Featured Home (TOP)

Recent Comments

Friday, January 1, 2016

avathani Media Network

"கல்விக்கு கரம் கொடுப்போம் "

(ஜுனைட்.எம்.பஹ்த்)

முஹாசபா மிடியா நெட்வொர்க் இனது மற்றுமொரு செயற்திட்டமான " கல்விக்கு கரம் கொடுப்போம் " மூலமாக பெற்றோர்களை இழந்த, வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாச கொப்பிகள், புத்தகப் பைகள் என்பவைகள் இன்று (01.01.2016) வெள்ளிக்கிழமை வழங்கி  வைக்கப்பட்டது.









Read More
avathani Media Network

தேசிய சுன்னத்துவல் ஜமாஅத் சபையின் மீழாதுன் நபீ விழாவினை இரத்துச் செய்யுமாறு கோரி இன்று காத்தான்குடியில் ஆர்பாட்டம்.

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடியினை தளமாகக்  கொண்டு இயங்கும் தேசிய சுன்னத்துவல் ஜமாஅத் சபையின் மாபெரும் மீழாதுன் நபீ விழா (01.01.2016 வெள்ளி) இன்று பி.ப.04.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற இருக்கின்ற நிலையில் விழாவினை உடன் நிறுத்துமாறு கோரி இன்று ஜூம்ஆ தொழுகையின் பின் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.


இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெறும் மீழாதுன் நபீ விழா முற்றிலும் இஸ்லாமிய அகீதாவுக்கு விரோதமானது என்பதுடன் மேற்படி விழாவினை ஊரின் நடுவில் நடாத்தக் கூடாது என்றும் அவர்களுக்கு என்று உள்ள இடத்தில் மேற்படி விழாவினை அவர்கள் நடாத்த வேண்டும்,   


விழாவினை நிற்பாட்டக் கோரி; பொது மக்கள் சார்பில் காத்தான்குடி நகர சபை செயலாளரிடம் காத்தான்குடி தாருல் அதர் அத்தவியா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி அஸ்பர் பதுர்தீன் என்பவரினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


மேற்படி விழாவிற்கான  மண்டப அனுமதி உரிய முறையில் கோரப்பட்டு உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் ஆர்பாட்டம் செய்கிறார்கள் என்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை உடன் இரத்துச் செய்வது என்பது சாத்தியமில்லா விடயம் என்பதுடன் அதில் சட்டப்பிரச்சினைகள் உள்ளதாகவும் நகர சபை செயலாளர் தெரிவித்தார்.


எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி மாபெரும் மீழாதுன் நபீ விழாவினை தடுப்பதற்கு முற்படுபவர்களைப் பார்த்து நாம் கவலை அடைகின்றோம். அவர்களால் ஊரின் நடுவில் மாநாடு நடாத்த முடியும் என்றால் ஏன் எங்களால் இது போன்ற விழாக்களை நடாத்த முடியாது என கோரினர்.


இது நல்லாட்சி எனவே ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா சுதந்திரம் உண்டு என்று கருத்து தெரிவித்ததுடன்  எமது விழாவிற்கு வந்து முன் வரிசையில் இருந்து ஞான விளக்கத்தை கேட்க வருமாறு நாம் அழைப்பு விடுப்பதாக விழா ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் ஷிர்க் ஒழுpப்பு மாநாடு இன்று










காத்தான்குடி  குட்வின் சதுக்கத்தில் இடம் பெற உள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  


Read More
avathani Media Network

மீலாத் விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..

( ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய சுன்னத் வல் ஜமா அத் இன் ஏற்பாட்டில் காத்தான்குடில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள மாபெரும் மீலாதுன் நபி விழாவிற்கு எதிராக இன்று ஜும் ஆத் தொழுகை யினை தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று காத்தான்குடி கலாச்சார மண்டம் முன்றலில் இடம் பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்  "மீலாத் விழா என்பது சீயாக்கள் உருவாக்கி வழிகேடு"," மீலாத் எனும் பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான அநாச்சாரம்"    என எழுதப்பட்ட வாசகங்களை ஏந்திருந்தனர்..
இந் நிகழ்வினை இரத்து செய்யுமாறு கோரி நகரசபை செயலாளருக்கு மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது..
இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பிரிவினரின்  இஸ்லாம் சார்ந்த மாற்றுக்கருத்தினால் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவினால் " இஸ்லாத்தை விட்டு வெளியேரியவர்கள்"என  பத்வா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்..







