Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 3, 2015

avathani Media Network

காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் மாபெரும் இரத்ததான நிகழ்வு..

காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி டெலிகொம் வீதியில் அமைந்துள்ள ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று காலை8.30 தொடக்கம் 03.00மணி  வரை  இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு போதான   வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தம் போதுமான தாக இல்லை நாளாத்தம் இரத்த மாற்று நோயாளிகள் அதிகரித்துச்செல்வதால் இரத்தம் பாரிய அளவு தேவை யாகவுள்ளது.

இதனை கவனத்திற் கொண்டு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்..

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”

(ஜு னைட்.எம்.பஹ்த்)






Read More
avathani Media Network

புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் நடைபெற்ற வகவத்தின் 20வது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் மாதாந்த நிகழ்வான திறந்த வெளி கவியரங்கு கடந்த பௌர்ணமி தினம் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.  

புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார். வகவ ஸ்தாபகத் தலைவர் வைத்திய கலாநிதி தாசிம் அகமது பிரதம அதிதியாக கலந்து புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் பற்றி சிறப்புரையாற்றினார்.

20வது சிறப்புக் கவியரங்கம் கவிஞர் ஈழகணேஷ் தலைமை தாங்க மிகவும் சுவாரஷியமாக நடைபெற்றது. கவிஞர்கள் கலைவாதி கலீல், பிரேம்ராஜ், துபாயிலிருந்து விடுமுறைக்கு  வந்திருந்த கலைநிலா சாதிக்கீன், வெளிமடை ஜஹாங்கீர், கலாபூஷணம் மஸீதா அன்சார், தெல்தொட்டை பாத்திமா இஸ்ரா, கவிக்கமல் ரசீம், எஸ்.தனபாலன், வெலிப்பன்ன அத்தாஸ் ஆகியோர் கவிதை பாடினர்.

கவிஞர் தாசிம் அகமது தனது சிறப்புரையில், “புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் மாணவன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன். தமிழ் இலக்கியத்திலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் பெரும் பாண்டித்தியம் பெற்ற ஷரிபுத்தீன் அவர்கள் தமிழ் மொழியை அட்சர சுத்தமாக உச்சரிப்பதில் புகழ்ப்பெற்றவர்.


அவரது வயதான காலத்தில்கூட அவரது உச்சரிப்பு அவ்வாறே இருந்தது. 1909ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி ஆதம்பாவா, பாத்திமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியுமாகத் திகழ்ந்தார். கல்வி அதிகாரியாக இருந்த வேளையிலும் துவிச்சக்கர வண்டியிலேயே பயணம் செய்பவராக இருந்தார். புதுக்குஷ்ஷாம், சீறாப்புராணம் ஆகியவற்றுக்கு சிறப்பான உரை செய்தவர். விபுலாநந்த அடிகளின் மாணவரான புலவர்மணி யாப்பிலக்கணத்தில் புலியாகத் திகழ்ந்தார். புலவர்மணி ஆ.பெரியதம்பிப்பிள்ளை ஆ.மு.ஷரிபுத்தீனின் வெண்பா படைக்கும் ஆற்றலைக் கண்டு வியந்தார்.

“வெண்பாவில் எனைநீ வென்றாய் ஷரிபுத்தீன்
நண்பாவென் நாமம் உனக்களித்தேன் - பண்பாள
வாழிஅரபு தமிழ் உள்ளவும் வாழிநீ
வாழி நமதன்பு மலர்ந்து” 

எனப் பாராட்டி தனக்கிருந்த புலவர்மணி பட்டத்தை ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களுக்கும் சூட்டி மகிழ்ந்தார். 

