Featured Home (TOP)

Recent Comments

Friday, December 4, 2015

avathani Media Network

கடந்த 9 வருடங்களாக சீரழிவுக்குட்பட்ட நாட்டை ஒரே நாளில் திருத்திவிட முடியாது – சந்திரிக்கா

கடந்த 9 வருடங்களாக சீரழிவுக்குட்பட்ட நாட்டை ஒரே நாளில் திருத்திவிட முடியாது எனவும் திருடர்களைப் பிடிப்பது மாத்திரம் அல்ல எதிர்காலத்தில் திருடாமல் இருப்பதற்கான செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் துறைமுக கிளையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

தமிழக மக்களுக்கு உதவி வழங்க அமைச்சரவைக் கூட்டம்

பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வடமாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (04) அனுப்பியுள்ள இரங்கல் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'நினைத்துப்பார்க்க முடியாத துயரினைத் தமிழகம் இன்று சந்தித்திருக்கின்றது. வானம் பிளந்ததுபோல கொட்டித்தீர்த்த மழை ஆற்றுப்படுத்தவே முடியாத அளவுக்கு தமிழகத்தை வாட்டி  வதைத்திருக்கின்றது. தமிழகமே வெள்ளக்காடாகி பல இலட்சம் மக்கள் தமது சொந்த வீட்டில் வாழமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து அவலத்துக்குள்ளாகியிருக்கின்றார்கள். 

தாழ்நிலங்களில் வாழ்ந்த ஏழை மக்களில் பலரின் உயிர்கள்கூட இழக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்த, சேகரித்த  சொத்துக்கள்கூட அழிவடைந்திருக்கின்றன. வார்த்தைகளுக்குள் விவரிக்கமுடியாத துயர் நிறைந்த இவ்வாறான வாழ்க்கையைத் தமிழகத்திலிருக்கும் எங்களுடைய தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.

எமது மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழ் மக்கள் செத்துவீழ்ந்தபோது தானாடாவிட்டாலும் 

தன் தசை ஆடும் என்பதுபோல முதலில் வீதியில் இறங்கியவர்கள் தமிழக மக்களே. அவர்கள் 

மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் சர்வதேச அரங்கையே உலுக்கும் அளவுக்கு வீரியம் பெற்றிருந்தன. அவ்வாறான எங்களுடைய தமிழுறவுகள் இன்று இயற்கைச் சீற்றத்தால் ஆற்றொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்களின் துயரமுந் துன்பமும் எம்மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

எங்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து 

மீண்ட சம்பவங்களும் தற்போது நிகழ்ந்துள்ளன. மீண்டும் அவ்வாறான நிலையேற்படுமோ என்ற பயம் இல்லாமல் இல்லை. ஆனாலும், தமிழகத்துடன் ஒப்பிடுகின்றபோது அங்கு நிகழ்ந்திருக்கின்ற பேரிடருக்கு நிகரான பாதிப்பினை எங்கள் மக்கள் சந்திக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வடமாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்றைய எமது அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கும்.  பாதிக்கப்பட்ட மக்கள் தமது அவல நிலையிலிருந்து விரைவில் விடுபட நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்' என அந்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

இலஞ்ச, ஊழல் தொடர்பில் சுமார் 12 மில்லியன் முறைப்பாடுகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையகத்துக்கு சுமார் 12 மில்லியன் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று, அது தொடர்பான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.' 

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்னும் தொனிப்பொருளில் இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் கபே அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வொன்று, யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது. 

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், 'மக்கள், ஆணைக்குழு மீது வைத்த நம்பிக்கை காரணமாக இவ்வளவு முறைப்படுகள் கிடைக்கப்பெற்றன. எங்கள் நாட்டில் தற்பொழுது அதிகமாக பேசப்படும் விடயமாக இலஞ்சம் மற்றும் ஊழல் காணப்படுகின்றது. இவை இல்லாத சமூதாயத்தை எவ்வாறு கட்டியெழுப்புதல் என்பது இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது' என்றார்.

மேலும், 'இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் புலன் விசாரணை நடத்தி சட்டத்தின் படி தண்டனை பெற்றுக்கொடுப்பதை விட, அதனை முன்னரே தடுப்பது எப்படி என்ற கோட்பாடே 

தற்போது அவசியமாகின்றது. ஒவ்வொர அரச நிறுவனங்களிலும் பலர் கடமையாற்றுகின்றனர். 

ஒவ்வொன்றையும் அவதானித்து அதனை தடுப்பது சாத்தியமற்றது. மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இதனை தடுக்க முடியும்' என்றார்.
Read More
avathani Media Network

முன்னாள் ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்ட மாட்டேன்

ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை வடிவமைக்கவும் அதை நிறைவேற்றவும், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரணியை வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற, வரவு - செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்,

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சரியான தருணமிதுவெனச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி, 'நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட வேண்டுமென தனிப்பட்டரீதியில் நான் எண்ணுகிறேன்' என்றார். அத்தோடு, ஜனாதிபதியாகப் பதவியேற்று, ஏறத்தாழ ஒரு வருடம் கடந்துவிட்டது என்பதையும் அவர் ஞாபகமூட்டினார். 

கடந்த நாடாளுமன்றத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்பட்ட போதிலும், பயன்மிகு அரசியல் சீர்திருத்தங்களை அவ்வரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை என்பதை மீள ஞாபகமூட்டிய அவர், அந்தப்  பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தைச் சமர்ப்பித்து, நிறைவேற்றதிகாரத்தின் அதிகாரங்களை அதிகரித்ததாகத் தெரிவித்தார்.

