Featured Home (TOP)

Recent Comments

Sunday, February 22, 2015

Unknown

பௌர்ணமி கலை நிகழ்வின் தொடர் விசேட அமர்வு -9 ' மொழியும் பண்பாடும்


வி. மைக்கல் கொலின் 

மகுடம் கலை இலக்கிய வட்டம் பௌர்ணமி தினங்களில் நடாத்திவரும் பௌர்ணமி கலை நிகழ்வின் தொடர் அமர்வின்   ஒன்பதாவது விசேட அமர்வு இன்று 22-02-2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு மட்/பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது 
Read More
Unknown

மஹிந்த ராஜபக்ஸ, தனது வீட்டிலிருந்து என்ன செய்கிறார்..?

தங்காலை-
இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்டன் இல்லத்துக்கு தினசரி அவரைப் பார்க்க வருகை தரும் மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி அவரைக் காண மக்கள் குழுக்களாக பஸ்களில் வருகை தருகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்த ஒரு தலைவர் அவர். நிச்சயமாக போரை வெற்றி கொண்டதுக்கான பெருமையை கோருவதற்கான ஒரு தலைவர் அவர்தான், அதில் மாற்றுக் கருத்து கிடையாது.
ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மணித்தியாலங்களுக்குள் மக்கள் மஹிந்தவை ஒரு சாதாரண பிரஜையின் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். ஐந்தாவது ஜனாதிபதி பதவியிலிருந்து, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் ஓய்வுபெற வேண்டியவரானார்.
இதுதான் அரசியல் இயல்பு. வழக்கம் போல தோல்வி எங்களுக்கு பல முக்கிய பாடங்களைப் போதிக்கிறது. கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கையில் பிரபலமாக அவர் திகழ்ந்துள்ளார். அலரி மாளிகையில் வசித்தபடி தன்னை சுற்றி மக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் புடைசூழ உலகை வலம் வந்து கொண்டிருந்தார்.
தோல்வியடைந்து ஒரு மாதத்தின் பின்னர் அவர் தனது ஓய்வை எப்படிக் கழிக்கிறார் என்பதைக் காண்பதற்காக தங்காலையில் இருந்த அவரிடம் விஜயம் செய்தோம். வரவு செலவு திட்ட விவாதத்தின் போது தன்னை ஒரு சாதாரண கிராம வாசி என்று கூறிய அவருக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் மரியாதைக்கு ஆதாரம் தேவையானால் நிச்சயமாக ஒருவர் வார இறுதி நாட்களில் தங்காலைக்கு வருகை தர வேண்டும்.
கொழும்பிலிருந்து காள்ட்டனுக்கு திரும்பி வந்த முதல்நாள் மக்கள் அழுது கொண்டு அவரது வீட்டுக்கு முன்னால் குவிந்தார்கள். அதனால் அவர் தனது வீட்டின் ஒரு ஜன்னலின் அடித்தட்டின் மேல் ஏறி நின்று அவர்களுடன் பேச வேண்டியதாயிற்று.
இன்னும் கூட வார இறுதி நாட்களில் சுமார் 50 பேரூந்துகள் நிறைந்த மக்கள் அவரைக் காண்பதற்காக தங்காலைக்கு வருகிறார்கள். நாட்டின் நான்கு மூலைகளிலும் இருந்து வருகை தருபவர்களுக்காக இப்போது அந்த வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது
நீங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். இல்லையென்றால் நாங்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டோம். காள்ட்டனுக்கு வருகை தந்த வயதானவர்கள் சொல்கிறார்கள். அதேவேளை மற்றொருவர் உங்கள் எதிரிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கை செய்தோம்.
ஆனால் நீங்கள் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறார். மஹிந்த மனமுடைந்து போயிருக்கலாம். ஆனால் காள்ட்டன் பங்களாவில் ஒரு சாய்மானக் கதிரையில் சாய்ந்தவாறே மக்களை வரவேற்பது, நேரத்துக்கு நேரம் அவரை வணங்கும் வயதான பெண்களின் தலையை தடவுவது மற்றும் குழந்தைகளை முத்தமிடுவது போன்ற செயல்களை அவர் செய்வதைக் காணமுடிகிறது.
இப்போது உங்களுடன் பேசுவதற்கு எனக்கு நேரமுள்ளது. முன்னர் எனக்கு நேரமிருக்கவில்லை. இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. சுதந்திரமாக இருப்பது அற்புதமாக உள்ளது. எந்த நேரத்திலும் வாருங்கள் என்னுடன் பேசலாம் என்று அவர் மக்களிடம் சொல்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை எப்போதும் மக்கள் சூழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
இப்போதும் அது அப்படித்தான் உள்ளது. அவர் தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை. அவர்தனது ஜீப் வண்டியில் தனது நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்கிறார். கடந்த காலத்தில் செய்ததைப் போல அவர் கடலில் குளிக்கிறார்.
எந்த வித பாதுகாப்புமின்றி தங்காலை நகரில் நடந்து செல்கிறார் இப்படித்தான் அவரது அயலவர்கள் அவரது ஓய்வைப் பற்றி வர்ணிக்கிறார்கள். தான் அரசியலில் இருந்து வெளியேறப் போவதில்லை மற்றும் எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாகச் சொல்லி அவர் வாக்காளர்களைத் திருப்தி செய்கிறார். மக்களின் முடிவில்லாத கேள்விகளுக்கு திறந்த மனதுடன் மஹிந்த பதில் சொல்கிறார்.
கடந்த காலங்களில் நான் உதவி செய்த பணக்கார வியாபாரிகள்தான் என்னை காண வருவார்கள். இப்போது சாதாரண மக்கள் என்னைக் காண வருகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமானவர்கள். நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.
அரசியல் ரீதியாக என்னைப் படுகொலை செய்ய முடியாது. எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமானால் அவர்களின் முகத்துக்கு நேராக நான் பதில் சொல்வேன்.
அவர் தனது வேதனைகளை மக்களின் முன்னால் விளக்கிறார். அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்த போது நான் அவரை ஏசியதாக சந்திரிகா சொல்கிறார். அவர் என்னுடன் பேசவேயில்லை. மூன்று தடவைகள் அவருக்கு நான் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினேன்.
ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது. அவர் மக்களுடன் கலந்து அவர்களுடன் சுதந்திரமாக பேசிக் கொண்டிருந்ததால், தங்காலையில் உள்ள அவரது காள்ட்டன் பங்களாவை விட்டு நாங்கள் அமைதியாக வெளியேறினோம்.

