Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 30, 2015

Unknown

புதிய தேர்தல் முறையை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற நட­வ­டிக்கை

புதிய தேர்தல் முறையை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதற்­கான செயற்­பா­டு­களை இன்­றி­லி­ருந்து (நேற்று முதல்) ஆரம்­பித்­து­விட்டோம். 

அத்­துடன், எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை புதிய முறையில் நடத்­தவே முயற்­சிக்­கின்றோம் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 

தேர்தல் முறையில் மாற்­றத்தைக் கொண்­டு­ வ­ர­வேண்டும் என்­பதில் அனைத்து கட்­சி­களும் புரிந்­து­ணர்­வுக்கு வந்­துள்­ளன. ஆனால், எவ்­வா­றான முறையை முன்­னெ­டுப்­பது என்­பதில் இன்னும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.
Read More
Unknown

சாரதி அனுமதிப்பத்திரங்கள் சர்வதேச தரத்தில்…

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படவுள்ளது.
வெகுவிரைவில் சர்வதேச தரத்திலான சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வியன்னா சர்வதேச பிரகடனத்திற்கு அமைவான போக்குவரத்து விதிகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன.
இதன் பின்னர் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமும் சர்வதேச தரத்திற்கு உயர்வடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.(ரி)
Read More
Unknown

பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி கலைக்க முடி­யாது : குறைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள்

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பல்­வேறு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.
அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஏழு மக்கள் பிர­தி­நி­தி­களும் மூன்று சிவில் பிர­தி­நி­தி­களும் அங்­கத்­துவம் வகிப்­ப­தாக திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
Read More
Unknown

சவுதி நாட்டின் தனவந்தர்களின் நிதிஉதவியுடன் பூனச்சிமுனை ஜம்ஆ பள்ளிவாயல் திறந்த வைக்கப்பட்டது

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

புதிதாக புணர்நிர்மானம் செய்யப்பட்ட காத்தான்குடி பூனச்சிமுனை ஜம்ஆ பள்ளிவாயல் ஆயிஷா ஜம்ஆ பள்ளிவாயல் என்ற பெயரில் ஹிறா பௌண்டேசனின் சர்வதேசத்தக்கு பொறுப்பான அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி)தலைமையில் சவுதி நாட்டின் தனவந்தர் முஹம்மது அஹ்மத் அல்பலாசி,ஹஸன் அஹ்மத் ஹஸன் முஹம்மத் என்பவர்களால் சென்ற 28.04.2015 செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்படடது.

Read More
Unknown

பதில் உப தபால் அதிபர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு. - முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் அஞ்சல் அமைச்சர் ஹலீம் பிரதம அதிதி

- ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நாட்டின் நாலாபக்கங்களிலும் பல ஆண்டுகளாக பதில் உப தபால் அதிபர்களாகக் கடமையாற்றிய 654 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு பண்டார நாயக்க ஞாபகர்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. 

முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் அஞ்சல் அமைச்சின் செயலாளர் எம்.அப்துல் மஜீட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் அஞ்சல் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
Read More

Wednesday, April 29, 2015

Unknown

காத்தான்குடி -பூர்வீக நூதனசாலையை பார்வையிட வருகை தருவோருக்கு புதிய நேர அட்டவணை.


  
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் மட்டக்களப்பு–கல்முனை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலையை (மியூசியத்தை பார்வையிட அதிகளவான மக்கள் அங்கு வருகை தருவதால் அதற்கான நேரம் விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

Read More
Unknown

வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் ! ஆரம்ப நிகழ்வு காத்தான்குடியில்

-எம்.எச்.எம்.அன்வர்-

வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் எனும் தெரனிப்பொருளில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 3 பிரவுகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று 167ஏ 167பி மற்றும் 165 ஏ கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
Read More
Unknown

கூத்தாடிய மஹிந்த…! முடித்தார் மைத்திரி!