புகழ்ப்பெற்ற  நன்மாணக்கர் பலரை ஷரிபுத்தீன் அவர்கள்  உருவாக்கினார். அன்னாரது தமிழ்ப் பணியைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் அவரது படத்தை 1999ல் திரை நீக்கம் செய்தது. எமது வகவம் ஆரம்பத்தில் நடாத்திய வருடாந்த பரிசளிப்பு விழாவிலும் சிறப்பதிதியாக கலந்து எம்மை கௌரவித்திருக்கிறார். அந்த பெரும் புலவர் 2000ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இன்றும் அவர் வழியில் அவரது மைந்தன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் நடைபோடுவது எமக்கு  மகிழ்ச்சியைத் தருகிறது “ என்றார்

நிகழ்வில் கலந்து கொண்ட புலவர்மணியின் மற்றொரு மாணவரும், கல்விமானும், மருதானை தொழில் நுட்பக் கல்லூரி, இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அதிபராக கடமை புரிந்தவருமான அல்ஹாஜ் எம்.எச்.ஏ.சமத் தனது ஆசானைப் பற்றி சில வார்த்தைகளில் விதந்துரைத்தார். தான் இன்று ஒரு கல்விமானாக திகழ்வதற்கு மூலகாரணமே புலவர்மணிதான் என்றும், தான் அமெரிக்காவில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது ஒரு சிறு கம்பித் துண்டைத் தந்து 20 நிமிடத்துக்குள் 100 வசனம் எழுதச் சொன்னபோது 18 நிமிடத்துக்குள் அதனை எழுதி முடித்து ஒப்படைத்தபோது அமெரிக்க பேராசிரியர் ஆச்சரியப்பட்டார்;. எப்படி உன்னால் முடிந்தது என்று கேட்டபோது எங்களது ஆசான் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள் “சந்தர்ப்பம் கூறுக” என்று ஒவ்வொரு பொருளைத் தருவார். அதற்காக பல புத்தகங்களை ஆராய்வோம். அந்தப் பயிற்சியே இதனை  எனக்கு இலகுவாக்கியது என்று சொன்னபோது அப் பேராசிரியர் மலைத்துப் போனார். அமெரிக்கர்களையே மலைக்க வைத்த பெருந்தகை எமது பேராசான் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் என்று குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியின்போது நடைபெறும் சிங்கள கவிஞர்களின் கவியரங்கில் தமிழ்க் கவிஞர்களும் கவிதை பாடுவதற்கு வாய்ப்பினைப் பெற்றுத் தந்ததற்காகவும்; அவர்களது கவிதைகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வாசிக்கச் செய்தமைக்காகவும், அதுபோன்றே சிங்கள கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழி பெயர்க்கச் செய்து வாசிக்கவைத்தமைக்காகவும் கவிஞர் மேமன் கவி, செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் வரவேற்புரையிலும், தலைவரின் தலைமை உரையிலும் மிகவும் சிலாகித்துக் கூறப்பட்டார். 


இதுவரை காலமாக சிங்கள கவிஞர்களால் மாத்திரமே உள்வாங்கப்பட்ட “கவிதைச்சுவரிலே”, இம்முறை தமிழ்க் கவிஞர்களும் உள்வாங்கப்படுவதற்கு காரணமாயிருந்தவர் கவிஞர் மேமன்கவி. அக்கவிதைகளை நூலுருபடுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சிங்கள தமிழ் கவிஞர்களின் இணைப்புப் பாலமாக செயல்பட்ட அவர் பெரிதும் போற்றப்பட்டார். அத்துடன் வகவக் கவிஞர் பிரேம்ராஜ் அங்கு சிறந்த சிங்களத் தமிழ் மொழிப்பெயர்ப்பாளராகவும் அடையாளங் காணப்பட்டது விதந்துரைக்கப்பட்டது.

வகவக் கவிஞர்களான சங்கர் கைலாஷின் தாயாரின் மறைவும், கவிக்கமல் ரசீமின் மாமியாரது மறைவும் நினைவுக் கூரப்பட்டன.

அன்றைய அரங்க நாயகர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களது புத்திரர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், உடுவை தில்லைநடராஜா, காத்திபுல்ஹக் எஸ்.ஐ.நாகூர்கனி, முஸ்டீன், கனிவுமதி, இஸட்.அன்சார், வை.சுசீலா, விவேகானந்தன், சனா எம்.யெஹ்யா, எம்எச்.எம்.பைசர், ஏ.ஆர்.எம்.பரீத் போன்றோர் சபையை அலங்கரித்தனர்




Read More
avathani Media Network

ஹைபிரய்ட்டும் இல்லை மின்சாரக் கதிரையும் இல்லை: அமெரிக்காவிலிருந்து திரும்பிய மைத்திரி அறிவிப்பு

யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது.
Read More
avathani Media Network

மஹிந்தவை தூக்கு கயிறிலிருந்து காப்பாற்றினோம் என்கிறார் பிரதமர்

மனித உரி­மை மீறல்கள் தொடர்பில் உள்­ளக விசா­ர­ணையை உல­கி­லேயே மிகவும் புதி­ய­தொரு பொறி­மு­றையில் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். தென்­னா­பி­ரிக்­காவில் அமைக்­கப்­பட்ட நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினை பார்க்­கிலும் சிறப்­பா­ன­தொரு
Read More
avathani Media Network

பெண் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்; தகவல் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!

