Featured Home (TOP)

Recent Comments

Sunday, December 27, 2015

avathani Media Network

இளைஞர் சமூகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

my03-1
இளைஞர் சமூகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாறை டி எஸ் சேனாநாயக்க தேசிய பாடசாலையில் இடம்பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களின் திறன் மதிப்பீட்டுக்கான பரிசு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார். பணத்திற்கு பின்னால் செல்லமால் நல்லவை மற்றும் தீயவை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஜனாதிபதி மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More
avathani Media Network

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

mini_cyclone_008அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
சூறாவளியின் தாக்கத்தினால் டெக்ஸாஸில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் பல நகரங்களில் சூறாவளி தாக்கியுள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வானிலிருந்து சில சிதைவுகள் அதிவேக வீதியில் வீழ்ந்துள்ளதாகவும் அமெரிக்க வானிலை அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், டெக்ஸாசில் விடுக்கப்பட்டிருந்த வௌ்ள மற்றும் சூறாவளி அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

ஜனவரி முதல் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு தடை

அடுத்த வருடம் ஜனவாரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீன் பாவனையை நாட்டிற்குள் தடை செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை20-micron-polytheneதெரிவித்துள்ளது.
பாரியளவில் இடம்பெறும் சூழல் மாசடைதலை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி கூறினார்.
மைக்ரோன் 20 இற்கும் குறைவான பொலித்தீனினால் பாரியளவில் சூழ்ல் மாசடைவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பொலித்தீன் பாவனை குறித்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் மைக்ரோன் 20 இற்கு குறைவான பொலித்தீன் தயாரிப்பு, தம்வசம் வைத்திருத்தல்,விற்பனை மற்றும் பாவனை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி கூறினார்.
இந்த சுற்றிவளைப்புக்களின் போது கைது செய்யப்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Read More
avathani Media Network

அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமையால் மக்களின் நிதியினால் புனரமைக்கப்படும் வீதி

நீண்டகாலமாக அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமையினால் பொதுமக்களின் நிதியைக்கொண்டு புனரமைக்கப்படும் வீதியொன்றின் கதை இது. காத்தான்குடி நகர சபை பிரிவில் மிக நீண்டகாலமாக DSC06347பள்ளமும் குழியுமாக இருந்து வரும் மிக முக்கிய வீதியான காத்தான்குடி டெலிகொம் வீதி பிரதேச மக்கள் ஒவ்வொருவரும் தலா 5000 ரூபாய் நிதியை இட்டு 3 இலட்சம் ரூபாய் செலவில் மக்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்ட இந்த வீதியில் பதுறியா மகா வித்தியாலயம், பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயில், பொதுச்சந்தை, ஸ்ரீலங்கா டெலிகொம் பிராந்திய நிலையம், பிரதம தபாலகம், இலங்கை வங்கி, கொமர்சல் வங்கி, பொது மையவாடி மற்றும் அரச நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ள இந்த டெலிகொம் வீதியானது புனரமைக்கப்படாமல் உள்ளது. அத்துடன் இந்த வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பிராந்திய அலுவலகமும் உள்ளது.

இந்த வீதி பள்ளமும் குழியும் உள்ளதால் மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன் பாதசாரிகள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் பலதரப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் இந்த வீதியினால் செல்வதுடன் காத்தான்குடி பிரதான வீதியிலிருந்து காத்தான்குடி கடற்கரைக்கு செல்லும் முக்கியமான வீதியாகவும் இந்த வீதியுள்ளது.
இந்த வீதியினை புனரமைப்பதற்கு அரசியல் வாதிகள் அரசாங்க அதிகாரிகள் பலரிடத்திலும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைகளை விடுத்துவரும் நிலையிலும் இந்த வீதி இன்னும் புனரமைக்கப்பட வில்லை. இந்நிலையில் இந்த வீதியில் வசிக்கும் பொதுமக்கள் தாமாக முன் வந்து மக்கள் பங்களிப்புடன் பள்ளமும் படுகுழியுமாக உள்ள இடங்களை கற்களை கொண்டு நிரப்பி காத்தான்குடி நகர சபையின் உபகரணங்களின் உதவியுடன் புனரமைத்து வருகின்றனர்.