சென்ற வாரம் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் ஏறத்தாழ மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் எனும் அளவுக்கு பெரும் அலையை உருவாக்கியது போன்ற ஒரு பிரம்மை காணப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டதற்காக பாராளுமன்றில் இரவு நேரம் தங்கிப் போராட்டம் நடாத்தினார்கள் மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள்.
மறுநாள் வீதி ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இந்த இரு நாட்கள் நீடித்த சந்தோசத்தில் இலங்கையில் சிறுபான்மையினத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசியல் நடாத்துவது தாம் தான் என நிரூபிக்கும் வகையில் ஐக்கியத்துக்கு எதிராக தனிச் சிங்களக் கொள்கையின் அடிப்படையிலான தேசியக் கொடியும் காட்சிப்படுத்தப்பட்டது.
Read More
Unknown

மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டது

இந்தோனேஷிய அரசாங்கம் மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 கைதிகளின் மரண தண்டனையை  நிறைவேற்றியுள்ளது.
மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததன் மூலம் எட்டு பேரினதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா, பிறேசில், நைஜீரியா ஆகிய நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More

Tuesday, April 28, 2015

Unknown

18 இற்காக இழைத்த தவறுக்கு பிராயச்சித்தம் - இன்றைய தினகரன் பத்திாிகையின் ஆசிாியா் தலையங்கம்..!

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம்: பாரா ளுமன்றத்தில் இதனை சட்டமூலமாக சமர்ப் பித்திருந்தும் விவாதத்துக்கு எடுக்க முடியாமல் இழுபறிப்பட்ட நிலையில் நேற்று ஒருவாறாகக் கை கூடியி ருக்கிறது. திருமண பந்தம் தொடர்பான பேச்சுவார்த் தையின் போது இடைநடுவில் ஏற்படும் சலசலப்புகளுக்கும் இடையூறுகளுக்கும் ஒப்பானதாகவே இதனைப் பார்க்க முடிகிறது.


19ஆவது திருத்தம் தொடர்பான சட்ட மூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இதன் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்க் கட்சி களின் கடுமையான எதிர்ப்புகளால் தாமதப்படுத்தப்பட்டே வந்தது. விவாதத்துக்கான திகதிகள் மூன்று தடவைகள் தீர் மானிக்கப்பட்டும் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டே வந்தன.

ஐ. ம. சு. மு. அதில் அங்கம் வகிக்கும் ஸ்ரீல. சு. க. ஆகிய வற்றின் கடுமையான எதிர்ப்பினால் விவாதம் பின்போடப் பட்டு வந்தாலும் அவர்களின் இறுதி நேர மனமாற்றம் சாகதமான நிலையை ஏற்படுத்தியிருப்பது மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசி உண்மை நிலையை எடுத் துக் கூறியதனையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டது மட்டு மல்ல. சு. க. மத்திய குழுவும் இதற்கு முழுமையான சம் மதத்தைத் தெரிவித்துள்ளது.
19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதத்தை ஜனாதிபதி நேற்று சபையில் சமர்ப் பித்து உரையாற்றிய போது, இரு தரப்பு எம்.பிக்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உண்மையில் இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இது முக்கிய நிகழ் வாகவே இருக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் தனது அதிகாரத்தைக் குறைத்து ஜன நாயகத்துக்கு பலம் சேர்ப்பதற்கு சட்ட மூலம் ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றுவது இதுவே முதற் தடவையாகும்.

