Featured Home (TOP)

Recent Comments

Sunday, November 22, 2015

avathani Media Network

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பான சுகாதார பிரதியமைச்சருடன் காத்தான்குடி மீடியா போரத்தின் மற்றுமொரு சந்திப்பு

(எம்.எச்.எம்.அன்வர்)

காத்தாhன்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் பல முன்னெடுப்புக்களைச் செய்து வருவதுடன் முக்கிய நிறுவனங்கள் சமூக அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் வருகின்றது 
இந்தவகையில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் உடனான சந்திப்பு இன்று காத்தான்குடியில் மீடியா போரத்தின் தலைவர் ஏ எல் டீன் பைறூஸ் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது இச்சந்திப்பில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம் எஸ் எம் ஐhபிர் கலந்துகொண்டார்  
இச்சந்திப்பின்போது வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் ஆளணிப் பற்றாக்குறை வைத்தியர்கள் பற்றாக்குறை இரத்த வங்கியின்மை போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டதுடன் அறிக்கை ஒன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது
அத்துடன் 2016ம் ஆண்டுக்குள் இவ்வைத்தியசாலை தேவைகளை தான் பூர்த்தி செய்ய எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது







Read More
avathani Media Network

மின்சாரம், நீர் கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு : இறைவரித் திணைக்கள தகவல்

வரவு செலவுத்திட்டத்தில் வெட் வரி உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 11 வீதமாக காணப்படுகின்ற வெட் வரி, புதிய வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 12.5 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சேவை கட்டணமாக 1.5 வீத அதிகரிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக பதிவாகின்றது.
தொகை மற்றும் சில்லரை வர்த்தகங்களுக்கு வெட் வரி அறவிடப்படுவதில்லை எனவும், அந்த பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணத்தை நேரடியாக அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை இந்திய நிறுவனத்திடம் கையளிக்க முயற்சி

லங்கையர் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை இந்திய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அமைச்சர் ரவி கருணாநாயக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அடையாள அட்டைகள் வழங்குதலுக்குப் பொறுப்பான தேசிய ஆட்பதிவுத்திணைக்களம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. எனினும் இந்த திணைக்களத்தின் ஊடாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் செயற்பாட்டில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ச்சியாக தலையிட்டு வருகின்றார்.
கடந்த நூறு நாள் அரசாஙகத்தின் பதவிக்காலத்தில் ரவி கருணாநாயக்க இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிக்க முயற்சித்துள்ளார். எனினும் அன்றைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தே கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக ரவியின் முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
தற்போது இவ்விவகாரத்துக்குப்பொறுப்பாக அமைச்சர் எஸ்.பி. நாவின்ன செயற்படுகின்றார்.
எனினும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை குறித்து பிரஸ்தாபித்தது மாத்திரமன்றி, எதிர்வரும் ஜனவரி தொடக்கம் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்திய நிறுவனம் ஒன்றிடம் இந்தப் பணிகளை ஒப்படைத்து, அதன் மூலம் சிற்சில வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் இவ்வாறு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More
avathani Media Network

4 ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணம்

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார்.
இச் சிசு மரணங்களில் 201 பிரசர அறைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் ஏனைய மரணங்கள் மகப்பேற்று விடுதிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலை அறிக்கைளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு 46 சிசு மரணங்களும், 2012ம் ஆண்டு 54 சிசுமரணங்களும், 2013ம் ஆண்டு 60 சிசுமரணங்களும், கடந்த ஆண்டு 41 சிசுமரணங்களும் வைத்தியசாலை மகப்பேற்று விடுதிகளில் நிகழ்ந்துள்ளன.
Read More
avathani Media Network

பெலியத்தை வைத்தியசாலையில் மோதல் : ஒருவர் காயம்

பெலியத்தை வைத்தியசாலையில் இடம்பெற்ற மோதலில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.காயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
avathani Media Network
Read More
avathani Media Network

அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலைகளுக்கு பெறுமதியான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டத்திலுள்ள 90 பாலர் பாடசாலைகளுக்குப் பெறுமதியான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று காரைதீவு சன்முகா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த டீ சில்வா, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம், செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.புஞ்சிபண்டா, சன்முகா வித்தியாலய முதல்வர் ஆர்.ரகுபதி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், பாலர் பாடசாலை கல்விப் பணியகமும் தமது நிருவாகத்தின் கீழுள்ள 222 பாலர் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும்  நன்நோக்கில் பெறுமதியான கற்பித்தல் உபகரணங்களை வழங்கி வருவதாகவும், அம்பாரை மாவட்டத்தில் 90 தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கு இன்று வழங்குவதாகவும், இதற்கென்று ஊடீபு - நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறித்தொதுக்கப்பட்ட ரூபாய் 15 இலட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் நசீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'இந்த நாட்டினுடைய ஜனாதிபதி மைத்திரி அவர்களும் பிரதமர் ரணில் அவர்களும் சேர்ந்து நாட்டிலும், மாகாணங்களிலுமுள்ள பல பிரச்சினைகளைத் தீர்க்கும் முன்னெடுப்புக்களில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் இருந்த ஆட்சியின் தலைவர்கள் தனித்தே முடிவுகளை எடுத்தனர். இன்று எது எவ்வாறு இருப்பினும் நாட்டினுடைய எல்லாப் பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும், அவை மூன்று இனத்தவர்களையும் சென்றடைய வேண்டும், சமபங்குகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் அமைச்சர் வாரியம் தீர்மானம் எடுத்திருக்கின்றது. கிழக்கு மாகாணம் ஒரு வளம்நிறைந்த மாகாணமாக அபிவிருத்தி அடைய இருக்கின்றது. எதிர்காலத்தில் இப்பாலர் பாடசாலைகளைத் திறன்மிக்கதாக மாற்றுவதற்கு நானும், எமது அமைச்சர்களும், முதலமைச்சரும் சேர்ந்து பல முன்னெடுப்புக்களைச் செய்யவுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

இறுதியில் அமைச்சர் நசீரும், மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த டீ சில்வாவும் பாலர் பாடசாலைப் பணியக மாகாணத் தவிசாளர் பொன்.செல்வநாயகம், செயலாற்றுப் பணிப்பாளர் சுபையிர் ஆகியோர்களால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
















Read More