Read More
avathani Media Network

சிகரட் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு


நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. 

அதன்படி அவற்றின் புதிய விலைகளாவன, 

பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா. 

கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35 ரூபா. 

கெப்டன் (Capstan) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 11 ரூபா. 

அத்துடன் Benson & Hedges (B&H) 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா. 

Dunhill SWITCH 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 40 ரூபா. 

Dunhill Lights 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா. 
Read More
avathani Media Network

20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு இன்றுமுதல் தடை


20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக காணப்படுகின்றது. 

இவ்வாறான பொலித்தீன் வகை தயாரிப்பு, விற்பனை மற்றும் பாவனை போன்றவற்றிற்கு எதிராக இன்று முதல் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக 10,000 ரூபாவிற்கு உட்பட்ட தண்டம் அறவிடுவதற்கும் சிறை தண்டனை வழங்குவதற்கும் முடியும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Read More
avathani Media Network

துபாய் வானுயரக் கட்டிடத்தில் பாரிய தீவிபத்து

துபாயில் நகர மத்தியில் உள்ள வானுயர் மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பிடித்துள்ளது. புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது.
அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது. 1000 அடி உயரமான இந்தக் கட்டடத்திலிருந்து எரிந்த துண்டுகள் விழுந்துகொண்டிருப்பதை பலரும் அவதானித்துள்ளனர். மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி உடனடியாக எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த தீயிற்காக காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
Read More
avathani Media Network

கட்டார் நாட்டின் புதிய சட்டம் சிக்கலா…

கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் கடந்த 28ஆம் திகதி அந்நாட்டின் அதிபர், ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியினால் வெளியிடப்பட்டுள்ளது.
1.கபாலத் முறை நீக்கப்பட்டு தொழில் வழங்குநர், தொழில் பெறுநர் என்ற புதிய முறைமை கொண்டு வரப்பட்டுள்ளது.
2. குறூஜ் எனும் வெளிநாட்டு தொழில் பெறுநர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வழங்கப்பட வேண்டிய பயன அனுமதி ரத்து செய்யப்படுள்ளது.
இத‌ற்கென்று ஒரு தனியான நிர்வாகப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டு அதனூடாக பயண அனுமதிகளை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
அங்கு தக்க காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டால் அதை முறையிடுவதற்கு என்று வேறு குழு அமைக்கப்பட்டுள்ளது.

3. ஆறு மாத காலத்திற்கு மேல் கட்டார் நாட்டிற்கு வேளியே தங்கியிருந்து மீண்டும் கட்டார் வர விரும்புபவர்கள் விஷேட அனுமதி பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்த அடிப்படையில் குடும்பதிற்கான விஸா பெறும் முறையிலும் மாற்றங்கள் சில ஏற்பட்டுள்ளன.
5.தொழில் ஒப்பந்ததின் குறைந்தளவு காலம் இரண்டு வருடங்களாகும்.
அது முடிந்ததும் யாருடைய அனுமதியும் அவசியம் இன்றி இன்னொரு தொழில் வழங்குநரிடம் வேலை தேடிக் கொள்ளலாம்.
ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு அதிகமாக இருந்தால் ஐந்து வருடம் முடிந்ததும் வேறு இடங்களில் வேலை தேடிக் கொள்ளலாம்.

