Featured Home (TOP)

Recent Comments

Friday, December 11, 2015

avathani Media Network

யானையுடன் மோதிய ரயில் : ரயிலுக்கு சேதம்

கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மீது காட்டு யானையொன்று மோதியதில் குறித்த புகையிரதத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரரவு 7மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து நேற்று காலை 11.45மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி குறித்த புகையிரதம சென்ற போது மாலை 7 மணிக்கு கனகராயன்குளம் பகுதியில் ரயில் பாதையில் தரித்துநின்ற காட்டு யானை மீது மோதியுள்ளது.

இதனால், குறித்த ரயிலின் முன்பகுதி சேதமடைந்து பழுதடைந்துள்ளதாகவும் இதனால் அன்றைய தினம் ரயில் போக்குவரத்து சேவை மாங்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். அத்துடன், போக்குவரத்தும் தாமதமாகியது. குறித்த புகையிரதம் பழுதடைந்துள்ளமையை அடுத்து புகையிரத திணைக்கள அதிகாரிகளின் செயற்ப்பாட்டால் மாங்குளத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் பயணிகள் விசேட பஸ் போக்குவரத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை, பழுதடைந்துள்ள குறித்த ரயில் திருத்தப் பணிகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு-யாழ்ப்பாணம் சேவைக்கு மற்றுமொரு ரயில் ஈடுபடுத்தப்படும் என அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
Read More
avathani Media Network

பாடசாலை சீருடைத் துணிகள் கையிருப்பில் இல்லையாம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம் செய்ய அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள கடைகளில் கொடுத்து சீருடை துணியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நடைமுறையின் கீழ், யாழ்ப்பாண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வவுச்சரைக் எடுத்துக்கொண்டு கடைகளுக்குச் சென்றபோது, சீருடை துணி முடிவடைந்து விட்டதாகவும், துணி வரவேண்டும் எனவும் அங்கு கூறியுள்ளனர்.

இதன்காரணமாக, கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வடமராட்சியின் மருதங்கேணி மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் சீருடை விநியோகம் செய்வதற்கான கடைகள் அடையாளப்படுத்தப்படவில்லை.

இதனால், இந்த மாணவர்கள் நீண்ட தூரம் பயணித்து பருத்தித்துறை நகரத்துக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு சென்று துணிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.


இதேவேளை, யாழ்ப்பாணம் தீவகப் பகுதியிலும் இவ்வாறான ஒரு நிலைமையுள்ளது. தீவகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மாத்திரம் சீருடை துணி விநியோகம் செய்யும் கடைகள் உள்ளமையால், அங்குள்ள மாணவர்கள் தங்களுக்கான சீருடை துணியை பெற்றுக்கொள்ள முடியாமல், யாழ்ப்பாண நகரத்துக்கு வருகை தந்து அங்கும் இல்லையென ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். 
Read More
avathani Media Network

தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுவது அரசியல் கட்சிகளின் வெற்றியல்ல – ஜனாதிபதி

எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டு பின்வருமாறு தெரிவித்தார்.

விருப்பு வாக்கு தேர்தல் முறைமையை மாற்றுவதன் ஊடாக புதிய தேர்தல் முறைமைக்கு இணக்கப்பாடுடன் செயற்பட வேண்டும். இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, எல்லை நிர்ணய குழு தனது பணியை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2000ற்கும் அதிகமான மேன்முறையீடுகள் இது வரையில் கிடைக்கப்பெற்றுள்ளன. 

ஆகவே, ஏற்கனவே இருந்த குழு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்த குழு மீதும் முன்வைக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். குறுகிய காலத்தைப் பெற்றுக்கொண்டு பணியை சரிவர செய்யாவிடில் அனைவரது விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுவது அரசியல் கட்சிகளின் வெற்றியல்ல. தேர்தல் முடிவுகளின்போது மக்களின் ஆணையே வெளிப்பட வேண்டும்
Read More
avathani Media Network

தாஜுதீன் விவகாரம்: அவையில் பதற்றம்

அவையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையையடுத்து அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபூர் ரஹ்மான், உரையாற்றிக்கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் தாக்க முற்பட்டனர். இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தை மையப்படுத்தி அவர் உரையாற்றியதையடுத்தே அவையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. 


நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்க ஆசனத்தில் இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான்இ உரையாற்றிக்கொண்டிருந்த போது, கூட்டு எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது
Read More
avathani Media Network

சி.வி.விக்னேஷ்வரனைச் சந்தித்தார் வை.கே.சின்ஹா

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.


அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பரிசீலிப்பதாக சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Read More
avathani Media Network

மத்திய மாகாணத்தில் லீஸ்மனைசீஸ் எனப்படும் சரும நோய் பரவி வருவதாக எச்சரிக்கை

குணமடைவதற்கு நாட்கள் செல்லும் லீஸ்மனைசீஸ் எனப்படும் நோய் மத்திய மாகாணத்தில் பரவி வருவதாக சுகாதார தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நோய், இலங்கையின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காணப்பட்டபோதிலும், நாட்டின் மத்திய பகுதிகளில் பரவியிருக்கவில்லை என பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இந்தநோய் பரவுவதை அவதானிக்க்க் கூடியதாய் உள்ளதாகவும் பேராசிரியர் கூறியுள்ளார்.


ஒருவகை கிருமியினால் பரவும் இந்த நோய், சருமத்தின் வெளிப்புறத்தில் தழும்பாகத் தோன்றுவதுடன், அதனைக் குணப்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

சித்திரைக்கு முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்

அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் சாத்தியமில்லை என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
Read More
avathani Media Network

சவூதியில் பணிப்பெண் மரணம் : தவிக்கும் கணவன், மகள், தந்தை

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்குடாவைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (வயது 29)  சவூதியில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தாம் பெரிதும் துன்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக ராஜ்மோகன் தெரியவருவதாவது,
ராஜ்மோகன் ஜெனிட்டா (வயது  29) எனும் ஒரு பிள்ளையின் தாயான எனது மனைவி கடந்த 29.10.2015ம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலமாக சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
வெளி நாட்டுக்குச் சென்ற அன்று தொலைபேசியில் தனது குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தான் சவுதி வந்து சேர்ந்து விட்டதாகவும் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கதைப்பதாகவும் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
29.10.2015ம் திகதி இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்னாக சென்றவர் 26.11.2015ம் திகதி மரணமடைந்து விட்டார் என்று சவூதியில் இருக்கும் ஜெனீட்டாவின் சகோதரரான ஜெயரூபன் தொலைபேசியில் தெரிவித்ததன் பின்னர்தான் ஜெனீட்டா மரணித்த செய்தி எங்களுக்குத் தெரியும் என்றார்.
எனக்கு ஐந்து பிள்ளைகள். அதில் மரணமடைந்த ஜெனீட்டா மற்றுமே பெண் பிள்ளை எனக்கிருந்த ஒரே ஒரு பெண் பிள்ளையையும் இழந்து அவரது மரணச்சடங்கினை நடத்த முடியாமல் தவிக்கிறேன் என்று ஜெனீட்டாவின் தந்தை வேதநாயகம் ராஜ்மோகன் (வயது  53) குறிப்பிட்டார்.
virakesari.lk
Read More
avathani Media Network

வட்டவளை குடியிருப்பு தொகுதியில் தீ


ஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்ட லயன் குடியிருப்பில் நேற்று இரவு 07.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் இருந்த 10 வீடுகளுக்கு சிறிதளவில் தீ பரவியுள்ளது. 

எனினும் குறித்த இரண்டு லயன் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் ஏனைய வீடுகளுக்கு பெரிதளவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டாவாறு வெளியே ஓடி வந்துள்ளனர். 

கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அதன்போது சிறியளவான பொருட்களை மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியில் எடுக்க முடிந்துள்ளது. 

எனினும் லயன் குடியிருப்பு தொகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் தற்போது பாதுகாப்பாக குறித்த தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மி்ன்சார கோளாறே இத் தீ விபத்துக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிப்பதாக விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தீ விபத்து குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

adaderana.lk
Read More
avathani Media Network

டெங்கு நோய் பரவும் அபாயம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் கடந்த 10 தினங்களில் கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு டெங்கு பரவும் இடங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநாகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
இதேவேளை உலகில் முதல் தடவையாக டெங்கு வைரஸிற்கு எதிரான தடுப்பூசியினைப் பயன்படுத்த மெக்சிக்கோ அனுமதி வழங்கியுள்ளது.
டெங்வெக்ஸியா (Dengvaxia) என பெயரிடப்பட்டுள்ள இது பிரான்சின் சனோபி (Sanofi) எனும் நிறுவனத்தினால் அறுமுகப்படுத்தப்பட்டுள்ளது.
9 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கிளிடையே இந்த தடுப்பூசியைப் பாவிக்க மெக்சிக்கோ அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Read More
avathani Media Network

12,000 விடுதலைப் புலி­களை விடு­வித்­த­போது இல்­லாத அச்­சு­றுத்தல் கோத்­தா­வுக்கு தற்­போது வரு­கி­றதா

