Featured Home (TOP)

Recent Comments

Sunday, January 10, 2016

avathani Media Network

நவமணி அலுவலகம் தாக்குதல் சம்பவம் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் கண்டனம்

ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளின் விடாமுயற்சியின் மற்றுமொரு முயற்சிதான் நவமணி செய்தித் தாபனம் தாக்கப்பட்டமையாகும்.

நவமணி அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் கலாபூஷணம், கலை, இலக்கிய வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் விடுத்துள்ள கண்டண அறிக்கை.

பயங்கரவாதத்தினாலும் வர்க்க முரண்பாட்டினாலும் செயற்படுத்த முடியாமற் போன நீறு பூத்த காரியங்களை இனக்குரோதத்தால் சாதிக்க முற்படும் சக்திகள் நிச்சயம் தமது முயற்சியில் முதுகெலும்பால் முறிக்கப்படுவர்.

நல்லாட்சியின் மூலம் சமூக விழுமியங்கள் உயிர்ப்பித்து உசுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முருங்கை மரத்தில் படர்ந்திருக்கும் மயிர்க்குட்டிகள் போன்று அருகில் செல்வோரை மயிர்க்கூச்செறியச் செய்யும் நிலை ஓலைக் கூந்தலினால் தாவப்படும் புகைக்கு ஈடு கொடுக்க முடியாமற் சுருண்டு விழுந்து கருகுவதைப் போல் ஆகும். என்பதை ஊடகத்துறை மீதும் கடந்து சென்ற வரலாற்று அடிச்சுவடுகளைக் கண்டறிந்து அனுபவப்பட்டவர்களினதும் நம்பிக்கையாகும்.

ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் எண்ண வெளிப்பாடுகளை அடக்கி ஒடுக்க நினைத்தவர்கள் அடைந்து கொண்ட தோல்வியின் ஓராண்டு நிறைவின் சதி நாசகார வேலைகள் பௌதீக வளங்களை சேதப்படுத்தமே தவிர உள்ளத்திலிருந்து பீறிப்பாயும் உணர்வுகளை ஒரு போதும் காயப்படுத்த மாட்டாது.

இன்ஷா அல்லாஹ் நவமணியின் எழுச்சி அதன் வளர்ச்சி சமூக மேலாண்மைக்கான அது தேர்ந்தெடுத்துச் செல்லும் பாதையில் எவ்வித தடங்கல்கள் வந்தாலும் அதனை தூக்கி விடுவதற்கு லட்சோப லட்சம் கரங்கள் பிணைந்து கொள்ளும் என்பதில் அபார நம்பிக்கை உண்டு.

Read More
avathani Media Network

NFGG நடாத்திய விஷேட மக்கள் சந்திப்பு.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பும் ஆதரவாளர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வும் 09.01.16 (சனிக்கிழமை) நேற்றைய தினம்  NFGGயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
NFGGயின் கிழக்குப்பிராந்திய செயலாளர் MACM.ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியளாளர் MM அப்துர்ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் அஷ;nஷய்க் முஹம்மட் நஜா, தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மஷ;ஹுர், தலைமைத்துவ சபை உறப்பினர்களான DR.SMஸாஹிர், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. ILM ரிபாஸ் மற்றும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், NFGGயின் ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தியதான செயற்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக, ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மக்கள் சந்திப்பில், NFGGயின் தவிசாளர் உட்பட அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். நல்லாட்சி மாற்றம் ஒன்றிற்காக முழுமையாகவும் முஸ்லிம் சமூகம் சார்ந்து முதன்மையாகவும்  அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர்கள் என்ற அடிப்படையில், இந்நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவது குறித்தும் இந்நிகழ்வில் நினைவுகூறப்பட்டது.இது தொடர்பான NFGG யின் ஊடக அறிக்கையும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட  ஆதரவாளர்களின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்குமான நேரமும் வழங்கப்பட்டது. இதன்போது எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போட்டியிட வேண்டியதன் அவஷ;யம் குறித்து பல புத்திஜீவிகளும் ஆழமான பல கருத்துக்களை வெளியிட்டனர். இறுதியில் கலந்து கொண்ட ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்களினால் சிறப்புரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. இராப்போசன நிகழ்வுடன் இம்மக்கள் சந்திப்பு நிறைவு பெற்றமை குறிப்படத்தக்கது.


































Read More
avathani Media Network

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 6 மாதங்களுக்குள்

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அத்துடன் முதல் மூன்று மாதங்களுக்குள் மக்களின் கருத்துக்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Read More
avathani Media Network

பட்டதாரிகள் 3500 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானம்

பட்டதாரிகள் 3500 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பட்டதாரிகளை அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு உள்வாங்கப்படாதவர்களை இவ்வாறு இணைத்துக் கொள்ளவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே கூறினார்.

