Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 11, 2015

Unknown

ரமழான் கவிப் பொழிவும், இப்தார் நிகழ்வும்

(மரியமின் புத்திரன்)

“அகர ஆயுதம்” கலை இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொதுவெளியின் ஏற்பாட்டில் இம்முறை ரமழான் விசேட ஏற்பாடாக “ரமழான் கவிப்பொழிவும், இப்தார் நிகழ்வும்” 2015-07-12ம் திகதி பி.பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் அல்/மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை (பிரதான ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் அருகில்) கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை, அம்பாறை  பிரதம பொறியியலாளர்  -கவிஞர் அல்ஹாஜ் தம்பிலெப்பை இஸ்மாயில்- தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் “ரமழான் சிறப்புச் சொற்பொழிவு”அஷ்ஷெய்ஹ் எம்-எச்-எம்-ஹரீஸ் (நளீமி) அவர்களால் நிகழ்த்தப்படும்.  உலமாக்கள் , புத்திஜீவிகள், துறைசார் அதிகாரிகள், இலக்கியவாதிகள், மாற்றுமதச் சகோதரர்கள், மாணவர்கள் ஆண்கள், பெண்கள் என கலந்துகொள்ளும் இந்நிகழ்வில்  மூத்த இளம் கவிஞர்கள், கவிதாயினிகளால் ரமாழான் சிறப்புக் கவிப்பொழிவுகளும் இடம்பெறுவதைத் தொடர்ந்து அகர ஆயுத செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட இப்தார் நிகழ்வு இடம்பெறும் .

குறிப்பு – பெண்களுக்கு பிரத்தியேக இப்தார் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.


Read More
Unknown

ரணில் மைத்திரியின் புதிய கூட்டணி அறிவிப்பு விரைவில்!

ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பினர் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னர் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டணி குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த தரப்பினர் இந்த கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் போட்டியிடுவதை இந்தக் குழுவினர் முழுமையாக எதிர்ப்பதாகவும் ஜனவரி 08ஆம் திகதி வெற்றிபெறுவதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் அர்ஜூன மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தப் புதிய கூட்டணிக்கு வேட்பு மனுவைப் பெற்றுக்கொள்வது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த புதிய நிலைமையின் கீழ் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதை ஒரு சில தினங்களுக்கு ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
srilankamirror
Read More
Unknown

சமையல் எரிவாயு விலை, அரிசி விலைகள் குறைக்கப்படவுள்ளன


வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது . எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேற்படி விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் ஐ.தே.கவின் மாநாட்டில் வைத்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.  மேலும் வெள்ளை அரிசி  மற்றும் நாட்டரிசி கிலோ 69 ரூபாவாகவும் , சிவப்பரிசி 60 ரூபாவாகவும் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Read More
Unknown

பாராளுமன்ற தேர்தல் 2015: பொது இலக்கிற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு

(ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டகளப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைமைத்துவ சபை முடிவெடுத்துள்ளதாக முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள ஊடக றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதன் பிரகாரம் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி, முஸ்லிம் காங்கிரஸ் உடன் செய்துகொண்டுள்ள தேர்தல் கூட்டணி மூலம் மட்டகளப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் இரு வேட்பாளர்களையும் திருகோணமலை மாவட்டத்தில் யானை சின்னத்தில் ஒரு வேட்பாளரையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி களமிறக்கிறது. இந்த முடிவினை அறிவிக்கும் பத்திரிகையார் சந்திப்பொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் 10.07.2015 வெள்ளியன்று இடம்பெற்றது. இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியும் கலந்து கொண்டது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தவிசாளர் பொறியியளாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு இத்தேர்தல் கூட்டு குறித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். ஜனவரி 08ம் திகதி இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமிக்க மாற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. அத்துடன் புதிய சவால்களும் தோன்றியுள்ளன. தோற்கடிக்கப்பட்ட சக்திகளை மீண்டும் ஒருமுறை தோற்கடிக்க வேண்டியது ஒரு தேசிய கடமையாக மாறியுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னனியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஏற்படுத்திக்கொண்டுள்ள புரிந்துணர்வு அடிப்படையிலான தேர்தல் கூட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பலமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வியூகமாகவே இது பார்க்கப்படல் வேண்டும். தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு இதுவே சாத்தியமான முடிவாகும்.
இரு தரப்பினப்பினரதும் தனித்துவத்தையும் சுயாதீனத்தையும் பாதிக்காத வகையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இரு தரப்பும் உடன்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மித்த சில நாட்களில் கைச்சாத்திடப்பட்டு மக்கள் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்படும்.
பொது இலக்கிற்காக கருத்து வேறுபாடுள்ள சக்திகளுடன் இனைந்து செயலாற்றுவது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுப்பதாக அமையாது என்பதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தெளிவாகவுள்ளது. கடந்த காலங்களிலும் இது போன்ற பல அரசியல் கூட்டுக்களில் பங்கேற்றுள்ளதை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
அரசியல் செயற்பாடு கற்பனா வாதமாக அல்லாமல் நடைமுறை சாத்தியமானதாக அமைய வேண்டுமென்பதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி போதிய தெளிவுடன் உள்ளது. அடிப்படை கொள்கைககை சமரசம் செய்யாமல் பொது நன்மைக்காக ஒன்றினைதல் என்ற கருத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - நல்லாட்சிக்கான தேசிய முன்னனிக்கும் இடையிலான தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேசத்தினதும் சமூகத்தினதும் நலனை கருத்திற்கொண்டு எடுக்கப்படடுள்ள இந்த நிலைப்பாட்டை ஆதரித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சிறந்ததொரு மாற்றத்தின் பங்காளர்களாக அனைவரும் இனைந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னனி அழைப்பு விடுக்கின்றது.
Read More
Unknown

