Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 24, 2015

avathani Media Network

புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம்

புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் பழைய அடையாள அட்டை செல்லுபடியாகுமெனவும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மாத்திரமே புதிய அடையாள அட்டை  வழங்கப்படுமெனவும் இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பன்னிரண்டு இலக்கங்களை கொண்ட இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
பழைய அடையாள அட்டை பயன்படுத்துபவர்களுக்கு அது காணாமல் அல்லது தெளிவற்று போனால் மாத்திரமே புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும். 
மேலும், புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில், அதன் உரிமையாளரின் சுயவிபரம், கைவிரல் அடையாளம் மற்றும் இரத்த வகையும் உள்ளடக்கப்படுமென 
Read More
avathani Media Network

ஐதேக வை தோற்கடிக்க முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது குறித்து அறியத் தருவதாக அவர் கூறியுள்ளார். 

கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். 
Read More
avathani Media Network

வௌிநாட்டு வேலைவாய்பிற்காக குடும்பப் பின்னணி அறிக்கை சமர்பிக்கத்தேவையில்லை

வௌிநாட்டு வேலைவாய்பிற்காக பெண்களை அனுப்பும் போது கட்டாயமாக முன்வைக்க வேண்டிய குடும்பப் பின்னணி அறிக்கையை அடுத்த வருடம் முதல் ரத்துச் செய்தாக வௌிநாட்டு வேலைவாய்யு பணியம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக அந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டது.
வெளிநாட்டு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் பல முக்கிய விடயங்களை முன்வைத்தது.
2013 ஆம் ஆண்டு வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு வௌியிட்ட இரண்டு சுற்று நிருபங்களும் அதில் உள்ளடங்குகின்றன.
அதில் ஒரு சுற்றுநிருபம் பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்டதுடன், மற்றைய சுற்றுநிருபம் பிரதேச செயலாளர்களுக்காக வௌியிடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சுற்றுநிருபம் மூலம் வீட்டுப் பணிப்பெண்களுக்காக விண்ணப்பிக்கும் அனைத்துப் பெண்களும் தமது குடும்ப பின்னணி அறிக்கையொன்றை சமர்பிப்பது கட்டாயமாகும்.
குறித்த பெண்களின் பிள்ளைகளது பாதுகாப்பு மற்றும் அவர்களை பராமறிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது அந்த அறிக்கையை கோரியமையின் நோக்கமாகும்.
ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகள் உள்ள பெண்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வதை தடுப்பது அந்த திட்டத்தின் இலக்காக இருந்தது.
ஐந்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் பெண்கள் வௌிநாடு செல்ல வேண்டுமாயின், பிள்ளைகளை பராமரிப்பதற்கு திருப்தி அடைய முடியுமான முறைகளை முன்வைப்பது கட்டாயமாகும்.
அத்துடன் முதல் முறையாக வௌிநாட்டிற்கு தொழிலுக்கு செல்வதாயின் 55 வயதிற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.
25 வயத்திற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாத்திரமே சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்ல முடியும் என்பதுடன், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வேண்டுமாயின் 23 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
ஏனைய நாடுகளுக்கு செல்வதாயின் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
குடும்ப பின்புல அறிக்கைக்கு கிராம சேவை உத்தியேகத்தர், குடும்ப நல சுகாதார அதிகாரி, தொழில் முகவர் மற்றும் பிள்ளையின் பாதுகாவலர் அல்லது பெண்ணின் கணவன் ஆகியோரிக் அனுமதி அவசியமாகும்.
எனினும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் இடம்பெயர்வு மற்றும் தொடர்பாடல் அபிவிருத்தி உத்தியோத்தரே இறுதி தீர்மானத்தை எடுப்பார்.
இவ்வாறு சட்டத்தை கடுமையாக்கியமையின் காரணமாக 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டு பெண்கள் தொழில்வாய்பிற்காக செல்லும் எண்ணிக்கை 6.4 % இனால் குறைவடைந்துள்ளதாக வௌிநாட்ட வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா குடும் அறிக்கை பெறவேண்டியது அவசியம் எனவும் அவசியமில்லை என எவரேனும் கூறினால் அது தவறு எனவும் கருத்துத் தெரிவித்தார்.