New tamil net
Read More
Unknown

முன்னால் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி கைது

கொழும்பு

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டுஇ பொய்யான தகவல்களை கொடுத்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த கடவுச்சீட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசமானதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More
Unknown

பொது தேர்தலை இலக்கு வைத்து அம்பாறையில் தகவல் திரட்டும் பணி -மக்கள் அதிருப்தி

கொழும்பு -
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொது தேர்தலை இலக்கு வைத்து இங்குள்ள தமிழ்க்கிராமங்களில் தலைமறைவாக இருந்த பலர் சமூக சமயப்பணிகளிலும் மற்றும் தகவல்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இம்மாவட்ட தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக முன்னின்று குரல் கொடுக்காதவர்களும் இம்மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு வெளிநாடு சென்றவர்களும் தற்போது சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டி வருகின்றனர்.
Read More
Unknown

கர்ப்பிணிப் பெண்களே அவதானம்!

பஹத் ஜூனைத் -

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில்தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம் என, வைத்தியர ரத்னசிறி ஹேவாகே குறிப்பிட்டுள்ளார்.
Read More
Unknown

சீகிரியா ஓவியங்களை கண்ணாடி கவசங்களை இட்டு பாதுகாக்க தீர்மானம்

பஹத் ஜூனைத் -

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்கும் மற்றும்பொருட்டு அவற்றிக்கு கண்ணடி கவசங்களை இடுதற்கு கலைகலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்கள் இடுவது தொடர்பில் ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலை நிறுவகத்தின் சீகிரியசெயற்றிட்ட முகாமையாளர் சந்தனவீரசிங்க தெரிவித்துள்ளார்.
Read More
Unknown

துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் இலவச ஊடக செயலமர்வு.

பஹத் ஜூனைத்

துருவம் ஊடக வலையமைப்பு இரண்டாவது தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

"ஊடகங்கள் வாயிலாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்எனும் தலைப்பில் இச்செயலமர்வுமார்ச்மாதத்தில்நடைபெறவுள்ளது.
Read More
Unknown

முஸ்லிம் சனத்தொகையில் 20% போதைக்கு அடிமை: அதிர்ச்சித் தகவல்.

பஹத் ஜூனைத்

இலங்கை முஸ்லிம்களில் 20 சதவீதமானோர் போதைவஸ்துக்கு அடிமையாகியுள்ளார்கள் என்றும் நாலாப்புறங்களிலும் வாழும் முஸ்லிம்கள் இதனால்கூடுதலாகப் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர் ஸ்ரீலங்கடி சில்வா தெரிவித்தார்.
Read More
Unknown

சவூதியில் மரண தண்டனை விதித்த இலங்கையருக்கு மன்னிப்பு வழங்கவும் : ஜனாதிபதி கோரிக்கை

கொழும்பு -
சவூதியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய  இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்ட  மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குமாறு கோரி  சவூதி அரசருக்கு ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பவுள்ளார். 
Read More
Unknown

காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது

இந்தியாவில் அதிகளவான காற்று மாசடைதல் காரணமாக நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோரின் சராசரி ஆயுட் காலம் மூன்று ஆண்டுகள் வரை குறைந்துபோவதாக புதிதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு காட்டுகிறது.
Read More
Unknown

புத்தளத்தில் தற்காலிக இணைப்புப் பெற்றுள்ள மன்னார் வலய ஆசிரியர்களுக்கு மேலும் ஆறுமாதம் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது

ஊடகப்பிரிவு,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 பாடசாலைகள், புத்தளம் பிரதேசத்தில், அங்கு இடம்பெயர்ந்திருக்கின்றவடக்கு மாகாண முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி இயங்கிவருகின்றமை அறியப்பட்ட விடயமே 

2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து அப்போதைய அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது, இந்நியமனத்தில் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றவென புத்தளத்தில் இடம்பெயர்ந்திருந்த தொண்டர் ஆசிரியர்களும் இணைக்கப்பட்டிருந்தனர்.

Read More