Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 31, 2015

avathani Media Network

எலிக்கு வந்த ஆசை

இந்தியாவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்றும் லண்டனை சுற்றிப்பார்க்க பயணித்தையறிந்த விமானி விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார்.

நேற்று வழக்கம்போல அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற குறித்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்தனர். 
குறித்த விமானம், ஈரான் நாட்டின் தெஹ்ரான் வான் பிரதேசத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையைச் சுற்றி ஒரு எலி ஓடிக்கொண்டிருந்ததை அவாபணித்த சிப்பந்தி உடனே விமானிக்கு தகவல் கொடுத்தார். 
இதையறிந்து பதற்றம் அடைந்த விமானி, உடனடியாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்து மீண்டும் அந்த விமானத்தை மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார்.
அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை ஒதுக்குப்புறமாக கொண்டு சென்று அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது.பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Read More
avathani Media Network

பேலியகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காவற்துறையினர் இருவர் காயம்


பேலியகொட – புளுகஹாஹந்திய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரு காவற்துறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பேலியகொட காவற்துறையில் போக்குவரத்து பிரிவில் சேவையில் ஈடுபட்டிருந்த இரு காவற்துறையினரே இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையிள் பேச்சாளர் தெரிவித்தார். 

பேலியகொட புளுகஹாஹந்திய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்றிற்கு அருகில் வந்து நபர் ஒருவரால் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதை தடுப்பதற்காக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரிகள் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More
avathani Media Network

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.
வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதுவரையில் குறித்த கடவுச் சீட்டுக்கு 7,500 ரூபா பணமே அறவிடப்பட்டது.
மேலும் சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் அறவிடப்பட்ட 2,500 ரூபா கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஒருநாள் சேவையூடாக கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கு 2,500 ரூபா அறவிடப்படுவதுடன், சாதாரண சேவையில் கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More
avathani Media Network

காலஎல்லை நீடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் இதோ!


சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லையை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இன்றுடன் பதவிக் காலம் நிறைவடைகின்ற 18 மாநகர சபைகள், ஒரு நகரசபை மற்றும் நான்கு பிரதேசசபைகளின் கால எல்லை, ஜூன் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள மாநகர சபைகள் 

கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, குருநாகல், அனுராதபுரம், பதுளை மற்றும் இரத்தினபுரி 

நகரசபை 

கொலன்னாவ 

பிரதேசசபைகள் 

கொடிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கண்டி - கடவத்சதர - கஹவடகோரலை, சூரியவெவ - ஹம்பாந்தோட்டை 
Read More
avathani Media Network

சொல்வதை தவிர வேறு வழியில்லை:

(முஜீப் இப்றாஹிம்) 
துவேசமும், பாலுணர்வும் ஒரே மாதிரியானவை. எல்லோருக்குள்ளும் அவை அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றன.
தூண்டப்பட்டால் மாத்திரமே அவை துலங்கும்!
துவேசம் என்பது இரு சகோதரிகளுக்கிடையில் கூட தோன்ற முடியும்!
ஒருத்தியின் கணவரை விட மற்றவளின் கணவர் வசதியாக இருந்து விட்டால் போதும் இருவருக்கிடையிலும்
துவேசம் வெடித்துவிடும்!!!

இவ்வாறு ரத்த உறவுகள் முதல் கொண்டு வேற்று இனக்குழுமங்கள் வரை துவேசம் பரந்து செல்கிறது.
நூறு வீதம் அல்லது மிகப்பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற ஊர்களுக்குள் மாற்று மத வழிபாட்டுத்தலங்களை யாராவது நிறுவ எத்தனித்தால் நாம் எவ்வளவு எதிர்வினைகளை ஆற்றுகிறோம்?
ஆனால் வேற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழுகிற இடங்களில் பெரும்பாலும் வெற்றிகரமாக நமது பள்ளிவாயல்களை நிறுவ முடிகிறது!
எங்காவது ஒரு சில இடங்களில் அவற்றுக்கு தடைகள் வருகிற போது நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளின் வீச்சும் வேகமும் நாம் அறிவோம்.
அதன் பின்னுள்ள நியாயத்தன்மையினை தனிமையில் உட்கார்ந்து சிந்தித்தால் நாம் எவ்வாறு மறுக்கிறோமோ அவ்வாறே அவர்களும் மறுக்கிறார்கள் என எண்ணத்தோன்றும்.
இலங்கை போன்ற பல் இனங்களும் வாழும் நாட்டில் சுதந்திரம் தொடக்கம் நம்மை தமது அரசியல் தேவைகளுக்காக பிரித்தாண்ட அரசியல் தலைவர்கள் அவர்களது இலக்குகளில் வெற்றி பெற்றார்கள்.
மக்கள்தான் தோற்றுப்போனார்கள்.
இங்கே இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு இல்லை, பரஸ்பர ஒற்றுமையும் இல்லை.
துருவங்களாகி கிடக்கிறது இனங்கள்!
என். ஜீ. ஓ க்களால் செயற்கையாக கட்டமைக்க முனையும் சமாதான இனவுறவுகளால் நீடித்து நிலைக்கவும் முடியாது.
தேசத்தில் இனங்களுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவுவது போல் போலி மாயைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முன்னர் யுத்தத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்திய நமது நாட்டு அரசியல் தலைமைகள் இப்போது இனவாதத்தை வைத்து துவேசத்தை தூண்டி அரசியல் செய்வதை எல்லா இனங்களிலும், இடங்களிலும் காண முடிகிறது.
மஹிந்த ராஜபக்‌ஷ மறைமுகமாக இனவாத அரசியலைச்செய்து சொற்ப வித்தியாசத்தில் தோற்றார்.
ஞானசாரவால் நாடு முழுவதும் இருபதாயிரம் வாக்குகளை எடுக்க முடிந்தது.
இப்போது மஹிந்த தரப்பு வெளிப்படையாகவே இனவாத அரசியலைச்செய்கிறது....
ஞானசாரவும் சளைத்தபாடில்லை.
இந்தப்பின்புலத்தில் நமது சோனக அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள செய்கின்ற இனத்துவேச அரசியலானது நடுநிலையான சிங்கள மக்களையும் மேலும் சினமூட்டுவதாக அமைந்து விடுகிறது.
சிறுபான்மையின் ஆதரவு பெற்ற அரசு, நாம் உருவாக்கிய ஜனாதிபதி என்றெல்லாம் நாமடிக்கின்ற தம்பட்டங்கள் நேர்மையாக சிந்திக்கின்ற பெரும்பான்மை மக்களை கூட பேரினவாத்த்தின் பக்கம் பலவந்தமாக சாய்த்துவிடும்.
இந்தப்போக்கானது மஹிந்த ஞானசார கூட்டணியின் மீள் எழுச்சிக்கும் பெரும்பான்மை மக்களை இனவாதிகளாக திசைதிருப்பி விடுவிதற்கும் போதுமானது.
நாம் உருவாக்கிய அரசு என்ற 
மமதையில் முன்னரை விட படுவேகமாக முகநூலில், வட்ஸ் அப்பில் வீடியோக்கள் மூலம் பெரும்பான்மை இனத்தை காயப்படுத்தும் வகையில் கருத்துகளை நம்மவர்கள் பரப்புவதை அவதானிக்க முடிகிறது.

