Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 31, 2015

avathani Media Network

எலிக்கு வந்த ஆசை

இந்தியாவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி ஒன்றும் லண்டனை சுற்றிப்பார்க்க பயணித்தையறிந்த விமானி விமானத்தை மீண்டும் மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார்.

நேற்று வழக்கம்போல அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து காலை 7 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு சென்ற குறித்த விமானத்தில் சுமார் 240 பயணிகள் பயணம் செய்தனர். 
குறித்த விமானம், ஈரான் நாட்டின் தெஹ்ரான் வான் பிரதேசத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறையைச் சுற்றி ஒரு எலி ஓடிக்கொண்டிருந்ததை அவாபணித்த சிப்பந்தி உடனே விமானிக்கு தகவல் கொடுத்தார். 
இதையறிந்து பதற்றம் அடைந்த விமானி, உடனடியாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்து மீண்டும் அந்த விமானத்தை மும்பை விமான நிலையத்திலே தறையிறக்கினார்.
அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை ஒதுக்குப்புறமாக கொண்டு சென்று அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது.பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Read More
avathani Media Network

பேலியகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காவற்துறையினர் இருவர் காயம்


பேலியகொட – புளுகஹாஹந்திய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரு காவற்துறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

பேலியகொட காவற்துறையில் போக்குவரத்து பிரிவில் சேவையில் ஈடுபட்டிருந்த இரு காவற்துறையினரே இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையிள் பேச்சாளர் தெரிவித்தார். 

பேலியகொட புளுகஹாஹந்திய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்றிற்கு அருகில் வந்து நபர் ஒருவரால் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதை தடுப்பதற்காக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரிகள் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More
avathani Media Network

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.
வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதுவரையில் குறித்த கடவுச் சீட்டுக்கு 7,500 ரூபா பணமே அறவிடப்பட்டது.
மேலும் சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் அறவிடப்பட்ட 2,500 ரூபா கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஒருநாள் சேவையூடாக கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கு 2,500 ரூபா அறவிடப்படுவதுடன், சாதாரண சேவையில் கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More
avathani Media Network

காலஎல்லை நீடிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் இதோ!


சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லையை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இன்றுடன் பதவிக் காலம் நிறைவடைகின்ற 18 மாநகர சபைகள், ஒரு நகரசபை மற்றும் நான்கு பிரதேசசபைகளின் கால எல்லை, ஜூன் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள மாநகர சபைகள் 

கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, குருநாகல், அனுராதபுரம், பதுளை மற்றும் இரத்தினபுரி 

நகரசபை 

கொலன்னாவ 

பிரதேசசபைகள் 

கொடிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கண்டி - கடவத்சதர - கஹவடகோரலை, சூரியவெவ - ஹம்பாந்தோட்டை 
Read More
avathani Media Network

சொல்வதை தவிர வேறு வழியில்லை:

(முஜீப் இப்றாஹிம்) 
துவேசமும், பாலுணர்வும் ஒரே மாதிரியானவை. எல்லோருக்குள்ளும் அவை அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றன.
தூண்டப்பட்டால் மாத்திரமே அவை துலங்கும்!
துவேசம் என்பது இரு சகோதரிகளுக்கிடையில் கூட தோன்ற முடியும்!
ஒருத்தியின் கணவரை விட மற்றவளின் கணவர் வசதியாக இருந்து விட்டால் போதும் இருவருக்கிடையிலும்
துவேசம் வெடித்துவிடும்!!!