சுமார் 3 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு வேலைகளை செய்து வருவதாகவும் அதன் மூலம் போக்குவரத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்த வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் சமூக சேவையாளருமான வை.எல்.எம்.இப்றாகீம் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

இலங்கை பட்டயப் பொறியியலாளராக பட்டம் பெற்ற பொறியியலாளர் லிங்கேஸ்வரன்-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் இலங்கை பட்டயப் பொறியியலாளராக பட்டம் பெற்றார்.

அண்மையில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பட்டயப் பொறியியலாளர் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும்,முன்னாள் கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞான பீடத்தின் மூத்த பேராசிரியர் மொஹான் டி சில்வா உட்பட இலங்கை  பொறியியலாளர் நிறுவகத்தின் தலைவர் கலாநிதி எஸ்.பீ.விஜயகோன் ஆகியோரிடமிருந்து இலங்கை பட்டயப் பொறியியலாளராக பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன் பட்டம் பெற்றிருந்தார்.

09-05-1986 திகதி நிந்தவூர் பிரதேச வைத்தியசாலையில் பிறந்த இவர் காரைதீவை பிறப்பிடமாகவும் தற்போது மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

தனது ஆரம்ப கல்வியை காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலத்திலும் உயர் கல்வியை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் பயின்றார்.

அதன் பின்னர் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் குடிசார் இயந்திரவியல் இளமாணிப் பட்டத்தைத் பூர்த்தி செய்து 2010ம் ஆண்டு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பல்வேறு செயற்திட்டங்களில் களப் பொறியியலாளராகவும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய காரியாலயங்களில் கடமையாற்றி தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தின் களப் பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார்.

அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை காரியாலயமான செத்சிறிபாயவில் பெருந்திரக்கள் பொறியியலாளர் வடிவமைப்பு பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்து அதன் பின்னர்  இலங்கை  பொறியியலாளர் நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் திறமை சித்தி பெற்று அண்மையில் இலங்கை பட்டயப் பொறியியலாளராக பட்டம் பெற்றார்.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிருவாகமும்,பொது முகாமைத்துவ பிரிவில் முதுமாணி மாணவராகவும் தற்போது இருக்கும் இவர் சமூக சேவையில் காரைதீவு விளையாட்டு கழகத்தின் பிரதித் தலைவராகவும்,காரைதீவு விபுலானந்தா சனசமூக நிலையத்தின் உப தலைவராகவும்,இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும்,ஐக்கிய ராஜியத்தின் பொறியியலாளர் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இற்றவரை சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.



இவர் ஒய்வு பெற்ற அரச வைத்தியசாலையின் சிரேஷ்ட பெண் பரிசாரகர் திருமதி ,ஞானம்பிகை மற்றும் வியாபாரி அருமைநாயகத்தின் மூத்த புதல்வரும் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி .டுஜித்திரா லிங்கேஸ்வரனின் கணவரும்; ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

பட்டப் பின் படிப்பு நிலையத்தில் -அரபுக் கல்லூரி பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இயங்கிவரும் பட்டப் பின் படிப்பு நிலையத்தில் அரபுக் கல்லூரி பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறிக்கு 2016ம் ஆண்டுக்கு புதிய மாணவர் அனுமதிக்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் டப்ளீயூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

