Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 15, 2015

avathani Media Network

முடிவுக்கு வர முடியாமல் தடுமாறித்திரியும் தேசியப்பட்டியல் விவகாரம்

(ஆபூநிதா)

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக SLMC க்குக் கிடைத்த இரண்டு  தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை யாருக்கு வழங்குவது என்ற சர்ச்சைக்கான தீர்வு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரவுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு அதிலும் வெற்றி பெற்ற ஒரேமாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.  இது ஒரு வரலாற்றுச் சாதனை என்று கூடச் சொல்லலாம்.

கடந்த 25 வருடங்கள் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளையும் ஏனைய வேலைத்திட்டங்களையும் செய்து அசைக்க முடியாது என நம்பியிருந்த தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை தோற்கடிக்கச் செய்து இவ்வெற்றியை SLMC பெற்றுக் கொண்டது இன்னுமொரு வெற்றியாகும்.

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் கோட்டையான காத்தான்குடிக்குள் நுழைவதாக இருந்தால் அதற்கான ஒரே வழி நல்லாட்சிக்கான தேசிய முன்னணிதான் என்பதைப் புரிந்து கொண்ட SLMC யின் தலைமைத்துவம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து தனது இலக்கை அடைந்து கொண்டது.

இந்தத் தேர்தலில் எதிர்பார்த்தபடி SLMC வெற்றிபெற்றாலும் காத்தான்குடியில் களமிறங்கிய ஹிஸ்புல்லாஹ், சிப்லி பாறூக் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.

இருந்த போதிலும், ஏற்கனவே தானும் ஒப்பந்தம் செய்திருந்ததாகச் சொல்லிய ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக தனக்குரிய தேசியப் பட்டியல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

SLMC யின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபட்டு வெற்றியீட்டிக் கொடுத்ததில் முக்கிய பங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு இருந்த போதிலும் இதனூடாக ஏறாவூரைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானா அவர்களே வெற்றி பெற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்த ஊருக்கொரு எம்பி வேண்டும் என்ற கோரிக்கை இவர்களின் வெற்றி மூலம் முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி என மூன்று ஊர்களுக்கும் கிடைத்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க..

SLMC கட்சியானது NFGG யுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பில் ஆலோசிப்பது என்ற தீர்மானத்திற்கு அமைவாக SLMC க்கு கிடைத்திருக்கிற தேசியப் பட்டியல் நியமனங்களில் ஒன்றை தரவேண்டும் என்ற கோரிக்கை NFGG யினால் SLMC தலைமைத்துவத்திடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டது.

அதனைப் தாம் பரிசீலிப்பதாகவும், கால அவகாசம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட SLMC யின் தலைமைத்தும் இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்காமல் இழுத்துக் கொண்டேயிருக்கிறது.

தேசியப் பட்டியல் பதவி கேட்டு காத்தான்குடி ஓட்டமாவடி திருமலை, வன்னி, மற்றும் அட்டாளைச் சேனை என்று பல ஊர்களிலிருந்தும் பலர் தலைவரின் கதவுகளை இன்னமும் தட்டிக் கொண்டே இருப்பதாகவும் அறிய முடிகிறது.

தாமும் தமது கட்சியும் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் காலங்களில் பல ஊர்களிலும் பலமேடைகளிலும் தங்களுக்குத்தான் தேசியப்பட்டியல் என்ற தனது வழமையான தாரக மந்திரத்தை தலைவர் பகிரங்கமாகவும் இரகசியமாகும் தெரிவித்திருந்தார். அதுவே இப்போது அவருக்கே தலையிடியாக மாறியிருக்கிறது.

SLMC க்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் இராஜினாமாச் செய்து அவர்களின் வெற்றிடங்களுக்கு இன்னும் சில நாட்களில் வேறு இருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த் தேசியப்பட்டியல் விவகாரம் மறைமுகமாக இருந்தாலும்  திருமலை மற்றும் வன்னி மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இறுதியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு SLMC க்குக் கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை ஓட்டமாவடியைச் சேர்ந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் ஒருவரான சகோதரர் றியால் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SLMC கட்சியினை வெல்லச் செய்து அதற்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்று கருத்தும் தற்போது வலுவாக மேலோங்கி நிற்கிறது.