இவ்வாறு ரத்த உறவுகள் முதல் கொண்டு வேற்று இனக்குழுமங்கள் வரை துவேசம் பரந்து செல்கிறது.
நூறு வீதம் அல்லது மிகப்பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழுகின்ற ஊர்களுக்குள் மாற்று மத வழிபாட்டுத்தலங்களை யாராவது நிறுவ எத்தனித்தால் நாம் எவ்வளவு எதிர்வினைகளை ஆற்றுகிறோம்?
ஆனால் வேற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழுகிற இடங்களில் பெரும்பாலும் வெற்றிகரமாக நமது பள்ளிவாயல்களை நிறுவ முடிகிறது!
எங்காவது ஒரு சில இடங்களில் அவற்றுக்கு தடைகள் வருகிற போது நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளின் வீச்சும் வேகமும் நாம் அறிவோம்.
அதன் பின்னுள்ள நியாயத்தன்மையினை தனிமையில் உட்கார்ந்து சிந்தித்தால் நாம் எவ்வாறு மறுக்கிறோமோ அவ்வாறே அவர்களும் மறுக்கிறார்கள் என எண்ணத்தோன்றும்.
இலங்கை போன்ற பல் இனங்களும் வாழும் நாட்டில் சுதந்திரம் தொடக்கம் நம்மை தமது அரசியல் தேவைகளுக்காக பிரித்தாண்ட அரசியல் தலைவர்கள் அவர்களது இலக்குகளில் வெற்றி பெற்றார்கள்.
மக்கள்தான் தோற்றுப்போனார்கள்.
இங்கே இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு இல்லை, பரஸ்பர ஒற்றுமையும் இல்லை.
துருவங்களாகி கிடக்கிறது இனங்கள்!
என். ஜீ. ஓ க்களால் செயற்கையாக கட்டமைக்க முனையும் சமாதான இனவுறவுகளால் நீடித்து நிலைக்கவும் முடியாது.
தேசத்தில் இனங்களுக்கிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவுவது போல் போலி மாயைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முன்னர் யுத்தத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்திய நமது நாட்டு அரசியல் தலைமைகள் இப்போது இனவாதத்தை வைத்து துவேசத்தை தூண்டி அரசியல் செய்வதை எல்லா இனங்களிலும், இடங்களிலும் காண முடிகிறது.
மஹிந்த ராஜபக்‌ஷ மறைமுகமாக இனவாத அரசியலைச்செய்து சொற்ப வித்தியாசத்தில் தோற்றார்.
ஞானசாரவால் நாடு முழுவதும் இருபதாயிரம் வாக்குகளை எடுக்க முடிந்தது.
இப்போது மஹிந்த தரப்பு வெளிப்படையாகவே இனவாத அரசியலைச்செய்கிறது....
ஞானசாரவும் சளைத்தபாடில்லை.
இந்தப்பின்புலத்தில் நமது சோனக அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள செய்கின்ற இனத்துவேச அரசியலானது நடுநிலையான சிங்கள மக்களையும் மேலும் சினமூட்டுவதாக அமைந்து விடுகிறது.
சிறுபான்மையின் ஆதரவு பெற்ற அரசு, நாம் உருவாக்கிய ஜனாதிபதி என்றெல்லாம் நாமடிக்கின்ற தம்பட்டங்கள் நேர்மையாக சிந்திக்கின்ற பெரும்பான்மை மக்களை கூட பேரினவாத்த்தின் பக்கம் பலவந்தமாக சாய்த்துவிடும்.
இந்தப்போக்கானது மஹிந்த ஞானசார கூட்டணியின் மீள் எழுச்சிக்கும் பெரும்பான்மை மக்களை இனவாதிகளாக திசைதிருப்பி விடுவிதற்கும் போதுமானது.
நாம் உருவாக்கிய அரசு என்ற 
மமதையில் முன்னரை விட படுவேகமாக முகநூலில், வட்ஸ் அப்பில் வீடியோக்கள் மூலம் பெரும்பான்மை இனத்தை காயப்படுத்தும் வகையில் கருத்துகளை நம்மவர்கள் பரப்புவதை அவதானிக்க முடிகிறது.