மட்டக்களப்பு,வன்னியில் தனித்தும் ஏனைய பகுதிகளில் ஐ.தே.க.வுடனும் மு.கா.போட்டி

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பட்­டி­யலில் போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்ள ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்­கிரஸ்,இரண்டு மாவட்­டங்­களில் மட்டும் தனித்து போட்டி­யி­டவும் முடி­வெ­டுத்­துள்­ளது. மக்கள் வழங்­கிய ஆணை­யினை காப்­பாற்­றவே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அறி­வித்­தலை நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான ஆட்சி ஒன்­றினை அமைப்­ப­தற்­கான ஒரு கூட்டு ஒப்­பந்த தீர்­மா­னத்­துக்கு அமைய இம்­முறை பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ளது.
ஜன­வரி 8ஆம் திகதி மக்­க­ளுடன் நாம் மேற்­கொண்ட உடன்­ப­டிக்­கையை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும். அதற்கு எமக்கு இருக்கும் ஒரே வழி­முறை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கைகோர்ப்­ப­தே­யாகும். ஆகவே இது­வரை எம்மால் செய்து கொள்­ள­மு­டி­யாத உடன்­ப­டிக்­கை­க­ளையும் , வென்­றெ­டுக்க முடி­யாத மக்­களின் அபி­லா­சை­க­ளையும் இதற்குப் பிறகும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கைகோர்த்து வென்­றெ­டுப்போம். அதேபோல் ஏனைய சிறு­பான்மை தலை­மை­க­ளுடன் பொது இணக்­கப்­பாட்டை மேற்­கொண்டு நாட்டை வலுப்­ப­டுத்­துவோம்.
இந்த கூட்டு ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இரண்டு மாவட்­டங்­களில் மாத்­திரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து போட்­டி­யி­டு­வ­துடன் ஏனைய குறிப்­பிட்ட சில மாவட்­டங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்தும் போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்ளோம்.
இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் மற்றும் வன்னி மாவட்­டத்­திலும் முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து போட்­டி­யிடும். அதே­நேரம் ஏனைய மாவட்­டங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையில் போட்­டி­யி­ட­வுள்ளோம்.
இதன் அடிப்­ப­டையில் கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி மக்­களின் யுகப் புரட்­சி­யுடன் நாம் உரு­வாக்­கிய நல்­லாட்­சியை பாது­காப்­ப­தற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கையில் நாம் தேர்­தலில் களம் இறங்­கு­கின்றோம். எம்மை பொறுத்த மட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்க, இந்த நாட்டில் ஊழல் மோச­டி­களை இல்­லாமல் செய்­வ­தற்­காக பெரும் தியா­கத்­தோடு கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் எமக்குக் கொடுத்த ஆத­ரவை சில பிற்­போக்கு சக்­திகள் முறி­ய­டிக்க முயற்­சித்து வரு­கின்­றன.
எந்த ஆட்­சி­யா­ளரை தோற்­க­டிக்க நாம் பாரிய முயற்­சி­களை எடுத்­தோமோ அந்த ஆட்­சியை மீண்டும் பின்­க­தவால் கொண்­டு­வரும் முயற்­சி­களை எதிர்க்­கட்­சி­யினர் செய்து வரு­கின்­றனர் என்­பது மிகப்­பெ­ரிய துர­திஷ்டம்.

