Featured Home (TOP)

Recent Comments

Thursday, January 7, 2016

avathani Media Network

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



மாலபே தனியார் வைத்திய கல்லூரியை மூடுமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்தி, பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் இன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

இன்று காலை முதல் கலஹா சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் கல்வியை தனியார் மயப்படுத்தும் சதி, மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மூலம் இடம்பெற்று வருவதாக, இதன்போது கருத்து வௌியிட்ட பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர் சங்கத் தலைவர் சிந்தக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
Read More
avathani Media Network

தெமட்டகொட சமிந்தவின் சகோதரி ஹெரோயினுடன் கைது

பிரபல பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரி, ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்தப் பெண்ணுடன் மேலும் நான்கு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதி பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பெரேரா உள்ளிட்ட குழுவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், ஒற்றர் ஒருவரை ஈடுபடுத்தி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 6 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பொருட்டு சந்தேகநபர்கள் தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Read More
avathani Media Network

உங்கள் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், நாடுபூராகவும் பல வேலைத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி காலை 07.00 மணியளவில் விஷேட சமய வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒரு வருடப் பூர்த்திக்கான பிரதான நிகழ்வு நாளை பிற்பகல் 02.00 மணிக்கு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஸ்ணா காந்தி விஷேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற வேலைத் திட்டம் கோட்டை ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நாளை இடம்பெறவுள்ளது.
அத்துடன் நாளை ஜனாதிபதி கோட்டை ஶ்ரீ நாக விஹாரைக்குச் சென்று மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரருக்கு மலரஞ்சலியும் செலுத்தவுள்ளார்.
இது போன்ற பல நிகழ்வுகள் நாளையதினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

பிரபல பாடசாலையின் அதிபர் பணி இடைநீக்கம்

கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மாறாக நிதி சேர்த்த குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் பணி இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அதிபரால்  36 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More
avathani Media Network

மழையின் நேற்றைய உரை

(எம்.எல்.எம்.அன்ஸார் )

தேர்தல் பிரச்சார இறுதி நாள் போல
நேற்றைய தினத்தை
வாய்ப்பாகி இருந்தது வானம்!
*
கூதலாலும் குளிராலும்
சோடிக்கப்பட்டிருந்த மேடையில்
எதிர்க் கட்சியை சேர்ந்த
பீரங்கிப் பேச்சாளராக பிரசன்னமாகி இருந்த
மழை -
ஆவேசமாக உரையாற்றிச் சென்றது!
*
நேற்றுவரை ஆளுங்கட்சி அமைச்சராக இருந்த
சூரியனால் -
மழையின் காரசாரமான உரைக்கு மறுப்புரையாற்ற
எந்த சந்தர்ப்பமுமே கிடைக்கவில்லை!
*
சூரியனின் சண்டியனாக ஊருக்குள்
கெப்பர் தனம் காட்டித் திரிந்த
வெயிலின்   திருகுதாளங்களை
மழை  அம்பலப்படுத்திய போது
திக்கு முக்காடி
வாயடைத்துப்போய் நின்றது வெயில்!
மரங்கள் கரகோஷம் செய்து
மழையை உற்சாகப் படுத்தின!
*
மழை வீண் பழி சுமத்தி
வரம்பு மீறிப் பேசுவதாக
கோபமடைந்த வீட்டு வாசல்கள்
வானத்தை சந்தித்து முறையிட முயன்ற போதிலும்
மேகங்களின் சனக்கூட்டம் நிறைந்திருந்ததால்
அது பலிக்கவில்லை!
*
மழை  வரும்போது
வானம் தட்டிக் கொடுத்தனுப்பிய தைரியத்தில்
எதையும் கணக்கிலெடுக்காமல்
தன் உரையை அட்டகாசமாக நிகழ்த்தியது!
*
ஆற்றங்கரைப் பக்கத்தில் ஒலித்த
மழையின் உரை
வெள்ளத்தை தூண்டிவிட்டு
வேடிக்கை பார்ப்பதாக இருந்ததாகவும்
எழுந்தன கண்டனங்கள்!
*
மழையின் உரை முழுவதையும்
பூமி பதிவுசெய்து வைத்திருக்கிறது.
மழையின் ஆவேச உரைக்கு எதிராக
இன்றைக்கு
வெயிலை அனுப்பி சூரியன்
என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ?
07-01-2016







 




  
Read More