19ஆவது திருத்தச் சட்டம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டதாகும். நிறை வேற்று அதிகாரத்தை ஒழிப்பதும் தேர்தல் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானதாகும். இதில் 20 ஆவது திருத்தமாகச் சமர்ப் பிக்கப்படவுள்ள தேர்தல் மறுசீரமைப்புக்கு அரச தரப்பு ஆதரவு வழங்குமெனத் தெரிவிக்கப்பட்ட உத்தரவாதத் துக்கு அமைய சுதந்திரக் கட்சி 19க்கு முழுமையான ஆத ரவு வழங்க முன்வந்திருக்கிறது.
அதேநேரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஜே. வி. பி.யும் 19ஐ முழுமையாக ஆதரிப்பதோடு, நேற்று சபையில் பாராட்டும் தெரிவித்தன. இது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க, 19 ஆவது சட்ட மூலம் முழுமையாக வழிவகுக் காவிட்டாலும் ஓரளவேனும் ஜனநாயகத்தை வலுப்படுத்த முயற்சித்துள்ளது என இரு கட்சிகளும் சபையில் தெரிவித் துள்ளன.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த அரசியலமைப் புக்கு இதுவரை 18 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உலகில் ஓர் அரசியலமைப்புக்கு கூடுதல் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது இலங்கையில் தான் எனக் கூறப் படுகிறது. இந்தப் 18 திருத்தங்களிலும் 13 ஆவது 17ஆவது திருத்தங்களைத் தவிர (இரண்டையும் தவிர) ஏனைய திருத்தங்கள் யாவும் நிறைவேற்று அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே இருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்தி நாட்டில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தி யது. ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகாரத்துக்கு மகுடம் சூட்டியதே 18 ஆவது திருத்தமாகும். நாட்டின் நிர் வாகத்துறையில் சகலவற்றிலும் நிறைவேற்று அதிகாரத்தின் கோரக் கரங்கள் புகுந்ததனால் நிர்வாகத்தின் சகல துறை களும் ஸ்தம்பித்தே இருந்தன. எங்கு பார்த்தாலும் அரசி யல் தலையீடுகளும் ஊழல், மோசடிகளுமே மலிந்து காணப்பட்டன. நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரம் தலையிட்டதனால் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆகவே 19 ஆவது திருத்தம் என்பது கடந்த 37 ஆண்டுக ளாக இந்த நாட்டு மக்கள் அனுபவித்த சர்வாதிகார ஆளு மைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டமூலமாகும். அதேநேரம் நிறைவேற்று அதிகாரத்தின் கோரப்பிடியை தகர்த்து மக்களுக்கு பலம் சேர்க்கும் திருத்தம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால் 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கி சர்வாதிகாரத்துக்கு வலுச்சேர்த்து வரலாற்று தவறிழைத்த அனைத்து பாராளு மன்ற உறுப்பினர்களுக்கும் பாவ மன்னிப்பு தேட நல்ல தொரு சந்தர்ப்பமாகும்.

19 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறுகிறது. ஜனநாயகத்தை நேசிக்கும் சகலரும் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 19 ஆவது திருத்தத்தின் வெற்றி 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரித்துடைய தாக இருக்கும்.
Read More
Unknown

சபையில் சிலருக்கு வயிற்றோட்டமாம்: ரணில் கூறுகின்றார்

பங்குச் சந்தை நிதி புரள்வு மோசடிகள் உட்பட பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தவுடன் இன்று ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்து விட்டது என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பந்துல குணவர்தன எம்.பி. இன்று கிளப்பிய சிறப்புரிமை பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தனது பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக பந்துல குணவர்தன சென்றுள்ளார். அப்படியெனில் அது முடிந்தவுடன் அவர் அங்கிருந்து வெளியேறி இருக்க வேண்டும்.
Read More
Unknown

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டதோடு 7 பேர் இன்று சமூகமளிக்கவில்லை. மேலும் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எதிராக வாக்களித்ததோடு அஜித் குமார எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Read More
Unknown

நேபாள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாருங்கள் – ACJU


கடந்த இரு நாட்களாக நேபாளம், கட்மண்டூரில் ஏற்பட்ட திடீர் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமானவரையில் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.



குறித்த பூகம்பத்தினால்  இதுவரை மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கனக்கானோர் தமது இருப்பிடங்களை இழந்து நிர்கதியாகியுள்ளதாகவும் உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



எனவே பாதிக்கப்பட்ட இம்மக்களுக்காக அனைவரும் தம்மாலான பங்களிப்புகளை வழங்க முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக்கொள்கின்றது.



ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடாக தமது உதவிகளை வழங்க முன்வருவோர் பின்வரும் கணக்கிலக்கத்தில் தங்களது உதவித் தொகைகளை வைப்புச் செய்யுமாறும் மேலதிக விபரங்களுக்கு அதனது சமூக சேவைக் குழு செயலாளர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்களை 077 3575742 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.



All Ceylon Jamiyyathul Ulama
A/C Number : 1320006768
Bank : Commercial Bank
Branch : Maradana



வஸ்ஸலாம்.
இவ்வண்ணம்
அஷ்-ஷைக் ஏ.எல். முஹம்மத் கலீல்
கௌரவப் பொருளாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
Read More
Unknown

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 8 இஸ்லாமிய பிரச்சார மாநாடுகள்- பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் விஷேட உரை.படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)


தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 8 இஸ்லாமிய பிரச்சார மாநாடுகள்  கடந்த 22ம் திகதி புதன்கிழமை தொடக்கம் நேற்று திங்கட்கிழமை 27ம் திகதி வரை காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பூநொச்சிமுனை ,பாலமுனை,காங்கேயனோடை பிரதேசத்திலும் இடம்பெற்றது.
 
