Featured Home (TOP)

Recent Comments

Tuesday, December 22, 2015

avathani Media Network

ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி விஷேட உரை

நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்படவுள்ளமை குறித்துஇ எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்வுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக இவ்விடயத்தை தெரிவித்தார்.
ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி இந்த உரையை ஆற்றவுள்ளதாகஇ அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கையின் அடுத்த அரசியலமைப்பை உருவாக்கும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில்இ அதனை உருவாக்கும் சபையாக நாடாளுமன்றம் மாற்றப்படவுள்ளமை குறித்து ஜனாதிபதியின் உரை அமையும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குதல்இ புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து தற்போது உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன்இ புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்களது அபிப்பிராயங்களை கருத்திற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

சிறுவர்களுக்கு வழங்கிய சொக்லேட்டில் புழுக்கள்

நோர்வூட் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஒளிவிழாவில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிய சொக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்குழு முறைபாடு செய்துள்ளது.
ஹட்டன் நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து குறித்த சொக்கலேட்டுக்கள் கொள்ளவனவு செய்யப்பட்டுள்ளன. 
இவற்றை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் போதுஇ இவ்வாறு புழுக்கள் இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் இந்த விடயம் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
இதனையடுத்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடை தொகுதியை சோதனை செய்யும் பொழுது குறித்த கடையில் இருந்த ஏனைய சொக்லேட்களையும் கைப்பற்றியதோடு மேற்படி சொக்லேட் கம்பனி நிர்வாகத்திற்கும், கடை உரிமையாளர்க்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More
avathani Media Network

நேத்ரா தொலைக்காட்சியில் மீலாத் தின விசேட நிகழ்ச்சிகள்

மீலாத் தினத்தை முன்னிட்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா அலைவரிசையில் எதிர்வரும்  24-12-2015 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணிவரைஅகிலத்தின் அருட்கொடைஎனும் விசேட நிகழ்சியினை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளதாக முஸ்லிம் சேவை பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.கே.எம். யூனூஸ் தெரிவித்தார்

நிகழ்ச்சிகள் மபாஹிர் மௌலானா, அஸாரியா பேகம், முபாரக் மொஹிதீன் ஆகியோரின் தயாரிப்பில் நடைபெறுகிறது. கவிஞர் மடவளை நிஸார் எழுதி முஹம்மத் சதாம் பாடியநபி யாருக்காக அழுதார்என்ற பாடலுடன், நபிகளாரின் வாழ்க்கை விவரணமும் இடம்பெறும்.  கலைச்செல்வன் எம்.எம்.ரவூப் எழுதி அவருடன் ஞெய் ரஹிம் சஹீத், ஹலோ பௌமி ஆகியோர் பங்குபற்றும் ஊடுருவல் - சமூகச் சித்திரமும் ஒளிபரப்பாகும். கே.எம்.சவாஹிர் மாஸ்டரின் இசையமைப்பில் உள்ளூர் கலைஞர்களின் இஸ்லாமிய கீதமும் ஒலிக்கும்.


தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமை தாங்கும் கவியரங்கு இறுதி நிகழ்வாக நடைபெறும். இக்கவியரங்கில் கவிஞர்கள் பாலமுனை பாரூக், ரவூப் ஹஸீர், என்.நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவிதை பாடுகின்றனர்மௌலவி காத்தான்குடி பௌஸ் (ஷர்க்கி), எம்..சிஹாமுத்தீன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர்.
Read More
avathani Media Network

அம்பாறை மாவட்டமும் அடுத்து வரும் தேர்தலும்

ஊழல்,நல்லாட்சி,பட்ஜெட்,ஆணைக்குழு விசாரணை இப்படி பல செய்திகளை கடந்து தற்போது இலங்கை மக்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் எனும் பேச்சை ஆரம்பித்துள்ளார்கள்.அந்த வகையில் இலங்கையில் எந்த தேர்தல் வந்தாலும் மிக விறுவிறுப்பாக காணப்படும் மாவட்டம் என்றால் திகாமடுள்ள என்றழைக்கப்படும் அம்பாறை மாவட்டமே.

இந்த மாவட்டத்தை பொருத்தவகையில் மு.கா,தமிழ் கூட்டமைப்பு ஆகிய சிறுபான்மை கட்சிகளினதும்  யானை, வெற்றிலை எனும் பெரிய கட்சிகளினதும் ஆதிக்கம் இருந்து வருகிறது. ஆனால் கடந்த பொதுத்தேர்தலின் பின்னர்  மயில் காரர்களும் கால் பதித்திருந்தனர். இப்போது மேலும் சுவாரசியம் அதிகரித்திருக்கின்றது என்றே கருதலாம்.

பெரிய கட்சிகளையும் தாண்டி சிறிய கட்சிகளும் தற்போது அம்பாறையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகின்றனர். அந்தவகையில் உலமா கட்சி, NFGG , தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி, பொறியலாளர் நபீர் தலைமையிலான நபீர் பௌண்டசன்,இப்படி பல சிறிய கட்சியினரும் தமது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த முன்வரபோவது உறுதியாகியுள்ளது.

