மஜ்லிஸ்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்..
(ஜுனைட்.எம்.பஹ்த்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மீண்டும். இடியுடன் கூடிய மழை. ..
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக
காத்தான்குடி, பாலமுனை, மட்டக்களப்பு,ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய
பிரதேசங்களில் வெள்ளம் காணப்படுகிறது.
காத்தான்குடி, பாலமுனை, மட்டக்களப்பு,ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய
பிரதேசங்களில் வெள்ளம் காணப்படுகிறது.
தொடர்ச்சியாக இரவு நேரங்களில் பாரிய மழை பெய்வதால் பொதுமக்கள் பாரிய
சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
அத்தோடு கடல் சற்று கொந்தளிப்பாக
காணப்படுதால் மீனவர் கடல் சென்று மீன் பிடிப்பதில் அச்சம் கொண்டுள்ளனர்.
காணப்படுதால் மீனவர் கடல் சென்று மீன் பிடிப்பதில் அச்சம் கொண்டுள்ளனர்.
இதனால் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன..
(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி கல்விக் கோட்டத்தினைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு “குரு பிரதிபா பிரபா விருது – 2015”
(ஏ.எல்.டீன்பைரூஸ்)
இலங்கைத் திருநாட்டின் மாணவச் செல்வங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதய பூர்வமாகப் பங்களிப்புச் செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு அன்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன கலந்து கொண்டார்.
நிகழ்வில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர், கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தங்களது கடமை காலங்களின் போது அதிக விடுமுறைகள் இன்றி பாடசாலைகளில் கடமையாற்றிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி,கௌரவித்து கல்வி அமைச்சினால்மேற்படி விருது வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தினைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஐவர் மேற்படி குரு பிரதிபா பிரபா 2015 ஆண்டுக்கான விருதினை பெற்றுக் கொண்டனர்.
01. ஜனாப். ஏ.பீ.ஏ றஸூல் (அதிபர்/ மட்/மம பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம்)
02. ஜனாப். எம்.ஏ.எம். இஸ்ஹாக் (ஆசிரியர்/ மட்/ மம/ பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம்)
03. திருமதி. சபீனா ஆயிஷா) (ஆசிரியை/ மட்/ மம/ ஹிழுரியா வித்தியாலயம்)
04. திரு. தருமரெத்தினம் ஜெய்தனன் (ஆசிரியர்/ மட்/மம/ பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம்)
05. ஜனாப். எம். எம். யஹ்யா நஜிமுதீன் (ஆசிரியர்/மட்/ மம/ காத்தான்குடி மத்திய கல்லூரி வித்தியாலயம்)
திட்டங்கள் மேற்கொள்ளும்போது கிராமப்பகுதிக்கும் நேரடியாகச் சென்று மக்களின் தேவைகளை கேட்டறியுங்கள் வளவாளர் திரு ரவிக்குமார்
(எம்.எச்.எம்.அன்வர்)
உத்தியோகத்தர்கள் திட்டங்களை அடையாளம் காணும்போது கிராமப்பகுதிக்கும் நேரடியாகச் சென்று மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு திட்டங்களை அமுல்ப்படுத்துங்கள் இவ்வாறு இன்றைய தினம்(02.11.2015) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்ற விளைவு சார் முகாமைத்துவம் (RBM) தொடர்பான பயிற்சிநெறியின்போது மேற்படி விடயத்திற்கு பொறுப்பான மாவட்ட செயலக வளவாளர் திரு ரவிக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாம் குறிப்பிட்ட திட்டமொன்றினை கிராமிய மட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்து அது நீடித்து நிலைத்திருக்ககூடிய திட்டமாகவும் மக்களுக்கு பயனுள்ள ஒரு திட்டமாகவும் இனங்கண்டு பிரதேச செயலகத்தினூடாக மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி தேசிய மட்டத்தில் அனுமதி பெற்று அத்திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்
அத்துடன் குறிப்பிட்ட ஒரு இலக்கை வைத்து அது சாத்தியமா எந்த திட்டத்தினை முற்படுத்துவது அதற்கு எவ்வாறான வளங்கள் உள்ளது என்பதை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும் அப்போதுதான் அத்திட்டம் நிலையான நீடித்து நிலைத்திருக்க கூடிய ஒரு திட்டமாக மாறும்.இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் திரு சிவராசா கணக்காளர் மற்றும் பிரதேச கல்விப்பணிப்பாளர் கிராம சேவை உத்தியோகத்தர்கள் திவிநெகும உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு திணைக்களத்திலிருந்தும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்



