Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 17, 2015

avathani Media Network

வலம்புரி கவிதா வட்டத்தின் 23வது பெளர்ணமி கவியரங்கு -24.12.2015

வலம்புரி கவிதா வட்டத்தின் 23து பெளர்ணமி கவியரங்கு கவிஞர்  அங்கையன் கைலாசநாதன்  அரங்காக எதிர்வரும் 24.12.2015 அன்று காலை 10.00 மணிக்கு வியாழக்கிழமை கொழும்பு-12 குணசிங்கபுர அல்-ஹிக்மா கல்லூரியில் காத்திபுல் ஹக் கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி  அவர்களின் தலைமையில் நடைபெறும். 

இவ்வரங்கில்  கவிஞர் வதிரி. சி. ரவீந்திரன் அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு  கவிஞர் அங்கையன் கைலாசநாதன் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார். 

இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் 
என்.நஜ்முல் ஹுசைன்தலைவர்  0714929642 
இளநெஞ்சன் முர்ஷிதீன் செயலாளர் 0777388149 
ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.
Read More
avathani Media Network

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு- கவியருவி விருது வழங்கி கௌரவிப்பு-படங்கள்.

பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் மலேசிய எழுத்தாளர் சங்கமும்இகனேடிய படைப்பாளிகள் உலகமும்இ தடாகம் கலை இலக்கிய வட்டத்ததுடன் இணைந்து நடாத்திய விருது  விழாவில் கவியருவி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
கடந்த 15 செவ்வாய்க்கிழமை திருகோணமலை சண்சைன் மண்டபத்தில தடாகம் அமைப்பாளர் தமிழ்மாமணி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி தலைமையில் நடைபெற்ற விழாவில் கனேடிய படைப்பாளிகள் உலக தலைவர் கவிஞர் ஐங்கரன் விருது வழங்குவதையும் ,மகுடம் பிரதம ஆசிரியர் தமிழ்மணி வீ.மைக்கல் கொலின் மாலை அணிவிப்பதையும் அருகில் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் கவிஞர் ராஜேந்திரன் உட்பட அதிதிகள் நிற்பதையும் படங்களில் காணலாம்.




Read More
avathani Media Network

கல்முனை நஸீறா அலிக்கு சிறுவர் இலக்கியத்துக்கான கலாபூஷண விருது

(சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்)

மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் 2015ம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வைபவம் கடந்த 15ஆம்; திகதி கலாசார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் நடைபெற்றது. இதில் 25 முஸ்லிம் கலைஞர்கள் கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறுவர் இலக்கியத்திற்கான கலாபூஷண விருதை கல்முனை ஏ.ஏ. பாத்திமா நஸீறா பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

Read More
avathani Media Network

மை வீசிய மாணவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில் காத்தான்குடியில் சம்பவம்.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடியில் பிரபலமான பாடசாலை ஒன்றில்  கல்வி பயின்று இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை எழுதி விட்டு வழமை போன்று நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் மற்றவர் மீது இறுதி நாளான இன்று வீதியில் மையடிக்கும் கலாசாரத்தினை மேற் கொண்ட வேளை அவ்வீதியால் வந்த சிலர் மேற் கொண்ட அதிரடி தாக்குதலினால் இரு மாணவர்கள் வைதியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்படி தாக்குதலுக்கு இலக்காகி காத்தான்குடி வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட முஹம்மது அதாயி மற்றும் எம்.லப்ரி என்ற மாணவர்களை நேரினில் சென்று  பார்வையிட்ட போது.......

பரீட்சை இறுதி நாள் இன்று என்பதனால் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் வழமை போன்று ஒரவருக் கொருவர் நாங்கள் மையடித்து கொண்டிருந்த வேளை வீதியால் சிகப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மேலும் சிலர் எங்கள் மீது சாரமாரியாக தாக்குதலை மேற் கொண்டு விட்டு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்ததோடு தாங்க  முடியாத வலியின் காரணமாகவே எமது ஏனைய மாணவர்கள் மூலம் தாங்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக கவலையோடு தெரிவித்தனர்.

