Featured Home (TOP)

Recent Comments

Friday, June 26, 2015

Unknown

விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனமும் லன்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து புதிய காத்தான்குடி அப்ரார் நகர் பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

மேற்படி விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளிவாயல் முன்றலில் 25-நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

அப்ரார் பள்ளிவாயல் செயலாளர் எம்.எஸ்.எம்.றாஸிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனத்தின்; பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  கலந்து கொண்டு புதிய காத்தான்குடி அப்ரார் நகர் பிரதேசத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு 7500.00 ரூபா வீதம் பணத்தை கையளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் பரீட்,பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் சிரேஷ்ட புதல்வர் ஹிறாஸ் அஹமட், ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர்கள் உட்பட அப்ரார் பள்ளிவாயல் நிருவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.















Read More
Unknown

வா இம்முறையாவது ஏதாவதுக்காய் !

(கவிஞா் – காத்தூரி)

இதயம் கனத்திருக்கிற
மானுட வாழ்வின்
இறுக்கம் தளர்த்த
இறையின் பரிசாய்
வந்து கொண்டிருக்கிறாய்
வாழ்வின் தீயே !

உன் உஸ்னங்களால்
பொசுங்கட்டும் எம்
பாவங்களும்
படடோபங்களும்.

இறுமாப்பின் எச்சங்களைக்கூட
எரித்துவிடு இதயத்தின்
ஓரத்திலிருந்தும்.

ஒவ்வொரு ஆயுளின்
வருடந்தோறும் வந்துபோகிறாய்
கடந்த நோன்புகள்
கனக்கவிருக்கிறது
நாம் கைவிட்ட பாவங்கள்
கணக்கில்வருமா?

நபிவழி தொழுகை
நபிவழி நோன்பு
நபிவழி ஹஜ்ஜு
நமக்கு சொல்ல
நாலுபேருண்டு
நபிவழி நேர்மை
நபிவழி நீதி
நபி வழி சத்தியம் காத்தல்
சொல்லித்தருவாயா?
இறையின் பரிசே !

உண்மையும் ஒழுக்கமும்
சகோதரத்துவமும்
சார்பியம் நீக்கியே
சாட்சியமளித்தலும்
சலனமேயின்றி
சத்தியமுரைத்தலும்
நீதிக்காய் குரலும்
நித்தமும் உரைத்திட
சித்தத்தில் உறுதி
சித்திக்கச் செய்வாயா
மாண்புறு நோன்பே!

எத்தனை நோன்புகள்
நாம் கடந்தாலும்
மாற்றம் வந்தது
ஆயுளில் மட்டும்தான்
சிந்தனைப் போக்கு
மாறாதிருக்க வெறும்
மாதம் கடப்பதில்
மகத்துவம் வருமோ   ?

மாறாத மனிதரிடை
மாற்றம்  விதைக்க
வருகின்ற நோன்பே
வாழ்வின் எழிலுக்காய்
உன்னை வாழ்த்தி
 வரவேற்கிறேன்!

Read More
Unknown

20 நிறைவேறிய பின்னரே பாராளுமன்றம் கலைப்பு அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித அறிவிப்பு

தேர்தல் முறை­ மாற்றம் தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறை­வே­றிய பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். யாரு­டைய தேவைக்­கா­கவும் நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயார் இல்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

20 ஆவது திருத்தம் தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சிகள் முரண்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை. யார் எதிர்த்­தாலும் அதனை நிறை­வேற்­றியே தீருவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
வாராந்த அமைச்­ச­ரவை முடிவு களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது;
பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வதை அனை­வரும் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட முன்னர் சில முக்­கிய வேலைத்­திட்­டங்­களை நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது. ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த நாம் மிகவும் போரா­டினோம். எமது உயிர்­களை பணயம் வைத்து மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­தினோம். அதன் பின்னர் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைப்­பது தொடர்பில் நாம் தீர்­மானம் எடுத்து அதை செய்து முடித்­துள்ளோம்.

அதேபோல் நாம் தீர்­மா­னித்த இரண்­டா­வது முக்­கிய விட­ய­மான தேர்தல் முறைமை மாற்­றத்­தையும் நிறை­வேற்ற வேண்டும். தேர்தல் முறைமை மாற்றம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் கடந்த காலத்தில் இருந்து பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் முன்­னைய எந்த அர­சாங்­கமும் தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வருவதற்கு விரும்­ப­வில்லை.

ஆனால் எமது ஆட்­சி­யி­லா­வது சரி­யான மாற்றம் ஒன்றை கொண்­டு­வந்து நாட்டின் அர­சியல் பாதையில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­விட வேண்டும். எனவே தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை கலைப்பார். எப்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என்­பது சரி­யாக குறிப்­பிட முடி­யாது.

கேள்வி :-எனினும் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சிகள் அதிருப்­தியில் உள்­ள­னவே ?

