Featured Home (TOP)

Recent Comments

Tuesday, November 24, 2015

avathani Media Network

ஜனவரி முதல் கடவுச்சீட்டுக்கான புதிய கட்டணம் அமுல்

கடவுச்சீட்டுக்கான கட்டணம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள நிர்வாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட புதிய கட்டணத்தின் அடிப்படையில் முதியோருக்கான கடவுச்சீட்டு 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரையிலும், சிறுவர்களுக்கான கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஒரு நாள் சேவையின் அடிப்படையில், முதியோருக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரையிலும் சிறுவர்களுக்கான கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

கவிதை - அண்டவெளி ஆராய்ச்சி

(காத்தான்குடி நிஷவ்ஸ்)
நுண்ணுயிர் தேடி
விண்ணிலே அலைகிறார்.
தன்னுயிர் வாழ
தண்ணீரும் இன்றி
கண்ணீரில் வாழும்
மண்ணின் மனிதர்களை
எண்ணிப் பார்க்கவும்
இதயம் இல்லா
அமெரிக்க ரஷ்யர்
அண்டவெளி ஆராய
கோடிக் கணக்கில்
கொடுக்கும் செலவில்
வாடும் உள்ளங்கள்
வாழ்க்கை செழிக்க
கொஞ்சம் கொடுக்கவும்
நெஞ்சம் இல்லை.
இருக்கிற உயிரை
பறிக்கிற பாவிகள்
இல்லாத உயிரை
பல்லாண்டாய் தேடுறார்.
சொந்த பூமியை
சுரண்டி அழிப்போர்
பந்தாவுக்காக
பாத் பைண்டரை
எந்தக் கோளுக்கு
ஏவிய போதும்
இந்தப் பூமியில்
இவர்களின் அழிவை
நொந்த மனங்கள்
நோக்கி நிற்கும்
(காத்தான்குடி நிஷவ்ஸ் -24/11/2015)
Read More
avathani Media Network

ஹமீதியா கல்லூரி அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவு

ஹமீதியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உதைப்பந்தாட்டக் குழு அண்மையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட வெள்ளிக் கிண்ணச் சுற்றுப்போட்டியில் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது

கடந்த சனிக்கிழமை பத்தரமுல்லை பெத்தேகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் குழுவை பெனல்டி முறையில் 3 2 கோல் வித்தியாசத்தில் வென்று  அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. வெற்றிப் பெற்ற அணியின் சார்பில் எம்.என்.எம். முஜிப்தீன் ரஹ{மான்> எம்.என்.எம். பசீம்தீன்> சிராஜ்தீன் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். இம்ரான் {சைன் பந்து காப்பாளராக பணிபுரிந்தார். பயிற்றுவிப்பாளராக முஹம்மத் அஸ்மீரும் இம்ரான் {சைனும் கடமையாற்றினர். வெற்றிபெற்ற ஹமீதியா பழைய மாணவர் சங்க உதைப்பந்தாட்டக் குழுவினரை படத்தில் காண்க.

Read More
avathani Media Network

கடலில் மூழ்கி ஏறாவூர் இளைஞன் பலி!

மட்டக்களப்பு சவுக்கடிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் அலையில் சிக்கியதையடுத்து, நீரில் மூழ்கி 18 வயதான இளைஞன் மரணமடைந்துள்ளார்.
மயக்கமுற்ற நிலையில் மற்றுமொரு இளைஞன், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஹமட் அம்ஜத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் நான்கு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தவேளையில் இந்த இருவரும் பாரிய அலையில் சிக்கி அள்ளுண்டு செல்லப்பட்பட்டுள்ளனர்.
அதிலொருவரே பலியாகியுள்ளார். ஏனைய இரண்டு இளைஞர்களும் நீந்திக் கரை சேர்ந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
avathani Media Network

அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து உடன் அறிவிக்கவும்!

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது.
அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு கூறியது.
எனினும் இதுவரை வரவு செலவுத் திட்ட சலுகை நுகர்வோரைச் சென்றடையவில்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இன்றையதினம் நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அத்துடன் அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது நுகர்வோர் அதிகார சபைக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

இரயில் பாதையமைப்பிலும் புறக்கணிக்கப்படுகிறதா பொத்துவில்?