உலமா கட்சி பெரும்பாலும் மு.கா வுடன் இணைய வாய்ப்புள்ளது. ஒட்டக சின்னத்தின் சொந்தகாரர்கள் தினம் ஒரு அபிவிருத்தியாக திட்டம் தீட்டி வெளியிட்டு வருவதுடன் அவர்களுக்குள் தளம்பல் நிலை காணப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.என்றாலும் அந்த கட்சியின் பிரமுகர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் இருக்கும் நட்புறவு காரணமாக இணைந்து தேர்தலில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

அமைச்சையும் இழந்து அரசியல் அதிகாரத்தையும் இழந்து நிற்கும் அக்கரைப்பற்று மக்கள் மீண்டும்  அமைதியாக அரசியலை அவதானித்து வரும் தேசிய காங்கிரஸ் தலைமையை பலப்படுத்தும். இதன் மூலம் குதிரை தமது சொந்த ஊரின் அதிகாரத்தை பலப்படுத்தும் என்பது எதார்த்தமே.

04/05 அரச நிறுவனங்களின் தலைமை பதவியை கொடுத்து அதன் மூலம் தமது கட்சி மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல அபிவிருத்தி பணிகளை செய்ய ஆயத்தம் செய்து வரும் மக்கள் காங்கிரசும் இம்முறை பலத்த போட்டி ஒன்றை அம்பாறையில் கொடுக்கும் என்பது உண்மையே. 

மக்கள் எங்கள் பக்கமே என பலதேர்தல்களின் நிருபித்த மு.கா இம்முறை பலத்த பலத்துடன் களமிறங்க உள்ளது.ஏனெனில் பிரதியமைச்சர்கள்,மாகாண அமைச்சர்கள் என தமது மரத்தை பலப்படுத்தி தயாராகி வந்தாலும் சில விழுதுகளும் விழ தயாராவது கசப்பான உண்மையே.

மறு முனையில் சாய்ந்தமருதை சேர்ந்த சம்மாந்துறையில் வசிக்கும் பொறியலாளர் நபீர் அவர்களும்  தமது நபீர் பௌண்டசன் ஊடாக இந்த தேர்தலில் களமிறங்க தமது ஆயத்தங்களை செய்து வருகிறார். கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சபைகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகி வரும் நபீர் அவர்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று மாநகர சபை,அட்டாளைச்சேனை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை,சம்மாந்துறை பிரதேச சபை,கல்முனை மாநகர சபை ஆகிய சபைகளில் போட்டியிட தகுதியான இளம் தலைமுறையினரையும்,கல்வியலாளர்களையும்,வர்த்தகர்களையும்  திரட்டி தற்போது ஆயத்தமாகி வருகிறார்.

இந்த தேர்தல் வட்டார முறையில் நடைபெற உள்ளது இந்த குழுவுக்கு அசூர பலமாக அமையும் என்பது அசைக்க முடியாத உண்மையே.ஆனால் இந்த குழுவினர் தனித்து சுயட்சையாக களமிரங்குவார்களா இல்லை மு.கா./ம.கா/வெற்றிலை/யானை இப்படி யாரோடாவது கூட்டிணைவார்களா என்பது அறிய முடியாதுள்ளது. 

எப்படியாக இருந்தாலும் சிறிய கட்சிகளின் ஆதிக்கம் இம்முறை அம்பாறையில் இருக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. மக்களின் தேவைகளை அறிந்து செயற்படக்கூடிய சிந்திக்க தெரிந்த இளம் சமூகத்தின் கையில் இந்த சபைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் ஆசை. இளம் சமுகத்தை சேர்ந்தவர்களை  கட்சிகளின் வேட்பாளர்களாக நிறுத்தினால் நன்றாக இருக்குமல்லவா. 

சம்மாந்துறை 
சஜா .எ .அனஸ்
Read More
avathani Media Network

விரைவில் இந்தியாவுக்கு கப்பலில் செல்லலாம்!


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். 

தூத்துக்குடி - கொழும்பு மற்றும் இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் தொடங்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வி.மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு அளித்த பதிலிலேயே அமைச்சர் இராதாகிருஷ்ணன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். 

இந்திய - இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் தெடங்கப்படும் என்று இலங்கை அரசின் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் பிபிசியிடம் தெரிவித்தார். 

தென்னிந்தியா மற்றும் வட இலங்கை இடையேயான உறவுகளை ஊக்குவிக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார். 

தென்னிந்தியாவிலிருந்து வட-இலங்கைக்கு விமானம் மூலம் பயணிப்போரின் சிரமங்களை போக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார். 

இந்த கப்பல் சேவைகள் தொடங்கப்படும் பட்சத்தில், இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அது மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்று இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐநா ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னதாக கருத்து குறிப்பிட்டிருந்தார். 

முன்னதாக, பொன் இராதாகிருஷ்ணன் இன்று இந்திய மாநிலங்களவையில் அளித்திருந்த பதிலில், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் கடலோர போக்குவரத்தை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதைப்போல இந்தியா-மியான்மருக்கு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

ஹிருணிகாவுக்கு சொந்தமான வாகனத்தில் ஆட்கடத்தல் - காரணம் கள்ளத் தொடர்பா?


தெமட்டகொடை பகுதியில் 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்ற அறுவர் பயணித்ததாக கூறப்படும், டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது. 