6. ஏதாவது தொழிலில் செய்த குழறுபடிகளுக்காக வேலை நீக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர், குறைந்தது நான்கு வருடங்களுக்கு கட்டார் நாட்டிற்குள் மீண்டும் பிரவேசிக்க முடியாது.
JVPNEWS
Read More
avathani Media Network

மருதானையில் விபத்து; 09 பேர் காயம்


மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டு தனியார் பஸ்கள் இன்று காலை ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது சிறு காயங்களுக்கு உள்ளான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
Read More
avathani Media Network

ஒற்றுமையும் சகவாழ்வுமே இலட்சியங்களாக அமைதல் வேண்டும்

ஒற்றுமை மற்றும் அதனூடாக வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே புத்தாண்டில் எமது இலட்சியங்களாக அமைதல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. நாம் கடந்த ஜனவரியில் எங்களுடையதும் எமது பரம்பரையினரதும் வாழ்வினை புதியதொரு திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற ஒரு முக்கியமான பிரவேசத்தின் ஊடாக மிகவும் பலம்வாய்;ந்த, நிலைபேறான நோக்கத்துடன் முன்னோக்கிய பயணத்தை துரிதப்படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய தடையினை தாண்டவேண்டியதொரு கட்டத்தை நாம் இன்று கழிக்கின்றோம்.
கடந்த ஜனவரி முதலாம் திகதி நான் உங்களுக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்; வலியுறுத்திய ஜனநாயக சுதந்திரம், ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் போன்றே இல்லாதொழிக்கப்பட்டிருந்த சர்வதேசத்தின நல்லெண்ணம் என்பவற்றை மீண்டும் ஏற்படுத்தி சாதகமான விளைவுகளை நாம் இன்று அனுபவிப்பது கடந்த ஜனவரி மாதத்தில் நாம் கொண்ட இலட்சியத்தின் பயனாகும்.
அன்று நீங்கள் என்மீது கொண்ட நம்பிக்கையினைப் பாதுகாத்து உங்களிடம் நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வெற்றிவாகை சூடியதொரு ஆண்டாக 2015ம் ஆண்டினை மாற்றினேன்.
மலர்ந்துள்ள 2016ம் ஆண்டு உங்களுக்கும் எங்களுக்கும் ஓய்வற்றதொரு ஆண்டாக அமைய உள்ளது. 2 மில்லியன் மக்களின் எதிர்காலத்திற்காக நாம் ஆரம்பித்த பாரிய வேலைத்திட்டத்தின் ஊடாக ஈடு இணையற்ற ஓர் பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
எமது நன்நோக்கங்கள் போன்றே குரோதமற்ற சிந்தனைகளும் அதிகாரத்தை அடைந்து கொள்வதற்கு பதிலாக அதிகாரத்தை விட்டுக்கொடுத்து மக்களை வலுவடையச் செய்யும் பணியுடன் நாம் இலங்கையின் அரசியல் வடிவத்தினை முற்றுமுழுதாக மாற்றியமைத்தோம். இவையனைத்தும் மலர்ந்துள்ள புத்தாண்டின் நிகழ்ச்சிநிரலுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது.
அன்று நம்மத்தியில் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைப்பிணைப்பு, கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னோக்கி நகர்த்துவதன் ஊடாகவே வெற்றியின் ஒட்டுமொத்த பயனை அடைந்துகொள்ள முடியும்.
எனவே புத்தாண்டின் எமது பொது நோக்கமாக ஒற்றுமை மற்றும் அதனூடாக வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே எமது இலட்சியமாக அமைதல் வேண்டும்.
குறித்த இலட்சியத்துடன் பிரார்த்தனைகள் நிறைவேறும் புத்தாண்டில் காலடி எடுத்துவைக்கும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மலர்ந்துள்ள இப்புத்தாண்டு சௌபாக்கியமான ஆண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Read More
avathani Media Network

வறிய பெற்றோரை இழந்த மற்றும் விஷேட தேவையுடைய தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 35வது சமூகத்தை நோக்கிய பயணத்தில் வறிய பெற்றோரை இழந்த மற்றும் விஷேட தேவையுடைய தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
 
மேற்படி அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வை தலைமையில் இடம்பெற்ற மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்க மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் முதன்மை அதிதியாக பீகாஸ் கெம்பஸின்; பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மானும் கலந்து கொண்டனர்.
 