அதற்கு அவர்களிடம் இருந்து படு மோசமான எதிர்வினைகள் வருகின்றன.
அதை அவர்கள்தான் ஆரம்பித்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு பதில் சொல்வதால் ஆகப்போகும் நன்மை ஒன்றுமில்லை மாறாக தொடர்ந்தும் வசவுகளும் நமது மார்க்கத்தின் மீதான வக்கிரங்களுமே வளரும்.
அந்த வீடியோக்களில் கதைப்பதெல்லாம் பேரரறிஞர்கள் அல்ல! யாரோ வெளிநாடுகளில் வசிக்கும் இனவாதம் பிடித்த கொந்தராத்துக்கார்ர்களே...
அல்லது உள்நாட்டில் வாழுகிற அறை குறை அறிவுகொண்ட இனவாத எச்சங்களே...
இவற்றை நாமும் அலட்டிக்கொண்டு சொற்போர் தொடுப்பதால் தேசத்தில் எதிர்பாராத கோணத்தில் இன முறுகலொன்று ஏற்பட்டுவிடும்.
அதற்குரிய பெற்றோலைத்தான் பேரினவாத சக்திகள் ஊற்றிக்கொண்டிருக்கின்றன....
நமது கையில் இருக்கும் சிறு தீப்பொறி போதும் தேசம் பற்றி எரிவதற்கு.....
கடைசியில் அதில் குளிர்காயப்போவது நம் நாட்டு அரசியல்வாதிகளே!
அப்போது
சோனக அரசியல்வாதிகள் மட்டும் சும்மா நடுங்கிக்கொண்டா இருப்பார்கள்?

அவர்களும் சேர்ந்தே குளிர்காய்வர்.
Read More
avathani Media Network

பயணச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போருக்கு தண்டம் அதிகரிப்பு

பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிப்போர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பணத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் ஆலோசனைக்கமைவாகவே இந்நடவடிக்கை 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து தற்போது 2500 ரூபா அறவிடப்படுவதாகவும் இது ஜனவரி முதல் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை மிதிபலகை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் பயணிப்போருக்கு எதிராகவும் ரயில்வே திணைக்களம் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை மிதிபலகையில் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்திருப்பதாகவும் ராகம ரயில் நிலையத்திலேயே அதிகமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More
avathani Media Network

20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்


எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் தொடர்பான பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

2013ம் ஆண்டு முதல் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டம் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன்படி இந்த வருடத்தில் நூற்றுக்கு 70 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்தில் இதனை நூற்றுக்கு நூறு வீதமாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த நோய்த் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளை இனம்கண்டு உரிய பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், குழந்தைக்கு எச்.ஐ.வி வரமல் பாதுகாக்க முடியும். 

இதேதேளை எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு பிரசவம் நடைபெற்று முடிந்துள்ளதோடு, பிரசுவிக்கப்பட்ட குழந்தைகள் எவரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும் சிசிர லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Read More
avathani Media Network

இராமர் பாலம் அமைக்கும் தேவை அரசுக்கு இல்லை

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லையென்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வித்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
செய்தி எதுவும் இல்லாதிருக்கும் எதிர்க்கட்சியினர் செய்தியை உருவாக்குவதற்காக  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்படவிருப்பதாக பிரசாரங்களை செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.
நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த உதய கம்பன்பில, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.
இராமர் பாலத்தை மீண்டும் அமைக்கப் போவதாக இந்திய அரசியல்வாதிகளே கூறியுள்ளனர். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. தனது இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடைபெறவில்லையென பிரதமர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அது மாத்திரமன்றி இரு நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கவேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை ஆரம்பித்தனர். அத்திட்டம் உயிர் பல்வகைமைக்கும், இயற்கைக்கும் பாதிப்பாக அமையும் என்பதால் அதனை கைவிட்டனர். அதேபோல இந்த இராமர் பாலத் திட்டமும் கைவிடப்பட்டுவிடும் என்றார்.
அரசியல் ரீதியாகத் தொங்கிக் கொள்வதற்கு எந்தவிடயமும் இல்லாதிருக்கும் எதிர்க்கட்சியினர் இந்திய விரோத பிரசாரங்களை முன்னெடுத்து மீண்டும் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.
Read More