Featured Home (TOP)

Recent Comments

Wednesday, April 22, 2015

Unknown

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துங்கள் : மனோ,ஆசாத்,விக்ரமபாகு கோரிக்கை

19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் கூறியதாவது,      
 
சுடுநீரில் விழுந்த நண்டுகளை போல் நேற்று முதல் நாள் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்  சபையில் நடந்துக்கொண்டுள்ளார்கள். பானை நீரில் நண்டுகளை போட்டு அடியில் தீயை பற்ற வைத்தால், ஆரம்பத்தில் மிதமான நீரில் நண்டுகள் குதூகலமாக நடனமாடும். ஆனால், நீரின் உஷ்ணம் அதிகரித்தவுடன், இந்த நடனம் நின்று, ஒப்பாரி ஓலம் கேட்க தொடங்கும். இதுதான் அன்று மகிந்த ஆட்சியில் நடனமாடிய நண்டுகளுக்கு இன்று நடக்கின்றது.
 
எமது நல்லாட்சியின் பொருளாதார குற்றவியல் விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் இன்று, எட்டு முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் முடிவுக்கு வந்துள்ளன. இவர்களில் சிலர் அடுத்த சில வாரங்களில் கைதாவார்கள். இந்த உண்மை இவர்களுக்கு தெரியும். இவர்களால் இன்று நாட்டை விட்டு தப்பி ஓடவும் முடியாது. அப்படியே ஓடினாலும், இன்று உலகில் இவர்கள் ஓடி ஒளியவும் முடியாது. இன்டர்போல் மூலம் மீண்டும் இங்கேயே கொண்டு வரப்படுவார்கள் என்பதும் இவர்களுக்கு தெரியும்.
 
தமது குற்றங்களுக்காக கூண்டோடு கூட்டில் அடைபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது இவர்களுக்கு இன்று தெரிகிறது. பாராளுமன்ற சபையின் கெளரவத்தை சின்னாபின்னாபடுத்தும், இந்த சப்தமும், ஆர்ப்பாட்டமும் இதனால்தான் நடந்தது. எங்கள் மீது கை வைக்காதீர்கள். கை வைத்தால், பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம். நாட்டை நடத்த விட மாட்டோம். 19ம் திருத்தத்தை சட்டமாக்க விட மாட்டோம் என்றெல்லாம் சூடு தாங்க முடியாமல் இந்த நண்டுகள் இன்று கூவுகின்றன. 


 
18ம் திருத்தத்தை ஆதரித்து மகிந்த ராஜபக்சவை நாட்டின் சர்வதிகாரியாக்கிய மகாபாவம் செய்த பாராளுமன்றமே இந்த பாராளுமன்றம். அன்றைய ஆளும் கட்சியில் இருந்தும், எதிர்கட்சியில் இருந்த விளக்கு வாங்கப்பட்ட சிலரும் சேர்ந்து மகிந்தவுக்கு முடி சூட்டினார்கள். இதில் ஒருசிலர் எங்களுடன் சேர்ந்து இன்று பாவமன்னிப்பு பெற்றுள்ளனர். மீதியுள்ள கூட்டத்தில் இருக்கின்ற எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இனி மன்னிப்பு கிடையாது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுத்தர மக்கள் காத்திருக்கின்றனர்.
 
எனவே, நாட்டை பணயக்கைதியாக பிடித்து வைத்திருக்கும், இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு சென்று புதிய பாராளுமன்றத்தை அமைப்போம் என நாம் ஜனாதிபதி அவர்களிடம் கோரியுள்ளோம். அதையே இங்கும் கோருகிறோம்.

- Virakesary
Read More
Unknown

100நாள் முடிவடைகின்றது: ஜனாதிபதி நாளை விசேட உரை


அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் நாளையுடன் முடிவடைவதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளார்.

இத்தகவலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின்   100 நாள் வேலைத் திட்டம் நாளையுடன் முடிவடைகின்றபோதும் வேலைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More
Unknown

2014ம் வருடம் G.C.E. O/L 9 “A” சித்தி பெற்ற மாணவர்கள் தேசிய ரீதியாக பாராட்டு விழா – 2015. ‘9 A’ மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் வழமை போல் இவ்வாண்டும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதி உயர் சித்தி ( 9 ‘A’ ) பெற்ற மாணவர்களை தேசிய ரீதியாக பாராட்டுகின்ற நிகழ்வை அதன் தலைவர் அல்ஹாஜ் M.Z. Ahamed Munawwer அவர்களின் நெறிப்படுத்தலின் கிழ் மிகவும் கோலாகலமாக எட்டாவது முறையாக நடாத்தப்படவுள்ளது.
Read More
Unknown