பதில் தேர்தல் திருத்தம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். அதை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை. ஆனால் இன்று தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் முரண்­படும் எவரும் சிறு­பான்மை மற்றும் கொள்­கை­வா­தி­களின் தலை­வர்கள் அல்ல. வெறு­மனே கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனை­வ­ரையும் தலை­வர்கள் என்ற வட்­டத்­துக்குள் கொண்­டு­வந்­து­விட வேண்டாம்.
தேர்தல் திருத்தம் தொடர்பில் யோச­னை­களை முன்­வைத்த போது அனை­வ­ரதுகருத்­துக்­க­ளையும் நாம் வின­வினோம். நாம் முன்­வைத்த யோச­னைக்கு மாறாக மற்­றைய யோச­னை­க­ளையும் கேட்டோம். மாற்றுக் கருத்­து­களை முன்­வைத்தால் மட்­டுமே சரி­யான தீர்­மானம் எடுக்க முடியும். ஆனால் மாற்றம் ஒன்றை விரும்பும் இவர்கள் அதற்­கான யோச­னை­யினை முன்­வைக்க தயா­ராக இல்லை. இப்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்கும் தேர்தல் திருத்தச் சட்­ட­ மூலமானது ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இதுவே சாத­க­மான தீர்­மா­ன­மாகும்.

கேள்வி :- எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் உங்­க­ளது தீமா­னத்தை ஆத­ரிக்­க­வில்­லையே ?

பதில் :- அப்­படி வெளிப்­ப­டை­யாக கூற முடி­யாது. ஆரம்­பத்தில் அவர்கள் முரண்­பட்­டாலும் பின்னர் இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் அவர்­க­ளது ஆத­ரவை தெரி­விக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். அமைச்­சர்­க­ளது ஆத­ர­வுடன் தான் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுத்து வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­ப­டது. ஆகவே ஐக்­கிய தேசியக் கட்சி 20ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு எதிப்பு என்று ஆணித்­த­ர­மாக கூற முடி­யாது.

கேள்வி :-பாரா­ளு­மன்­றத்தில் 20க்கு எதிர்ப்பு வரு­மாயின் ?

பதில் :- அதைப்­பற்றி நாம் கவ­லைப்­ப­ட­வில்லை. 19அவது திருத்தச் சட்டம் கொண்­டு­வந்த போது முந்­திக்­கொண்டு வாக்­க­ளித்­த­வர்கள் ஏன் 20ஐ கொண்­டு­வ­ரு­வதில் பின்­நிற்­கின்­றனர். ஏனெனில் 19 ஆவது திருத்தும் வேறு ஒரு தனி நப­ரது அதி­கா­ரத்தை மட்­டுமே பறிக்­கின்­றது. ஜனா­தி­ப­தியின் அதிகாரங்களை குறைப்பதை அனை­வரும் விரும்­பு­வார்கள். ஆனால் 20ஆம் திருத்தச் சட்­டத்தின் மூலம் தத்­த­மது பலம் குறையும் நிலைமை வந்­ததும் அதை எதிர்க்­கின்­றனர்.

எனவே இதை எதிர்க்கும் அனை­வரும் சுய­ந­ல­வாத அர­சி­யல்­வா­தி­க­ளே­யாவர். இவர்­களால் மக்­க­ளுக்கு எந்தப் பயனும் இல்லை. 20ஐ கொண்­டு­வ­ரு­வதால் அவர்­க­ளுக்கு மட்டும் அல்ல எமக்கும் பாதிப்பு உள்­ளது. ஆனால் இப்­போது தனி நபர்­க­ளது சுய­ந­லத்தை கவ­னத்தில் கொள்­ளாது சரி­யான மற்­றதை ஏற்­ப­டுத்த வேண்டும். இந்த விட­யத்தில் சிறு­பான்மை கட்­சிகள் மட்டும் அல்ல ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்த்­தாலும் அதைப்­பற்றி நாம் கவ­னத்தில் கொள்­ளப்­போ­வ­தில்லை. நாம் பாரா­ளு­மன்­றத்தில் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்றிக் காட்­டுவோம்.

கேள்வி :- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றவே 20 கொண்­டு­வ­ரு­வ­தாக சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் குற்றம் சுமத்­து­கின்­றனவே?

பதில் :- எமது கட்­சியின் பலத்தை அதி­க­ரிக்க மட்­டுமே தேர்தல் முறைமை மாற்றம் கொண்டு வரு­வ­தாயின் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்சிகள் ஏன் அன்று எம்முடன் கைகோர்த்தார்கள். ஜனாதிபதித் தேர்தலின்போது பிரதான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே நாம் களத்தில் இறங்கினோம். அவ்வாறு இருக்கையில் இன்று 20ஐ எதிர்க்கும் அனைவரும் அன்று எதற்காக எம்முடன் கைகோர்த்தனர். நாம் வாக்குறுதி கொடுத்ததை இன்று செய்து வருகின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.