அதற்கு அவர்களிடம் இருந்து படு மோசமான எதிர்வினைகள் வருகின்றன.
அதை அவர்கள்தான் ஆரம்பித்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு பதில் சொல்வதால் ஆகப்போகும் நன்மை ஒன்றுமில்லை மாறாக தொடர்ந்தும் வசவுகளும் நமது மார்க்கத்தின் மீதான வக்கிரங்களுமே வளரும்.
அந்த வீடியோக்களில் கதைப்பதெல்லாம் பேரரறிஞர்கள் அல்ல! யாரோ வெளிநாடுகளில் வசிக்கும் இனவாதம் பிடித்த கொந்தராத்துக்கார்ர்களே...
அல்லது உள்நாட்டில் வாழுகிற அறை குறை அறிவுகொண்ட இனவாத எச்சங்களே...
இவற்றை நாமும் அலட்டிக்கொண்டு சொற்போர் தொடுப்பதால் தேசத்தில் எதிர்பாராத கோணத்தில் இன முறுகலொன்று ஏற்பட்டுவிடும்.
அதற்குரிய பெற்றோலைத்தான் பேரினவாத சக்திகள் ஊற்றிக்கொண்டிருக்கின்றன....
நமது கையில் இருக்கும் சிறு தீப்பொறி போதும் தேசம் பற்றி எரிவதற்கு.....
கடைசியில் அதில் குளிர்காயப்போவது நம் நாட்டு அரசியல்வாதிகளே!
அப்போது
சோனக அரசியல்வாதிகள் மட்டும் சும்மா நடுங்கிக்கொண்டா இருப்பார்கள்?

அவர்களும் சேர்ந்தே குளிர்காய்வர்.
Read More
avathani Media Network

பயணச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போருக்கு தண்டம் அதிகரிப்பு

பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிப்போர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பணத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் ஆலோசனைக்கமைவாகவே இந்நடவடிக்கை 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து தற்போது 2500 ரூபா அறவிடப்படுவதாகவும் இது ஜனவரி முதல் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை மிதிபலகை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் பயணிப்போருக்கு எதிராகவும் ரயில்வே திணைக்களம் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை மிதிபலகையில் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்திருப்பதாகவும் ராகம ரயில் நிலையத்திலேயே அதிகமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More
avathani Media Network

20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்


எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் தொடர்பான பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

2013ம் ஆண்டு முதல் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டம் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன்படி இந்த வருடத்தில் நூற்றுக்கு 70 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்தில் இதனை நூற்றுக்கு நூறு வீதமாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த நோய்த் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளை இனம்கண்டு உரிய பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், குழந்தைக்கு எச்.ஐ.வி வரமல் பாதுகாக்க முடியும். 

இதேதேளை எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு பிரசவம் நடைபெற்று முடிந்துள்ளதோடு, பிரசுவிக்கப்பட்ட குழந்தைகள் எவரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும் சிசிர லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Read More
avathani Media Network

இராமர் பாலம் அமைக்கும் தேவை அரசுக்கு இல்லை

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லையென்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வித்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
செய்தி எதுவும் இல்லாதிருக்கும் எதிர்க்கட்சியினர் செய்தியை உருவாக்குவதற்காக  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்படவிருப்பதாக பிரசாரங்களை செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.
நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த உதய கம்பன்பில, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.
இராமர் பாலத்தை மீண்டும் அமைக்கப் போவதாக இந்திய அரசியல்வாதிகளே கூறியுள்ளனர். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. தனது இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடைபெறவில்லையென பிரதமர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அது மாத்திரமன்றி இரு நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கவேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை ஆரம்பித்தனர். அத்திட்டம் உயிர் பல்வகைமைக்கும், இயற்கைக்கும் பாதிப்பாக அமையும் என்பதால் அதனை கைவிட்டனர். அதேபோல இந்த இராமர் பாலத் திட்டமும் கைவிடப்பட்டுவிடும் என்றார்.
அரசியல் ரீதியாகத் தொங்கிக் கொள்வதற்கு எந்தவிடயமும் இல்லாதிருக்கும் எதிர்க்கட்சியினர் இந்திய விரோத பிரசாரங்களை முன்னெடுத்து மீண்டும் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.
Read More

Wednesday, December 30, 2015

avathani Media Network

சாட்சிகள் இருப்பின் ஹிருணிக்காவைக் கைதுசெய்யலாம்!


ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அல்லது பிரதமரால் பொலிஸாருக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என, அமைச்சர் கபீர் கசிம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினராயினும் அமைச்சராயினும் சட்டம் யாவருக்கும் பொதுவானது எனவும், இந்த சம்பவம் தொடர்பில் அவரைக் கைதுசெய்ய பொலிஸார் வசம் சாட்சிகள் இருப்பின் அதனை செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதியோ பிரதமரோ தலையிடப் போவதில்லை எனவும் கபீர் கசிம் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இந்த நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அதனை உரிய முறையில் மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று, ஹெலிக்கொப்டர் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்ப எம்மாலும் முடியும் ஆனால் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 
Read More
avathani Media Network

2016 இல் உலகம் எதிர்க்கொள்ளவுள்ள அழிவு

2016 ம் ஆண்டில் எல் நினோ (கடும் வெப்பம்) சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா (கன மழை) மாறி மாறி வருகிறது.அடுத்த ஆண்டில் எல் நினோ காரணமாக அடுத்த 6 மாதங்கள் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. 2015ம் ஆண்டு உலகின் மிக மோசமான வெப்பம் நிறைந்த ஆண்டாக வானிலை ஆய்வாளர்கள் கூறு வந்தனர். ஆனால் 2016ம் ஆண்டு வெப்பத்தின் அளவு மேலும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எல் நினோவின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 20 முதல் 30 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது. இந்நிலையில், 2016ம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும், இதனால் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல் நினோவால் மிக அதிக அளவிலான கடலின் வெப்பம், நிலப்பரப்பை நோக்கி வரும். 2016ல் புவியின் ஒரு பகுதி கடுமையான வெப்பம், வறட்சியாலும், மற்ற பகுதி கடுமையான மழை மற்றும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டின் காரணமாகவும் மனித குலம் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல் நினோவால் 2016ல் எந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கமும், வறட்சியும் இருக்குமோ அதற்கு நேர்மாறாக லா நினாவால் அதற்கடுத்த ஆண்டு கடுமையாக மழை, வெள்ளம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
virakesari.lk
Read More
avathani Media Network

NTJ (தேசிய தவ்ஹீத் ஜமாத்) நடாத்தும் 3 வது ஷிர்க் ஒழிப்பு மாநாடு


Read More
avathani Media Network

எங்க ஊரு வாங்க


(காத்தான்குடி நிஷவ்ஸ்)


இறங்காமல் பறக்கும்
எயார் லைன்ஸைப் பார்க்க
எங்க ஊரு வாங்க.

இறந்த பின்னும் கேட்குமாம்
ஏழெட்டு சியாரங்கள்
பறந்து வாங்க பார்க்க.

கட்டையொன்றைப் புதைத்து
கெட்டுப் போன கூட்டம்
கொட்டும் பன்னீர் பார்க்க வாங்க.

கட்டு கட்டாய் பணம் வர
கட்டிப் படிப்பார் பாட்டு.
கட்டளைகள் மறுக்கும்
கெட்ட பயில்வான் பார்க்க வாங்க.

கட்டு கட்டாய் கஞ்சா
கட்டும் கதையை கொஞ்சம்
காது கொடுத்து கேட்க வாங்க.

நட்ட நடு ரோட்டில்
எட்டுப் பேரு சேர்ந்து
எட்டுப் போட்டு ஓடும்
மோட்டர் பைக் பார்க்க வாங்க.
முட்டுப் பட்ட பின்னால்
கெட்ட வார்த்தை பேசி
திட்டுவதை பார்க்க வாங்க.

குட்டிச் சவுதி இது
கொழிக்கும் வசதியுண்டு.
உலமாக்கள் வாழகின்ற
பலமான கோட்டை இது.
சில 'மா'க்கள் செய்கின்ற
சீரழிவு வேலைகளால்
நலமான ஊரு
நாறுது பாரு.

(காத்தான்குடி நிஷவ்ஸ் -30/12/2015)
Read More
avathani Media Network

புதிய அரசியலமைப்பு குறித்து த.தே.கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை 11.30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இதன்போது புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் எமது செய்திப் பிரிவிற்கு கூறினார். 