இம் மாநாடுகளில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோரினால் பில்லி சூனியம், நாம் யாரை பின்பற்ற வேண்டும், றமழான் கால வணக்கங்கள், இறை விசுவாசிகளின் பண்புகள், நாம் சொல்வதென்ன , போதை பொருள் பாவனையும் சீரழியும் முஸ்லிம் சமூகமும்  போன்ற பல்வேறு தலைப்புக்களில் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
Read More
Unknown

நேபாள பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு-ஐ.நா.சபை தகவல்

பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.


இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.

அவை போதுமான அளவில் இல்லை. எனவே மேலும் கூடாரம் அமைக்க தார்பாய்கள், சுத்தமான தண்ணீர், சோப்புகள் மற்றும் மருந்துகள் தேவைப்படுகின்றன.

பூகம்பம் பாதித்த காத்மாண்டு பள்ளத்தாக்கில் கடந்த 2 நாட்களாக பொது மக்கள் வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. சிறிய கடைகள் மட்டுமே திறந்துள்ளன. பெரிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் எரிபொருள் நிரப்ப கியாஸ் நிறுவனங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. வங்கிகள் மூடப்பட்டுள்ளன. ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படுகின்றன. ஆனால் அதில் பணம் பரிவர்த்தனை இல்லை.

காத்மாண்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திறந்தவெளியில் 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

‘யூனிசெப்’ நிறுவனம் கூடாரங்களையும், சுகாதார பராமரிப்பு பொருட்களையும் வழங்குகிறது. உலக சுகாதார நிறுவனம் 40 ஆயிரம் பேருக்கு மருந்து சப்ளை செய்கிறது. பல சர்வதேச அறக்கட்டளைகள் நேபாளத்தில் முகாமிட்டு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன
Read More
Unknown

18க்கு வாக்களித்தமைக்கு வருந்துகின்றேன்: ஹக்கீம்

(ஜே.ஜீ. ஸ்டீபன், ப. பன்னீர் செல்வம்)
அரசியலமைப்பின் 18ஆவது திருத்திற்கு வாக்களித்தன் மூலம் ஏற்பட்ட விளைவுகளையும் பலா பலன்களையும் அனுபவித்து விட்டோம். அவ்வாறு அச்சட்டத்திற்கு ஆதரவு அளித்தமைக்கு இன்று வருந்துகின்றேன் என்று அமைச்சர் ஹக்கீம் இன்று சபையில் தெரிவித்தார்.
Read More
Unknown

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் -இஸ்லாமிய பிரச்சார மாநாடு – பாலமுனையில் - தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர்கள் உரை.படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய பிரச்சார மாநாடு ஒன்று 27 நேற்று திங்கட்கிழமை பாலமுனை அம்மார் ஜூம்ஆ பள்ளிவாயல் அருகாமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோரினால் 'இறைவனின் இறுதிக்கட்ட விசாரணை'  , 'ஈமானின் உறுதி' என்ற தலைப்புக்களில் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
Read More
Unknown

கல்வியலாளர் ஜெமீல் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி!


இலங்கையின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவரும், கடல்கடந்த நாடுகளில் கூட நன்கறியப்பட்ட இலக்கிய ஆய்வாளருமான இனிய நண்பர் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் மறைவு இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அவரது இலக்கியத் தேடுதல் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருவாயில் அல்லாஹ்வின் நாட்டப்படி அன்னார் இவ்வுலக வாழ்வை நீத்து, நிலையான மறுமை வாழ்வுக்கு பயணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவையிட்டு அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் மரணித்த செய்தி அதிகாலையிலேயே எட்டிய போது நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இரண்டு தினங்களுக்கு முன்னர் இறுதியாக அவர் என்னுடன் உரையாடியது நினைவுக்கு வருகிறது.