Read More
Unknown

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்தில் 18 வேலைத் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுப்பு ..


100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 10 இலட்சம் ரூபாய் என்ற வேலைத் திட்டமானது காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வேலைத்திட்டம் என்ற வகையில் 18 வேலைத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ் வேலைத் திட்டங்களானது முன்னைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் தீர்மானித்து அமுல்படுத்துகின்ற சுயலாப அபிவிருத்திற்கு அப்பால் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லாட்சியின் கீழ் மக்களிடம் கேட்டறிந்து மக்களுடைய விருப்பத்திற்கு இணங்கவும் செலவு செய்யப்படுகின்ற பொதுப் பணம் என்பது விரயமில்லாமல் மக்களுடைய தேவையை நூறு வீதம் திருப்தி அடைய செய்யும் விதத்தில் முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டங்களானது மக்களால் தீர்மானிக்கப்பட்டு அவ் வேலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

இது நல்லாட்சிக்காக பாடுபட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாகும், இந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் 9 வீதி செப்பனிடும் வேலைகள், 3 பலநோக்கு கட்டிடங்கள், 4 வடிகான் அமைப்பு மற்றும் வடிகான்களுக்கு மூடியிடும் வேலைகள், 2 பொது மயானங்களை துப்பரவு செய்து அழகுபடுத்துகின்ற வேலைத்திட்டங்கள் என 18 வேலைத்திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

செயற்படுத்தப்படுகின்ற இவ் வேலைத்திட்டங்கள் அதியுயர் தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களை இவ்வாறான வேலைத்திட்டங்களில் தங்களை நுழைவித்து இது சம்பந்தமான விழிப்பூட்டல்களை பெறவேண்டும் என்பதற்காகவும் நேற்று வியாழக்கிழமை (25.06.2015) நடைபெற்ற 18 வேலைத் தளங்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விஜயம் செய்து நேரடியாக வேலைகளை பார்வையிட்டார. இதன் மூலம் சிறந்த பயனுள்ள பெருபேருகளை எதிர்காலத்தில் அடைய முடியும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

(ஜுனைட்.எம்.பஹ்த் )





Read More
Unknown

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

(இன்பாஸ் சலாஹூதீன்)

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் நலன்புரி அமைப்பு வருடா வருடம் ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு பொலிஸ் திணைக்கள கேட்போர் கூடத்தில் பொலிஸ் மா அதிபர் இளங்க கோன் தலைமையில் இ;டம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொண்டார். நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியூதின் , இராஜங்க அமைச்சர் ஹஸன் அலி. பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி மற்றும் பராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம், முத்தலிப் பாவா பாறூக், பைசர் முஸ்தபா,மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி, கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே எம் முசம்மில் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர், வெளசாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் ,ஊடகவியலாளர்கள்,நீதிபதிகள்  என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிராத் மற்றும் மார்க்க சொற்பொலிவு நடத்தியவர்களுக்கு பொலிஸ் மா அதிபர் நினைவுச் சின்னம் வழங்கினார்.

அத்துடன் பொலிஸ் திணைக்களம் நடத்திய வருடந்த இப்பதார் தொடர்பான இறுவட்டு ஒன்றும் அதிதிகளுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கினார்.

பொலிஸ் செவையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ்  அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











Read More
Unknown

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குப் பூட்டு! வைத்தியர்களும், ஊழியர்களும் அடையாள வேலை நிறுத்தம்!! ஆத்தரமடைந்த நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவை முற்றுகை!!! -பொலிசார் தலையிட்டு மக்களைக் கலைத்தனர்-

( ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் )

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக வரஇருக்கும் வைத்திய அத்தியட்சகரின் வருகையை எதிர்த்து, அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும், ஊழியர்களும் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று (25) ஈடுபட்டனர்.

வைத்தியசாலையில் பணியாற்றுவோர் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அறியாது, வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. இதனால் ஆத்தரமடைந்த நோயாளர்களும், பொது மக்களும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை முற்றுகையிட்டதோடு, வைத்தியசாலை உத்தியோகத்தர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்ட நிலை தோன்றியது. இறுதியில் சம்மாந்துறைப் பொலிசாரின் தலையீட்டால் நோயாளர்களும், பொது மக்களும் கலைந்து சென்றனர்.
Read More
Unknown

சிகரம் ஜூம்ஆப்பள்ளிவாயலின்; ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

(எம்.எச்.எம்.அன்வர்)

ஆரையம்பதி சிகரம் ஜூம்ஆப்பள்ளிவாயலின்; ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் விஷேட பயான் நிகழ்வும் இடம்பெற்றது 

ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி ஏ எல் ஷாஜஹான் (பலாஹி) அவர்களால் பயான் நிகழ்த்தப்பட்டதுடன் இதில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்






Read More