தன் சார்பான செலவுகளிலும், ஒழுக்கத்தைக் கொண்டுவர முடிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

'200 பேருக்கும் அதிகமான தூதுக்குழுவுடன், தனி விமானத்தில் நான் செல்வதில்லை' எனத் தெரிவித்த அவர், மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல்மேற்கொள்ளப்படும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர, தன்னால் முடிந்ததாகக் குறிப்பிட்டார். 

இந்த விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதியை  நான் குற்றஞ்சாட்ட மாட்டேன். எனினும், அவருடைய பணியாட் தொகுதியின் செயற்பாடுகளை அவர் தேடிப் பார்க்காமையினால் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்தன என்றார்.

இலங்கை மீதான பார்வையை, சர்வதேச சமூகம் மாற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், பல நாடுகள், இலங்கையை நம்பத்தகுந்த நண்பனாக வரவேற்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு, இலங்கை மீன்களின் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள தடையை நீக்குவதற்கு, அவ்வொன்றியத்துடன் மத்தியஸ்தத்தில் ஈடுபடுவதற்கு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோன் சம்மதித்துள்ளதாகவும், இலங்கைக்கான நிதியுதவிகளுக்கு அவர் சம்மதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதியே பங்கேற்றி உரையாற்றியமை ஒரு முன்னுதாரமாகும்" என்றார்.
Read More
avathani Media Network

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தமிழகத்தின் வௌ்ள நிலவரம்

காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் விரைவில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தமிழகத்தின் வெள்ளநிலவரம் உணர்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் இடம்பெற்றுவரும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லோரண்ட் பேபியஸ்  இதனைக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய 5 ஆயிரம் கோடி இந்திய ரூபா வெள்ள நிவாரணத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.

அந்த வேண்டுகோளுக்கிணங்க, உடனடியாக ஆயிரம் கோடி ரூபா வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்திற்குக் கூடுதலாக 10 இராணுவக் குழுக்களையும், 20 தேசிய மீட்புப் படை குழுக்களையும் அனுப்ப வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையையும் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகள் இல்லாத வகையில் பெய்த கடும் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று விஜயம் செய்திருந்தபோதே முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்த கோரிக்கையினை விடுத்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதார சீர்கேடு காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

மக்களின் நலனை கருத்திற்கொண்டு தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்திலிருந்து மருத்துவர்கள் முதலுதவியாளர்கள் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மின்சாரம் இன்மையால் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் வெள்ளம் கபளீகரம் செய்த பகுதிகளில் இருந்து இதுவரை 62,267 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் 97 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மொத்தம் 460 முகாம்களில் 164,636 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்றுவதற்காக பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மழை நீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக தமிழகத்தில் குடிநீா், பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருதாக தமிழகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு லிற்றா் பால் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 20 ரூபாவிற்கு விற்கப்பட்ட குடிநீர் போத்தலொன்று தற்போது 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வௌ்ளத்தில் மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அனா்த்தங்களை தவிர்ப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
Read More
avathani Media Network

அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவம். சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றில்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­று­மெ­னவும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பெண் பிர­தி­நி­தித்­துவம் 25 வீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான சட்ட மூலம் அடுத்­த­மாதம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி பிர­தி­ய­மைச்சர் கரு பர­ண­வி­தான தெரி­வித்தார்.

25% பெண் பிர­தி­நி­தித்­துவம் பாரா­ளு­மன்­றத்­துக்கும் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்ட மூலம் அமை­யு­மெ­னவும் அவர் கூறினார்.


நேற்று மதியம் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் பதி­ல­ளிக்­கையில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுடன் நாட்டின் அர­சி­யலில் புரட்­சி­கர மாற்றம் ஒன்று ஏற்­ப­ட­வுள்­ளது. கடந்த காலங்­களில் பெண்கள் விருப்பு வாக்கு தேர்தல் முறை­மையில் கீழ் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அஞ்­சி­னார்கள்.

அர­சி­யல்­வா­தி­களின் வித­வை­களே போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வந்­தார்கள். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொகுதிவாரியும், விகிதாசார முறையும் கலந்ததான புதிய முறையில் நடைபெறவுள்ளமை பெண்களுக்கு வாய்ப்பாக அமையும் என்றார்.
Read More
avathani Media Network

எஸ்.எச்.எம்.ஜெமீல் நினைவுப் பேருரையும் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும்



கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும், மூத்த கல்விமானுமான காலஞ்சென்ற எஸ்.எச்.எம். ஜெமீல் நினைவுப் பேருரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) விளையாட்டு துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. 

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரண்டாவது அமர்வில் கொழும்பு கிளையின் வருடாந்த பொதுக் கூட்டமும் இடம்பெற்றது. 

கிளையின் தலைவர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஏ. நஜீம் மற்றும் பொறியியலாளர் யூ.எல்.ஏ.பாரூக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான குழு கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. இதில் மொரட்டுவ பல்கலைக்கழக பதிவாளர் ஜௌபர் சாதீக், சுகாதார அமைச்சின் பணிப்பாளரும் சிரேஷ்ட வைத்தியருமான ஏ.எல்.எம்.பரீட், ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளா மருதூர் ஏ. மஜீத் மற்றும் களுத்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் இதில் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். 

இதன்போதுஇ மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பான நினைவு மலரொன்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இந்த நிகழ்வின் இரண்டாவது அமர்வில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த மாநாடும் இடம்பெற்றது.