அப்பொழுது, தாம் அடுத்து வெளியிடவுள்ள சுவடியாற்றுப்படையின் 5ஆவது பகுதியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறிய அவர், 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கூட இலங்கையில் 3400 க்கும் அதிகமான புலவர்களும், மார்க்க அறிஞர்களும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கும், அரபுத் தமிழ் இலக்கியத்திற்கும் அளப்பரிய பங்காற்றியிருப்பதாக கூறியதோடு, அவர்களின் அரிதான ஏடுகளையும், கையெழுத்துச் சுவடிகளையும், அச்சியற்றப்பட்ட பிரதிகளையும் தேடி, அவற்றிலிருந்து உரிய தகவல்களை திரட்டுவதற்காக தாம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் சொன்னார்.

அந்தப் பணியை சிறப்பாக முடித்து வைப்பதில் அவருக்கிருந்த அபார ஈடுபாட்டை நான் புரிந்து கொண்டேன். தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் போன்றவற்றில் கூட இவ்வாறானதோர் இலக்கியத் தேடல் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

நண்பர் எஸ்.எச்.எம்.ஜெமீல் எமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததோடு, அவரது அயராத முயற்சியால் உருவான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கும் அன்னார் தாம் சேகரித்து வைத்திருந்த ஏராளமான நூல்களை அன்பளிப்புச் செய்திருந்தார்.

அதன் கவுன்சில் உறுப்பினர் ஒருவராக இருந்து அவர் ஆற்றிய சேவையை பலரும் வியந்து கூறுவதுண்டு. சில இடையூறுகளுக்கு மத்தியிலும் இம்முறையும் தென்கிழக்கு பல்கலைக்கழக கவுன்சிலுக்கு அவர் என்னால் சிபாரிசு செய்யப்பட்டு உள்வாங்கப்பட்டிருந்தார்.

கல்வியியலாளராக, இலக்கிய விற்பன்னராக, ஆய்வாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக, அமைச்சுச் செயலாளராக, பல்கலைக்கழக பதிவாளராக மற்றும் பல்வேறு பரிமாணங்களின் அவரது பங்களிப்பு நோக்கப்படுகின்றது. தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதுவதிலும், பேசுவதிலும் அவர் வல்லவர். அவரது திறமைக்குச் சான்றாக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

தமது ஆசானான அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களோடு அவருக்கிருந்த பற்றின் வெளிப்பாடாக அவரைப் பற்றி எழுதியதும், பேசிதும் மட்டுமல்ல, அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் பெயரில் அவர் ஓர் அமைப்பையே முன்னின்று நடாத்தினார்.

நண்பர் எஸ்.எச்.எம்.ஜெமீல் எப்பொழுதும் புன்முறுவல் பூத்தவராகவும், எல்லோரோடும் இனிமையாக பழகுபவராவும், இறையச்சம் உள்ளவராகவும் இருந்தார். அவரது
பிரிவினால் துயருறும் மனைவிக்கும், மகனுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவன வாழ்வை வழங்க பிரார்த்திப்போமாக!

ரவூப் ஹக்கீம் (பா.உ)
தலைவர் -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்.
Read More
Unknown

19 ஆவது திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. 
இந்த திருத்தச் சட்டமூலம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து விவாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். 
முதல்நாள் விவாதம் இரவு 8.30 மணிவரை நடைபெற்றது. இதன்போது எதிர்த்தரப்பு சார்பில் பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றதோடு, இதன்போது திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஆறு பேர் அடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 9 மணிக்கு மீண்டும் அது தொடர்பிலான விவாதம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.  விவாதம் நிறைவுபெற்றதும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Virakesary
Read More
Unknown

காத்தான்குடி நூதனசாலை தொடர்பாக தவிசாளரின் அறிக்கையும் எனது ஆலோசனையும்


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களினால் காத்தான்குடியில் நிறுவப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள பூர்வீக நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் விவகாரம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் இன்று(27.04.2015) வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



அவரது இந்த அறிக்கை தொடர்பாக 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்துள்ள ஆலோசனையாவது:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினரைப் பார்வையிடுமாறு நீங்கள்தான் கடிதம் மூலம் கேட்டிருந்தீர்கள். அதன்படி அவர்கள் பார்வையிடுவதற்காக நமதூருக்கு வரத் தயாரான போது நீங்கள்தான் அவசரமாக இந்தியாவுக்குச் செல்வதாகவும், நாடு திரும்பியதும் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் தருவதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.