(மரியமின் புத்திரன்)

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான இரயில் பாதையமைப்பு விடயம் கடந்தபல ஆண்டுகளாக ஆட்சிக்குவரும் அரசாங்கங்களினாலும் பேசப்பட்டுவந்த நிலையில் நேற்றைய பத்திரிகைச் செய்திகளின்படி பிரதிஅமைச்சர் அமீரலி அவர்கள் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான இரயில்பாதையை ஒலுவில் வரைக்கும் மட்டுப்படுத்த எடுக்கும்முயற்சிக்கு பொத்துவில் முன்னைநாள் தவிசாளரும் சிறிலங்கா                              முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ்.அப்துல் வாஸித் விசனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக அவர் கருத்துத்தெரிவிக்கையில் அபிவிருத்தியிலும் அரசியலிலும் புறக்கணிக்கப்பட்டுவரும் பொத்துவில் கிராமமானது இலங்கையின் புகழ்பெற்றுவிளங்கும் அறுகம்பை  சுற்றுலாத்துறைக்கு பெயர்பெற்ற இடமாகும். இங்குவரும் அதிகளவான உல்லாசப்பயணிகளால் நாட்டிற்கு அதிகளவான அந்நியசெலாவனியை ஈட்டித்தருவதில் பொத்துவிலும் முக்கியபங்குவகிக்கின்றது என்பதில் பெருமையடைகின்றோம். இவ்வாறானதோர் நிலையில் மறைந்த சனாதிபதி ரனசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் ஈரான்நாட்டின் நிதியுதவியில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான இரயில்பாதை ஆரம்பிக்கப்படவிருந்தபோதும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலைமையினால் திட்டத்தை  நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமாதானம் அமைதிச்சூழலில் அமையப்பெற்றிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான இரயில்பாதையமைப்பு சாத்தியவிடயம் பேசப்படுவது வரவேற்கத்தக்கதாகும். இருந்தபோதும் இத்திட்டத்தினை ஒலுவில் வரைக்கும் மட்டுப்படுத்த எடுக்கும் முயற்சியானது பொத்துவில் மக்களுக்கு இழைக்கும் பாரியதுரோகமாகும். இதுவிடயத்தில் கௌரவ பிரதி அமைச்சரவர்கள் பொத்துவில் மக்களின் நலனிலும் பொத்துவிலின் அபிவிருத்தியிலும் முட்டுக்கட்டை போட்டுவிடாது. இத்திட்டத்தை பொத்துவில்வரை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பக்கபலமாகவிருந்து கரிசனையெடுக்குமாறு பொத்துவில் சார்பாக கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் செயற்பாடுகள் மீளாய்வும், எதிர் கால முன்னெடுப்புக்களும் தொடர்பான மாநாடு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறை சமூகப் பொலிஸ் பிரிவின் கீழ் செயற்பட்டு வரும் 51 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் கடந்த கால செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுதலும், எதிர்கால முன்னெடுப்புக்களும் எனும் தொனிப் பொருளிலான ஆலோசனை மாநாடு இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பியலால் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில்; கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ரி.எம்.ஜே.காமினி தென்னகோண் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதில் கலந்து கொண்ட சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண், சிவில் பாதுகாப்பு மத்திய குழுத் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் ஆகியோர் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சம்மந்தமான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு கடந்த காலங்களில் இக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றி மீளாய்வு செய்ததோடு, எதிர்காலத்தில் மேலும் வெற்றிகரமாக இதனைச் செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடி திட்டமிட்டனர்.

2011ம் ஆண்டுகளில் காணப்பட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்கள் தற்போது(2015) வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதற்கு இவ்வாறான சிவில் பாதுகாப்புக் குழுக்களின் சிறப்பான செயற்பாடுகளே காரணம் என்று பாராட்டிய உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

 'நாட்டில் சாந்தி, சமாதானம், நீதி, நேர்மை, சமத்துவம் போன்ற நல்ல தன்மைகளைப் பாதுகாக்கவே பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களுக்கச் சேவை செய்யாத பொலிசார் இப்பிரதேசத்தில் இருக்கத் தேவையில்லை. அவர்களுக்குச் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவே தவறான செயற்பாடுகள் கொண்ட பொலிசார் பற்றி மக்கள் எமக்கு அறியத்தர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

இம்மாநாட்டில் பாதுகாப்பு உயரதிகாரிகள், மும்மதத் தலைவர்கள், மதவழிபாட்டு நிருவாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.














Read More