இதன்போது 2016ஆம் ஆண்டுக்கான 31 பேரைக் கொண்ட புதிய செயற்குழுவொன்றும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 













Read More
avathani Media Network

இரு பிள்ளைகளின் தாய் மட்டு.கல்லடி பாலத்தில் பாய்ந்து தற்கொலை முயற்சி—காப்பாற்றிய நிலையில் பொலிசாரால் கைது

(நமது நிருபர்)
இரு பிள்ளைகளிள் தாயாண பெண்ணொருவர் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய எடுத்த முயற்சி பொது மக்களின் உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழுரைச்சேர்ந்த 28 வயதுடைய மார்க்கண்டு மாலினி என்ற பெண்ணே இவ்வாறு பாலத்தினுள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிததனர்.
இன்று மாலை 6.30 மணியளவில் இப்பெண் குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இப்பெண்ணை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுளளனர்.
Read More
avathani Media Network

மலேசியா மாநாட்டில் நம் நாட்டுக் கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் படிய கவிதை

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2011 மே மாதம் மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்றபோது மலாயாப் பல்கலைக்கழக பெர்னாடா சிஸ்வா மண்டபத்தில் மே 22ம் திகதி கவிக்கோ அப்துல் ரகுமானின் தலைமையிலே இடம்பெற்ற 'அண்ணல் நபியின் அழகிய பண்பு ' என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் 'எளிமை' என்ற உப தலைப்பில் பாடிய  கவிதை - 
என். நஜ்முல் ஹுசைன்

இந்த இணைப்பை click செய்வதன் மூலம் கேட்கலாம்
Read More
avathani Media Network

வறுமையினை கண்டு பயந்து பெறுமதிமிக்க கல்வியினை கைவிட்டு விடக் கூடாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்



(ஏ.எல்.டீன்பைருஸ்)

கிழக்கு மாகாணசபை நிதி  ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி பிரதேச கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை மட்.மம.அலிகார் வித்தியாலயத்திற்காக  சுமார் 120000/= பெறுமதியான  போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பிரின்டர் என்பன வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் கலந்து கொண்டார்.

பாடசாலையில் ஒரு போட்டே கொப்பி இயந்திரம் இல்லாததன் காரணமாக  காரியாலய பணிகளை செய்வதில் தாங்கள் பாரிய சிரமங்களையும், செலவினங்களையும் அடைந்தோம் ஆனால் அந்த குறை இன்று கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் இன் மூலமாக நிவர்த்தியாகி உள்ளதாக  வித்தியாலயத்தின் அதிபர் எம்.றசாக் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு பாலமுனை மட்.மம.அலிகார் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.றசாக் தலைமையில் நடைபெற்றது அதிதிகளாக பொறியியலாளர் சிப்லி பாறூக்,ஆசிரிய ஆலோசகர் எம்.ஜவாட்,பாடசலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாலமுனை ஒரு பின்தங்கிய பிரதேசம் மாத்திரமின்றி இங்கு கல்வி பயில்கின்ற மாணவர்கள் பல கஷ்டமான சூழ்நிலைகளில் கல்வி கற்று வருகிறார்கள் என எனக்கு முன் பேசிய பலர் இங்கு குறிப்பிட்டார்கள்;.

இவ்வாறான பாடசாலைக்கு எமது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின மூலம் உதவக்கிடைத்தமையானது  பெரும் பாக்கியமாக நான் கருதுகின்றேன் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார் 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

இலங்கையை பொறுத்த மட்டில் இலங்கையின் எமுத்தறிவு, கல்வி மட்டம் என்பது 85% வீதத்தினை தாண்டியுள்ளது. இதற்கான காரணம் இலவச கல்வி,இலவச சீருடை என்பனவும் ஒரு காரனமாகும்.
பின்தங்கிய  பிரதேசம் என்பதனால் வறுமைக்கு அஞ்சி யாரும் தங்கள் கல்வியினை விட்டு ஒதுங்கி விடக் கூடாது. கல்விதான் மிகப் பெரிய சொத்தாகும்

இதற்கு மிகப் பெரிய உதார  புருஸர்தான் மறைந்த மாபெரும் அறிஞர்,விஞ்ஞானி அப்துல் கலாம். அவர் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் மிகவும் வறுமையோடு கஷ்டங்களோடு தன் கல்வியினை அவர் தொடர்ந்ததன் காரணமாக த்தான்  உலகம் தன்னை திரும்பி பார்க்கும் அளவுக்கு அவர் புகழ்பெற்ற விஞ்ஞானியாக மாறினார்.

எனவேதான் வறுமை,கஷ்டம், பின்தங்கிய பிரதேசம் என்ற விடயங்களுக்கு அப்பால் மாணவர்களாகிய நீங்கள் படித்து முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

இப்பாடசாலை மாணவர்கள் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 3 மாணவர்கள் 150 மேற்பட்ட புள்ளிகளையும், சுமார் 12 மாணவர்கள் 100 க்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றதாக இங்கு என்னடம் தெரிவித்தனர் நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன். இமமாணவர்கள் தான் மிகவும் திறமைசாலிகள் எனவே இவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.;

கடந்த அரசாங்கத்தினை விட இந்த நல்லாட்சியில் கல்விக்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டள்ளது. மேலும் இப்பாடசாலைக்கு பல தேவைகள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள் எதிர்காலங்களில் எங்களால் முடிந்த உதவிகளை நிச்சயம் பெற்றுத் தருவோம் என  கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.