இதன் போது அதிதிகளினால் வறிய பெற்றோரை இழந்த மற்றும் விஷேட தேவையுடைய தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டதுடன் குறித்த விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம்,இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற கவிஞர்களுக்கு பணப் பரிசும், ஏனைய ஏழு கவிஞர்களுக்கு சான்றிதழ்களும்; வழங்கி வைக்கப்பட்டது.
 
அத்தோடு விழா அரங்கில் நடாத்தப்பட்ட வினா விடைப் போட்டியில் வெற்றியீட்டிய 15 பேருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது
 
இங்கு கவிதைகள் விமர்சனத்தை பன்னூல் ஆசிரியர் எம்.எம். மஹ்றூப் கரீம் நிகழ்த்தியதோடு வினாவிடைப் போட்டியை ஓய்வு பெற்ற கல்வி நிருவாக உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் தலைமை ஏற்று நடாத்தினார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி எம்.ஏ.அப்துல் காதர் பலாஹி , மத்தியஸ்தர் சபைத் தலைவர் எம். ஐ. உஸனார் , சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பொருளாளர் எம்.எம்.எம். தாஹிர் , அதன் உறுப்பினர் மௌலவி பைறூஸ் பலாஹி , உப தலைவர் எம்.ஐ.நஸார் உற்பட மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இவ் அமைப்பு சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்காக தொடர்சியாக ஆக்க பூர்வமான  சமூக மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருவது என்பதுடன் இந் நிகழ்வு இவ் அமைப்பின் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இடம் பெறும் 35வது உதவி வழங்கும் நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.







Read More
avathani Media Network

சகல பிரஜைகளும் ஒரே தாய் மக்களாக வாழ திடசங்கடம் பூண வேண்டும் : ஹுதா உமர்

நல்லாட்சி மலர்ந்து தலைப்புத்தாண்டை அடைந்திருக்கும் எமது தேசத்தில் சகல பிரஜைகளும் இன,மத,மொழி, பிரதேச வாதங்கள் திறந்து ஒரே தாய் மக்களாக வாழ திடசங்கடம் பூண வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தமது புத்தாண்டு செய்தியில் வலியுறுத்தியுள்ளது.
மேலும் தமது செய்தியில்
கடந்த 2015ம் ஆண்டை எமது நாடு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக அடைந்திருந்தது. கடந்த ஆண்டில் எமது நாட்டில் புதிய பல அத்தியாயங்கள் ஆரம்பிக்கப்பட்டும்,பல அத்தியாயங்கள் தற்காலிகமாக மூடப்பட்டும் பல நல்ல பல சந்தோசமான செய்திகளும்,பல துயரமிக்க செய்திகளும் கொண்ட ஆண்டாக அமைந்திருந்ததை நாம் மறவோம்.
அந்த வகையில் எதிர்வரும் இந்த ஆண்டை சவால் மிக்க ஆண்டாக எதிர்கொண்டு சகலரும் சகல சவால்களுக்கும் முகம் கொடுத்து வெற்றியடைய பிராத்திப்பதுடன், நாம் பல இன்னல்களுக்கு மத்தியில் தோற்றுவித்த நல்லாட்சியை நல்ல முறையில் பயன்படுத்தி எமது தேவைகளையும்,உரிமைகளையும் ஜனநாயக ரீதியாக அணுகி பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பல தீய சக்திகளின் கொடூர விசமிக்க செயல்களில் இருந்தும்,கருத்துக்களில் இருந்தும் மக்கள் விடுதலை பெற்று தமது செயல்களில் சரியான நட்புறவை பேணி எமது தாயகத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றும்,இந்த புத்தாண்டை சந்தோசமாக கொண்டாடும் சகல சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும்,ஊடக இணைப்பாளருமான அல் -ஹாஜ் ஹுதா உமர் தெரிவித்தார்.
Read More