மாணவர்களாகிய நாங்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் மாணவர்களாகிய எங்களை வீதியில் வைத்து தாக்குவது என்பது சட்டவிரோதமாகும் என்பதுடன் இவ்வாறு எங்களை தாக்குவதற்கு  இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் மாணவர்கள் தங்கள் கவலையினை தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை  தேவை ஏற்பட்டால் நாங்கள் அடையாளம் காட்ட தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவிகள் இன்று மையடித்து தங்கள் மகிழ்ச்சியினை வெளியிட்டதினையும் காணக்கூடியதாக இருந்தது. 








Read More
avathani Media Network

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 –பொதுச் சபைக் கூட்டம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 ஆண்டு பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 18-12-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் சென்ற கூட்டறிக்கையை வாசித்தல்,ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்,வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பித்தல்,பாடசாலை முன்னேற்ற அறிக்கை,யாப்பில் திருத்த வேண்டிய விடயங்கள்,சிறப்புரை,புதிய உத்தியோகத்தர் தெரிவு,புதிய தலைவர் தெரிவு,புதிய செயலாளர் தெரிவு போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் செயலாளர் எம்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தெரிவித்தார்.
Read More
avathani Media Network

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு

பண்டிகை காலத்தில் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்காக 600 இற்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
சிவில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை கால கொள்வனவின் போது தமது உடமைகள்இ பணம் மற்றும் தங்க ஆபரணங்களை பாதுகாப்பாக பேணும்படியும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லதுஇ பொலிஸாரிடமோ அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப் 
Read More
avathani Media Network

இந்தியா-இலங்கை இடையே கடல் பாலம்


தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். 

இதுதொடர்பாக, மக்களவையில் அவர் தாமாக முன்வந்து புதன்கிழமை அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு, ரூ. 24,000 கோடி (இந்திய ரூபாய்) மதிப்பில் கடல் பாலம், சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியா வந்தபோது, அவருடன் இந்தத் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். இந்தத் திட்டத்துக்கான நிதியை அளிப்பதற்கு "ஆசிய வளர்ச்சி வங்கி´ தயாராக உள்ளது. 

இதுதவிர, பங்களாதேஷ், பூடான், நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளிடையே தடையற்ற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்  நிதின் கட்கரி.
Read More
avathani Media Network

ஊடக செய்திகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்கள் ஏற்கக் கூடாது

ஊடகமொன்றின் செய்தி தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அல்லது மாவட்ட நீதிமன்றில் முறைப்பாடு செய்ய முடியும்.

ஊடக செய்திகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்கள் ஏற்கக் கூடாது.

இது குறித்த அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகமொன்றினால் அவதூறு செய்தி வெளியிடப்பட்டதாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது.

இந்த குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்கள் ஊடக அமைச்சர்இ பிரதி அமைச்சர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டமொன்றின் பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் கெப்டன் திஸ்ஸவை விசாரிக்க தீர்மானம்