Read More
avathani Media Network

செனட்டர் அல்-ஹாஜ் எஸ். இசட் மசூர் மௌலானா மறைவுக்கு அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு அனுதாபம்

செனட்டர் அல்-ஹாஜ் எஸ். இசட் மசூர் மௌலானா அவர்களின் மறைவு நிரப்ப முடியாத இடைவெளி ஒன்றை சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது. இவரது இறப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மர்ஹும் செனட்டர் அல்-ஹாஜ் எஸ். இசட் மசூர் மௌலானா அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் சார்பாக அதன் தேசிய பொதுச் செயலாளர் சட்டத்தரணி அல்-ஹஜ் ரஷீத் எம். இம்தியாஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

காலஞ்சென்ற செனட்டர் அல்-ஹாஜ் எஸ். இசட் மசூர் மௌலானா சமூக சேவை இயக்கங்கள் பலவற்றில் ஆர்வத்தோடு ஈடுபட்டு மக்களுக்காக சேவையாற்றியவர். அரசியலில் பல உயர் பதவிகளைப் பெற்று அலங்கரித்தவர். 'செனட்டர் என்றாலே மசூர் மௌலானாதான்' எனும் அளவுக்கு புகழ் பெற்றவர் . பல அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்து சமூக நலனுக்காக இவர் ஆற்றிய சேவைகளை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். 
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராக திகழ்ந்த அவர் அதன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு அண்மையில் நடைபெற்ற அதன் பொன்விழாவில் இவரது சேவையை மதித்து கௌரவித்தமை விசேடமாக குறிப்பிடத்தக்கது. 
அன்னாரின் இழப்பால் துயரருற்றிருக்கும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏனையோருக்கும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது.
இவ்வாறு அவ் அனுதாபச் செய்தியில் சட்டத்தரணி அல்-ஹஜ் ரஷீத் எம். இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

Read More
avathani Media Network

மஹிந்த தப்பிக்க இடமளிக்க முடியாது: மைத்திரி சூழுரை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை சுற்றியிருந்தவர்கள் செய்த ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்காது தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து மஹிந்தவினால் தப்பித்துக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தேவையற்ற செலவுகளை முழு அளவில் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும் படைகளுடன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது பிள்ளைகள் மற்றும் மனைவிக்கு ஹெலிகொப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை எனவும், ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய தேவையற்ற பணியாளர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்வும், வாகனங்கள் பெருமளவானவை அமைச்சுக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக்கொண்ட கடந்த அரசாங்கம் அந்த பலத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

மீராபாலிக்கா தேசிய பாடசாலையில் நடைபெற்ற ஆடல்பாடலைக் கண்டித்து இன்று (04.12.2015) NTJ வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

மீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா?


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா?
அன்புள்ள சகோதரசகோதரிகளே! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அண்மையில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் நான்கு மாடி ஆராதனை மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா என இரு விழாக்கள் நடைபெற்றதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்விழாவில் ஆலிம்கள்அரசியல்வாதிகள்ஊர் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில் 05ம் ஆண்டு பெண் மாணவிகள் மேடையேற்றப்பட்டு இசையுடன் கூடிய ஹிந்திப் பாடலுக்கு ஏற்ற வகையில் நடனம் ஆடிய நிகழ்வை உலமாக்களாகிய நாம் பார்வையிட்ட போது கடுமையாக அதிர்ச்சியடைந்தோம். சமூகத்தைப் பாதிக்கும் தீமைகளை யாராவது பகிரங்கமாக அரங்கேற்றினால் அது குறித்து சமூகத்தை எச்சரிக்கை செய்வது ஒவ்வொரு மார்க்க அறிஞன் மீதும் கட்டாயக் கடமையாகும். பல பெரியவர்கள் பிரசன்னமாயிருக்கும் ஒரு சபையில் அல்லாஹ்வின் அச்சமின்றி பகிரங்கமாக அரங்கேறிய இந்தக் கொடுமையை உரிய நேரத்தில் நாம் கண்டித்திருந்தோம். அல்ஹம்துலில்லாஹ்!