அவர்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளை கவனத்திற் கொண்டு நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளின் பின்னர் குறித்த குழுவினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை நாளை மறுதினம் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதன் கீழ் மேன்முறையீடு செய்த மற்றுமொரு குழுவினர் எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
Read More
avathani Media Network

உலகிலே பெறுமதி வாய்ந்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியேற்ற தடை?

உலகிலே  பெறுமதி வாய்ந்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுங்க திணைக்களத்தினரையும் அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் அசங்க வெலகெதர, எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அண்மையில் இரத்தினபுரி பகுதியில் 281 கிராம் நிறைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த நீலக்கல்லின் பெறுமதியை நிர்ணயிக்க முடியாதுள்ளதாக, அதனை ஆய்வுசெய்த கொழும்பு இரத்தினக்கல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் அதன் உரிமையாளரான இலங்கையர், அதனை 4 ஆயிரத்து இருநூறு கோடிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அவர் அதற்கு “இலங்கையின் ஆதாம் நட்சத்திரம்” என பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இரத்தினக்கற்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.
Read More
avathani Media Network

ஹெரோயினுடன் ஒருவர் கைது : இதன் பெறுமதி 1 கோடி ரூபாவிற்கும் அதிகம்

மாளிகாவத்தை பகுதியில் ஒருதொகை ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More
avathani Media Network

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -


(ஜுனைட் நளீமி)
மாதத்திற்கு இருவர் என்ற ரீதியில் ஐ.எஸ் அமைப்பில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொள்வதாக அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச மையத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ள கருத்து ஊடகங்களில் இடம்பிடித்துள்ளதை அவதானிக்க முடிக்கின்றது. 

இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த தீவிரவாத செயற்பாடுகள் முடுக்கிவிடப்படும் போதெல்லாம் இவ்வாறான கருத்துக்கள் கலாநிதி குணரட்னவினால் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. 

2014 மே மாதம் இந்திய குண்டுவெடிப்புடன் தொடர்பாக இலங்கையைச்சேர்ந்த சாகிர் ஹுசைன், சிவபாலன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது சாகிர் ஹுசைனை சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பொதுபல சேனாவிற்கு உப்பிட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கது. 

தற்போது 'சிங்க்ஹல லே' விவகாரம் விஷவரூபம் எடுத்துள்ள நிலையில் ரொஹான் குணரத்னவின் கருத்து முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தாக்குவதாக அமைந்துள்ளது. சாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டபோது இந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்களின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற புரளியை கிளப்பிவிட்டது போன்று இலங்கையிலும் இஸ்ரேல் தூதரகம் அமையப்பெற்றுள்ள தற்போதய நிலையில் ரொஹான் குணரத்னவின் கருத்து ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். 

கலாநிதி ரொஹான் குணரத்ன ஒரு எழுத்தாளராகவே இலங்கையில் காணப்பட்டதுடன் 1984 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசகராக கடமையாற்றியதுடன், உலகவங்கி, யூ.எஸ். எய்ட் நிறுவனங்களிலும் ஆலோசகராக கடமையாற்றினார். இலங்கை அரசு, இலங்கை புலனாய்வு துறையுடன் நெருங்கி செயலாற்றுபவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த போதும் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்துவதில் இவரது நூட்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளமையை அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானில் தலிபான்களால் பமிங்க்யான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்ட பின்னர் முஸ்லிம் விரோத போக்கு இவரது எழுத்துக்களில் காணப்பட்டமையை அவதானிக்க முடியும். 