பிர­பல றக்பி வீர­ரான வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் தொடர்பில் தற்­போது யாழ். பிர­தேச இரா­ணுவ முகாம் ஒன்றில் சேவை­யாற்­று­வ­தாக கூறப்­படும் கப்டன் திஸ்ஸ அல்லது மேஜர் திஸ்ஸ என அழைக்­கப்­படும் எல­ஹர, தெஹி­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த இரா­ணுவ வீர­ரிடம் விசா­ரணை நடத்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு தயா­ரா­கி­வ­ரு­வ­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
கடந்த 2012 மே 17 ஆம் திகதி அதி­காலை வேளையில் வஸீம் தாஜுதீன் பய­ணித்த அவ­ரது கார் நார­ஹேன்­பிட்டி சலிகா மைதா­னப்­ப­கு­தியில் எரிந்து கொண்­டி­ருந்த போது அதனை அணைக்க முற்­பட்­ட­வர்கள் வழங்­கி­யுள்ள வாக்குமூலங்கள் கிரு­லப்­ப­னையில் கைப்­பற்­றப்­பட்ட சீ.சீ.ரி.வி.காட்­சி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவ­ரிடம் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அந்த தக­வல்கள் மேலும் தெரி­வித்­தன.
வஸீம் தாஜு­தீனின் கார் எரியும் போது அவ்­வி­டத்­துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அணைக்க காரை நோக்கி செல்லும் போது, அருகே போக வேண்டாம் என திஸ்­ஸவை ஒத்த உருவமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் தெரி­வித்­த­தாக பொலி­ஸா­ரினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்கு மூலம் மற்றும் அந்த இடத்தில் இரு டிபண்டர் ரக வாக­னங்கள் இருந்­த­தா­கவும் அவை சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் மறைந்­த­தா­கவும் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்குமூலங்­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.
அத்­துடன் கிரு­லப்­பனை சந்­தியில் இருந்து பெறப்­பட்­டுள்ள சீ.சீ.ரி.வி.காட்­சி­களில் பல வாக­னக்கள் வஸீம் தாஜு­தீனின் வாக­னத்தை துரத்தும் நட­வ­டிக்கை பதி­வா­கி­யுள்­ளது.
வஸீம் தாஜுதீன் அந்த வாக­னங்­க­ளி­ட­மி­ருந்து தப்பி செல்ல முயற்­சிக்கும் காட்­சி­களும் அதனை தடுக்கும் காட்­சி­களும் இவ்­வாறு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
எவ்­வா­றா­யினும் இந்த காட்­சிகள் அடங்­கிய இறு­வட்டு தற்சமயம் கொழும்பு பல்­கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் தொடர்­பாடல் பிரி­வி­னரால் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய பொலிஸ் தலை­மை­யக உயர் அதி­காரி ஒருவர், அதன் அறிக்கை சில நாட்­க­ளுக்குள் கிடைக்கப் பெறும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.
இத­னி­டையே கண்­டியில் இருந்து கொழும்பு நோக்கி அனைத்து பல­்கலை மாணவர் ஒன்­றியம் நடத்­திய பேர­ணி­யொன்றின் போது, மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்­த­தாக கூறப்­படும் ஜனக
பண்­டார மற்றும் சிசித்த பிரி­யங்­கர ஆகிய மாண­வர்­களின் மர­ணமும் கொலை­யெ­னவும் அத­னு­டனும் திஸ்­ஸ­வுக்கு தொடர்­பி­ருப்­ப­தா­கவும் சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன.
எவ்­வா­றா­யினும் அது தொடர்பில் இன்னும் போதிய சாட்­சி­யங்கள் இல்லை என தெரி­விக்­கப்­படும் நிலையில் மேர்வின் சில்­வாவின் மகன் மாலக சில்­வாவை நகர மண்­டப பகு­தியில் உள்ள பிர­பல ஆடை­யகம் அருகே தாக்­கி­யமை உள்­ளிட்ட சம்ப்­வங்­க­ளு­டனும் திஸ்­ஸவே தொடர்புபட்­டி­ருந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இந் நிலை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு மிக நெருங்­கி­ய­வ­ராக இருந்­த­தாக கூறப்­படும் குறித்த இராணுவ வீரர் அப்போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்துள்ளதாகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்தில் மேலும் பல தகவல்களை வெளிப்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் புலனாய்வுப் பிரிவு நம்புவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டின.
Read More
avathani Media Network

2016ம் ஆண்டுகளில் உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான உயரதிகாரிகளுக்கான உயர்மட்டச் செயலமர்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பாக உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் உயர்மட்டச் செயலமர்வு நேற்று நிந்தவூர் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் இடம் பெற்ற இச்செயலமர்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஆசியா மன்றத்தின் ஏற்பாட்டிலான இச்செயலமர்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றக் கணக்காளர் ஏ.உதயராஜன், ஆசியாமன்ற சிரேஷ்ட ஆலோசகர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எஸ்.சசிதரன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் செயலாளர்கள், கணக்காளர்கள், நிதிப்பிரிவு முகாமைத்துவ உதவியாளர்கள், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகின்ற போது பொது மக்கள் எந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றார்களோ அந்த விடயங்களுக்கு முன்னுருமை வழங்கப்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.







Read More