எனவே அதை தடுக்கும் முயற்­சியில் நாம் இறங்­கி­யுள்ளோம். இதில் எம்­முடன் கைகோர்க்கும் வகையில் மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவ­டங்­களில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி எம்­முடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றது.

மேலும் எங்­க­ளுக்கு மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கைக்கு அமைய நல்­லட்­சிக்­கான தேசிய முன்­னணி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் எம்­முடன் இணைந்து மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­துடன் , திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானைச் சினத்தில் எமக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள இரண்டு ஆச­னங்­களில் ஒன்றை அவர்கள் சார்பில் விட்டுக் கொடுக்கும் உடன்­பாட்டை எட்­டி­யுள்ளோம்.

அந்த அடிப்­ப­டையில் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் புதிய ஆட்­சியை உரு­வாக்­கு­வதில் பங்­க­ளிப்பு செய்த பல்­வே­று­பட்ட அமைப்­பு­களில் இவர்­களும் பிர­தா­ன­மான அமைப்­பாகும். இந்த பொதுத் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் இணை­வது பரந்­து­பட்ட அளவில் எதிர்­கா­லத்தில் முழு முஸ்லிம் சமூகத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு முன் முயற்சியாக நாம் இதை பார்க்கின்றோம். 

இந்த நடவடிக்கையின் மூலம் நாம் இருவரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்ற நம்பிக்கையோடு இந்த தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
virakesary.lk
Read More
Unknown

மைத்திரி - மஹிந்தவுக்கு எதிராக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தயாராகிறது


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாக பெயர் மாற்றம் பெற்ற ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சி உறுப்பினர்கள் இணைந்து "நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி" என்ற கட்சியில் யானை சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த தீர்மானம் நாளைய தினம் வெளியிடப்படும் என்றும், ஐக்கிய தேசிய கட்சியின் நாளைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. 

ராஜித சேனாரத்ன, ஹிருனிக பிரேமசந்திர, அர்ஜுன ரணதுங்க, சுதர்சினி பெர்னாந்துபுள்ளே, ஹேமால் குணசேகர, நியோமல் பெரேரா, எம்.கே.டீ.எஸ். குணவர்தன, விஜய தகநாயக்க, எர்ல் குணசேகர, சரத் அமுணுகம, துமிந்த திஸாநாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வேட்புமனுவில் கைச்சத்திடவில்லை என்று தெரியவந்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவிற்கு வேட்புமனு வழங்க வேண்டும் என்று தெரிவித்து வந்த தரப்பினர் வெற்றி பெற்றிருப்பதாலும், ஊழல்வாதிகள் மோசடிக்காரர்கள் பலருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வேட்புமனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாலும் அதற்கெதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் மாற்று கட்சியில் போட்டியிடுவது பற்றி கலந்தாலோசித்துள்ளனர். 

ஆகவே அதற்கு மாற்று வழியாக "நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி" எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி இருப்பதாகவும் நளைய தினம் அறிவிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
Read More
Unknown

கிழக்கு ஊடக சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும்


கிழக்கு ஊடக சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும்

கிழக்கு ஊடக சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டம், எதிர்வரும் 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு, மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்கா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் சங்கத் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் தலைமையில் நடைபெறும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ. பத்மசிறி தெரிவித்தார்.

இதுவரை காலமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஆரையம்பதி செல்வா நகர் கிராமத்தில், சங்கச் செயலாளரது வதிவிடத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்த இச்சங்கத்திற்கான புதிய அலுவலகம் மட்டக்களப்பு மாநகரில் மஹாத்மா காந்தி பூங்காவுக்கு எதிரில் அமையப்பெற்றுள்ள போதிலும் அது இன்னமும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவில்லை.

சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இம்மாவட்ட அலுவலக நிர்மான நடவடிக்கைகளை நிர்வாக சபை அங்கத்தவர்கள் அவதானிப்பதுடன், அதன் திறப்பு விழா தொடர்பான விடயங்களையும், ஏனைய விவகாரங்களையும் ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும் வகையில் நிர்வாக சபைக் கூட்டம் புதிய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சகல நிர்வாக சபை அங்கத்தவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்,
தலைவர் - கிழக்கு ஊடக சங்கம்
Read More
Unknown

அ.இ.ம.கா. செய்த அதே தவறை மு.கா.வும் செய்யுமா?