புதிய அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முன்கூட்டியே சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார். 

இது தொடர்பான கலந்துரையாடல்களை கடந்த தினங்களில் இரண்டு கட்சிகளும் தொடர்ந்து முன்னெடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.
Read More
avathani Media Network

சீகிரியா ஓவியங்களை படமெடுக்கத் தடை

சீகிரியா ஓவியங்களை படமெடுப்பது, இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாள் நாயகம் பேராசிரியர் கிருஷாந்த குணவர்தன தெரிவித்தார்.
சீகிரியா ஓவியங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்துக்கு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

இரண்டு மணி நேரத்தில் பொலிஸ் அறிக்கை பெறலாம்

நாடளாவிய ரீதியில் எந்த பொலிஸ் பிரிவில் வசிப்பவரும் தொழில் நிமித்தம் வெளி நாடுசெல்லும் நோக்கில் பொலிஸ் அறிக்கைகளுக்கு வாரக்கணக்கில் செலவிடவேண்டிய அவசியம் இல்லை எனவும் அவற்றை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெளிநாடொன்றுக்கு தொழிலுக்கு செல்லும்போது பொலிஸ் அறிக்கை கோரப்படும் அப்போது யாழில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வந்து கைவிரல் ரேகைகளை பதிவு செய்து அதனை பெற்றுக் கொள்ள பல நாட்களை செலவிட வேண்டி ஏற்பட்டது. எனினும் தற்போது தொழில் நுட்பம் பரவல் படுத்தப்படுவதால் எந்த ஒரு பொலிஸ் பிரிவிலும் கைவிரல் ரேகை பதிவு குறித்த அறிக்கையை 3 நிமிடங்களில் பெறலாம். அதனால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் தத்தமது பொலிஸ் பிரிவிலேயே பொலிஸ் அறிக்கைகளைப் பெறக் கூடியதாக இருக்கும் என்றார்.
Read More
avathani Media Network

வறகாபொல வாகன விபத்தில் ஐவர் பலி

இன்று (30.12.2015) அதிகாலை வறகாபொலயில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐவர் மரணமடைந்துள்ளனர்.

 அவர்கள் புனித உம்றா கடமையைச் செ;வதற்கு விசா பெ;றுக் கொள்வதற்காக கொழும்புக்குச் செல்லும் வழியிலேயே இந்த விபத்து ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது


Read More
avathani Media Network

நாகப்பாம்பு

(எம்.எல்.எம்.அன்ஸார் )

எந்தக் கடையில் இப்போதும் இலவசமாக
விஷம் விற்கப்படுகிறது நாகப்பாம்புக்கு?
*
இன்று காலையிலும் எனது வாசலில்
பாம்புக் காடொன்று வளர்ந்து கிடந்தது.
சுபஹ் தொழுதுவிட்டு நான்  ஓதியதை
மொட்டை வழித்த மஞ்சள் நாகம்
ஒட்டுக்கேட்டு
பயந்து  நடுங்கியதையும் கண்டேன்!
*
சிறுநீர் கழித்தால் கழுவத்தெரியாத  சேற்றுப் புழு.
யாரோ கட்டிவிட்ட
நஞ்சுப் பல்லோடு  வந்து படமெடுத்தாடி
கொத்தித் தின்னப் பார்க்கிறது குர்ஆனை!
*
கொஞ்ச நாட்களுக்கு முன்னரும் இப்படித்தான்
கண்ட கண்ட இடத்தில் ஹலாலை கடிப்பதற்கு
சாரப்பாம்புகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தி   
உசார் செய்து  
விஷத்தைக் கக்கி
நாக்கில் கொடுத்தது நாகப் பாம்பு!
*
இதன் பிறகு பாம்புகள்
சீறுவதற்கு படித்து வெளியேறுகிற புற்றாகவே
பன்சலவை அவதானித்து கடந்து சென்றிருக்கிறேன்!
*
நாகப்பாம்பே நஞ்சருந்தி செத்துக் கொள்ளுமளவிற்கு
பாம்பின் விஷ பற்களை
இரண்டு விரல்களால் இலேசாகப் பிடுங்கி எறிந்து
செருப்புக் காலால் மிதித்தால்
நசுங்கிச் சாகின்ற நாக்கிழிப் புழுவாக்கியது தேர்தல்!
*
துவேசத்தை முகத்தில் தூக்கி போட்டுக் கொண்டு
எனது வேதத்தை வெட்டிச் சாய்ப்பதற்கு  
படமெடுத்தாடுகிறது
போக்கிடம் தெரியாத சாக்கடைப் புழு.
ஒருஅலிஃப்பைக் கூட பிடுங்க முடியாமல் தோற்று  
செத்த பாம்பாய்
அடங்கிப்போவதை பார்ப்பதற்காவது
எனது சீவனை நீடித்துத் தா ரஹ்மானே!
17-12-2015
-எம்.எல்.எம்.அன்ஸார்  