சுமார் 12 நாட்களுக்கு முன்னதாக குறித்த டிபென்டர் அவரது பெயரில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மேலும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை பொலிஸில் ஒப்படைப்பதாகவும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும் இந்தக் கடத்தலுடன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பிருப்பதாக தெரியவரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

அத்துடன் நேற்றையதினம் சந்தேகநபர்களை பொலிஸில் ஒப்படைப்பதாக கூறப்பட்டது, பின்னர் இன்று காலை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது, எனினும் இதுவரை அவர்கள் சரணடையவில்லை, எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

எதுஎவ்வாறு இருப்பினும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கடத்தல் இடம்பெற்றமைக்கான காரணம், கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர், கடத்தியதாக கூறப்படுபவர்களில் ஒருவரின் மனையியுடன் தவறான உறவு வைத்திருந்தமையே என அறியக் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார். 
adaderana.lk
Read More
avathani Media Network

கொழும்பு துறைமுகத்தை அடுத்த வருட இறுதிக்குள் முதல் 20 இடங்களுக்குள் கொண்டு செல்ல எதிர்பார்ப்பு

இந்த வருடம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் செயற்பாடுகள் ஐந்து மில்லியன் என்ற எல்லையை அடைந்துள்ளது.
இதுவரை பதிவான ஆகக்கூடுதலான கொள்கலன் எண்ணிக்கை இதுவென துறைமுக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 12.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு 2,957 கப்பல்கள் வந்திருந்ததுடன் இந்த வருடம் அது 3,333 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் கடற்சார் நடவடிக்கை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க..

Read More
avathani Media Network

மட்டக்களப்பில் தமிழர் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட ஆளுனர் சதி-

கிழக்கு மாகாண ஆளுனரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் குடிசன தொகையினை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் எட்டாவது ஆண்டு கழக தினம் நேற்று மாலை  நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஆனால் ஆட்கள் மாறியுள்ளார்கள் கொள்கை மாறவில்லை.நாங்கள் மோதகத்தினை கொழுக்கட்டையாக மாற்றியுள்ளோம்.அதுவே முன்னைய அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் உள்ள வித்தியாசம்.
இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தினை நம்பி பலவகையில் ஆதரவினை மறைமுகமாக வழங்கிவருகின்றோம்.ஆனால் அவர்கள் எங்களுக்கு எந்த ஆதரவினையும் இதுவரையில் அவர்கள் வழங்கவில்லை.
இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்தோம் அது தொடர்பில் ஜனாதிபதியோ பிரதமரோ எமக்கு ஆதரவு தந்து அவற்றை வழங்கவில்லை.அதுபோன்று சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை மனிதாபிமான முறையில் விடுதலைசெய்வார்கள் என்று எதிர்பார்த்தோம் அதுவும் நடைபெறவில்லை.எமது தலைவரிடம் சில உறுதிமொழிகளைக்கூட வழங்கினார்கள்.சிறைக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று எமது தலைமை கூட நம்பியது.ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.
இறுதியாக மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு தலைமைப்பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் என்று கூறினார்கள்.அது தொடர்பிலான பல பூதாகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.ஆனால் தற்போது இணைத்தலைமைகளை வழங்கிக்கொண்டுள்ளனர்.
இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினைப்பெறுகின்றார்கள்.ஆனால் இதுவரையில் சரியான ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கவில்லை.
வடக்கு கிழக்கின் இரண்டு மாகாணத்திலும் ஆளுனராக இராணுவத்தில் இருந்தவர்கள் இருந்தார்கள்.நாங்கள் நடவடிக்கையெடுத்து அவர்களை மாற்றுமாறு கூறினோம்.நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் அவர்களை மாற்றியது.
ஆனால் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் மட்டக்களப்பில் தமிழர்களின் குடிசன தொகையினை மாற்றுவதற்கு திட்டமிடுகின்றார். இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
கல்குடா தொகுதியில் காராமுனை என்னும் பகுதியில் 158 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்குமாறு பிரதேச செயலாளரையும் மாவட்ட செயலாளரையும் அழைத்துகூறியுள்ளார்.இந்த ஆளுனர் பதவியேற்றதன் பின்னர் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதிலேயே அக்கரை செலுத்திவருகின்றார்.
குறிப்பாக புணானைப்பகுதியில் ஐந்து சிங்கள குடும்பங்களே வாழ்ந்தது.ஆனால் இன்று திட்டமிட்ட வகையில் 29 சிங்கள குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளது.மேலதிகமாக 24குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக இன்னும் 56குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள வரவுசெலவு திட்டத்தில் கூட அரச ஊழியர்களுக்கு தொடர்மாடி வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும் உத்தியோகத்தர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தினையும் தெரிவுசெய்துள்ளனர்.
அவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே வழங்கவேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்.வெளியில் உள்ளவர்களை கொண்டுவந்து இங்கு குடியேற்ற அனுமதிக்கமாட்டோம் என்பதையும் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
மறைமுகமான சதித்திட்டங்களை இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.இது தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
Read More
avathani Media Network

7000 முறைப்பாடுகளை விசாரிக்க 650 அதிகாரிகள்

7000 முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 650 அதிகாரிகள் மாத்திரமே இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நிலையில் ஒரு அதிகாரி 120 முறைப்பாடுகளைக் கையாளவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போதியளவு அதிகாரிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இன்மை, குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்பாடல் இடைவெளி என்பன விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துவதாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் உள்ள அரச புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட பிரிவுகள் குறித்தும், அவற்றில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 17 பிரிவுகளின் பிரதானிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் தொழில்நுட்ப வளங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். விசாரணைகளில் புதிய தொழில்நுட்பம் முக்கியமான பங்காற்றிவரும் நிலையில் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புதுப்பிக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரிவுகளுக்கிடையில் தொடர்புகளைப் பேணவேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் திணைக்களம் ஆகியவற்றுடன் தொடர்புகளைப் பேணி அவற்றிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உதாரணமாக எக்னெலிகொட, வாசிம் தாஜூடீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலைகள் தொடர்பில் தொலைபேசி அழைப்புக்களை பரிசீலிக்கவேண்டியுள்ளது. இருந்தபோதும் தொலைபேசி நிறுவனங்களுடன் சரியான புரிந்துணர்வு இன்மையால் காலதாததம் ஏற்படுவதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
Read More
avathani Media Network

குருளைச் சாரணர் பயிற்சிப் பட்டறை - படங்கள்.