SLMC சார்பாக போட்டியிட்டவர்களில் றியாலைவிட அதிகமாக வாக்குகளைப் பெற்றவர்களாக காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர்களான சிப்லி பாறூக் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் இருக்கிறார்கள. இவர்களில் ஒருவருக்கு வழங்குவதே பொருத்தம் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.

தலைவர் ஹகீம் அவர்கள் கல்முனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில் தேசியப்பட்டியல் நியமனத்தை சுழற்சி முறையில் வழங்க ஆலோசிப்பதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதே போன்று இன்னுமொரு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையில் தேசியப்பட்டியல் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கே வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி வேறுவேறான கருத்துக்களும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

தேசியப்பட்டியல் நியமனம்  சிரேஸ்ட உறுப்பினர்களுக்கே வழங்கப்பட வேண்டுமாக இருந்தால் அது கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரான காத்தான்குடியைச் சேர்ந்த முபீன் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்ற கருத்தும் பலராலும் முன்வைக்கப்படுகிறது. இக்கருத்திலும் நியாயமில்லாமலில்லை.

எது எப்படியோ கட்சியின் மானத்தையும் மரியாதையையும் காப்பாற்றிக் கொடுத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அதிலும் குறிப்பாக காத்தான்குடிக்கே தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை வழங்குவது பொருத்தமானதாகும். இது தொடர்பில்  SLMC யின் தலைமைத்துவம் மீண்டும் ஒருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இல்லையென்றால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC கால்பதிப்பது கேள்விக்குறியாகிவிடும்.!



Read More
avathani Media Network

தேசியப் பட்­டி­யலை சுழற்சி முறையில் வழங்­கு­வது பற்­றியும் ஆலோ­சிக்­கிறோம் : ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய பட்­டியல் விவ­கா­ரத்தை இன்னும் நீடித்துக் கொண்டு போவ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தின் அடுத்த அமர்வில் எனது சகோ­தரர் ஹபீஸ் தனது  கன்­னி­யு­ரை­யையும், கடைசி உரை­யையும் நிகழ்த்­துவார்.

அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யையும் இரா­ஜி­னாமாச் செய்வார். அதன் பின்னர் உரி­ய­வர்­க­ளுக்கு வழங்­குவோம். யாருக்கு வழங்­கு­வது என இது­வரை முடிவு செய்­ய­வில்லை.

மசூறா அடிப்­ப­டை­யி­லேயே முடிவு செய்வோம். எங்­க­ளோடு தேர்தல் உடன்­ப­டிக்­கை­களை செய்து கொண்ட அமைப்­புக்­க­ளுக்கு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை சுழற்சி அடிப்­ப­டையில் வழங்­கு­வது பற்­றியும் ஆலோ­சனை செய்து கொண்­டி­ருக்­கின்றோம் என  நகர அபி­வி­ருத்தி, திட்­ட­மிடல், நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­சரும், மு.கா.வின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று முன் தினம் (13.09.2015) மாலை கல்­முனை நகர அபி­வி­ருத்தி தொடர்­பாக விளக்கம் அளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தெரி­வித்தார். 

கல்­முனை ஆசாத் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இவ்­வூ­ட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது அவர் மேலும் தெரி­விக்­கையில்,
தேர்­தலின் போது பிர­தமர் வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக கல்­முனை நகரை நவீன முறையில் அபி­விருத்தி செய்து புதிய கல்­முனை நகரை கட்­டி­யெ­ழுப்ப திட்­ட­மிட்­டுள்ளோம். இதற்­காக நட­வ­டிக்­கைகள் யாவும் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

நகர அபி­விருத்தி திட்­ட­மிடல் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­சி­னூ­டாக கல்­முனை புதிய நகர அபி­வி­ருத்தித் திட்டம் பற்­றி­ய­தொரு பூர்­வாங்க ஆலோ­சனைக் கூட்­ட­மொன்­றினை நடத்­தினோம்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் நான் நடத்­திய பிரத்­தி­யேக சந்­திப்பின் போது கல்­முனை நகர அபி­வி­ருத்­திக்கு தனியார் காணி­களை சுவீ­க­ரிப்­பது பற்­றியும், நஷ்­ட­ஈடு சம்­பந்­த­மான நெருக்­க­டிகள் போன்ற விட­யங்­களை ஒழுங்­கு­ப­டுத்திச் செய்யக் கூடி­ய­வா­றான ஒரு திட்டம் பற்றியும் பேசினோம். நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு வங்கி முறி­களை வழங்க எண்­ணி­யுள்ளோம். அவர்கள் அவற்றை தேவை­யான நேரத்தில் பண­மாக்கிக் கொள்­வ­தற்கு ஏற்ற வகை­யிலும், அதற்கு வட்­டியும் வழங்க ஏற்­பாடு செய்­யப்­ப­டு­மென்று பிர­தம மந்­திரி என்னிடம் கூறி­யி­ருந்தார்.