முஸ்லிம் காங்கிரஸ் – மக்கள் காங்கிரஸ் = ஹிஸ்புல்லாஹ்


(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் தொலைபேசியில் இன்றிரவு (21) நீண்ட நேரம் உரையாடினேன். இருவரும் சின்ன வயது நண்பர்கள் என்ற அடிப்படையில் தனிப்பட்ட விடயங்கள், உட்பட இன்னோரன்னவை என கருத்துகளை மாறிக் கொண்டிருந்தோம்.
திடீரென நான் அரசியல் பக்கம் பாய்ந்து சில கேள்விகளைத் தொடுத்தேன். நீங்கள் இப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இல்லைதானே? எனவே சிங்கள தேசிய கட்சிகளில் இணைந்து எமது சுயத்தை இழந்து விடாமல் உங்களது தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டேன்.
அவ்வாறு நான் கூறியதற்கு சீற்றமுற்றவராக அது கடைசி வரையும் நடக்காது சித்தீக். இது சத்தியம் என்றார்.
Read More
Unknown

காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் பச்சை அணி அபார வெற்றி

-ஏ.எல்.டீன் பைரூஸ்-

காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின்  சிரேஷ்ட கனிஷ்ட வீரர்களுக்கு இடையிலான சினேக பூர்வ கால்பந்தாட்டப் போட்டி யொன்று அண்மையில் காததான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது

மேற்படி கழகத்தின் வீரர்கள் பச்சை நீலம் என இரு அணிகளாக  பிரிக்கப்பட்டு சகல வீரர்களும் உள்ளடக்கப்பட்டதாக மேற்படி போட்டி இடம் பெற்றதுடன் இப்போட்டி 2-0 என்ற அடிப்படையில் பச்சை அணி வெற்றி பெற்றது.

காத்தான்குடியில்  உள்ள கழகங்களில் சன்றைஸ்  விளையாட்டுக் கழகம் அதிகமான வீரர்களை கொண்ட கழகம் என்பதும் குறிப்படத்தக்க விடயமாகும்.

இக் கழகத்தின் தற்போதைய தலைவராக எஸ்.எம்.பீ.எம்.றமீஸ் செயல்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Read More
Unknown

காத்தான்குடி சம்மேளன கல்விக்குழுவின் காத்திரமான பணிகள் தொடர்கின்றது...

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு (21.04.2015 செவ்வாய்) சம்மேளன அஷ்-ஷஹீட் அஹமட்லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் சட்டத்தரணி ஏ.எல்.ஏ.அப்துல்ஜவாத் தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 30 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் போது சம்மேளன  குழுவின் உறுப்பினர்களான யூ.எல்.எம்.என்.முபீன், அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.சபீல் (நழீமி), மட்டக்களப்பு மத்தி பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.பதுர்தீன் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.
Read More
Unknown

தொழிற்சந்தையும் கல்வி கண்காட்சியும்2015


தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு நடத்தும் தொழிற் சந்தையும் கல்விக் கண்காட்சியும் 2015 ஆம் ஆண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை(நாளை ) காலை 08.30 மணி முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இத் தொழிற்சந்தையில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்களது சுய விபரக் கோவையுடன் இத் தொழிற்சந்தையில் கலந்து கொள்ளுமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு பட்டதாரிகளை அழைக்கிறது.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
Unknown

மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரும் எம்.பிகள்: மீண்டும் அரசியலில் சூறாவளி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான முனைப்புக்கள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
Read More
Unknown

இன்று உலக பூகோள தினம்

பூகோள தினம் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ஆம் திகதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
“சூழலை பாதுகாப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் உலக பூகோள தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சூழல் மாசடைவதை தவிர்ப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதே பூகோள தினம் அனுஷ்டிப்படுவதன் முக்கிய நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மஸ்ரீ தெரிவிக்கின்றார்.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று (22) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
-newsiirst
Read More
Unknown

28இல் 19ஐ நிறைவேற்ற முடியாவிடின் பாராளுமன்றத்தை கலைப்போம் : அரசாங்கம் திட்டவட்டம்

எதிர்­வரும் 28ஆம் திகதி 19ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற முடி­யாமல் போனால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என அறி­வித்த அர­சாங்கம் சட்டச் சிக்­கல்­களில் சிக்­கிக்­கொண்­டுள்ள சில எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களே 19ஐ நிறை­வேற்­று­வதை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­களின் பின்னால் செயற்­ப­டு­கின்­றனர் என்றும் குற்றம் சாட்­டி­யது.
பாரா­ளு­மன்­றத்தின் ஆளும் கட்சி கொற­டாவின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நன்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அர­சாங்கம் சில அறி­விப்பை விடுத்­தது.
Read More