(என். நஜ்முல் ஹுசைன்) 

குருளைச் சாரணர் பயிற்சிப் பட்டறையும் குருளைச் சாரணர் தினமும் அண்மையில் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் அதிபர் ஜனாப் கே. எம்.எம்.நாளிர் தலைமையில் சிறப்பாக  நடைப்பெற்றது. 

பிரதம  அதிதிகளாக  அல்ஹாஜ் எம். சப்ரிஸ் (ஜே.பி.) மற்றும் அல்ஹாஜ் . எம். பிர்தௌஸ் ஆகியோருடன் ஏரியா ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் இம்தியாஸ் (ஜீ.எஸ்.எஸ்.) அவர்களும்  கலந்து கொண்டனர்.  

ஆசிரியைமார்களான  திருமதி பெரோசா, எம்.ஜி.எம்.ரபீல்தீன், நஜ்லா கமர்தீன்  ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தனர்..எம். ரிகாஸ் நடனத்திற்கான நெறியாள்கையை செய்திருந்தார். 







 
 

Read More
avathani Media Network

பஸ்களில் பிச்சையெடுப்பது, வியாபாரம் செய்வது தடை

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல்  பஸ்களில்  பிச்சையெடுப்பது மற்றும் வியாபாரம் செய்வது முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கது.
Read More
avathani Media Network

நிந்தவூரில் கடற்கரை வாடி தீயில் எரிந்து சாம்பல்,

(முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்.) 

நிந்தவூர்-4ம் பிரிவு கடற்கரைப் பகுதியில் நேற்றிரவு மீனவர் வாடியொன்று தீயில் எரிந்ததில் வாடிக்குள்ளிருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இத்தீ விபத்து தொடர்பாக அப்பிரதேசத்திலுள்ளவர்களிடம் வினாவியபோது தீப்பற்றிய வாடிக்குள் மீனவர்கள் சிலர் இரவு வேளைகளில் மது அருந்திக்கொண்டு "கஞ்சா புகைக்கின்றனர் அதில் ஏதோ தீ பறந்ததில் ஓலை கிடுகினால் கட்டப்படிருந் இவ்வாடி எரிந்திருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக வாடி உரிமையாளர் கூறுகையில் இத் தீ விபத்து தொடர்பாக அவர் 6 நபர்களை சந்தேகிப்பதாகவும் அவர்களை போலிஸ் முன்னிலையில் அடையாளம் காண்பிக்கப்போவதாக கூறினார்.   




Read More
avathani Media Network

பெண்ணினமே மிகச்சிறந்த படைப்பினம்.....

(முஹம்மது நியாஸ்)

‘பெண்கள் சமுதாயத்தின் கண்கள்’, ‘ஒவ்வொரு ஆணுடைய வெற்றிக்குப்பின்னாலும்  நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள்’ என்று வாயளவில் மாத்திரம் துதிபாடுகின்ற சடவாத சித்தாந்தங்களே ‘பெண்புத்தி பின்புத்தி’, ‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு’ என்றும் பிற்போக்குத்தனமாக உளறிவைத்தன.

நவீன நாகரீகம் செவ்வாய்கிரகத்தை நோக்கி வீறு நடைபோடுகின்றது என்று கூடி நின்று கொக்கரிகின்ற இந்த அறிவியல் யுகத்திலும் கூட செவ்வாய் தோஷம் என்று ஒதுக்கிவைத்து திருமண வாழ்க்கை என்பது ஒரு கனவாகிப்போய் கண்ணீரும் கம்பலையுமாக முதிர் கன்னிகளாகவே காலத்தை கழிக்கின்ற எத்தனையோ பாவப்பட்ட பெண்களும் சமகாலத்தில் இல்லாமல் இல்லை.

பெண்குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையின் எதிர்காலத்தில் அதற்கான திருமணம், சீர்வரிசை, குடும்பரீதியான சுமை மற்றும் சமூகத்தின் இழிபார்வை(?) என்பவற்றால் தாய்ப்பாலுக்கு பதிலாக கள்ளிப்பாலை புகட்டி பிறந்து சில நிமிடங்களிலே தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட பச்சிளம் பெண்சிசுக்களின் பரிதாபகரமான வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