கல்­முனை நகரை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்­க­னவே நாங்கள் 80 ஏக்கர் காணியை சுவீ­க­ரிப்­ப­தற்கு தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளோம். இதற்கு மேல­தி­க­மாக சுமார் 800 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய கல்­முனை நகர அபி­வி­ருத்­தியை செய்­வ­தற்­கான ஆரம்ப வரை படங்­களும், அவற்றை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மூலம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிப்­ப­தற்கும் ஏற்­க­னவே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

முதற்­கட்­ட­மாக காணி மீட்டல் அதி­கார கூட்­டுத்­தா­ப­னத்தின் உத­வி­யோடு  சுமார் 200 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கு­ரிய ஆரம்ப மதீப்­பீ­டு­களை செய்­யு­மாறு இன்­றைய கலந்­து­ரை­யா­டலில் பணித்­துள்ளோம்.

இச்­சந்­திப்பில் நீர்ப்­பா­சன திணைக்­களம், விவ­சாய திணைக்கம், காணி மீட்டல் அதி­கார கூட்­டுத்­தா­பனம், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை, நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை ஆகி­ய­வற்­றுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டோம்.

இதே வேளை, கல்­முனை நகர அபி­வி­ருத்­திக்­கான நிதியை இவ்­வ­ருட வரவு – செலவு திட்­டத்தில் பிரத்­தி­யேக நிதி ஒதுக்­கீட்­டினை பெற்றுக் கொள்­வ­தற்­கான மதிப்­பீட்­டினை சமர்ப்­பிக்­கு­மாறும் பணித்­துள்ளோம்.

தற்­போ­துள்ள கல்­முனை பிர­தான வீதிக்கு மாற்று வீதி­யாக பிர­தான வீதிக்கு சமாந்­த­ர­மான 60 அடி அக­ல­மு­டைய வீதியை அமைப்­ப­தற்கு எண்­ணி­யுள்ளோம். இவ்­வீ­தியை காரை­தீவு – மாவ­டிப்­பள்ளி வீதியில் இணைப்­ப­தற்கு திட்ட வரை­புகள் வரை­ய­வுள்ளோம்.

இது தேர்­தலின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

கல்­முனை புதிய நகரம் எல்லா வச­தி­க­ளையும் கொண்­ட­தொரு நவீன நக­ர­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­படும். இந்த விவ­கா­ர­ங்­க­ளுக்கு விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்எம்.எம்.ஹரீஸ் பொறுப்­பாக இருப்பார். அவர் மேல­திக கூட்­டங்­களை நடத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவார்.

இதே போன்று சம்­மாந்­துறை பிர­தே­சத்­திலும் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். இதற்­காக 30 ஏக்கர் காணியை சுவீ­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். சம்­மாந்­து­றைக்­கு­ரிய பொதுக் கட்­டி­டங்­களை அமைப்­ப­தற்­கு­ரிய காணி­களை பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளோம்.

வெள்ள அபாய தடுப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்­கவும் தீர்­மா­னித்­துள்ளோம். இது பற்­றிய நட­வ­டிக்­கை­களை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் மேற்­கொண்­டுள்­ளார்கள்.

அடுத்த வாரம் முதல் விவ­சா­யிகள், காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளோம். இதே போன்று அம்­பாரை மாவட்­டத்தில் ஏனைய இடங்­க­ளிலும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளோம்.

பொத்­துவில் பிர­தே­சத்தில் புதிய பஸ் தரிப்பு நிலையம், விளை­யாட்டு மைதானம் போன்­றன அமை­வ­தோடு, அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தில் புதிய நவீன வச­தி­க­ளு­ட­னான சந்தைக் கட்­டி­டங்­களும், பிர­தேச செய­ல­கத்­திற்­கான புதிய கட்­டி­டமும் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம். 