Read More
avathani Media Network

வில்பத்து முஸ்லீம் குடியேற்றங்களை நிரூபிக்குக: அரசிலிருந்து வெளியேறுவேன் – ரிசாட்


வில்பத்து சரணாலயகுடியேற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்தே  ஒதுங்கிக் கொள்வதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வில்பத்து காட்டை அழித்து அதில் முஸ்லிம் மக்களை குடியேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேவையென்றால் தம்மை கொலை செய்யுமாறும் தமது நற்பண்புகளை களங்கப்படுத்த வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.

 ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தமக்கு எதிராக அவதூறு செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருவதாக வருத்தம் வெளியிட்டுள்ளார்.

 தமக்கு எதிராக குற்றம் சுமத்தி வரும் ஆனந்த சாகர தேரருடன் பகிரங்க விவாதமொன்றை நடாத்தத் தயார் எனவு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தாமும் தமது இன சமூகமும்  தேவையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


Read More
avathani Media Network

NTJ சமூக சேவைப் பிரிவு நடாத்தும் மைய்யவாடி சிரமதான நிகழ்வு


Read More
avathani Media Network

வத்தளையில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது

வத்தளை கந்தான பகுதியில் 500 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருளை கொண்டு சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
ராகம இராத்மலானை மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More
avathani Media Network

மாத்தறை, நில்வலா கங்கையில் குதித்த தாயும் மகளும்


மாத்தறை, மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்த தயையும் மகளையும் தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 


பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி இவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 



அவர்களால் எடுத்து வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொதியொன்று பாலத்தின் மேலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 



கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 
Read More
avathani Media Network

சட்டத்தரணியான எனக்கு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள தெரியும் – ஹிருனிகா

தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் உதவியாளர்கள் கடத்தியதாக கூறப்படும் நபர், தாம் எதற்காக கடத்தப்பட்டார் என்பது தெரியாது என தெரிவித்துள்ளார்.
அமில பிரியன்க என்ற நபரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிருனிகாவின் உதவியாளர் ஒருவரது மனைவியுடன் தகாத தொடர்பு பேணியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெமட்டகொடவில் பணியாற்றி வந்த கடைக்குள் ஹிருனிகாவின் 8 ஆதரவாளர்கள் புகுந்து தம்மை கடத்திச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹிருனிகாவின் அலுலகத்திற்கு அழைத்துச் சென்று என்னை அவர்கள் அச்சுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிருனிகா பிரேமசந்திரவும் தம்மை அச்சுறுத்தியதாகவும், முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும் தேவையென்றால் தம்மை மீளவும் கடத்த முடியும் எனவும், சட்டத்தரணியான தமக்கு எவ்வாறு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வது என்பது தெரியும் எனவும் ஹிருனிகா தம்மிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்
Read More
avathani Media Network

மயானத்தில் துஸ்பிரயோகிக்கப்பட்டு மரணமான சிறுமி:முறக்­கொட்­டாஞ்­சேனையில் சம்பவம்

15 வயது சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில் நபரொருவர் சந்­தே­கத்தின் பேரில் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளார்.
முறக்­கொட்­டஞ்­சே­னையைச் சேர்ந்த நபரே கடந்த திங்­கட்­கி­ழமை கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.
குறித்த சந்­தேக ­நபர், சிறு­மியை முறக்­கொட்­டாஞ்­சேனைப் பகு­தி­யி­லுள்ள மயா­னத்தில் வைத்து துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக பெற்றோரின் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இச்­சம்­பவம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.
Read More
avathani Media Network

தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் நான்காவது வருடாந்த சர்வதேச ஆய்வரங்கு