கணவன் இறந்துவிட்டால் ஒரு வெள்ளை நிற சேலையை அணிவித்து சமூகத்தில் ஒரு அபசகுனமான பிறவியாக அடையாளப்படுத்தி அவமானப்படுத்துவதும் இன்னும் சில சமுதாயங்களில் இறந்துவிட்ட கணவனோடு சேர்த்து அவனது மனைவியும் கட்டை ஏற்றப்படுகின்ற கொடுமையும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்தான் மதங்களின் பெயரால் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனாலும் பெண் சுதந்திரம் என்றும் பெண்ணுரிமை என்றும் சந்து பொந்துகளில் நின்று கூச்சலிட்டுக்கொக்கரிக்கின்ற சில கவனயீர்ப்புப்போராளிகளுக்கு பெண்கள் மீது மதக்கோட்பாடுகளின் நிழலில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறைகளும் சடவாத சித்தாந்தங்களால் பெண்ணினத்தை அடக்கியாள்கின்ற மதரீதியான கோட்பாடுகளும் அவர்களுடைய பார்வையிழந்த கண்களுக்குத் தெரிவதில்லை. மாறாக இஸ்லாமியப்பெண்களுடைய ஹபாயா ஆடையும் ஆண்-பெண் கலப்பை வெறுக்கின்ற இஸ்லாத்தின் கோட்பாடுகளுமே அவர்களின் ஊனமுற்ற உறுப்புக்களுக்கு புலப்படுகின்றன.

இற்றைக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னர் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அக்குழந்தையை ஷைத்தானுடைய சாபமாக எண்ணிய சமுதாயத்தில், அவ்வாறு பிறந்த பெண்குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்த காட்டுமிராண்டித்தனமான சாம்ராஜ்ஜியத்தில் பெண்களுடைய வாரிசுரிமை பற்றிப்பேசியது இந்த தன்னிகரற்ற இஸ்லாமிய மார்க்கம்.

பெண் என்றாலே அவள் ஆண்களுடைய காம இச்சையை தீர்த்துக்கொள்வதற்கான ஒரு போகப்பொருள் மாத்திரமே என்று வாழ்ந்து வந்த சமுதாயத்தில் திருமணத்தின் போது மணப்பெண்ணிடம் கண்டிப்பாக விருப்பத்தை கோரவேண்டும் என்று வாதிட்டு அதை கட்டாயச்சட்டமாக்கியது இந்த இஸ்லாம் என்ற தனித்துவமான மார்க்கம்.

அழ்ழாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்,
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்டதெனக் கருதிய செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான் கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:58,59)

பெண் குழந்தை பிறப்பதென்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அழ்ழாஹ் வழங்குகின்ற நற்செய்தி என்பதை இக்குர்ஆன் வசனம் விளக்குகிறது. அத்தோடு தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதை ஒரு இழிவாகவும் சமூகத்தில் கௌரவக்குறைவாகவும் நினைத்து அப்பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்து கொலைசெய்து வாழ்ந்துவந்த, இப்போதும் கள்ளிப்பாலை ஊட்டி கொலை செய்து வருகின்ற சமுதாயத்திற்கு அழ்ழாஹ் அதன் பாரதூரத்தையும் அப்பாவகாரியமானது எப்பேர்ப்பட்ட கொடூரச்செயல் என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறான்.

ஒருமுஸ்லிமுக்கு நாளை மறுமையில் சுவர்க்கலோக வாழ்வை தீர்மானிப்பதில் பெண்குழந்தைகளுக்கே வகிபாகம் உள்ளது.
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண் குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கவனமாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் கை விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 5127)

மேலுள்ள நபிமொழியின் பிரகாரம் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளை பெற்று அக்குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு செயற்படுகிறாரோ அவர் மறுமை நாளில் சுவர்க்கத்தில் நபி (ஸல்) அவர்களோடு ஒன்றாக அமர்ந்திருக்கின்ற நற்பாக்கியத்தை பெறுவார் என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம். ஒரு இஸ்லாமியனுக்கு மறுமை நாளின் நற்பாக்கியத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக பெண் குழந்தைகளை அழ்ழாஹ் ஆக்கியுள்ளான். பெண்குழந்தைகளுக்கு இவ்வுலகில் இதை விடவும் வேறு என்னதான் சிறப்பு வேண்டும்?
இஸ்லாமிய மார்க்கத்தைத்தவிர வேறு எந்த சமயக்கொட்பாடுகளினால்தான் பெண்களுக்கு இத்தகைய சிறப்பை கொடுத்துவிடமுடியும்?

1. வேதக்காரர்களில் ஒருவர் தமது சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட இறைத் தூதரையும் இறுதித் தூதர் முஹம்மதையும் நம்பிக்கை கொண்டார்.
2. ஓர் அடிமை அழ்ழாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.
3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத்தளையிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டார்.
இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி: 97)

அடிமைப்பெண்கள் என்பவர்கள் மனிதர்களா என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் வாழ்ந்துவந்த மடமைத்தனமான சமுதாயத்தில் அந்த அடிமைப்பெண்களுக்கும் கல்வியறிவை புகட்டி, ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து அதை மேன்மைப்படுத்தி அப்பெண்ணையே மணமுடித்துக்கொண்டால் அவர் இரட்டை நன்மையை பெற்றுக்கொண்டார் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அத்தாட்சிப்படுத்தினார்கள். ஒரு அடிமைப்பெண்ணுடைய விடயத்திலேயே இஸ்லாமிய மார்க்கம் இந்த அளவிற்கு பொறுப்பையும் கண்ணியத்தையும் வலியுறுத்துகின்றதென்றால் இஸ்லாமிய மார்க்கத்தை விடவும் உலகிலுள்ள வேறெந்த சமய சித்தாந்தங்களும் சடவாதக் கோட்பாடுகளும் இதுபோன்ற உரிமைகளை பெண்களுக்கு வழங்கிவிடமுடியாது.