இருப்பினும் நீங்கள் நாடு திரும்பிய பின்னர் அ.இ.ஜ.உ. சபையினர் நூதன சாலையைப் பார்வையிட உரிய ஏற்பாடுகள் செய்யாமல் அவசர அவசரமாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்தீர்கள்.

உங்களை அரசியல் ரீதியாக வழி நடாத்தும் நா.உ. ஹிஸ்புல்லா அவர்களும் இவ்வாறே காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கும், சம்மேளன நிர்வாகத்திற்கும் நூதனசாலையைப் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு அவர்களே வலிந்து கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அவர் அவர்களுக்கும்கூட அதனைப் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

இவ்வாறே தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களுடனும் இந்த நூதனசாலை சிலை விவகாரம் தொடர்பாக கலந்து பேசவும், பத்வாக்கள் தொடர்பாக ஆராயவும் நீங்களும் சம்பந்தப்பட்டு நேர காலம் வழங்கிவிட்டு அவர்களுடனான சந்திப்பைத் தவிர்த்துக் கொண்டு அந்த உலமாக்களையும் அப்பட்டமாக ஏமாற்றியதும் நீங்களும், நா.உ. ஹிஸ்புல்லாஹ்வும்தான் என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் தமிழக மார்க்க அறிஞரான கோவை எஸ். ஆய்யூப் அவர்கள் நேற்றிரவு நமதூரில் இந்நூதன சாலைக்கு அருகில் அமைந்த மேடையில் நின்று உருவச்சிலைகளின் தோற்றம் தொடர்பாகவும் பின்னர் அவற்றுக்கு மக்கள் சமூகம் படிப்படியாக வழங்கிய மரியாதை, கண்ணியம், கௌரவம், வழிபாடு போன்றவை பற்றியும் 1½ மணித்தியாலமாக ஆற்றிய விளக்கவுரையானது, எமதூர் மக்களை மாத்திரமன்றி ஆரையம்பதிப் பிரதேசத்தில் வாழும் ஹிந்து மதச் சகோதரர்களின் உள்ளத்தையும் தொட்டுள்ளது.

இதனையடுத்தே இத்தனை நாட்களாக அ.இ.ஜ.உலமாக்களையும், காத்தான்குடி உலமாக்களையும், தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களையும் கணக்கிலெடுக்காது புறந்தள்ளி காரியம் சாதிக்க முற்பட்ட நீங்களும், நா.உ. ஹிஸ்புல்லாவும் இப்போது தமிழ் நாட்டு மார்க்க அறிஞரின் விளக்கத்தையடுத்து சவூதி அரேபியவிலிருந்து உலமாக்களை இறக்குமதி செய்து எமது மக்களின் உள்ளங்களில் மீண்டும் உருவ விவகாரத்திற்கு உரம்போட முனைகிறீர்கள் என்பது இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவாகின்றது.

சவூதி அரேபிய உலமாக்களை இறக்குமதி செய்து உருவச்சிலைகள் குறித்து விளக்கம் கொடுப்பதற்கு முன்னால் உங்களுடனும், நா.உ. ஹிஸ்புல்லா அவர்களுடனும் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு இவ்வூரில் செயற்பட்டு வருகின்ற அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி ஏ.ஜே. அப்துர் றவூப் (மிஸ்பாஹி) அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கி, 'இஸ்லாத்தின் பார்வையில் உருவச்சிலைகள்' எனும் தலைப்பில் இவ்வூர் மக்களுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்வதுமிகவும் பொருத்தமானது என்பது எனது கருத்தாகும்.

ஏனெனில் 'உருவ விவகாரம்' தொடர்பில் நமதூரிலுள்ள அத்தனை மூத்த - இளைய உலமாக்களுக்கும் ஒரு முன்னோடியான விவரம் தெரிந்தவர் அவர் ஒருவர்தான். அவரை மேடையேற்றி விளக்கம் சொல்ல வைத்து விட்டு, அதிலும் திருப்தியேற்படாதபோது சவூதி அரேபிய உலமாக்களை நீங்கள் அழைத்து வந்து விளக்கமளிக்கச் செய்யலாம்.