இரண்டு இளைஞர்கள் சேர்ந்து மனிதாபிமானமற்ற முறையில் மற்றுமொரு யுவதி மீது தாக்குதல் மேற்கொள்ளும் காட்சிகளுடன் இணையத்தில் பரவும் வீடியோ தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More
avathani Media Network

விசாரணை நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : முஸ்லிம் காங்கிரஸ்

ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வே­றிய அமெ­ரிக்­காவின் பிரே­ரணை தீர்­மா­னத்தை அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.
Read More
avathani Media Network

காத்தான்குடியில் இடம்பெற்ற மாமறைக்கு ஒர் மாநாட்டின் தீர்மானங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு நேற்று 02 வெள்ளிக்கிழமை காத்தான்குடி
Read More
avathani Media Network

மாமறைக்கு ஒரு மாநாடு எனும் இஸ்லாமிய மாநாடு காத்தான்குடியில்-பெரும் திரளான மக்கள் பங்கேற்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு இன்று 02 வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம்
Read More
avathani Media Network

காத்தான்குடியில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் ஜக்கிய தேசிய கட்சி காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் முபாறக் கோரிக்கை..

காத்தான்குடியில் கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் இதில்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவுமாறும் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின்
காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் கோரிக்கை
விடுத்துள்ளார்.



இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு எழுத்து மூலம் (1.10.2015) கடிதமொன்றை
அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி பிரதேச
இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் தெரிவித்தார்.



அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது



காத்தான்குடியில் கடந்த சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி
ஏத்துக்கால் கடற்கரையில் தொடர்ச்சியாக கடலரிப்பு இடம் பெற்றுவருகின்றது.



இதனால் இந்த கடற்கரை பிரதேசம் சுமார் ஐம்பதடியளவில் கடலுக்குள் சென்றுள்ளது.
இதனால் இங்குள்ள மீனவர் தங்குமிடக்கட்டிடத்தின் அத்திவாரம் ஒன்று
விழுந்துள்ளதுடன் அந்தக் கரையோரமுள்ள மீனவர் தங்குமிடக்கட்டிடம் மற்றும்
அங்குள்ள மீனவர்களுக்கு நிர்மானிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும்
நிலையக் கட்டிடம் என்பவற்றுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.



இதனால் இங்குள்ள மீனவர்கள் தமது படகுகளை நிறுத்துவதிலும் அதனை கடலுக்கு
கொண்டு செல்வதிலும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.



இந்தக் கடலரிப்பு காரணமாக மீனவர்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே சுனாமியினால் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் மீண்டும்
கடலரிப்பினால் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.



எனவே இவைகளை கருத்திற்கொண்டு இங்கு ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுக்க
நடவடிக்கை எடுக்குமாறும் இதனால் தொழில் பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு
உதவ நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அதில் மேலும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக்கடிதத்தின் பிரதிகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன
யாப்பா மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் காத்தான்குடி
பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சியின் காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் மேலும்
தெரிவித்தார்.



(ஜுனைட்.எம்.பஹ்த்)

Read More
avathani Media Network

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு...


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட
சொற்பொழிவுத்தொடரில், அக்டோபர் மாதத்துக்கான சொற்பொழிவு எதிர்வரும் 6ம்
திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு' ஏழு கோணங்களில் இப்றாஹீம்
நபியவர்களின் வாழ்வு' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

 இலக்கம்77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான்
கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, பாத்திமா ஸஹ்றா
பெண்கள் அறபுக்கல்லூரியின் அதிபர், அஷ்ஷெய்க் அப்துர்ரஹ்மான் (நளீமி)
அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More