மேலும் சமுதாயத்தில் ஒரு ஆண் நல்லவரா கெட்டவரா என்று முடிவு செய்யக்கூடிய உயர்ந்தபட்ச உரிமையையும் அதிகாரத்தையும் இஸ்லாம் பெண்களுக்கே கொடுத்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே! (திர்மிதி: 1082)

ஒருவர் சமூகத்தில் எவ்வளவுதான் நல்லவராக நடந்துகொண்டாலும் அவர் தன்னுடைய மனைவியிடத்தில் ஒரு நல்ல மனிதராக நடந்துகொள்ளாத வரை அவர் ஒருபோதும் அழ்ழாஹ்விடத்தில் நல்ல மனிதர் என்ற ஸ்தானத்தை அடையமாட்டார் என்பதை இந்த நபிமொழி இடித்துரைக்கிறது. இஸ்லாத்தில் ஆண்களுக்கே முதலிடம், கௌரவம், சிறப்பு எல்லாமே. பெண்கள் அனைவரும்  ஆண்களுக்கு கை கட்டி, வாய்பொத்தி சேவகம் செய்யும் அடிமைகள் மாத்திரமே என்று கூக்குரல் எழுப்புகின்ற கோடாரிக்காம்புகள் இந்த நபி மொழிக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்.

மேலும் நபியவர்கள் கூறினார்கள்,
இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே. பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல பெண்ணாவாள் (ஸஹீஹ் முஸ்லிம்: 2911)

பெண்ணென்பவள் ஒரு தீண்டத்தகாத உயிரினம் என்றும் அவ்வாறு தீண்டினாலும் அவள் ஆண்களுடைய காமபசிக்கு இரையாவதற்கு மாத்திரமே தீண்டப்படவேண்டும் என்றும் வாழ்ந்துவந்த இன்னமும் வாழ்ந்து வருகின்ற ஜாஹிலிய்யா சமூகத்தவர்களுக்கு இவ்வுலகில் ஒழுக்கமான பெண்களே பயனளிக்கும் சொத்துகள் என்று பெண்ணினத்தின் பெருமையை வானளாவ உயர்த்திக்கூறிய இஸ்லாமிய மார்க்கத்தை இன்று சில மேலைத்தேய மேதாவிகள் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூறிக்கூச்சல் இடுவது எப்பேர்ப்பட்டதொரு நயவஞ்சகத்தனமாக இருக்கவேண்டும்?

மாத்திரமன்றி தொழில் என்றும் பொருளீட்டல் என்றும் ஒரு ஆணுடைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் மிகப்பெரும் ஆறுதலாக இருப்பவள் அவனுடைய மனைவிதான் என்றால் அதில் மிகையேதுமில்லை. ஆனால் பெண்கள் என்றால் அவர்கள் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரங்கள் மாத்திரமே என்று நம்பி வந்த மடமையுகத்தில் அழ்ழாஹ் தன்னுடைய திருமறையில் கூறுவதை பாருங்கள்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப்படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தி யிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:21)

ஒரு ஆணுடைய வாழ்க்கை பெண் துணையின்றி ஒருபோதும் முழுமை பெறாதென்பதையும் ஒரு பெண்ணுடைய துணையின்றி எந்தவொரு ஆணாலும் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்துவிடமுடியாதென்றும் பெண்ணினத்தின் அவசியத்தையும் அதன் அனுகூலத்தையும் பறைசாற்றுகிறது இந்த அருள் மறை வசனம்.

அழ்ழாஹுத்தஆலா முழுமையான இறைவிசுவாசிகளுக்கு முன்னுதாரணமாக இரண்டு பெண்களைத்தான் குறிப்பிடுகிறான். இறைவனுடைய திருப்திக்காக தங்களுடைய சுகபோக வாழ்க்கைகளை துறந்து, தியாகம் செய்து சத்திய இஸ்லாத்தை உயிர்ப்பித்த முன்மாதிரிமிக்க நல்லடியார்களாக இரண்டு பெண்களை அழ்ழாஹ் அவனுடைய அருள் மறையில் சிலாகித்துக்கூறுகிறான்.

"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்பு வாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என் னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பா யாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அழ்ழாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
இம்ரானின் மகள் மர்யமையும் இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான் அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:11,12)

பிர்அவுன் என்ற கொடுங்கோல் அரசனுடைய மனைவியாகவிருந்து பின்னர் நபி மூஸா (அலை) அவர்களுடைய சத்தியப்பிரச்சாரத்தால் கவரப்பட்டு இஸ்லாத்திற்கு புத்துயிரூட்டிய ஒரு முழுமையான பெண்ணாக ஆஸியா (அலை) அவர்களை அழ்ழாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

மேலும் பல சிறப்புக்களும் தன்னகத்தே பொருந்திய இறைத்தூதர்களில் ஒருவரான நபி ஈஸா(அலை) அவர்களுடைய தாயாராகிய மர்யம் (அலை) அவர்களையும் அழ்ழாஹ் முஃமின்களுக்கு முன்மாதிரியாக அறிமுகப்படுத்துவது ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கே கிடைத்த மிகப்பெரும் கௌரவமும் கண்ணியமும் அல்லவா...

