Featured Home (TOP)

Recent Comments

Thursday, August 20, 2015

avathani Media Network

தேசியப் பட்டியல் பெயர்களை 26 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்!

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான பெயர்கள் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு வழங்கப்படவில்லை.
தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக நியமிக்கப்படும் பிரதிநிதிகளின் பெயர்களை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்ப்பைப் பெற்றுள்ள கட்சிகளிடம் அதற்கான பெயர் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.
பாராளுமன்றத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய பாராளுமன்றத்தை செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிறுவப்படவிருந்த தகவல் கருமபீடம் திறக்கப்படும் திகதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் கருமபீடத்தை ஆகஸ்ட் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல்கள் மற்றும் ஆவணங்களை விநியோகிப்பதற்காக திறக்கப்படவுள்ள தகவல் கருமபீடம் ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலகுவாக பாராளுமன்றத்தினுள் பிரவேசிப்பதற்காக உறுப்பினர்கள் தமது தேசிய அடையாள அட்டை அல்லது தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வேறு ஆவணங்களை எடுத்துவர வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

தேசியப் பட்டியல் கோரி ஹக்கீமின் வீடு ஆதரவாளர்களால் முற்றுகை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை தமது பிரதேசத்துக்கு வழங்குமாறு கோரி முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் நேற்றுக் காலை முதல் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
திருகோணமலை, புத்தளம், வன்னி, குருநாகல், அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் வாகனங்களில் வந்திறங்கி ஹக்கீமின் வீட்டைச் சூழ்ந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதன் அடிப்படையில் அக் கட்சிக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் குறித்த ஆசனங்களை தத்தமது பிரதேசங்களில் போட்டியிட்டு தோல்வியுற்ற அல்லது வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்குமாறு கோரியே கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்புக்குப் படையெடுத்துள்ளனர்.

ஏலவே கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் மீதமாகவுள்ள ஆசனத்தை எந்தப் பிரதேசத்திற்கு வழங்குவது என்பது தொடர்பில் கட்சியின் உயர் பீடம் கூடித் தீர்மானிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கிடையிலேயே குறித்த ஆசனத்தை தமது பகுதிக்கு தர வேண்டும் எனக் கோரி திருகோணமலை அம்பாறை புத்தளம் குருநாகல் வன்னி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்திக்க படையெடுத்துள்ளனர்.

தேர்தல் பிரசார காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசியப் பட்டியல் ஆசனம் தரப்படும் என சில பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read More
avathani Media Network

தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிப்பு

பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர்களை இன்று (20) வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரச அச்சக திணைக்களத்திற்கு இன்று (20) அனுப்பிவைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கிடைத்ததும் அதனையும் வர்த்தமானியில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
Read More
avathani Media Network

இலங்கையில் 12 பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு:வீழ்ச்சி காணும் பெண்களின் பிரதிநிதித்துவம்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் 8வது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில், 556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்களில், 12 பேர் மட்டுமே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இம்முறை ஒரு பெண் உறுப்பினரேனும் தெரிவாகவில்லை.
இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் தலதா அத்துகோரள 145,828 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்ற 48 வேட்பாளர்களில் தலதா அத்துகோரளவும் இடம்பெற்றுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட வரலாற்றில் பெண் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய விருப்பு வாக்கு இதுவாகும்.
கடந்த முறை  நாடாளுமன்றத்தில் 13 பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

தோல்வியடையாமல் தொடர்ந்து 38 வருடங்களாக எம்.பியாகி சாதனை படைத்தார் ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக 38 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். தொகுதிவாரித் தேர்தல் முறையின் கீழ் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் முதல் தடவையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, 22,045 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக இன்றுவரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் இலங்கையில் தொடர்ச்சியாக 38 வருடங்கள் கடந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே அரசியல்வாதி என்ற பெருமை ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பிரதியமைச்சர், அமைச்சர், சபை முதல்வர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை அலங்கரித்துள்ளார். தற்போது மீண்டும் பிரதமராக நான்கு தடவைகள் பிரதமரான சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.
இவருடன் சமகாலத்தில் அரசியல் வாழ்வை ஆரம்பித்த காமினி ஜயவிக்கிரம பெரேரா இடையில் சிறிது காலம் மாகாண சபை முதலமைச்சராக இருந்துள்ளார். ரணிலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான மஹிந்த ராஜபக்ச, 1977ம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றிருந்தார்.


Read More
avathani Media Network

சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி?

புதி­தாக கூட­வுள்ள நாட்டின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­க­லா­மென அர­சியல் வட்­டா­ரத்தில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
பிர­தமர் பத­வி­யேற்­க­வுள்ள ரணில் விக்­கிர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் தேசிய அர­சாங்கம் ஒன்று அமை­ய­வுள்­ளமை தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தார். இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் புதிய அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வார்­க­ளெ­னவும் அதில் நிமல் சிறி­பால டி சில்­வா­விற்கு பிரதி பிர­தமர் பதவி வழங்­கப்­ப­டு­மெ­னவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இந்­நி­லையில் ஐ.தே.க வும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து புதிய அர­சாங்­கத்தை அமைக்­கு­மாயின் அடுத்­த­தாக அதி­கூ­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிற்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.
இதே­வேளை தேர்தல் வெற்றி குறித்து கருத்துத் தெரி­வித்­துள்ள கூட்­ட­மைப்பின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள மாவை சேனா­தி­ராஜா தாங்கள் புதிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பதவி ஏற்­கப்­போ­வ­தில்­லை­யெ­னவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.
இந்­நி­லையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்­திற்கு வெளியே இருக்கக் கூடிய கட்­சி­களில் அதி­கூ­டிய ஆச­னங்­களை தம்­வசம் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யேற்­படும். அந்­த­வ­கை­யி­லேயே இரா. சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More