மேற்படி கல்வி நிலையத்தில் எதிர்வரும் 2016 ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் மூன்றாவது குழுமத்தின் பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்பித்தல்,அழைப்புப் பணி போன்றவற்றில் திறமையாக செயல்படவும்,பிரகாசமான தொழில் துறை,மேற்படிப்பு வாய்ப்புக்களைப் பெறவும் வசதியாக பாரம்பரிய ஷரீஆக் கலைகளையும் நவீன கல்விசார் துறைகளையும் உள்ளடக்கி இப் பாடத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த பட்டப் பின் படிப்பு நிலையத்தில் சேர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரபுக் கலாசாலையில் பட்டம் பெற்றிருத்தல்,இறுதிப் பரீட்சையில் மிக நன்று தரம்,புனித குர்ஆனில் குறைந்தது 5ஜூஸ்உகள் மனனம்,அரபு மொழியை சிற்ப்பாக கையாளும் திறமையும் அடிப்படை ஆங்கில மொழியறிவும் ,வார இறுதி நாட்களில் முழுமையாக தங்கிக் கற்க முடியுமானவராயிருத்தல் போன்ற விடயங்கள் தகைமைகளாக கருதப்படும்.

இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு சகல வசதிகளையும் கொண்ட கல்விச் சூழலுடன் அரபு நாட்டைச் சேர்ந்த ஓர் அறிஞரின் நேரடிக் கண்காணிப்பு,கணணி மயப்படுத்தப்பட்ட சுய கற்கை முறைக்க ஊக்குவிப்பு,வாராந்தல் சனி,ஞாயறில் மாத்திரம்  நடைபெறும் பயிற்சி நெறி,மாதாந்தம் 5000 ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவுடன் வாராந்தப் போக்குவரத்துச் செலவு,இறுதிப் பரீட்சையில் அதி விஷேட தரத்தில் சித்தியடையும் மாணவருக்கு முற்றிலும் இலவச உம்றா,இறுதிப் பரீட்சையில் திறைமையாக சித்தியடையும் மாணவர்களுக்கு அரபுப் பல்கலைகழகமொன்றில் உயர் கல்வி வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முயற்ச்சிக்கான உத்தரவாதம் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

மேற்படி பட்டப் பின் படிப்பு நிலையத்தில் சேர விரும்புவோர் 01-01-2016 திகதிக்கு முன்னர் தங்களுடைய சுய விபரத்துடன் விண்ணப்பங்களை பட்டப் பின் படிப்பு நிலையம் -இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி தபால் பெட்டி இலக்கம் 105-காலி என்ற முகரிக்கு அனுப்பும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0777921418,0771764982,0779119161 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

Read More
avathani Media Network
(ஜுனைட்.எம்.பஹ்த்)

தற்காலத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் கடல் கொந்தளிப்பாக கானப்படுவதால் மீனவர் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..
கடலில் ஒரு வகையான "மாறா" எனப்படும் காற்று வீசுவதால் கடலுக்குள் செல்வது ஆபத்தானது. அதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாது என மீனவர்கள் தெறிவிக்கின்றனர்.. இதன் காரணமாக மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடல் மீன்கள் தட்டுப்பாடு நிலவுவதோடு ஆற்று மற்றும் குளத்து மீன்கள் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மழை காலம் என்பதால் மரக்கறி வகைகளினது விலைகளும் உயர்நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது...



Read More
avathani Media Network

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
சூறாவளியின் தாக்கத்தினால் டெக்ஸாஸில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் பல நகரங்களில் சூறாவளி தாக்கியுள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வானிலிருந்து சில சிதைவுகள் அதிவேக வீதியில் வீழ்ந்துள்ளதாகவும் அமெரிக்க வானிலை அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், டெக்ஸாசில் விடுக்கப்பட்டிருந்த வௌ்ள மற்றும் சூறாவளி அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
avathani Media Network

கிண்ணியாவில் ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

கிண்ணியா பொலிஸ் பிரிவில் உப்பாறு பாலத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிறு (27) அதிகாலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சடலம் முள்ளிப் பொத்தானை சதாம் நகர் 44 வயது மதிக்கத்தக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம்- அன்புச் செல்வன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இவர் தனது இரு நண்பர்களுடன் நேற்று முன் தினம் மாலை கண்டல் காடு கங்கையாற்றில் மீன் பிடிப்பதற்காக வலையை விட்டுச் சென்றுள்ளார். 