ஆனால் ஒன்று, ஏற்கனவே இந்த 'உருவச்சிலை' விவகாரம் தொடர்பில் ஊரிலுள்ள – உலகிலுள்ள எந்தவொரு இஸ்லாமிய அறிஞராலும் 'அவை ஆகும்' என்ற கருத்து முன் வைக்கப்பட்டால், அத்தகையோருடன் அல்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் தாம் விவாதிக்கத் தயார் என தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதால் அப்துர் றவூப் மௌலவியானாலும், சவூதி உலமாக்களாயினும் 'உருவச்சலைகள் வைப்பது ஆகும்' எனத் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்களுடன் பகிரங்கமாக இவ்விடயத்தில் விவாதிக்கச் செய்வதற்கும் நீங்களும், நா.உ. ஹிஸ்புல்லா அவர்களும் தயாராகவும் இருக்க வேண்டும்.

இன்றேல், 'கூலிக்கு மா இடிப்பவர்கள்' என்ற அவப்பெயரே இவர்களுக்கும், இவர்களை அரங்கேற்றுபவர்களுக்கும் இவ்வூர் மக்கள் அளிக்கும் தீர்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். 

Read More
Unknown

காத்தன்குடி மீடியா போரத்தின் தலைவர் டீன் பைரூஸ் நன்றி தெரிவிப்பு



(எம்.ஐ.அப்துல் நஸார்)

கடந்த 2015.04.25ஆந் திகதி நடைபெற்ற காத்தன்குடி மீடியா போரத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடப்பாண்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் A.L.டீன் பைரூஸ் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்

காத்தன்குடி மீடியா போரத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும்,முகநுால் மூலமும், குறுஞ் செய்திகள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். 

எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு அமானிதமாகும். அதனை மிகப் பொறுப்புடன் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளேன். எமது காத்தான்குடி மீடியா போரத்தின் பணிகளை சிறப்பாகவும் பக்கச்சார்பின்றியும் புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு மீடியா போரத்தின் உறுப்பினர்களும் மற்றும் அனைத்து ஊடக சொந்தங்களும் உறுதுணையாக  இருப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டதோடு கருத்து வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் இணைத்துக்கொண்டு புதிய உத்வேகத்துடன் காத்தான்குடி மீடியா போரத்தை வழி நடாத்த உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன்  தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க முடியாமையையிட்டு தனது வருத்தத்தினையும் தெரிவித்துக்கொண்டார் 
Read More

Monday, April 27, 2015

Unknown

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை தொடர்பில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் விஷேட அறிக்கை.

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை தொடர்பில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் வெளியிட்டுள்ளவிஷேட அறிக்கை எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



Read More
Unknown

மறைந்த மாபெரும் கல்வியலாளர் ஜெமீல் பற்றிய குறிப்பு ..


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும், பிரபல கல்வியியளாலருமான அல்ஹாஜ்S.H.M.ஜெமீல் அவர்கள் தனது 75 ஆம் வயதில் இன்று காலை (27.04.2015)தெஹிவளையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்ஹாஜ்.சாகுல் ஹமீத் முஹம்மத் ஜெமீல் தென் கிழக்கிலுள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரபல்யமான குடும்பமொன்றான முத்தலிபு வைத்தியர் குடும்பத்தில் 1940ம் ஆண்டு பிறந்தார்.
Read More
Unknown

கல்விமானை கௌரவிக்கும் சிறப்புமிக்க நிகழ்வு காத்தான்குடி சம்மேளனத்தில் இடம் பெற்றது



(ஏ.எல்.டீன்பைரூஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கல்விமான் எம்.ஜ.சேகுஅலி(SLEAS)அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனத்தில் தலைவர் எம்.ஜ.எம். சுபைர் jp(Rt-cc) தலைமையில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர்,செயலாளர்,சம்மேளன கல்விக்குழுவின் செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர் Bcom ,சம்மேளன உறுப்பினர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர்கள்,உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சம்மௌனத்தின் தலைவர் எம்.ஜ.எம்.சுபைர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்அஷ்ய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நழீமி)   அவர்களினால் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனமும் அதன் கல்விக்குழுவும் ஆற்றிவரும் மகத்தான பணிகள் தொடர்பாகவும்  மிகவும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் பெசினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளரின் பூரன ஒத்துழைப்புடன் எதிர்காலத்தின் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான சில வடயங்களை  அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல்(நழீமி) சுட்டிக்காட்டினார்.
Read More
Unknown