கண்டன உரையை ஆற்றிய மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்கள் தனது உரையில்'பாடசாலை என்பது கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் இடமாகும். கல்வி பெறுவதற்காக வரும் மாணவிகளை ஹிந்திப் பாட்டிற்கு நடனமாட விடுவதும் அதை மேடையில் அரங்கேற்றி பெரியவர்கள் ரசித்துக் கொண்டிருப்பதும் ஜீரணிக்க முடியாத கேவலமான செயலாகும். இஸ்லாத்திற்கு விரோதமான இச்செயல் பகிரங்கமாக அரங்கேற்றுவதற்கு யாரெல்லாம் ஒத்துழைப்பு வழங்கினார்களோ அத்தனை ஆசிரிய ஆசிரியைகளும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்எனக் கூறினார். அத்துடன் இந்த அநாச்சாரத்தை பகிரங்கமாக அரங்கேற்றிய அதிபர் ஆ.ஊ.ஆ.யு சத்தார் அவர்களை மௌலவி ஸஹ்றான் தனதுரையில் விழித்து 'உமது பொண்டாட்டி,பிள்ளைகளை இப்படி பகிரங்கமாக ஆட விடுவாயாஆட விடமாட்டேன் என்றால் மற்றவர்களுடைய பிள்ளைகளை மாத்திரம் எந்த நியாயத்தில் ஆட வைப்பது?' என்று காட்டமாகக் கேள்வி கேட்டார். இது அதிபர் சத்தார் அவர்களையோஅவரது மனைவிபிள்ளைகளையோ கேவலப்படுத்துவதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அல்ல! மாறாக அதிபர் சத்தார் அவர்கள் தான் பகிரங்கமாக அரங்கேற்றிய நடன நிகழ்வின் பாரதூரத்தை அவர் பளிச்செனப் புரிய வேண்டுமென்பதற்காகத்தான் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
இவ்வாறு குடும்பத்தை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கலாமா?
இஸ்லாம் வன்மையாகத் தடுத்த சமூகத் தீமைகளை பகிரங்கமாக அரங்கேற்றுபவர்களிடமும்அவ்வாறு அரங்கேற்ற ஆசைப்படுபவர்களிடமும் அத்தீமையின் பாரதூரத்தை உணர்த்த மேற்கண்டவாறு கேள்வி கேட்கலாம். இதற்கு பின்வரும் செய்தி சிறந்த சான்றாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து விபச்சாரம் செய்ய அனுமதி கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் 'உன் தாயுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது மகளுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது சகோதரியுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது சாச்சியுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது மாமியுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஎன (அடுக்கடுக்காக) கேள்விகளைக் கேட்டார்கள். நூல்: அஹ்மத் 22211
மேற்கண்ட ஹதீஸில் விபச்சாரத்திற்கு அனுமதி கேட்ட அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள்'அனுமதி இல்லைஎன்று பொத்தம் பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல் அவருக்கு 'பளிச்செனப்புரியும் வகையில் அவரது குடும்பப் பெண்களை தொடர்புபடுத்தி அவரிடமே கேள்வி கேட்டு புரிய வைக்கிறார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினாத் தெடுத்ததால் அந்த மனிதரின் குடும்பத்தை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கு இழுத்து விட்டார்கள் என்பது அர்தமல்ல.
சமூகத் தலைவர்களை பகிரங்கமாக கண்டிக்கலாமா?
இஸ்லாம் வன்மையாகத் தடை செய்தசமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளை பகிரங்கமாக அரங்கேற்றுபவர் யாராக இருந்தாலும் அவர்களை அடையாளப்படுத்தி உரையாற்றலாம். அப்போதுதான் சமுதாயம் நல்லுணர்வு பெறும். சாதாரண பொதுமக்கள் செய்யும் சமூகத் தவறுகளை விமர்சிக்கும் பலர் சமுதாயத் தலைவர்கள் செய்யும் சமூகத் துரோகங்களை பகிரங்கமாக விமர்சிக்கத் தயங்குகிறார்கள். இந்நிலை குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்!
உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள்தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடி விடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்ததும்பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும்தான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 4304
மேற்கண்ட ஹதீஸின் பிரகாரம் தவறு செய்பவர் உயர்ந்த அந்தஸ்துள்ள மனிதராக இருந்தாலும் அவரைக் கண்டிக்க நாம் பின்நிற்கக் கூடாது என்பது புலனாகிறது.
மட் மீரா பாலிகா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக் குழு வெளியிட்ட அறிக்கையில் உள்ள அறியாமைகள்!
பாடசாலை அபிவிருத்திக் குழு வெளியிட்ட அறிக்கையில் பாடசாலையின் கல்வித் தரம்,பாடசாலையின் சாதனைகள்அதிபர் சத்தார் அவர்கள் பொறுப்பேற்ற பின் ஏற்பட்ட மறுமலர்ச்சி என்று பல விடயங்களை பேசியுள்ளனர். இவைகளை நாம் மறுக்கவில்லை. நாம் முழுக்க முழுக்க கவனம் செலுத்துவதெல்லாம் முஸ்லிம் பாடசாலைகளில் ஒழுக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதும் அத்துடன் இஸ்லாமிய விழுமியங்களுக்கு எவ்வகையிலும் அபகீர்த்தி ஏற்பட்டு விடக் கூடாது என்பதுமாகும். இப்போது அபிவிருத்திக் குழு தனது அறிக்கையில் சொன்ன அறியாமை வாதங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 01பொதுவாக பாடசாலையில் இடம் பெறும் வைபவங்களை சிறுவர்களின் கலை நிகழ்வுகள் அலங்கரிப்பது இயல்பானதொன்றாகும்.
எமது பதில்: கலை நிகழ்ச்சிகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் நீங்கள் அன்று அரங்கேற்றிய கலை நிகழ்ச்சி இஸ்லாம் ஹராமாக்கிய கலை நிகழ்ச்சி என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஆபாசமான அர்த்தங்களைக் கொண்ட ஹிந்திப் பாடலை இசையுடன் ஒலிக்க விட்டு அதற்கேற்ப ஐந்தாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவிகளை (பருவ வயதை அடைந்த சிலரும் இருந்தனர் என்பது தனி விஷயமாகும்) டான்ஸ் ஆட விட்டமை சாதாரண கலை நிகழ்வாஇவ்வாறான தரங்கெட்ட நிகழ்ச்சிகளால் தான் உங்கள் பாடசாலை வைபவங்களை நீங்கள் அலங்கரிப்பீர்களா?சிந்தியுங்கள்!      