பின்னர் வலைகளில் மீன் கிடைத்துள்ளதா என பார்வையிட சென்றிருந்த வேளையில் இவர் காணாமல் போயுள்ளார். 

நேற்று கிண்ணியா பொலிஸார், கடற் படையினரின் உதவியுடன் இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 
Read More
avathani Media Network

ரவி கருணாநாயக்கவின் அமைச்சரவை பத்திரத்தை நிறுத்தி வைக்க ஜனாதிபதி தீர்மானம்

நீண்டகாலமாக நீடித்து வரும் நட்டஈடு கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தின் போது இடம்பெற்றது.
இந்த அமைச்சரவை பத்திரத்தின்படி தொழில்ரீதியான ஆலோசகர் நிஹால் ஸ்ரீ அமரசேகர என்பவருக்கு 300 மில்லியன் ரூபாவை செலுத்தி இணக்கம் ஒன்றை எட்டக்கூடிய யோசனையை ரவி கருணாநாயக்க முன்வைத்தார்.
எனினும் நிஹால் ஸ்ரீ ஏற்கனவே கடந்த அரசாங்க காலத்தின் போது இலங்கை வங்கியில் பெற்றுக்கொண்ட 100 மில்லியன் மேலதிக கொடுப்பனவை செலுத்தாமை காரணமாக அவர் மீது நிதிமோசடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையை ஏனைய அமைச்சரவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்தே ஜனாதிபதி குறித்த அமைச்சரவை பத்திரத்தை நிறுத்தி வைக்கும் தீர்மானத்தை மேற்கொண்டார்
ஹில்டன் ஹோட்டல் மேம்படுத்தலின் போது ஏற்பட்ட நட்டம் காரணமாக குறித்த தொழில்சார் ஆலோசகருக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் ஏற்கனவே 1983ம் ஆண்டு இணக்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
Read More
avathani Media Network

மோட்டார் போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளுக்கு வழக்­குகள் இன்றி தண்டப் பணம் அற­விடும் முறை அறி­முகம்

கிடப்­பி­லுள்ள பெருந்­தொ­கை­யான வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் அடுத்த வருடம் முதல் மோட்டார் போக்­கு­வ­ரத்து தண்­டனைச் சட்­டத்­துடன் தொடர்­புள்ள தவ­று­க­ளுக்கு வழக்கு தொட­ராமல் நேர­டி­யாக தண்­டப்­பணம் அற­விடும் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
விசா­ரிக்­கப்­ப­டாமல் இருக்கும் வழக்­கு­களில் மோட்டார் போக்­கு­வ­ரத்­துடன் தொடர்­புள்ள வழக்­கு­களே அதிகம் எனவும் குறிப்­பிட்ட அமைச்­சு, இணக்க சபையில் ஆரா­யப்­படும் வழக்­கு­களின் பெறு­ம­தியை 05 இலட்சம் ரூபா வரை அதி­க­ரிக்­கவும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
இதே­வேளை, கடந்த 05 வருட காலத்தில் இணக்க சபைக்கு வந்த வழக்­கு­களில் 51 வீத­மா­னவை விசா­ரித்து முடிவு காணப்­பட்­டன.அதன் மொத்த தொகை 03 இலட்­சத்து 75 ஆயி­ர­மாகும். வழக்­கு­களை விசா­ரித்து முடிப்­ப­தற்கு இணக்க சபைகள் பெரும் பங்­க­ளித்து வரு­கின்­றன. இந்த வழக்­குகள் நீதி­மன்­றங்­களில் விசா­ரிக்­கப்­பட்­டி­ருந்தால் வழக்கு விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வது இன்னும் அதி­க­ரித்­தி­ருக்கும்.
சிவில் மற்றும் குற்­ற­வியல் வழக்கு சட்டக் கோவை­களை தற்­கா­லத்­திற்கு உகந்தவாறு மாற்ற வேண்டும். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார் .
Read More