 


Read More

Tuesday, December 29, 2015

avathani Media Network

காத்தான்குடியில் 'இரத்ததானம் வழங்குவோர்களின் சமூகம்' உதயம்

இரத்ததானம் வழங்குவதில் கிழக்கு மாகாணத்திலே முன்னணியில் திகழும் ஊர் காத்தான்குடி.
இது அதிகமான இரத்ததானம் வழங்குவோரும் அதனை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளையும் கொண்ட ஊராகும் .
காத்தான்குடியில் இருந்து 1500க்கும் அதிகமானோர் வருடாவருடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்துவருகின்றனர். இது இவ்வைத்தியசாலைக்கு மொத்தமாக இரத்ததானம் செய்வோரில் 40%க்கும் அதிகமாகும்.
காத்தான்குடியில் காணப்படும் இந்த விழிப்பனர்வுக்கு மிக அதிகமான அளவு பங்களிப்புச்செய்தவர்கள் இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்யும் சமூகசேவை அமைப்புகளாகும்.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய ஊர்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் நீண்டகாலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் இதனைத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.
இந்த அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு பல விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டவேண்டும் என்பது மிக நீண்டகாலமாக உணரப்பட்டவிடயமாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு Kattankudy doctors forum ( KDF)  இவ்வமைப்புக்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஓன்றினை கடந்த 25-12-2015 ம்திகதி காத்தான்குடி MOH காரியாலயத்தில் Dr. ஷியாம் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்தது.
இதில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.

1- காத்தான்குடியில் உள்ள அனைத்து இரத்ததானம் செய்வோர்கள் மற்றும் அதனை ஒழுங்குசெய்யும் அமைப்புகள் உள்ளடக்கியதான 'காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம் ' ஒன்றினை ஆரம்பித்தல் .

2-இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளாத , அழைக்கப்படாத ஏனைய அமைப்புக்களுடன் தொடர்புகளை எற்படுத்தி அவர்களையும் இதனுடன் இணைத்துக்கொள்ளுதல்

3- காத்தான்குடி தளவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள இரத்தவங்கிக்கான முடியுமான ஆதரவினை வழங்குதல்.

4- இரத்ததானம் செய்வோர்களின் சுகாதார நலன்கள் தொடர்பாக இலவச ஆலோசனைகளை வழங்குதல்.

5- தேசிய இரத்தவங்கி மற்றும் மட்டக்களப்பு இரத்தவங்கிகளுடான தொடர்புகளை பேணிக்கொள்ளுதல்.

6-இரத்தம் வழங்குவோர் , இரத்தம் தேவையானோர்களுடையான தொடர்புகளை இலகுவாக்க மற்றும் தேசியஇ சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்த இணையத்தளம் ஒன்றினை உருவாக்குதல்.

7- இரத்ததானம் தொடர்பான விழப்புணர்வுகளை உள்ளூர் , வெளியூர்களில் அதிகரிக்க முயற்சித்தல்.

8- இரத்ததான முகாம்களின் கால அட்டவணையினை தயாரித்தல்.

9- எனைய சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்குகொள்ளுதல்.

தகவல் 
Dr. A.L. A. Shiyam






Read More