இதே போன்று நிந்­தவூர் கடற்­கரை பிர­தே­சத்தில் ஒரு விளை­யாட்டு அரங்கு, சிறுவர் பூங்கா ஆகி­ய­வற்றை அமைக்­க­வுள்ளோம். சாய்ந்­த­ம­ருது தோணா அபி­வி­ருத்தி சம்பந்தமாக ஏற்கனவே காணி மீட்டல் கூட்டுத்தாபனத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலையை அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளவுள்ளோம்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ள வேலைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

Read More
avathani Media Network

வடக்கு முதல்வரின் கால்களை கட்டிப்பிடித்துக் கதறிய உறவுகள்!

ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான நடைபயணம் இன்று நிறைவுக்கு வந்த நிலையில், குறித்த நடை பயணத்தில் பங்கெடுத்த காணாமல்போனவர்களின் உறவினர்களை முதலமைச்சர் சந்தித்து பேசியிருந்தார்.
இதன்போதே காணாமல்போனவர்களின் உறவினர்கள் இவ்வாறு கதறியழுதனர்.


Read More
avathani Media Network

ரணில்- மோடி - நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு பிரதமர் நரேந்திரசிங் மோடியுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இதன் அடிப்படையில் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டு தலைவர்களும் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
சார்க் வலய செய்மதியினை பரிமாற்ற நடவடிக்கைகள் வவுனியா மாவட்ட வைத்தியசாலை நவீனமயப்படுத்தல் சிறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குதல் இந்தியாவின் 17 பிராந்தியங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் அவசர சிகிச்சை சேவை அனுபவத்தை இலங்கைக்கும் வழங்குதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
Read More
avathani Media Network

வாகன குத்தகை கொள்வனவின்போது 30% கொடுப்பனவைக் கட்டாயமாக செலுத்த வேண்டும்!

வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, இதற்குப் பின்னர் வாகனங்களை முழுமையான குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, லீசிங் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றுநிரூபத்தின் பிரகாரம், வாகனத்தின் பெறுமதியில் 70 சதவீதத்திற்கு மாத்திரமே குத்தகை வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிரூபத்தின் பிரகாரம், நிதி நிறுவனங்கள் ஆரம்ப வைப்புத்தொகை இல்லாது வாகன கொள்வனவுக்காக வழங்கிய முழு லீசிங் வசதியை, இனி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் 30 வீத கொடுப்பனவைக் கட்டாயமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இந்த தீர்மானத்தினால், இலங்கையின் வாகனக் கொள்வனவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிங்சிகே தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

இலங்கை கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக காத்தான்குடிய சேர்ந்த வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமனம்..


துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் சிறந்த அரசியல்,சமூக கட்டுரை எழுத்தாளருமாவார்..

தனது பதவியை பெற்றுக்கொண்டபின் தனது முகநூலில்.

“அல்ஹம்துலில்லாஹ். துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக உத்தியோகபூர்வமாக இன்று பணிகளைப் பொறுப்பேற்றேன்”

“அல்லாஹ்வுக்கும் எனதருமைப் பெற்றோருக்கும், என்னுடன் பொறுமைகாத்து உறுதுணையாக ஒத்துழைப்பு நல்கிய மனைவி மக்களுக்கும் உடன் பிறப்புகளுக்கும், கண்கண்ட மற்றும் கண்காணாத ஆசிரியர்களுக்கும், உயிர் தோழர்களுக்கும் என்னை வளர்த்தெடுத்த தாய் மண்ணுக்கும் நன்றிகள் பல கோடி” என பதிவிட்டு நன்றி தெறிவித்திருந்தார்.

காத்தான்குடி மண்ணிற்கு புகழ் பெற்றுக்கொடுத்த  வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்...

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
avathani Media Network

கைத்தொலைபேசி அழைப்பால், காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்!

சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும், கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன…
பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில் இம்மூன்று பெண் பிள்ளைகளும் வைக்கப்பட்டிருந்தனர்.
முறையே பன்னிரெண்டு, எட்டு, ஐந்து வயதுடைய இப்பெண்பிள்ளைகளின் தாய் மூன்று நாட்களுக்குமுன் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை எங்கு சென்றார் என்னவானார். எனத் தெரியவில்லை. மூன்று பிள்ளைகளின் தகப்பன் கூலிவேலை செய்து கிடைக்கும் வருமானத்தை தேடிக்கொள்வார்.
வேலை கிடைக்காவிட்டால் சாப்பிடக்கூட முடியாத நிலையேற்படும். இவரது மனைவி முன்பு கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் வேலை செய்தார்.
கணவருக்கு விருப்பமில்லாததால் தொழிலுக்கு செல்லாமல் பின்னர் வீட்டிலிருந்தார். கணவர் சந்தேகப்பட்டதினால் மனைவி தொழிலுக்கு செல்லாமலிருந்தார் என தெரிய வருகிறது.
இதன் காரணமாக அடிக்கடி இவர்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. இதன் பின்னணியிலேயே இவர் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்ற தினம் காலையில் பன்னிரெண்டு வயதுடைய மூத்தமகளை அழைத்து மாத்தறை செல்லலாமென்றார் தந்தை.
பிள்ளைகளும் தயாராகி வந்தனர் பண்டாரவளைக்கு வந்த இவர்கள் வெல்லவாய பேரூந்திலேறி ராவணா நீர் வீழ்ச்சியருகில் இறங்கினர்.
நீர் வீழ்ச்சி பகுதிக்கு சென்ற இந்நான்குபேரும் …. “ஒருவரிடம் கையடக்க தொலைபேசியை கேட்டு அம்மாவுடன் தொடர்பு கொண்டு தாம் நால்வரும் ராவணா நீர்வீழ்ச்சியில் குதிக்கப்போவதாக கூறும்படி தம் மகளிடம் கூறச்சொன்னார்.
மகள், தாயிடம் கதைத்தபோது நீங்கள் ஒருவரும் சாகவேண்டாம் என அழுதவாறு தாய் கூறியுள்ளார்.
“இப்பிள்ளைகள் மூவரும் என் தங்கையினுடையவை, வீடு அடுத்தடுத்துள்ளன தினமும் காலையில் என் வீட்டுக்குவரும் பிள்ளைகள் அன்று வராததினால் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஒருவரும் காணப்படவில்லை.
வீட்டின் உட்புற சுவரில் நாம் அனைவரும் ராவணா நீர்வீழ்ச்சி பகுதிக்கு குதிக்கப்போவதாக எழுதியிருப்பதை கண்டு உடனடியாக தியதலாவ பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தார். பிள்ளைகளின் பெரியம்மா.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்தினம் பிள்ளைகளின் தகப்பன் நாம் அனைவரும் விஷமருந்துவோமா என பிள்ளைகளிடம் கேட்டபோது பிள்ளைகள் வேண்டாமென்றுள்ளனர்” என்றதையும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அன்றும் உல்லாசப் பயணிகள் நிறைந்திருந்தனர். ஒருவர் மூன்று பெண்பிள்ளைகளுடன் நீர் வீழ்ச்சிப் பகுதிக்கு வந்தார். அவர் கலவரத்துடன் காணப்பட்டார்.
என்னிடம் தொலைபேசியை கேட்டு எவருடனோ பேசினார்கள். அவர்கள் பேசியதை நான் கேட்கவில்லை. பின்னர் என்னிடம் தொலைபேசியை தந்தார். இதையடுத்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது.
அதில் ஒரு பெண் அழுதவாறு என்னுடன் பேசினார். துரை அவர்களே நீர்வீழ்ச்சிப் பகுதியில் என் கணவரும் மூன்று பிள்ளைகளுமுள்ளனர்.
இவர்கள் தற்கொலை முயற்சியிலீடுபடவுள்ளனர் தயவு செய்து குதிக்க விடாது தடுத்து விடுங்கள்” என்றார்.  நான் உடனே அவ்விடத்துக்கு ஓடினேன். அங்கு பிள்ளைகளின் தந்தை அழுதுகொண்டிருந்தார்.
தன்னையும் பிள்ளைகளையும் விட்டு மனைவி சென்று விட்டதாகவும் மனைவி சிலரிடம் கடன்பட்டுள்ளார். தனக்கு வருமானமில்லையென கூறினார். நான் அவரை ஆறுதல் செய்து சமாதானப்படுத்தினேன்.
உடனே நான் அப்பெண்ணுடன் தொடர்பு கொண்டு நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு வருமாறு கூறினேன். பணமில்லையென்றும் தான் ஹோமாகமையிலிருப்பதாகவும் கூறினார். பணம் நான் தருகிறேன் முச்சக்கரவண்டியில் வருமாறு கூறினேன்.
பிள்ளைகள் ஒன்றுமே சாப்பிட்டிருக்க வில்லை அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட ஏற்பாடுகளை செய்தேன்.
“எல்ல” பிரதேச மரண விசாரணை அதிகாரி எஸ். ஜயசேகரவின் புதல்வன் ‘லஹிரு பிரபாத்’அங்கிருந்தால் அவரின் உதவியுடன் விடயத்தை மரண விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
தான் வரும்வரை தந்தையையும் பிள்ளைகளையும் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்குசெல்ல இடமளிக்கவேண்டாமென பொலிஸ் பொறுப்பதிகாரி அவ்விளைஞனிடம் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் பொறுப்பதிகாரி எல்.டி.என். கருணாரத்ன, உபபொலிஸ் பரிசோதகர் சனத் பிரியன்த, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பந்துமதி, கான்ஸ்டபிள் தேசபிரிய ஆகியோர் ஸ்தலத்துக்கு வந்து தந்தையையும் மூன்று பிள்ளைகளையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றர்.
காதல் கைகூடாததால் இளம் காதலர்கள் இதே நீர்வீழ்ச்சியில் குதித்து மரணித்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் சம்பவித்தது. இவர்களும் நீர் வீழ்ச்சியில் குதிக்கமுன் கையடக்க தொலைபேசியில் தம் பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்திருந்தனர். இருப்பினும் இவர்களிருவரையும் காப்பாற்ற முடியவில்லை.
இந் நான்கு பேரையும் கையடக்க தொலைபேசி தகவல் மூலம் காப்பாற்ற முடிந்தது இதற்கு காரணமானவர் கையடக்க தொலைபேசியின் உரிமையாளர் களுத்துறையை சேர்ந்த எல்.எப. பத்மசிறி.
எல்.எ. பத்மசிறி, மரண விசாரணை அதிகாரி எஸ். ஜயசேகர, இவரது மகன் லஹிரு பிரபாத், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.டி.என். கருணாரத்ன ஆகியோரின் உடனடி நடவடிக்கையின் காரணமாக நான்கு உயிர்கள் காப்பாற்றப் பட்டன.
Read More
avathani Media Network