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)


எதிர்வரும் ஆகஸ்ட் 17இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஸ்ரீ.ல.மு.கா.வில் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரான காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி அவர்களும் ஒரு வேட்பாளாராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இவர் அ.இ.ம.கா. சார்பில் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி எனும் பெயரிலேயே போட்டியிட்டு ஒரு உறுப்பினராகத் தெரிவாகிய போதிலும் இவரது உண்மையான பெயர் முகம்மது பாறூக் மொகமட் ஷிப்லி என்பதேயாகும்.

விருப்பு இலக்கத்தில் முன்னுரிமை பெற வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பிழையான வழிகாட்டலுக்கு உடன்பட்டு இவர் தனது சொந்தத் தகப்பனின் பெயரையே மாற்றிக் கொண்டு மோசடியாகப் போட்டியிட்டார் என்பதை நான் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

இப்போது, குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பவற்றை யாப்பாகக் கொண்டு இயங்குவதாகக் கூறும் ஸ்ரீ.ல.மு.கா. மட்டக்களப்பு மாவட்டத்தில் இவரையும் ஒரு வேட்பாளராகக் களமிறக்கவுள்ளதாக பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீ.ல.மு.கா.வும்; விருப்பு இலக்கத்தில் இவர் முன்னுரிமை பெறுவதற்காக அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி என்று இவரை பொய்யான பெயரில் மோசடியாகக் களமிறக்குமா? அல்லது அவரது உண்மையான பெயரில் முகம்மது பாறூக் மொகமட் ஷிப்லி என்றே களமிறக்குமா? என மட்டு. மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் பரவலாக வினாவெழுப்பி வருகின்றனர்.

Read More
Unknown

காட்டு யானை தாக்கி மீனவர் மரணம்

நேற்று வெள்ளிக்கிழமை காலை
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் வெருகல் பிரதேச செயலகத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில்  மீனவ குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட்டவான் கிராமத்தைச் சேர்ந்த
கதிர்காமத்தம்பி விஜயகுமார் (வயது 31) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே
காட்டு யானையின் தாக்குதலால் மரணித்தவராகும்.

வீட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காகச்
திருகோணமலை – மட்டக்களப்பு
நெடுஞ்சாலையால் சைக்கிளில் சென்று
கொண்டிருந்த சமயம் வழிமறித்த காட்டு யானை இவரின்  தலையில்
ஏறி மிதித்துக் கொன்றுள்ளது. மீனவர்
பயணம் செய்த சைக்கிளையும் யானை
நொருக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சேருவில பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட மீனவரின் சடலம் தற்சமயம் பிரேத பரிசோதனைக்காக வெருகல் பிரதேச
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில்  நெல் அறுவடை
ஆரம்பித்துள்ளதால் வெருகல் பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்ளுருக்குள்
ஊடுருவுவது அதிகரித்திருப்பதாக பிரதேச
வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை காட்டு யானைகளின் ஊடுருவல் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்
மற்றும் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக பிரதேச
செயலாளர்
தெரிவித்தார்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
Unknown

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விஷேட இலக்கங்கள்.

தேர்தல் தொடர்பான முறைப்பாடு களை முன்வைப்பதற்காக தேர்தல் செயலகம் விசேட
தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

தமது முறைப்பாடுகளை தொலைபேசி அல்லது தொலைநகல் ஊடாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான தமது முறைப்பாடுகளை பொதுமக்கள் 011-2877631 ,2887756,
2887759 எனும் தொலைபேசி
இலக்கங்களுக்கோ அல்லது  011 2877636 , 2887717, எனும் தொலை நகல்களுக்கோ
அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது தொடர்பாக தேர்தல்கள் செயலகத்திற்கு முறைப்பாடு
செய்யும் எல்லா சந்தர்ப் பங்களிலும்
அத்தகைய முறைப்பாட்டை உரிய
மாவட்டத்தின் மாவட்டச் செய லகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல்
முறைப்பாட்டு நிலையத்திற்குச் சமர்ப்பிக் குமாறும் தேர்தல் சட்டங்கள்
மீறப்படுவது தொடர்பாக
நேரடியாக உரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

தேர்தலுடன் தொடர்புடையதாயினும்
நாட்டின் சாதாரண சட்டங்களை மீறுவது தொடர்பாக விசேடமாக குற்றங்களாக்
கணிக்கப்படுகின்ற தவறுகள் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகளை
சமர்பிக்குமாறும் தேர்தல் செயலகம் பொதுமக்களை கேட்டுள்ளது.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More