இவ்வாறு இறைவனின் படைப்புக்களிலேயே பெண்ணினம்தான் மிகச்சிறந்த படைப்பு என்று பெருமிதத்துடன் வாதிடுகின்ற இஸ்லாமிய மார்க்கத்தை அது பெண்களை அடிமைப்படுத்துகிறதென்றும் பெண் சுதந்திரத்தை சிதைக்கிறதென்றும் முதலைக்கண்ணீர் வடிக்கின்ற மேலைத்தேயவாதிகளும் சரி, அவர்களுடைய எலும்புத்துண்டுகளுக்கு அடிமைப்பட்டுப்போன இஸ்லாமிய சமூகத்திலுள்ள சில கோடாரிக்காம்புகளும் சரி. ஒரு அடிப்படையான விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாம் ஒருபோதும் பெண்ணினத்தை அடிமைப்படுத்தவில்லை. மாறாக அது பெண்களுக்கு அதிகபட்சமான கண்ணியத்தையும் கௌரவத்தையும் வழங்கி அவர்களை பாதுகாக்கவே செய்கிறது.

மொடலிங் (Modeling) என்றும் இன்னபிற நிகழ்வுகளில் வாயிலாகவும் தாய்மை என்ற உன்னதமான பொறுப்பையும் சிறப்பையும் தாங்கிநிற்கும் பெண்ணினத்தை அந்நிய ஆடவர்கள் மத்தியில் காட்சிப்பொருளாக காண்பித்து அவர்களது இடைகளுக்கும் தொடைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் இட்டு ரசிக்கின்ற வேசித்தனமான கலாச்சாரத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

இஸ்லாம் கண்ணியமாக நடாத்துங்கள் என்று கட்டளையிட்ட பெண்களை பெண் சுதந்திரம் என்னும் பெயரால் பகிரங்க அரங்கத்தில் அரைகுறை ஆடைகளுடன் ஆடிப்பாடவிட்டு அவர்களுடைய அங்க அவயவங்களை காமக்கண் கொண்டு கண்டு ரசிக்கின்ற கேவலமான நடைமுறைதான் பெண்ணினத்தின் சுதந்திரம் என்றால் அந்த கேடுகெட்ட கலாச்சாரம் ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தேவையில்லை.

இவ்வாறான அசிங்கமான அருவருக்கத்தக்க நடைமுறைகள் ஒருபோதும் பெண்ணினத்தை கௌரவப்படுத்தாது. மாறாக கண்ணியமாக, கௌரவமாக நோக்கப்படவேண்டிய பெண்கள் காமுகர்களுடைய விரசமான பார்வைக்கு இலக்காகி கடைசியில் கற்பையும் இழந்து உயிரையும் பறிகொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான சூழலுக்கே தள்ளப்படுவார்கள் என்பதை சமகலாத்தில் நாம் நிதர்சனமாகவே கண்டுவருகிறோம். ஆனாலும் மனக்கண்கள் மரணித்துப்போன இந்த பெண்ணுரிமை கோஷதாரிகளும் வேஷதாரிகளும் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

இஸ்லாமிய மார்க்கமோ பெண்களுடைய உயிரையும் உயிரிலும் மேலான கற்பையும் பாதுகாப்பதற்காகவே அவர்களுக்கு ஹிஜாப் என்ற ஆடைமுறையை அறிமுகம் செய்கிறது. அதன் மூலம் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆனால் மேலைத்தேய பிற்போக்கு சிந்தனையாளர்களும், பிணந்தின்னி ஊடகங்களும் இன்னும் அப்பிற்போக்குவாதிகளாலும் பிணந்தின்னிகளாலும் விலைபேசப்பட்ட நமது சமூகத்திலுள்ள சில கோடாரிக்காம்புகளும் ஒன்றிணைந்து ஹிஜாப் என்பது பெண்ணடிமைத்தனம் என்று அவலக்குரல் எழுப்பிவருவதை நாம் காண்கிறோம்.

ஹிஜாப் ஆடையைப்பார்த்து பெண்ணடிமைத்தனம் என்று ஓலமிட்டு ஒப்பாரிவைக்கின்ற இப்பெண்ணினத்தின் காவலர்(?)கள் ஹிஜாப் ஆடையை துறந்ததால் அமேரிக்கா, பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா மற்றும் மேலைத்தேய ஐரோப்பிய நாடுகளில் வேலைத்தளங்களிலும் இன்னபிற இடங்களிலும் அந்நிய ஆண்களின் உணர்ச்சிகளை சுண்டியிழுத்த எத்தனையோ பெண்கள் வயது வித்தியாசமின்றி அந்நிய ஆடவர்களால் தினந்தோறும் கற்பழிக்கப்படுகிறார்களே, கொலை செய்யப்படுகிறார்களே அதுபற்றி இவர்கள் ஏன் மூச்சுக்கூட விடுவதில்லை?

ஆகவே இவர்கள் பெண்ணடிமைத்தனம் என்றும் பெண் சுதந்திரம் என்றும் கூக்குரல் எழுப்புவற்தற்கான காரணங்கள் உண்மையிலேயே பெண்களை பாதுகாப்பதற்காக அல்ல. மாறாக அரைகுறை ஆடைகளுடன் வாழ்ந்து கலாச்சார சீரழிவுகள் பலவற்றிலும் ஊறித்திளைத்து கடைசியில் அது வெறுத்துப்போய் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தேடி இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வீறுநடை போடுகின்ற மேலைத்தேய பெண்களின் விகிதாசாரம் தற்போது பல மடங்குகளாக அதிகரித்துள்ளது.

