Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 9, 2015

avathani Media Network

காலம் தாழ்த்தியே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறும் – அமைச்சர் லக்ஸ்மன் யாபா

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் கால தாமதமடையக் கூடும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பரிந்துரைகள் இன்னமும் முழுமை பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 தேர்தல் திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகளும் சமர்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, உரிய நேரத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது சாத்தியப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Read More
avathani Media Network

இந்தியா – நிச்சயம் வல்லரசாகிவிடும்..(கவிதை)

(மஸாகி )

மாட்டிறைச்சி கறையை
மழைவெள்ளம் கழுவிச் சென்றது..

பாவிகளை கண்ணீரால் கழுவி
காவிகளை தண்ணீரால் அடித்துச் சென்றது..

முஸ்லிம் கறுப்பு புள்ளியை கரைத்து
வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துச் சென்றது..

பாபர் பள்ளியை தொலைத்த மக்கள்
யாவரையும் பள்ளிக்கு அழைத்து பசியாறவைத்தனர்..

பள்ளிவாயல் மடங்களாய் மாற,
தெருவோரம் தொழும் இடங்களாகின..

படத்துக்காக சிலர் உதவி நடிக்க,
படைத்தவனுக்காக பலர் களமிறங்கினார்கள்..

நடிகர்களை கடவுளாக்கியவர்கள்,
பாய்மார்களை ரோல்மாடல்களாக மாற்றிக்கொண்டனர்..

இது சிந்திக்க வேண்டிய தருணம்..

இந்தியா வல்லரசாக கணவுகாணுங்கள் - என்ற
அப்துல் கலாம் முஸ்லிமா..?

இந்தி தெரியாதவங்க சாவுங்கடா – என்ற
ஆசிஷ் செளத்ரி இந்தியனா..?

மதத்தை காட்டி, மொழியைக் காட்டி, சாதியை சொல்லி,
மாட்டைக் காட்டி, நாட்டை கெடுக்கும் தேசத் துரோகிகள் யார்..?
காப்பாற்ற போனவனும் சாதி கேட்டு, தீட்டு பார்த்திருந்தால் –
நிறைய சவங்கள்தான் மிதந்திருக்கும்..

வெள்ளம் வழிந்தோட
வாழ்க்கை வெறிச்சோடுமோ – என ஏங்கும்
எம் அன்பு உறவுகளே – கவலைப்படாதீர்கள்..

நியாயமாய் கிடைக்கவேண்டிய - அரச
நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் வரை
எமது போராட்டத்தை தொடர்வோம்..

அல்லா சாமி – நல்லா வைக்கணும்..
சுபைதா இல்லேனா – நாங்க இல்ல..
என் புள்ள பேரு – யூனுஸ்..

நாம் பொழிந்த அன்புமழை வரலாற்றை,
அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வையுங்கள்..

இந்தியா – நிச்சயம் வல்லரசாகிவிடும்..
Read More
avathani Media Network

"School with a Smile" கல்விப் பயணம்..

அஷ்ஷெய்க்.யூஸுப் முப்தியின் புதல்வர் 'சகோதரர். உமர் யூஸுப்' கல்விக்கான ஒரு ஆக்கபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!!

"School with a Smile" எனும் மகிழ்வோடு பள்ளிக்குச் செல்லும் பாலர்களை, பாகுபாடின்றி உருவாக்கும் ஒரு உதவிக்கரமான நிகழ்ச்சித்திட்டமே அதுவாகும். இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 7000 பொதிகள் (பாதனி/அப்பியாசக்கொப்பிகள்/புத்தகப்பை/எழுதுகருவிகள்) மிகவும் தேவையுடைய மானவ மானவிகளுக்கு சாதி,மத பேதமின்றி வழங்கி வைக்கப்பட்டது. 'உமர் யூஸுப்' இன் தந்தை வழிப்பயிற்சி ஆக்கபூர்வமான முயற்சியாய் அமைய பிரார்த்திக்கின்றோம்..







Read More
avathani Media Network

கடலில் மிதப்பதாக கூறப்பட்ட சடலங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை!


கிழக்கு கடற்கரைப் பகுதியில் மிதப்பதாக கூறப்பட்ட சடலங்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி கடற்படையினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். 

நேற்றையதினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கைகளை நூறு வீதம் பூர்த்தி செய்ய முடியாமல் போனதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இதற்காக மூன்று படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

எதுஎவ்வாறு இருப்பினும் இதுவரை இது குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
adaderana.lk 
Read More
avathani Media Network

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 305 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்

சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 305 பேரை இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலேயே இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

புலனாய்வுத் துறையினரெனக் கூறி மக்களை துன்பப்படுத்தும் கும்பல்

வெருகல் பிரதேசத்தில் புலனாய்வுத் துறையினர் எனக்கூறிக் கொண்டு பொதுமக்களைத் தொல்லைப்படுத்தும் குழு பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூதூர் தேர்தல் தொகுதியில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் குடிமனைக்கு இரவு நேரங்களில் சென்று தொல்லை கொடுக்கும் குழு வொன்று பற்றி கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் அப்பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 
இனந்தெரியாத குழுவினர் இரவு நேரங்களில் வாகனத்தில் வந்து உங்களை விசாரணை செய்ய வேண்டுமென அச்சுறுத்தியதுடன் பெண்களுக்கும் குடும்பஸ்தர்களுக்கும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
Read More
avathani Media Network

தனியார் பஸ் ஒன்று குடைசாய்ந்தது

திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று தம்பலகாமம் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளானது.
குறித்த பஸ் நேற்று அதிகாலை 6.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More