குறிப்பாக இரட்டைக்கோபுர தாக்குதல்களின் பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷஷன் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற எண்ணெய்க்கான யுத்தத்தில் அவுஸ்திரேலியாவை கூட்டணியில் உள்வாங்குவதற்கு இஸ்லாமியப்பயங்கரவாதம் என்ற புதிய தொனியை நம்பகப்படுத்தி ஆப்கானில் கால்பதிக்க கலாநிதி ரொஹான் குணரத்ன அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டார். இவரது பயங்கரவாதம் குறித்த பல்வேறு கருத்துக்களும் ஆய்வுகளும் பெரும்பாலானவை வெறும் யூகங்க்கலாகவே அமைந்திருந்தன என்பதனை பல்வேறு இராணுவ ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.. உதாரணமாக மலேசிய அரசுக்கும் பிலிப்பைனின் மோரோ இஸ்லாமிய இயக்கத்திற்கும் தொடர்பு காணப்படுவதாக ரொஹான் குணரத்ன குறிப்பிட்ட பின்னர் தமது கருத்துக்களை மாற்றியமைத்தமையும், பாளி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஹம்பாலி என்பவர் அவுஸ்த்ரேலியாவிற்கு பலதடைவகள் வந்து சென்றிருப்பதாக தமது நூலில் குறிப்பிட்ட பின்னர் அவுஸ்திரேலிய துறை புலனாய்வினை மேற்கொண்டு மேற்படி குணரத்னவின் கருத்து உன்மைகலற்றது என குறிப்பிட்டமையும் என பல்வேறு உதாரணங்களை விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் குணரத்னவின் இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடு குறித்த கருத்துக்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ் வாங்கப்பட்ட பின்னர் தெற்காசியாவில் புதிய தளங்களை உருவாக்க வேண்டியநிலையில் அமெரிக்கா உள்ளது. மாலைதீவு தளம் அமைப்பதற்கான அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. சீன, இந்திய பிராந்திய ஆதிக்க சக்திகளை எதிர்கொள்வதற்கு பௌதீக ரீதியில் இலங்கையைத் தவிர பொருத்தமான இடம் வேறொன்றும் இல்லை என்பது எவரும் அறிந்த விடயம். என்ற போதும் சீன ஆதிக்கம், ரஷÊயாவின் சமகால பிராந்திய அச்சுறுத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் அமெரிக்க சார்பு தளங்களையும் இராணுவ நிகழ்ச்சித்திட்டங்களையும் தெற்கசியப்பிராந்தியத்தில் உருவாக்குவதற்கான அவசர தேவையாக அமைந்துள்ளது. எனவேதான் ஏற்கனவே அமெரிக்க பின்புலத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆசிய- பசுபிக் பிராந்திய பயங்கரவாத குழுக்கள் தொடர்பான ஆய்வு மையம் ஒன்றினை அமைப்பதுடன் அதனூடாக பிராந்திய நாடுகளுக்கு பயங்கரவாதம் என்ற புரளிகளை கட்டவிழ்த்து அமெரிக்கஇ இஸ்ரேல ஆதிக்கத்தினை காலூண்டச் செய்வதற்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே தற்போது கலாநிதி குணரட்னவினால் ஐ.எஸ் பயங்கரவாதம் இலங்கையில் காலூன்ருகின்றது என்ற கருத்து திட்டமிட்டு பரப்ப படுகின்றது. 

சாகிர் ஹூசைன் கைது செய்யப்பட்டதுடன் பாக் தீவிரவாதிகள் இஸ்ரேல், அமெரிக்க தூதரகங்க்களை இந்தியாவில் வைத்து தாக்க திட்டமிட்டுள்ளனர் என்ற கதையாடல்கள் அமெரிக்காவை இலங்கைக்குள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற போர்வையில் சுதந்திரமாக தளம் அமைத்து செயற்பட வழியமைக்கும் முன்னேற்பாடாகவே அமைந்ததுபோனÊறு அண்மையில் இலங்கையில் அமைக்கப்பட்ட இஸ்ரேலிய தூதரக நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தின் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவே கலாநிதி குணரட்னவினÊ கருத்து அமைந்துள்ளது.

எது எவ்வாறிருந்த போதும் இலங்கை முஸ்லிகள் ஒரு போதும் பயங்கரவாதத்திற்கு துணைபோவதற்கு தயாராக இல்லை என்பது யதார்த்தமானதாகும். அதே போன்று சமூகத்தில் சுயநலனÊ;களுக்காக சமூகவிரோதச்செயல்களிலும், குற்றச்செயல்களிலும் ஈடுபாடுடயவர்களை அவதானமாக அடையாளம் கண்டுகொள்ள முயற்சிப்பதுடன் அத்தகைய நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெருமிடத்து பாதுகாப்புத்தரப்புக்கு தெரியப்படுத்துவதும் கடமையுமாகும்.
Read More
avathani Media Network

எச்.என்.டீ.ஏ மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

கடந்த வருடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எச்.என்.டீ.ஏ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த எட்டு மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கருவாத்தோட்டம் காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வழங்கிய விளக்கமளிப்பின் அடிப்படையில், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்கள் எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ம்திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காவற்துறையினர் வரம்பை மீறி செயற்பட்டதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்க வேண்டும் என்றும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

2015இல் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு

2015ஆம் ஆண்டு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 14 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு 5 இலட்சத்து 46 ஆயிரத்து 379 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஆண்டு தோறும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கும் இடைப்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆண்டுதோரும் 165 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிதியொதிக்கீடு ஆண்டுதோரும் ஓய்வுதியம் பெறுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதியும் அதிகரிப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹிந்தவுக்கு 100 பக்க கடிதம் : திருமண வைபவங்களுக்கு செலவிட்டமை குறித்தும் கேள்வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தின் போது மேற்கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் செலவுகள் போன்றவற்றை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி 100 பக்கங்களைக் கொண்ட கடிதமொன்றை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மஹிந்த ராஜபக் ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்குமாறு வலியுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு பதவியிலிருந்து வெறியேறிய வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் செலவுகளை வழங்குமாறு அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் திருமண மற்றும் மரண சடங்கு நிகழ்வுகளுக்கு சென்று செலவிட்ட விபரங்கள் மற்றும் கொள்வனவு செய்த மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் வகைகள் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களின் விபரம் தற்போதுள்ள சொத்து விபரம் போன்றவற்றின் விபரங்களையும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More