மேலைத்தேயக் கலாச்சாரத்தின் மூலம் தங்களுக்கு கிடைக்காத மன அமைதியும், சமுதாய கௌரவவும், கண்ணியமும் இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறிக்குள் மாத்திரமே கிடைக்கும் என்பதை அவர்கள் நன்கறிந்து, உணர்ந்து ஹிஜாப் என்ற பெண்ணினத்தின் பெருமையை நோக்கி படையெடுக்கிறார்கள். இது மேலைத்தேய பிற்போக்குவாதிகள் சந்தித்த மிகப்பெரும் தோல்வி. அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள தெம்பில்லாத மேலைத்தேய பிற்போக்குவாதிகள் இஸ்லாம் பெண்ணினத்தை அடிமைப்படுத்துகிறதென நனைந்த ஆட்டை கண்டு ஓநாய்கள் அழுவது போன்று ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் இன்ஷா அழ்ழாஹ்.

அதேநேரம் அந்த மேலைத்தேய சிந்தனையாளர்களுக்கு ஒப்பாக நமது சமூகத்தினுள்ளே இஸ்லாமிய பெயர்தாங்கிய சில கறுப்பாடுகளும் ஹிஜாப் என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூக்குரலிட்டு மாற்றுமத சமூகத்தவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை தவறாக சித்தரித்துக் காட்டிக்கொடுக்கின்ற நடைமுறையினை நாம் காண்கிறோம்.

இவர்களுடைய இந்த நயவஞ்சகத்தனத்தை இரண்டுகோணங்களில் நோக்கலாம்.

ஒன்று: இந்த எட்டப்பர்கள் இஸ்லாமிய தாய் தந்தையர்களுக்கு பிறந்திருந்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தை படித்து, விளங்கியுணர்ந்து பின்பற்றவில்லை. மாறாக பரம்பரை, பரம்பரையாக, வாழையடி வாழையாகவே பின்பற்றி வருகிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை அதன்  மூலாதாரங்களில் இருந்தும் கற்றறிந்த எந்தவொரு அறிவுள்ள மனிதனும் அது பெண்ணினத்தை அடிமைப்படுத்துகிறதென்று வாதிடுவதற்கு எள்முனையளவும் முகாந்திரமில்லை. எனவே இவர்கள் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தை சரியாகவும் தெளிவாகவும் படித்தறியாத காரணத்தினால் அவ்வாறு மடத்தனமான வாதத்தை முன்வைத்து சமுதாயத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக:
ஐரோப்பிய நாடுகளுக்கான குடியுரிமையும் பிரபல்யமும். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரபல்யமடையவேண்டுமாக இருந்தால் அவர் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் ஒன்றை அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை விமர்சித்துவிட்டால் போதுமானது. உடனே இலவு காத்த கிளிகள் போன்று இலக்கு வைத்துக்காத்திருக்கின்ற பிணந்தின்னி ஊடகங்கள் அந்த விமர்சகருக்கு(?)ம் அவருடைய விமர்சனத்திற்கும் ராஜ மரியாதையளித்து பிரபல்யப்படுத்தி உச்சிக்கொப்பில் ஏற்றுவிடுவதை நாம் காணலாம்.

மேலும் அவ்வாறான விமர்சனங்கள் மேலைத்தேய இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரைக்கும் செல்கின்ற போது ‘நான் இஸ்லாத்தை விமர்சித்ததால் என்னுடைய நாட்டில் எனக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால்(?) ஆபத்து, எனவே நான் உங்களுடைய நாட்டில் குடியுரிமை பெறவேண்டும்’ என்று அபயக்குரல் எழுப்பி ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற தங்களுடைய நீண்ட நாள் கனவையும் இலட்சியத்தையும் அடைந்துகொள்வதே இந்த கோடாரிக்காம்புகள் ஹிஜாப் ஆடைக்கெதிராக காட்டுக்கூச்சல் இடுவதன் இரண்டாவது காரணமும் பிரதான நோக்கமுமாகும்.

எனவே இஸ்லாமிய மார்க்கமானது ஒருபோதும் பெண்களை அடிமைப்படுத்தவில்லை, மாறாக அது பெண்ணினத்தை கௌரவப்படுத்தி அதிகபட்சமாக கண்ணியமளிகின்ற ஒரேயொரு வாழ்வியல் நெறியாகவும் இருந்துவருகிறது என்பதே இஸ்லாத்தின் எதிரிகளால் கூட மறுக்கவோ மறைக்கவோ முடியாத பேருண்மையாகும். மேலும் இன்றைய உலகில் பெண்களுக்கான உரிமையும் சுதந்திரமும் என்று வெறும் வாயளவில் மாத்திரம் துதிபாடுகின்ற சில போலி பெண்ணுரிமைவாதிகளின் வெகுளித்தனமான கோஷங்களுக்கு அப்பால் சென்று பெண்ணுரிமை என்றால் அது எவ்வாறு இருக்கவேண்டும், அதன் தாற்பரியம் எனவென்பது குறித்து ஒட்டுமொத்த உலகிற்குமே செயற்பாட்டுரீதியாக பிரத்தியேகப்பாடம் நடாத்துகின்ற ஒரேயொரு சமயமாகவும் இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே இருந்து வருகிறது என்பதை புரிந்துகொள்வோம். ஏனையோர்களுக்கும் புரியும்படியாக உணர்த்துவோம்.



Read More