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் நான்காவது வருடாந்த சர்வதேச ஆய்வரங்கு நேற்று பல்கலைக் கழக கலை கலாச்சாரப் பிரிவின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம் பெற்ற இவ்வாய்வரங்கில் பிரதம அதிதியாகவும், பிரதம பேச்சாளராகவும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஸ்ரீகெற்றிச் (முலைழெவந ளுpநநஉh- Pசழக.ளுசi ர்நவவபைந) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர்.எம்.எம்.எம்.நஜீம், பதிவாளர் எச்.ஏ.சத்தார், கலை கலாச்சாரப் பிரிவின் செயலாளர் கலாநிதி.ஏ.றமீஸ், இணைப்பாளர் கலாநிதி.ஏ.எப்.எம்.அஸ்றப், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உள்ளிட்ட கல்வியலாளர்களுடன் தென் கிழக்குப் பல்கலைக் கழக பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், நிதியாளர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
 ' தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாச்சார பீடம் தற்போது நவீன தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு தனது கல்வி நடவடிக்கைகளை, துறைசார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் பொருத்தப்பாட்டை உணர்ந்து மாணவர்கள் கலைப்பிரிவின் வழிகாட்டுதல்கள் மூலம் முன்னேற்றமும், சிறப்புடையலாம்' என கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
இறுதியில்;  அதிதிகள், பிரதம பேச்சாளர்கள் போன்றோருக்கு சிறப்பு மலர், நினைவுச்சின்னங்கள் போன்றன வழங்கி கௌரவிக்கப்பட்டன.









Read More
avathani Media Network

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு பொறியலாளர் நபீரின் பகிரங்க சவால் !!!!!

கடந்த பொதுத்தேர்தலில் தனித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சொந்த சின்னமான மயிலில் களமிறங்கிய நீங்கள் சகோதாரர் அமீர்,நௌசாத் ஆகியோரின் மௌனம் காப்பின் மூலமும் இறக்காமம் பிரதேச வேட்பாளரினதும்,நாவிதன்வெளி,இஸ்மாயில் புறம்,சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் சக வேட்பாளர்களாக களமிறங்கிய வேட்பாளர்களின் வாக்குகளை தமது வாக்குகளாக அமைச்சர் ரிசாத் அவர்களுக்கு காட்டி ஒரு முக்கிய தவிசாளர் பதவியை பெற்றுள்ளீர்கள்.

நீங்கள் கூறுவது போன்று 16000 வாக்குகளை பெற்றது உண்மையாக இருந்தால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உங்கள் தலைமையில் மக்கள்  காங்கிரசின் சொந்த சின்னமான மயில் சின்னத்தில் களமிறங்கி 02 பிரதேச சபை ஆசனங்களை கைப்பற்றினால் எனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு எதிர்வரும் எந்த தேர்தலிலும் களமிறங்கவோ அல்லது நேரடியாக/மறைமுகமாக எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் என சவால் விடுக்கிறேன்.

அத்துடன் உங்களை எதிர்த்து எனது தலைமையிலான அணி சுயட்சையாக களமிறங்கினால் உங்களை விட 01 ஆசனம் அதிகமாக பெற்றுகாட்டுவேன் என சவால் விடுக்கிறேன்.எனது சவாலை நீங்கள் ஏற்று வெற்றிபெற்றால் நான் சொன்னதை அடுத்த வினாடியே செய்து காட்டுவேன். அதே போன்று நீங்கள் மண் கவ்வினால் ஒட்டு மொத்த அரசியலுக்கும் சலாம் சொல்லிவிட்டு வீட்டை சென்றடைய தயாரா என சவால் விடுக்கிறேன் என நபீர் பௌண்டசன் தவிசாளர் நிர்மாண முகாமைத்துவ முதுமாணி அல் -ஹாஜ் உதுமாங்கண்டு  நபீர் சவால் விடுத்துள்ளார்.

சஜா.எ.அனைஸ் 
சம்மாந்துறை 
Read More