அறிவியல் மற்றும் இலக்கிய உலகிற்கு ஜெமீலின் இழப்பு பாரிய இடைவெளியாகும்-காத்தான்குடி ஊடக ஒன்றியம் அனுதாபம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மூத்த கல்விமானும், இலக்கிய ஆளுமையும் இலங்கையின் சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீலின் இழப்பு அறிவியல் மற்றும் இலக்கிய உலகிற்கு நிரப்ப முடியாத இடைவெளியை உண்டு பண்ணியுள்ளது என காத்தான்குடி ஊடக ஒன்றியம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஓன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் பொதுச் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள இவ் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ... 
Read More
Unknown

மஹிந்த தலைமையில் புதிய அரசியல்கட்சி ஆரம்பம்: 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படாவிட்டால், அவர் வேறு கட்சியில் நிச்சயம் போட்டியிடுவார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு மஹிந்தவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
Read More
Unknown

பிரதான கட்சிகளி்ன் மேதினக் கூட்டங்கள் கொழும்பில்

பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு திருகோணமலையில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை இரண்டாகப் பிரிந்து மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்தவுள்ளமை விசேட அம்சமாகும். 11 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதிலிருந்து இம்முறையே இரண்டாகப் பிரிந்து மேதினக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
Read More
Unknown

சிலை வணக்கத்திற்கான ஆரம்பம் நினைவுச் சின்னங்களாக அவற்றை நிறுவுவதுதான்! காத்தான்குடியில் தமிழக மார்க்க அறிஞர் கோவை எஸ். ஐயூப் தெரிவிப்பு

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

இறைவனுக்கு இணை வைக்கும் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைதான் உருவச்சிலைகளை நினைவுச் சின்னங்களாக வைப்பதாகும். இவ்வாறுதான் உலகில் சிலை வணக்க வழிபாடு தோன்றியது என அல்குர்ஆனும் எடுத்தியம்புகின்றது. 

எனவே காத்தான்குடியிலும் இன்று நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ள உருவச்சலைகள் பின்னொரு காலத்தில் வணங்கப்படத்தக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரும் இங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரான கோவை எஸ். ஐயூப் தெரிவித்தார்
Read More

Sunday, April 26, 2015

Unknown

அகர ஆயுதம் அமைப்பு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த முழுநாள் இலக்கிய நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அகர  ஆயுதம் அமைப்பு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்த முழுநாள் இலக்கிய நிகழ்வு நேற்று தென்கிழக்கு பல்கலைக் கழக கலை கலாசார பீட மண்டபத்தில் நடைபெற்றது.
 
தென்கிழக்கு படைப்பிலக்கிய பங்களிப்பு எனும் பெருவெளி கருத்தாடலில் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், மன்சூர் ஏ.காதர் , ரீ.எல்.ஜவ்பர்கான் ,ரியாஸ்குரானா உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.
 
திறந்த வெளி கவியரங்கில் தமிழ்த்தென்றல் அலிஅக்பர் தலைமையில் கவிஞர்களான பாலமுனை பாறூக் ,அன்புடீன் ,மருதநிலா நியாஸ் ,இறக்காமம் பர்ஸானா ,கிரான்குளம் சுரேஸ் ,மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் ,ரீ.எல்.ஜவ்பர்கான் கிண்ணியா அமீர்அலி என்.நஜ்முல் ஹூஸைன் ஆகியோர் கவிதைபாடினர்.
 
இங்கு தென்கிழக்கு பல்கலை கழக மாணவர்களின் நிகழ்வுகளும் அரங்கேறின.









Read More
Unknown

காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவருக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் வாழ்த்து

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
தலைவர் - கிழக்கு ஊடக சங்கம்

காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இளம் ஊடகவியலாளர் டீன் பைரூஸ், ஆளுமைமிக்க ஒரு இளம் தலைவராக செயற்பட்டு அங்கத்தவர்களை அரவணைத்துச் செயற்படுவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைவதாக கிக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More