புத்தக கண்காட்சியில் சிங்கள-தமிழ் எழுத்தாளர்களின் ஒன்றுக்கூடல்கள்-செப்டம்பர18-27 வரை

வருடந்தோறும் செப்டம்பர் மாதம்; நடைபெறும்;; சர்வதேச புத்தக விற்பனையாளர்களும் பதிப்பகத்தாரும்;  வாசகர்களும் கலந்துக் கொள்ளும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இம்மாதம் 18 ந்திகதி முதல் 27ந்திகதி வழமை போல்  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவுள்ளது.

இம்முறையிலான புத்தகக் கண்காட்சித் திடலில் அமைக்கப்பெற்ற குடிலில் (HUT) சிங்கள-தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள் கலந்துக் கொள்ளும் வகையில். தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவுள்ளன. இந்த நிகழ்வுகளை இலங்கைக்கான எழுத்தாளர் அமைப்பு இலங்கை புத்தகப் பதிப்பாளர்களின் சங்கத்தின்; அனுசரணையுடன் ஏற்பாடுச் செய்துள்ளது.

மேற்படி நிகழ்வுகளில் ஆரம்ப நிகழ்வாக 18 ந்திதகதி 10.00 காலை மணிக்கு சிங்கள- தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள் ஒன்றுக்கூடல் இடம்; பெறுவதோடு அன்று பிற்பகல் சிங்கள-தமிழ்க் கவிஞர்கள் கலந்துக் கொள்ளும் கவிதா நிகழ்வு இடம் பெறும். தொடந்து வரும்; நாட்களில் சிங்கள தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பல்வேறுத் தொனிப்பொருள்களில் கலந்துரையாடல்கள் இடம் பெறும்.

குறிப்பாக 26ந்திகதி பிற்;பகல் 2.30 மணிக்கு சிங்கள-தமிழ் இலக்கிய உறவுகள் எனும் தொனிப்பொருளில் சிங்கள-தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிகள் பற்றியும், இரு மொழி இலக்கிய வளர்ச்சியினை பற்றியும் கலந்துரையாடல் என்பது குறிப்பிடதக்கது. இக்கலந்துரையாடல்களில் சகல சிங்கள-தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள்,;, கலந்துக் கொள்ளுமாறு இலங்கை எழுத்தாளர்களுக்கான அமைப்பு திறந்த அழைப்பு விடுத்துள்ளது.