விடுதலைப் புலி­களின் முக்­கிய தலை­வர்­களை பக்­கத்தில் வைத்­தி­ருந்த போதும், 12 ஆயிரம் புலி­களை விடு­தலை செய்­த­போதும் மஹிந்த, கோத்­தபாய ஆகி­யோ­ருக்கு ஏற்­ப­டாத உயிர் அச்­சு­றுத்தல் தடுப்பில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் ஏற்­ப­டப்­போ­கின்­றதா என முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா கேள்வி எழுப்­பினார்.
சிங்­கள மக்­களை சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக திருப்பும் முயற்­சி­களை இவர்கள் இன்னும் கைவி­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.
தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தமது உயி­ருக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக் ஷ ஆகியோர் தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில், கடந்த காலத்தில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் விடு­தலைப் புலி­களின் சர்­வ­தேச பிரி­வினால் நாட்­டிற்கு எதி­ரான பல­மான செயற்­பா­டுகள் காணப்­பட்­டன. ஆனால் நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத மோதலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­ட­வில்லை.
ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் அர­சியல் செயற்­பா­டு­களை தக்­க­வைக்கும் ஒரே நோக்­கத்­தி­லேயே நாட்டில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னரும் ஐந்து ஆண்­டு­க­ளாக தொடர்ச்­சி­யாக புலிக்­க­தை­களை கூறி வந்­தனர். இன்றும் அதே கதை­களை கூறி மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கி­றார்கள்.
முன்னாள் அர­சாங்­கத்தில் 12ஆயிரம் விடு­த­லைப்­பு­லி­களை விடு­வித்­தனர். புலி­களின் முக்­கிய தலை­வர்­களை அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொண்டு கட்­சி­யிலும் அமைச்­சு­க­ளிலும் முக்­கிய பத­வி­களை வழங்­கினர். அவ்­வாறு இருக்­கையில், சர்­வ­தேச புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருந்த போதும், புலி உறுப்­பி­னர்­களை அருகில் வைத்­தி­ருந்த போதும் இவர்­க­ளுக்கு உயிர் அச்­சு­றுத்தல் எவையும் ஏற்­ப­ட­வில்லை.
ஆனால் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைத்­துள்ள தமிழ் கைதி­களை விடு­விக்க கோரும்­போது அவர்­களால் மஹிந்த, கோத்­தபாய ஆகி­யோரின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கூறு­கின்­றனர். இதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சிங்­கள மக்­களை சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக முரண்­ப­ட­வைக்கும் ஒரு நட­வ­டிக்­கையே இவர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.
இந்த அர­சாங்கம் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­காது பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றது. குறிப்­பாக எவன்கார்ட் விவ­கா­ரத்தில் நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ பக்­க­ச்சார்­பாக செயற்­ப­டு­கின்றார் என்­பதை நான் ஆரம்­பத்தில் இருந்தே தெரி­வித்து வரு­கின்றேன்.
அதேபோல் மேஜர் நிஸ்­ஸங்க சேனா­தி­ப­தியும் அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவும் அமெ­ரிக்­காவில் நெருங்­கிய நண்­பர்­க­ளாக செயற்பட்டு எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் உடன்படிக்கைகளை மேற்­கொண்­டுள்­ளமை தொடர்பில் ஆதா­ரங்­களும் என்­னிடம் உள்­ளன.
இவை தொடர்­பான புகைப்­ப­டங்­களை நான் ஊட­கங்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளேன். அவ்­வாறு இருக்­கையில் அர­சாங்கம் இந்த விவ­காரம் தொடர்பில் மூடி­ம­றைக்­காது உண்­மை­களை கண்டறிய வேண்டும் என்றார்.
Read More
avathani Media Network

நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் பல்துறை சாதனையாளர் கௌரவிப்பு விழா

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் மாணவர்களாக இருந்து பலதுறைகளிலும் முதன்நிலை வகித்து சாதனை படைத்திருக்கும் பல்துறை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழா நேற்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபீர்; தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரியின் பழைய மாணவரும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.ரி.அப்துல் நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.எம்.றபீக், பிரபல தொழிலதிபர் பொறியிலாளர் வை.எல்;.நயீம், முன்னாள் அதிபர்களான எம்.எம்.றகீம், எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன் உள்ளிட்ட கல்விமான்கள்,  சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த(சாஃத) பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் அனைத்துப் பாடங்களிலும் திறமைச் சித்திபெற்ற மாணவர்கள், கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக் கழகம் நுழைந்துள்ளோர், மாகாண, தேசிய மட்டங்களில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றுள்ளோர்,  ஜனாதிபதி விருது பெற்றுள்ளோர், பழைய மாணவர்களாக இருந்து கொண்டு உயர் பதவிகளை அலங்கரித்து சமூகத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்தோர் எனப் பல மட்டத்திலுள்ளோரும் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம், பரிசுப் பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'ஒரு பாடசாலைக்கும் பழைய மாணவர்களுக்கும் இறுக்கமான உறவு இருக்கின்றது. அந்த உறவின் அடிப்படையில் இந்தப் பாடசாலை மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று கனவு கண்ட பழைய மாணவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன். ஒரு ஆசிரியனாக, அதிபராக என்ற அந்தஸ்துக்களை விடவும் எங்களுக்குக் கௌரவம் தந்தது பழைய மாணவன் என்பதுதான். இதற்குப்பிறகும் அந்த கௌரவத்தைத்தான் நாங்கள் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றோம்' எனத் தெரிவித்தார்.











Read More