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 02: கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் பல தடவைகளில் இடம் பெற்றிருந்த போதும் அது தொடர்பில் எவ்வித கருத்துரைகளும் வழங்கப்படவில்லை.
எமது பதில்: இதற்கு முன்பாக உங்களது பாடசாலையில் இது போன்ற நிகழ்வுகள் நடை பெற்றமைக்கு நம்பத்தகுந்த நேரடி வாக்கு மூலங்களோவீடியோச் சான்றுகளோ எம்மிடம் இல்லை. யாரோ சொல்லும் செய்திகளைக் கேட்டு விமர்சித்து விட முடியாது! இந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நீங்கள் நடாத்திய நடன நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகள் எமக்குக் கிடைத்திருந்தால் அப்போதும் 'கலாசார சீரழிவுகுறித்து கடுமையான மார்க்கக் கண்டனத்தை வெளியிட்டிருப்போம். அல்லாஹ்வின் தீன் எப்போதெல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றதோ அப்போதெல்லாம் வெகுண்டெழுவது தான் ஈமானிய உணர்வு. தீமையை தட்டிக் கேட்பதில் கால வேறுபாடு இல்லை! உணர்வீர்களா?
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 03: இத்தகைய கலை நிகழ்வானது எமது பாடசாலையில் மாத்திரமே முதன் முறையாக இடம் பெற்றது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எமது பதில்: பல பாடசாலைகளில் கலை நிகழ்வு என்ற பெயரில் அநாச்சாரங்கள்மார்க்க அத்து மீறல்கள் நடை பெறுவதை பொதுப்படையாகவே நாம் கண்டித்துள்ளோம். காரணம் அவைகளுக்கான ஒளிப்பதிவு ஆவணங்கள் எமக்குக் கிடைக்கப் பெறுவதில்லை. நாம் கல்வி ரீதியாக உங்கள் பாடசாலையை விமர்சிக்கவில்லை. கல்வி மறுமலர்ச்சியில் சிறந்து விளங்கும் நீங்கள் 'கலைஎன்ற பெயரில் மேற்கத்தைய கலாசாரத்தை பாடசாலையில் புகுத்துகிறீர்கள்.
ஒழுக்கமும் கல்வியும் தேடி வரும் மாணவ சமுதாயத்தில் 'கலைஅபிநயம்என்ற பெயரில் நஞ்சை விதைக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் உங்கள் பாடசாலையில் நிகழ்ந்ததைப் போன்ற ஹிந்திப் பாட்டு ஆட்டம் வேறு பாடசாலைகளில் நிகழ்ந்ததாக நாம் அறியவில்லை.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 04: மாணவர்களின் கல்விக்காக பல அர்ப்பணிப்புகளுடன் பாடுபடும் ஆசிரியர்களையும் பாடசாலையின் அதிபர் சத்தார் அவர்களையும் மௌலவி ஸஹ்றான் கேவலமாக வசை பாடியுள்ளார்.
எமது பதில்: மீரா பாலிகா ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களுக்குச் செய்யும் கல்விச் சேவையை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. எமது ஜமாஅத்தின் பிரச்சாரகர் மௌலவி ஸஹ்றானும் அதனை குறை கூறவில்லை. மௌலவி ஸஹ்றான் விமர்சித்ததெல்லாம் நீங்கள் அன்று பாடசாலையில் அரங்கேற்றிய இஸ்லாத்திற்கு முரணான ஆட்டம் பாட்டத்தை மாத்திரம் தான்! யாரெல்லாம் ஹிந்திப் பாட்டை ஒலிக்கச் செய்து நடனமாடும் பாவமான வேலைக்கு துணை போனார்களோ அந்த ஆசிரியர்களுக்கு மறுமையைச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார் அவ்வளவுதான்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 05: சமூகத்தில் தவறுகள் இடம் பெறுகின்ற போது அவை முறையாகவும் பொறுப்பு வாய்ந்த வகையில் அடுத்தவரின் கௌரவத்தை பாதிக்காதவாறு ஆக்கபூர்வமாக சுட்டிக்காட்டுவதே நாகரீகமானதும் இஸ்லாமிய வழிமுறையுமாகும்.
எமது பதில்: உங்கள் பாடசாலையில் இடம் பெற்ற அந்த மார்க்க அத்துமீறலை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கையாளவில்லை. நன்கு விசாரித்த பின்பே பிரச்சார மேடையில் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்பூட்டினோம். உண்மையைச் சொல்லுங்கள்! இந்த நடன நிகழ்ச்சி மேடையில் அரங்கேருவதற்கு முன்னர் உங்களது பாடசாலை அதிபருக்கு 'இந்நிகழ்வு தேவையற்றதுஎன்று யாருமே உணர்த்தவில்லையாஎல்லா ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியை நடாத்த வேண்டுமென்றுதான் இருந்தார்களாஇவ்வாறான நிகழ்வுகள் குறித்து உங்கள் அதிபருக்கு அறிவுரை சொல்ல காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா உங்கள் அதிபரை இதுவரை அழைத்ததே இல்லையாபொறுப்பு வாய்ந்த வகையில் சுமுகமாக தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை காதில் வாங்குவதேயில்லை. மனச்சாட்சியை உலுக்கும் வகையில் நாலு கேள்வியைக் கேட்டு உரையாற்றினால் மட்டும் உறைக்கிறதே..இஸ்லாத்தின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் சமூகத் தீமைகளை பகிரங்கமாக அரங்கேற்றுபவர்களை அடையாளப்படுத்தி உரையாற்றுவதும் இஸ்லாமிய வழிமுறை தான் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 06: தனிப்பட்ட புகழாரத்திற்காக அடுத்தவரின் மானத்தை படம் காட்டி ஏலத்தில் விற்பதும் தனிமனித மானங்களோடு விளையாடுவதும் சீர்திருத்தம் பேசும் நபிவழியை மறந்த மார்க்க அறிஞர்களின் மேதாவித்தனம்.
நமது பதில்: தனிப்பட்ட புகழாரத்திற்கு நாம் தஃவாப் பணி செய்யவில்லை. யார் என்ன நோக்கத்திற்காக தஃவாப் பணி செய்கிறார்கள் என்று ஊடுருவிப் பார்க்கும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நான் பிறருடைய வயிற்றைக் கிழித்துப் பார்க்கவோ உள்ளங்களில் ஊடுருவிப் பார்க்கவோ நபியாக அனுப்பப்படவில்லை' (பார்க்க: புஹாரி )