Read More
avathani Media Network

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக கருணாவிடம் விரைவில் விசாரணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. 
புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த கொலை தொடர்பில் விசாரணை நடத்த கருணா எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார்.
2006ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பில் அப்போது கிரமமான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது இந்தக் கொலை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கிரமமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Read More
avathani Media Network

அம்பாரை கரையோரப் பிரதேசங்களில் அதிகளாவான மீன்கள் பிடிபட்டன.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான நிந்தவூர், காரைதீவு பகுதிகளில் அதிகளவான கீரி மீன்கள் கரைவலைகளில் அகப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று நிந்தவூரில் ' ஸ்டாhர் 'எனும் மீனவர் குழுக்களுக்கு சுமார் ரூபாய் முப்பது இலட்சம் பெறுமதியான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. இதே போன்று நிந்தவூரிலும், காரைதீவிலும் பத்துக்கு மேற்பட்ட மீனவர் குழுக்களுக்கு சுமார் ரூபாய் ஒன்றரைக் கோடி மதிக்கத்தக்களவு கீரி மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அளவுக்கதிகளவு மீன்கள் ஒரே நேரத்தில் பிடிபட்டுள்ளதால் மீன்களின் விலை மிகக் குறைந்துள்ளதாகவும், இதனால் மீன்கள் பழுதுபடாமல் பாதுகாப்பதற்காக குளிரூட்டுவதிலும், உப்புப் போடுவதிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

மீன்கள் அதிகளவில் பிடிபட்டுள்ளதனால் மீனவர் மனங்களில் ஆனந்தம் பொங்குவதையும், அதனை வெளிப்படுத்தும் பொருட்டு, பொது மக்களுக்கு கறிக்கு மீன்களை இலவசமாக வழங்குவதையும் காணக் கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.









Read More
avathani Media Network

லங்கா விவசாயிகள் போரத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட விவசாயிகள் மாநாடு நிந்தவூரில்;. -தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றம்-

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

லங்கா விவசாயிகள் போரத்தின் ஏற்பாட்டிலான அம்பாரை மாவட்ட விவசாயிகள் மாநாடு இன்று நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

லங்கா விவசாயிகள் போரத்தின் அம்பாரை மாவட்டத் தலைவர் எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் இலங்கையில் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கின்ற முல்லா நிறுவனத்தின் முகாமையாளர் சுனில் சாந்த, இலங்கைக்கான இணைப்பாளர் சோமசிறி, அம்பாரை மாவட்டத்திலுள்ள நெற்செய்கையாளர்கள், தோட்டப்பயிர்ச் செய்கையாளர்கள் எனப் பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முல்லா நிறுவனத்தின் முகாமையாளர் சுனில் சாந்த கருத்துத் தெரிவிக்கையில்:-'கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் நம்மால் இவ்வாறு ஒரு கூட்டம் கூட்டுவதானாலும் சிஐடியினர், பொலிசார் எம்மைச் சூழ்ந்திருப்பர். எம்மால் சுதந்திரமாகக் கதைக்க முடியாது. கருத்துத் தெரிவிக்க முடியாது. உண்ணமுடியாது, குடிக்கமுடியாது. ஆனால் இன்று நடைபெறும் நல்லாட்சியில் அவ்வாறான நிலை இல்லை. எனவே, எமது பிரச்சினைகளை நாம் அரசிடம் முறையிட்டுத் தீர்த்துக் கொள்ள முடியும்' என நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் அம்பாரை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அதிலிருந்து மீட்சி பெறுவதற்கான சில திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. இறுதியில் மூன்று முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன
 '01.சேதனப் பசளைகளின் பாவனை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு அரசாங்கம் நல்ல விலை கொடுத்து வாங்கி, அதனைக் களஞ்சியப்படுத்த வேண்டும்.

02.சேதனப்பசளை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு கிலோ கிராம் சேதனப் பசளையை அரசாங்கமானது ரூபா12.00 க்கு வாங்க வேண்டும்.

03.அம்பாரை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து அறுபத்தையாயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்படுகின்ற நெல் உற்பத்தியைக் கொள்வனவு செய்து, களஞ்சியப்படுத்த அரசாங்கத்தினால் முடியாதவிடத்து, நெல்லை அரிசி மாவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடிய மாற்றுத் திட்டமொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்'











Read More