'அடுத்தவரின் மானத்தை படம் காட்டி ஏலத்தில் விற்பதுஎன்ற உங்கள் வாசகம் உங்களின் வக்கிரப் புத்தியைக் காட்டுகிறது. அதிபர் சத்தாரின் சொந்தப் பிரச்சனையை நாம் மேடையில் பேசவில்லை. அவர் இஸ்லாம் ஹராமாக்கிய இசையைப் போட்டு மேடையில் பெண் மாணவிகளை ஆட்டம் போட வைத்ததன் மூலம் இஸ்லாத்தை ஏலத்தில் போட்டு விற்றார். அதை நாம் உரிய வேளையில் பொறுப்புணர்வுடன் தட்டிக் கேட்டோம். ஆனால் அவர் அதற்காக மன்னிப்புக் கோரவில்லை. அவர் சார்பாக நீங்களும் 'இசைநடனம் போன்றவை ஹராம் தான்'என்று ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. தான் அரங்கேற்றிய ஹராமான செயலை நியாயப்படுத்துவதில் அவரும்அவருக்கு எப்படியாவது அனுதாபம் தேடிக் கொடுத்து விட வேண்டுமென்பதில் நீங்களும் குறியாக இருக்கிறீர்கள். இதன் மூலம் ஏலத்தில் போவது உங்களின் மானம் தான்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 07: சீர்திருத்தம் பெற வேண்டிய தங்களால் சீரழிந்து போனது எமது கல்விச் சமூகத்தின் மனங்களும் மானங்களும் மட்டுமல்ல மனித நேயமிக்க இஸ்லாமிய மார்க்கமுமே!
நமது பதில்: கல்விச் சமூகத்தை இசைபாட்டுகூத்து என்று நீங்கள் சீரழித்து விட்டு அதை அறிவுரைகளாலும்கண்டனங்களாலும் சீர்திருத்தும் எம்மை நோக்கி 'கல்விச் சமூகத்தை சீரழித்ததாகப்'புலம்புவது எவ்வகையில் நியாயம்இஸ்லாம் மனித நேயமிக்க மார்க்கமென்று தெரிந்த உங்களுக்கு இஸ்லாத்தில் கூத்து கும்மாளம் இல்லை என்று தெரியவில்லையாசீர்திருந்த வேண்டியவர்கள் வேறு நபர்களை விட ஆசிரியர்களான நீங்கள் தான் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 08: விமர்சனங்கள் தூயநோக்கத்துடன் குறைகளை மாத்திரம் கொண்டிருக்காமல் நிறைகளையும் நிறைவாகக் கொண்டிருப்பதே ஒரு விமர்சகனுக்கு அழகாகும்.
நமது பதில்: எமது விமர்சனங்கள் யாரையும் திருப்திப்படுத்த செய்யப்படவில்லை. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே! அவனே கூலி தரப் போதுமானவன். உங்கள் பாடசாலையில் இடம் பெற்ற மார்க்க விரோத செயற்பாட்டை கண்டிக்கும் நாம் உங்கள் நிறைகளை எங்குமே மறுக்கவில்லை. சொல்லக் கூடிய தேவை ஏற்பட்டால் அவற்றைச் சொல்வோம் இன்ஷாஅல்லாஹ். நிறைகளைச் சொல்லி புகழ்பாட நிறையப் பேர் இருக்கிறார்கள். குறைகளை தைரியமாகக் கண்டிக்கத்தான் ஆட்கள் இல்லை! கண்டித்தால் பகையுணர்வு ஏற்படும் என்றே அஞ்சுகின்றனர். எம்மைப் பொருத்தமட்டில் மீரா பாலிகா மகா வித்தியாலயத்துடன் தனிப்பட்ட எந்த விரோதமும் கிடையாது. அதனுடைய கல்வி வளர்ச்சியைக் கண்டு மகிச்சியடைகிறோம். ஆனால் இஸ்லாத்தை பகிரங்கமாகக் கேவலப்படுத்தும் மார்க்க விரோதச் செயல்களை மீரா பாலிகாவோ வேறு எந்த பாடசாலைகளோ மேற்கொண்டால் அவற்றை கண்டிக்கவும் பின்நிற்க மாட்டோம் இன்ஷாஅல்லாஹ்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 09: ஜாஹிலிய வழக்கத்தில் அடுத்தவரை இழிவுபடுத்தும் அநாகரீக கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
நமது பதில்: ஜாஹிலிய வழக்கத்தில் நாம் யாரையும் இழிவுபடுத்தவில்லை. ஆனால் நீங்கள் தான் ஜாஹிலிய கால வழக்கத்தில் பாடல்களைப் போட்டு பெண் பிள்ளைகளை ஆட வைத்து ரசித்தீர்கள். நீங்கள் செய்த மார்க்க அநியாயத்தை அநியாயம் என்று உறைக்கும் வகையில் நாலு கேள்வி கேட்டால்'அநாகரீகமான கருத்துக்கள்என்று எங்களை விமர்சிக்கிறீர்கள்! ஆனால் நீங்கள் அன்று முஸ்லிம் பாடசாலையில் போட்ட ஹிந்திப் பாட்டின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Saree ke fall sa kabhi match kiya re
உன் சேலையின் கரைப்பட்டியை போல என்னை நீ தேர்ந்தெடுத்தாய்
Kabhi chhod diya dil kabhi catch kiya re
சிலநேரம் என் இதயத்தை விட்டு விடுகிறாய்
சிலநேரம் அதை பிடித்துகொள்கிறாய்
Touch karke touch karke touch karke
என்னை தொட்டுக்கொண்டே ...
Kahaan chal di bach kar ke
என்னை விட்டு எங்கே தப்பி ஓடுகிறாய்
Touch karke> touch karke> touch karke dil se dil attach kiya re
நீ அதை தொட்டபின்பு உன் இதயத்தை என்னோடு இணைத்துக்கொண்டாய்
(இப்படி அந்த பாட்டு ஒரு பெண்ணின் மீது இச்சை கொண்டு ஒரு ஆண் படிக்கிறான்.)
இப்போது சொல்லுங்கள்! அநாகரீகமான கருத்துக்களை வெளியிட்டது நாங்களாநீங்களாஇந்தப் பாடல் மூலம் மீரா பாலிகா இந்த சமூகத்திற்குச் சொல்லும் செய்தி என்னஉங்கள் பாடலும் பாடலுக்கேற்ற ஆடலும் தான் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 10: அந்த வகையில் எமது பாடசாலையின் நற்பெயருக்கும் அதன் அதிபர்ஆசிரியர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்களையும் விமர்சனங்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நமது பதில்: எமது சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இசைமோசமான அர்த்தம் கொண்ட பாடல்ஆட்டம் போன்ற கேடு கெட்ட செயல்களை பகிரங்கமாக அரங்கேற்றிய மீரா பாலிகா அதிபரையும் அதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேரையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அன்புள்ளவர்களே! இஸ்லாமிய அழைப்புப் பணியில் மிருதுவான பக்கங்களும் மென்மையான அறிவுரைகளும் உள்ளன. ஆனால் இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து முஸ்லிம் சமூகத்தை கெடுத்து நாசமாக்கும் கைங்கரியங்களை யாராவது பகிரங்கமாகச் செய்தால் அதற்கெதிராக ஜனநாயக வழியில் எமது கண்டனங்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு தான் வேத வசனங்களைச் சொல்லி எச்சரிக்கை செய்தாலும் சில படித்த மேதாவிகளுக்கு விளங்குவதில்லை. கடந்த 03.12.2015அன்று (நேற்று) காத்தான்குடி தேசிய பாடசாலையின் 85வது வருட பூர்த்தியை முன்னிட்டு இசை கச்சேறி அரங்கேறியுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே! எம்மை எதிர்க்க வேண்டுமென்பதற்காக மேலும் மேலும் தவறு செய்யும் ஆசிரியர் குலாமை அல்லாஹ் தான் திருத்த வேண்டும்!
வெளியீடு: தேசிய தவ்ஹீத் ஜமாஅத்(Nவுது) 296மீன்பிடி இலாகா வீதி,புதிய காத்தான்குடி-03
04.12.2015
Read More
avathani Media Network

கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கப்படாத பாரிய நிதியை இம்முறை கல்விக்கு ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார். ;---------இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(நமது நிருபர்)
கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கப்படாத நிதியை அடுத்த 2016ம் ஆண்டில் கல்விக்காக ,இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் அதிகமான நிதியினை கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். ஆண் மாணவர்களை விட பெண் மாணவிகளே கல்வியில் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர்.  60 வீத மாணவிகள் பல்கலைக்கழகததிற்கு செல்கின்றனர் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு ,ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப்பாடசாலையின் 85வது வருட ஆண்டு விழா  நேற்று    கோலாகலமாக நடைபெற்றது. அதில்  உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் எம்.எம்.முபாறக் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று மாலை  நடைபெற்ற இவ் வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய ,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்  ஆண் மாணவர்கள் கல்வியில் ஆர்வங்காட்டுவது குறைந்து மாணவிகளே கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இலங்கையில் 60 வீதமான மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர். நிர்வாகம், மருத்துவம் என பலதுறைக்கும் பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர். ,இது ஆண்கள் கல்வியில் முன்னேற்றமின்மையைக் காட்டுகின்றது.என்றார்.
கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More
avathani Media Network

மருத்துச் சான்றிதழ் இல்லாத உணவு சாலைகளின் ஊழியர்கள் 13 பேர் மட்டக்களப்பில் கைது

(நமது நிருபர்)
மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களில் பணிபுரிந்த 13 பேர் சுகாதார அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொது சுகாதார அதிகாரி எஸ்.ராஜா ரவிவர்மா தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சூழலில் அமைந்துள்ள ஹோட்டல்கள்இ உணவகங்கள்இ சிற்றுண்டி சாலைகள் பொதுசுகாதார அதிகாரிகளினால் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டன.அதன் போது சுகாதார அமைச்சின உணவுச்சட்டத்தின் ஓழுங்கு விதிகளுக்கமைய மருத்துவச் சான்றிதழின்றி கடமையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
;கைதானவர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை கடும் நோயுடன் பணிபுரிந்த சில ஹோட்டல் பணியாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.




Read More